siruppiddy

31/12/13

மனித உரிமை பேரவையில் கியூபா, இலங்கைக்கு உதவ உறுதி


இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க உதவுவதாக உறுதியளித்துள்ளது.

கொள்கை அடிப்படையில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவையாதலால் கியூபா அதை எதிர்க்கின்றது என கியூப தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார்.

இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகும். இது ஒரு நாட்டின்மீது தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிப்பதாகும் இது சர்வதேச சட்டத்தின் உண்மைப் பொருளாகாது என அவர் கூறினார்.

இருப்பினும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க முடியாத நிலையில் கியூபா உள்ளதென அவர் கூறினார்.

30/12/13

தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி

தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த இளைஞர்கள் விசேட உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
34 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான பயிற்சி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த பல இலங்கை இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், இவர்கள் குறித்த புலி ஆதரவு குழுக்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

29/12/13

வெடித்தது கலவரம்! பிரான்ஸ் இராணுவம் குவிப்பு !



ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் சூடான் அருகே மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடு அமைந்துள்ளது.
மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் வெடித்துள்ள கலவரத்தை ஒடுக்க பிரான்ஸ் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்நாடு கடந்த 1960ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.
இந்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு செலேகா என்ற கிளர்ச்சியாளர் ஆட்சியை கைப்பற்றினர்.
அதனை அடுத்து இரு பிரிவினர் இடையே மத மோதல்கள் தலைதூக்கி கலவரம் வெடித்தது.
இந்த மோதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா.வின் அமைதிப்படை குவிக்கப்பட்டது.
இருப்பினும் அதையும் மீறி கடந்த 2 தினமாக மோதல், கலவரம் வெடித்ததால் பிரான்ஸ் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
கலவரம் உச்சக்கட்டத்தில் நீடிப்பதால், வீரர்கள் தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் விமான நிலையம் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 44 பேரின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தலைவர் ஜார்ஜியஸ் ஜெர்கான்டஸ் தெரிவித்துள்ளர்.
மேலும் குண்டு காயங்களுடன் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு வந்ததாக மருத்துவ அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.




 

24/12/13

வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்

வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அச்சுறுத்தல்

 அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

22/12/13

வடக்கு மாகாண அரசுடனும் இணக்க அரசியல் நடத்த விரும்புகிறாராம் டக்ளஸ்!

 மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே நாம் விரும்புகின்றோம். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ்க் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதுடன் நாம் மத்திய அரசுடன்

 மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே விரும்புகின்றோம்.
மாகாணசபை என்ற கனவுக் குழந்தை இன்று நனவாகியுள்ளது. இதனை பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டியதே முக்கிய பொறுப்பாகும். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.அந்த வகையில் அதற்கான

சந்தர்ப்பம் உருவாக்கப்பட வேண்டுமென்பது மட்டுமன்றி உருவாக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தையும் நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனொரு கட்டமாகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வடக்கு மாகாண முதமைச்சருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்த போதிலும், தவறான புரிந்துணர்வு காரணமாக அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்த போதிலும் எமது முயற்சிகள் தொடரும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

21/12/13

பாராளுமன்றில் குரல் கொடுக்காமல் முச்சந்தியில் பேசுவது ஏமாற்று வேலை!

  தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வாக பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுப்­ப­தற்­குப் ­ப­தி­லாக, காங்­கிரஸ் அமைச்­சர்கள் முச்­சந்­தி­களில் நின்று பேசு­வது ஏமாற்று வேலை என்று உலகத் தமிழர் பேர­மைப்பு அறக்­கட்­டளை தலை­வ­ரான பழ.நெடு­மாறன் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் அவர் தெரி­வித்­த­தா­வது,
இலங்­கையில் மீத­முள்ள தமி­ழர்­க­ளையும் ஒழிப்­ப­தற்­காக அந்­நாட்டு அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­டு­வரும் நிலையில், பிரிட்டிஷ் பிர­தமர் தைரி­ய­மாகச் சென்று தமி­ழர்­களைச் சந்­தித்துப் பேசி­ய­துடன் அது­கு­றித்து பொது­ந­ல­வாய மாநாட்­டிலும் கண்­டனம் தெரி­வித்தார்.

இத்­த­னையும் நடை­பெற்ற பிறகும் இலங்­கைக்கு அருகில் உள்ள இந்­திய அரசோ, தொடர்ந்து மெளனம் சாதித்து வரு­கி­றது. இது இலங்கைத் தமி­ழர்கள் விவ­கா­ரத்தில் தங்­களின் நிலையில் எந்­த­வித மாற்­றமும் இல்லை என்று மத்­திய அரசு கூறு­வ­தைப்­போன்று அமைந்­துள்­ளது.

மத்­திய அமைச்­சர்­களில் ஜி.கே.வாசன் மட்டும் இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வா­கக்­குரல் கொடுத்து வரு­வது பாராட்­டுக்­கு­ரி­யது.

அந்­தக்­ கட்­சியின் மற்ற அமைச்­சர்­களோ, தமிழர் விவ­கா­ரத்தை பாரா­ளு­மன்றம், அமைச்­ச­ர­வை­களில் பேசு­வதை விட்­டு­விட்டு முச்­சந்­தியில் நின்று பேசு­வது தமி­ழர்­களை ஏமாற்றும் வேலைதான் என்றார்

20/12/13

முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

உள்ளுராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவைத்தருவதாக அமையவில்லை! -      
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அளுகையின் கீழ் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை நடத்தத்தெரியாதவர்கள் ஏன் தான் சுயாட்சி தனிநாடு என்று கோசம்போட்டுத்திரிகிறார்களொ தெரியவில்லை என்று எங்களை உலகம் பழிக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் நடைபெற்றுள்ளது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
       
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவைத்தருவதாக அமையவில்லை முதல் முதலாக தொடங்கப்பட்ட மாகாண சபை என்பதால் பல பூர்வாங்க விடயங்களில் என் கவனம் உள் நுலைந்திருந்ததால் முழுமையான கவனத்தை உள்ளுராட்சி மன்றங்களின் மீது செலுத்த முடியவில்லை.

ஒரு பக்கம் உங்களுக்கு பிரச்சனைகள் பல இருக்கும் அதே நேரத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் சுயநலம் கட்டுக்கடங்காமல் நெல்வதை நான் அவதானித்துள்ளேன்.
எமது கட்சியின் அங்கத்தினனே அவர்களுள் அடிபட்டு தமது கட்சியின் வரவு செலவுத்திட்டங்களை முறியடிக்க முன்வருகின்றார்கள் என்றால் எமது உறுப்பினர்களுள் ஏதோ ஒரு குறபை;பாடு இருக்கிறது என்று பொருள் படுகின்றது.

பொதுவாக பதவியில் இருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாமல் போனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வரலாம் அல்லது ஒத்துப்போகாதவர் பதிவியில் இருந்து இராஜினாமாச் செய்யலாம். ஆதைவிட்டு விட்டு எமது கட்சி சார்பில் கொண்டு வரும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை முறியடித்தல் என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றம்.

ஏனென்றால் அத்திட்டதில் குறைபாடுகள் இருந்தால் முன்னமே அதனைப் பேசித் தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு மாறான நடவடிக்கை எடுத்து தமது வரவு செலவுத்திட்டத்தை தாமே முறியடித்தவர்கள் வெட்கப்படவேண்டும் என்றார்.

எமது உள்ளுராட்சி மன்றங்கள் தான்தோன்றித்தனமாகப் போதிய புரிந்துனர்வில்லாமல் இதுவரை காலமும் வளர்ந்துள்ளன போரின் தாக்கமும் அவற்றின் வளர்ச்சியில் படியாமல் இல்லை கூட்டுறவு அடிப்படையில் அல்லாது இராணுவ ஆணையிடும் அடிப்படையில் உறவுகள் இருந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது அலுவலர்களின் ஆட்சி பற்றிய அடிப்படை அறிவும் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மாகாண சபை உள்ளுராட்சி மன்றங்கள் போன்றவற்றின் திறன் மீள் விருத்தி செய்யப்படவேண்டிய காலம் வந்துள்ளது தவிசாளர்களின் கடமைகள் செயலாளர்களின் கடமைகள் உறுப்பினர்களின் கடமைகள் எனபலதையும் நாங்கள் அறிய முற்படவேண்டும் இது தொடர்பில் நிபுணர்களைக்கொண்டு அறிவுரைக் கருத்தரங்ககளை வழங்கவுள்ளோம்.

எமக்கு தொழில் ரீதியான முழுமையான அறிவு கிடைத்தால் மன்ற அங்கத்தவர்களை அதுவும் ஒரே கட்சியில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்களை பதவி இறக்குவது போன்ற நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமாட்டோம் என்று நம்பலாம். புதவியில் இருப்பவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் கட்சியின் கட்டுக்கோப்பு ஒழுக்கம் கடமைப்பாடு போன்வற்றையும் கணக்கில் எடுத்து தொழிற்திறனை உறுதி செய்யலாம்.

உள்ளுராட்சி மன்றங்களை நாங்கள் தொழிற் திறனுடன் நடத்தினால் தான் எமக்கு போதிய நிர்வாகச் செயலாட்சி. மேலாண்மைத்திறன்களுந் தகுதிகளும் உண்மென்று உலகம் நம்பும் இல்லையேல் உள்ளுராட்சி மன்றங்களை நடத்தத்தெரியாதவர்கள் ஏன் தான் சுயாட்சி தனிநாடு என்று

கோசம்போட்டுத்திரிகிறார்களொ தெரியவில்லை என்று எங்களை உலகம் பழிக்கும் என்றார்.
அத்தோடு எமது கட்சி உட்பூசல்கள் வெளியில் வருவதை நாங்கள் தவிர்க்க வேண்டும் விரைவில் வடமாகாண சபையானது உள்ளுராட்சி மன்றங்களின் உட்பூசல்கள் நிர்வாகத்திறனின் குறை நிறைகள் இலஞ்ச ஊழல்கள் போன்ற பல்வேறு விடயங்களையும் ஆராயும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதுவரை காலமும் பல வித இடர்களை எதிர்நோக்கிய உள்ளுராட்சி மன்றங்கள் இனியேனும் ஒற்றுமைப்பட்டு ஒன்று சேர்ந்து உண்மையான மக்கள் சேவையை ஈடுபடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 

17/12/13

தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை! இந்தியாவின் முன்னாள்

தமி­ழீழம் நீண்ட தொலை­வி­லில்லை’ என பார­திய ஜனதாக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னரும் இந்­தி­யாவின் முன்னாள் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்­சியின் கூட்டம் ஒன்றில் அண்­மையில் தெரி­வித்­துள்ளார்.

ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியற் தீர்வை எட்­டுதல் தொடர்­பாக பார­திய ஜனதாக் கட்­சியின் ஒன்­று­கூ­டலில் விவா­திக்­கப்­பட்ட போது, தற்­போது இந்த நிலை வேறு­பட்­டுள்­ளது என்­பதை ஜஸ்வந்த் சின்ஹா வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
ஈழம் என்­பது மிகக் கிட்­டிய தூரத்தில் உள்­ளது. தற்­போது பங்­க­ளாதேஷ் சுதந்­திர நாடாக மாறி­விட்­டது. இதே­போன்று வட­சூடான் மற்றும் தென்­சூடான் ஆகி­ய­னவும் தற்­போது சுதந்­தி­ர­ம­டைந்­து­விட்­டன” என ஜஸ்வந்த் சின்ஹா தனது விவா­தத்தின் போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தனது உரையின் போது, கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் தனக்குச் சொந்­த­மாக்க வேண்டும் எனவும் இதன்­மூலம் இந்­திய மீன­வர்­களின் மீன்­பிடி உரி­மைகள் நிச்­ச­யப்­ப­டுத்­தப்­பட்டு அவர்­க­ளுக்­கான மீன்­பிடி எல்­லைகள் மீள­வ­ரை­ய­றுக்­கப்­பட முடியும் எனவும் இலங்கை கடற்­ப­டையால் இந்­திய மீன­வர்கள் படு­கொலை செய்­யப்­ப­டு­வது தடுக்­கப்­பட முடியும் எனவும் பார­திய ஜனதாக் கட்­சியின் மூத்த உறுப்­பினர் ஜஸ்வந்த் சின்ஹா சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கச்­ச­தீவை நாம் மீளப்­பெற்றால் எமது மீன­வர்கள் பாதிக்­கப்­பட மாட்­டார்கள். இதன்­மூலம் இந்­தியக் கடற்­ப­ரப்பை நாங்கள் கட்­டுப்­ப­டுத்த முடியும்” எனவும் இவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.
எமது மீன­வர்கள் படு­கொலை செய்­யப்­ப­டு­வது தொடர்பில் இனியும் பொறுத்துக் கொள்ள முடி­யாது என இந்­தியா இலங்­கை­யிடம் கூற­வேண்டும்.

இந்­தி­யாவின் தற்­போ­தைய வெளி­யு­றவுக் கொள்­கை­யா­னது குழப்­ப­மா­ன­தாக உள்­ளது. நாட்டின் எதிர்­காலம், அதி­காரம் மற்றும் உறு­தித்­தன்மை போன்­றன ஆபத்­திற்கு உள்­ளா­கலாம்.
தற்­போது இந்­தி­யாவை ஆளும் அர­சாங்­கமும் பிர­த­மரும் பல­வீ­ன­மா­ன­வர்­க­ளாக இருக்­கலாம். ஆனால் இந்­திய மக்கள் பல­வீ­ன­மா­ன­வர்கள் அல்ல” என ஜஸ்வந்த் சின்ஹா மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.
எமது அயல்­நா­டான இலங்­கையின் வடக்கில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லை­க­ளுக்கு சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தான் பொறுப்பு என்பதை மக்களிடம் வீடுவீடாகச் சென்று எடுத்துக்கூற வேண்டும்  எனவும் தனது உரையின் போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா வலியுறுத்தினார்.

16/12/13

தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும்

இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பரமத்தி வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி

வருகின்றனர். தமிழ்நாட்டில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, அதை தடுக்கும் முயற்சியில் பெரம்பலூரைச் சேர்ந்த

அப்துல்ரவுப், துண்டு அறிக்கையை தயார் செய்து உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு துண்டறிக்கைகளை வீசிக்கொண்டே வீர மரணத்தை தழுவினார். அந்த முதல் தமிழரின் நினைவு நாளான 15–ம் தேதி வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது. இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் அனுப்பி வருகிறது. ஆனால், மத்திய அரசு இலங்கை நட்பு நாடு என்கிறது. போர் கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு பரிசாக வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

15/12/13

இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும்!

இலங்கையிலே நடைபெற்ற இறுதி யுத்தத்தின் மனிதஉரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக்கும் இந்திய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆயுதத்தை வழங்கி அழிவுக்கு இட்டுச் சென்று, முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்திற்கு முடிவுரை எழுதிய பெரும் பங்கு இந்தியாவின் காங்கிரஸ் அரசிற்கே உண்டு .
   
ராஜிவ் காந்தியின் மரணத்தை வைத்து பிரபாகரனை பழிவாங்கும் நோக்கில் ஈழத்தமிழரையே அழித்த பெருமை அவர்களையே சாரும் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி , தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சிவசங்கர் மேனன் , எம்.கே. நாராயணன் போன்றோர் இலங்கை அரசிற்கு உற்சாகம் அளித்தனர். ஆயுதங்களையும் , போர்க்கப்பல்களையும் , போர்ப்பயிற்சிகளையும் , சர்வ சாதாரணமாக வழங்கியதுடன் இந்தியாவின் ஆசீர்வாதத்துடனேயே இனப்படுகொலை அரங்கேறியதை எவராலும் மறுக்க முடியாத உண்மை.

எனவே சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடைபெறும் போது இந்திய அரசையும் விசாரிக்க வேண்டும். காலம் காலமாக இந்திய அரசு எமக்கு நன்மை செய்கின்றோம் எனும் வெளிவேசத்துடன் எம் இனத்துவ, தனித்துவ, தார்மீக வாழ்வு நிலைமையை நசுக்கியதே வரலாறு. ஆகவே பல இயக்கங்களையும்

தோற்றுவித்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆயுதமும் வழங்கி அவர்களுக்குள்ளேயே மோதலையும் உண்டாக்கி அமைதி காக்கும் படை எனும் போர்வையில் இங்குவந்து பல அட்டூழியம் செய்து தமிழினத்தை தொடர்ந்து சுதந்திரமாக வாழவிடாத பெருமை இந்தியாவுக்கு உண்டு.
இந்த விடயங்கள் தொடர்பில் நான் இந்திய துணைத் தூதருடன் பேசியிருக்கிறேன். எம்மை அழித்துவிட்டு 58 ஆயிரம் கோடியோடு பிராயச்சித்தம் தேடி வந்திருக்கிறார்கள். ஆகவே தனிநாடு

கோரினோம். சமஷ்டி கோரினோம், உள்ளக சுயநிர்ணய உரிமை கோரினோம். இவற்றையெல்லாம் புறம் தள்ளி ஒற்றை ஆட்சிக்கு பங்கமில்லாத, அலுவலக உதவியாளரைக் கூட மாற்ற அதிகாரமில்லாத 13 வது சரத்து மாகாண சபையை எம்மீது வேண்டுமென்றே திணித்து வைத்துள்ளது . இத்தனையையும் செய்யும் இந்திய அரசின் ஏக விசுவாசிகளாகவே எமது தலைவர்கள் இருப்பதையிட்டு மக்கள் வேதனைப்படுகிறார்கள்.தமது சொந்த நலனுக்காகவே தமிழ் மக்களையும் வழிநடத்துவதாக பலரும் அங்கலாய்கிறார்கள்.

இந்தியாவுக்கு முழந்தாலிட்டு அடிப்பணிந்து சேவகம் செய்யாத தலைமைத்துவமே தமிழருக்கு தேவை. ஆகவே நிறவெறிக்காக போராடி ஆபிரிக்கர்களின் தேச பிதாவாகத் திகழும் நெல்சன் மண்டேலா வரலாறு முழுமையும் வாழ்வார். பலர் இறந்து விடுகிறார்கள், சிலர் மரணித்து விடுகிறார்கள்.

இறப்பவரை மறந்துவிடுகிறோம். மரணிப்பவர்களை மனிதம் உள்ளவரை மனங்களில் வாழ்வார்கள். இவருடைய முன்மாதிரியையும் சகிப்புத்தன்மையும் ஏற்புடைமையையும் உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். குறிப்பாக இவருடைய அரசியல் அதிகார பதவி ஆசையின்மையை இன்றைய பல அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் வெறுமனே வாய்ப்பேச்சுக்கள் முடிவல்ல. மண்டேலாவிடம் உலகம் கற்க வேண்டிய பாடம் அதிகம். அதில் நாமும் கற்க வேண்டியவர்களாய் மாறுவோம் என்றார்.
 

12/12/13

ஊடக மத்திய நிலையம் இராணுவப்பேச்சாளராக அலுவலகமாக

கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மூடப்பட்டதுடன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் கீழ்வரும் இராணுவப்பேச்சாளர் அலுவலகம், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இராணுவப்பேச்சாளர் அலுவலகம் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் அலுவலகம், அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னர் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மகிந்த கென்யா சுதந்திர தின விழாவில்..


கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று மாலை தலைநகர் நைரோபியை சென்றடைந்தார்.

ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை கென்ய ஜனாதிபதி உகுரு கென்யாட்டா, துணை ஜனாதிபதி வில்லியம் ரூடோ, வெளிவிவகார அமைச்சர் ஆமீனா மொஹமட் ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. கென்யா சென்றுள்ள ஜனாதிபதி நைரேபி நகருக்கு அருகில் உள்ள நசராணி நகரின் சர்வதேச விளையாட்டுத் திடலில் இன்று நடைபெறும் கென்யாவின் 50 வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்கிறார்.
கென்யா 1963 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

அதேவேளை இலங்கை ஜனாதிபதிக்கும் கென்யா ஜனாதிபதிக்கும் இடையிலான இருத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நாளை மறுதினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதன் போது வர்த்தகம், சுற்றுலா, கலாசாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.

போரில் மடிந்த அனைவரையும் நினைவு கூரும் நாள் பிரகடனப்படுத்தப்பட

 இலங்கையில் நல்லிணகத்தை கொண்டு வரவேண்டுமானால்ää கடந்த 30 வருடங்களில் போர் காரணமாக இறந்தவர்களுக்காக பொதுவான அஞ்சலி நாள் அனுஸ்டிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் இந்தக் கருத்தை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
பயங்கரவாதிகளை தோற்கடித்ததாக கூறி இலங்கையில் மே 19 ம் திகதி வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது.
இது வெறுக்கத்தக்க செயல். இது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக முரண்பாடுகளையே வளர்க்கும்.
எனவே போரின் போது கொல்லப்பட்ட படையினர் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் என்று அனைவரையும் நினைவுக்கூரும் வகையில் பொது அஞ்சலி நாள் ஒன்றை பிரகடனப்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும் இதனை சரியாக விளங்கிக்கொள்ளாத ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்லää விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்துக்கு அங்கீகாரம் வேண்டுமா? என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பினார்.
எனினும் அதனை மறுத்த யோகராஜன்ää இலங்கையின் தமிழ் ஊடகங்கள்ää நல்லிணக்கத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுகின்றன.
எனினும் சிங்கள ஊடகங்கள் இதனை செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார்.

11/12/13

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: நாடுகடந்த தமிழீழ

அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது!  
தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரே அன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது. தனது மூன்றாண்டு முதற்தவணைக்கால அரசவையினை நிறைவு செய்து இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவையினை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நா.தமிழீழ அரசாங்கம் கூட்டியிருந்தது. டிசெம்பர் 6-7-8ம் நாட்களில் கூடியிருந்த இந்த அமர்வில் ஒரு தொகுதி உறுப்பினர்கள் சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் இருந்து தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வாயிலாக கலந்து கொண்டிருந்தனர்.
அரசவை அமர்வு, செயலமர்வு என இடம்பெற்றிருந்த இந்நாட்களில் விவாதங்கள், கருத்துப்பட்டறைகள், தீர்மானங்கள், சிறப்புரைகள் என பல்வேறு விடயங்கள் நிகழ்விற்கு வலுவூட்டி இடம்பெற்றிருந்தன.
அங்குரார்ப்பண நிகழ்வு : 
அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் தமிழீழ விடுதலைக்கான தங்களது தோழமை உரையினை வழங்கியிருந்தனர். தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் ஈழவிடுதலைக்கான தமிழக மக்களது தோழமைச்செய்தியினை காவி வந்திருந்தனர். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அவர்களும் சிறப்புரையினை வழங்கியிருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுப் பிரதிநிதிகள் மற்றும் மேற்சபை உறுப்பினர்களது உரைகளும் இடம்பெற்றிருந்தன.
Mr. Robert Evans (Former Member of European Parliament - Senator TGTE),Mr. Johari Abdul (Member of Malaysian Parliament, Sungai Patani, Malaysia, Chair of "Malaysian Parliament Caucus Displaced Tamils in Sri Lanka"),Mr. Troels Ravn (Member of the Denmark Parliament - The Social Democratic Party) , Mr. Vijeyan Moorgan ( from Mauritius), Mr. Jeffrey Robertson QC ஆகிய அனைத்துலப் பிரமுகர்களது கருத்துரைகள் ஈழவிடுதலைக்கான ஆதரவுத்தளத்திற்கு உற்சாகத்தினை தந்திருந்தது.
அரசவை அமர்வு : 
கலாநிதி தவேந்திரா அம்பலவாணர் அவர்களை அவைத் தலைவராகவும், தில்லை நடராஜா அவர்களை பிரதி அவைத்தலைவராகவும், இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்திருந்தனர். விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதமராக மக்கள் பிரதிநிதிகள் ஏகமனதாக தேர்வு செய்திருந்தனர். மக்கள் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் தங்களது அறிமுக கருத்துரைகளை வழங்கியிருந்ததோடு, அரசவை விவாதங்களிலும் பங்கெடுத்து அரசவை பண்புக்கும் மரபுக்கும் வலுவூட்டியிருந்தனர்.
பொதுநலவாயத்தில் இருந்து சிறிலங்காவினை இடைநிறுத்தக் கோரும் தீர்மானம் மற்றும் தென் ஆப்ரிக்காவினால முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நிராகரிக்கும் தீர்மானம் உட்பட தீர்மானங்கள் பலவும், அரசவை நிறைவு நாள் அமர்வில் நிறைவேற்றப்பட்டிருந்தன.
செயலமர்வு : 
பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா ,பேராசிரியன் மணிவண்ணன் ஆகியோர் செயலமர்வு பட்டறையினை நடத்தியிருந்தனர். நாடுகடந்த தமிழர் அரசியல் , மனித உரிமைகளும் இனப்படுகொலைக்கான நீதிகோரலும், மாறிவரும் இந்து சமுத்திர பூகோள அரசியலும் எமது வெளியுறவுக் கொள்கையும் உட்பட பல்வேறு தொனிபொருட்களில் இச்செயலமர்வுப்பட்றைகள் இடம்பெற்றிருந்தன. இந்த மூன்று நாள் அமர்விலும் தமிழ் சமூக அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் ,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கெடுத்து ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு வலுவூட்டியிருந்தனர்.






 

10/12/13

முன்னாள் கிராம சேவையாளர் மீதான துப்பாக்கி சூட்டிற்கு

 தமிழ் தேசிய மக்கள் முன்னனி கண்டனம்: வவுனியா வைரவபுளியங்குளம் முன்னால் கிராமசேவையாளர் திருமதி சற்குனசேயோன் பாலசுந்தரி மீதான இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
   
கடந்த 4ம் திகதி புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு கிராம சேவையாளரின் வேப்பங்குளம் வீடிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஜெகன் என்ற ஒரு பெயரைக் கூறி அவர் நிகின்றாரா என கேட்டனர். அதற்கு அவ்வாறான பெயரையுடைய ஒருவர் இங்கு இல்லை என முன்னால் கிராம சேவையாளர் பதில் அளித்திருகின்றார்.

எனினும், அவ்விருவவரும் வீட்டினுள் நுழைய முயற்சிக்கவே முன்னாள் கிராம சேவையாளர் வீட்டு கதவினை சாத்தி இருகின்றார். இதனை அடுத்து கதவின் மீது குறித்த நபர்கள் துப்பாக்கியினால் சுட்டிருகின்றனர். இத்துப்பாக்கி சூட்டில் 60 வயதான முனால் கிராமசேவையாளர் காயம் அடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படிருகின்றார்.

தற்போது படையினரும் படையினருக்கு உதவுகின்ற ஆயுத குழுக்களும் மட்டுமே ஆயுதங்களை வைத்திருகின்றனர். அவர்களே இத்துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு கூற வேண்டும். முழத்திற்கு முழம் இராணுவ முகாம்கள் இருகின்ற நிலையிலிலும் உளவு பிரவினர் அன்றாடம் மக்களின் கால்களுக்குள் தடக்குப்படுகின்ற நிலையிலும் வேறு நபர்கள் இத்துப்பாக்கி சூட்டை மேற்கொள்ள வாய்ப்புக்கள் எதுவும் இல்லை.

ஒய்வு பெற்ற அரச அலுவலர் மீது இடம் பெற்ற இத்துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

 

9/12/13

கல்வியுரிமை, காணியுரிமை, ஆட்சியுரிமை ஆகிய மூன்று தேசிய


மலைநாட்டு தமிழரது கல்வியுரிமையின் அடையாளமாக, மலையக பல்கலைக்கழகம்; மலைநாட்டு தமிழரது காணியுரிமையின் அடையாளமாக, சொந்த நிலத்தில் வீடு; மலைநாட்டு தமிழரது ஆட்சியுரிமையின் அடையாளமாக, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா பிரதேசசபைகள், மேலும் பிரிக்கப்பட்டு மொத்தம் பன்னிரண்டு பிரதேசசபைகள்; ஆகிய மூன்று குறைந்தபட்ச உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மலையக இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இவற்றை பற்றி பேசுவது கட்சி அரசியல் அல்ல. கட்சி அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. இந்த இலக்குகளை நோக்கி மலையக அரசியல்வாதிகளை தள்ளுங்கள் என்று சொல்லவே இங்கு நான் வந்தேன்
   
ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கே. ரி. குருசாமியின் ஏற்பாட்டில், அறிவியல், சமூகவியல், அரசியல் விடயதானங்களை கொண்ட நூல்தொகுதியை, அங்கத்தவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்துக்கு வழங்கிவைக்கும் வைபவம், கதிரேசன் வீதி விஸ்வகர்மா மண்டபத்தில் நடைபெற்றது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம், ஜமமு மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், மாநகரசபை உறுப்பினர் கே.ரி. குருசாமி ஆகியோருடன் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் போஷகர்கள், நிர்வாகிகள் மற்றும் பெருந்தொகை மலையக இளைஞர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மேலும் உரையாற்றிய மனோ கணேசன் கூறியதாவது,

கல்வியை எப்பாடு பட்டாவது வளர்த்து விடுவோம், என்பது உங்கள் கொள்கை. அதுதான் நானும் நம்பும் கொள்கை. மலையகத்துக்கு விடிவை கொண்டுவரும் கொள்கை. எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்பவைகளை பகுத்து அறியும் அறிவை தரும் கொள்கை. கல்வியை மேம்படுத்துவோம் என்ற எமது இந்த கொள்கையின் அடையாளமாகத்தான் இங்கே, பட்டதாரியான நமது மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார் அமர்ந்துள்ளார். நூறு கோவில்களுக்கு ஒரு

பாடசாலை சமன் என்பார்கள். பாடசாலை என்பது முறைசார் கல்வியை தரும் ஒரு நிறுவனம். வாழ்நிலைமையால் கல்வியை கைவிட்டவர்களுக்கு முறைசாராத அறிவை ஊட்டுவதுதான் நூலகம். ஆகவே என்னை பொறுத்தவரையில், இன்று இங்கே ஒரு நூலகம் பத்து பாடசாலைகளுக்கு சமன். ஆகவே ஒரு நூலகம், ஆயிரம் கோவில்களுக்கு சமன். இங்கே அளப்பரிய வாசிப்பு பழக்கத்தை எங்கள் மாநகரசபை உறுப்பினர் குருசாமி ஆரம்பித்து வைத்துள்ளார்.

எங்கள் மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார் சொன்னது போல், அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் ஓடி போனால் இங்கே வருபவன் எல்லோருமே திருடனாகத்தான் இருப்பான். நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டு, அரசியலை குறை சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. நான் இங்கே அரசியல் பேச வரவில்லை. அதாவது என் கட்சி அரசியல் பேச வரவில்லை. அதற்கு தேவையும் கிடையாது. ஆனால், உங்களுக்கு அரசியல் தேவை. மலையகத்துக்கு தேசிய அரசியல் தேவை. அதன்மூலம்தான் மலையகம், ஈழத்தமிழருடன் கரங்கோர்த்து, சர்வதேசிய கண்காணிப்பு வலயத்துக்குள் நுழைய முடியும். அது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

உலகம் இன்று இலங்கையை பார்க்கிறது. இங்கே நாங்களும் இருக்கிறோம் என சொல்வதற்கு தயாராகுங்கள். அதிலிருந்து ஒதுங்கி ஓடாதீர்கள். ஓடிவிட்டு, எங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என, ஈழத்தமிழர்களை குறை சொல்லாதீர்கள். மனோ கணேசன் ஈழத்தமிழருடன் ஓடிவிட்டான் என்றும் குறை சொல்லாதீர்கள். நான் என் தாயின் எட்டியாந்தோட்டை களனி கங்கை நதிக்கரையில் பிறந்து, என் தந்தையின் கண்டி மகாவலி நதிக்கரையில் வளர்ந்தவன். நான் முதலில் இலங்கையன். அப்புறம் தமிழன். அப்புறம் மலையக தமிழன். என்னை யார் என்று தெரிந்துகொண்டுதான் ஈழத்தமிழ் உடன்பிறப்புகள் என்னை சந்தோசமாக ஏற்று கொண்டுள்ளார்கள்.

இந்த நாட்டில் இன்று சிங்கள, வடகிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒப்பிடும்போது மலையக மக்கள் குறிப்பாக தோட்ட தொழிலாளர் சமூகம் பின்தங்கியது. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதை எப்படி மாற்றுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாம் சிந்திக்கிறேன். ஏனெனில் நானும் உங்களை போல் ஒரு மலையக தமிழன். மனோ கணேசன் ஒரு மலையக தமிழன் இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் என்னை கண்டு பயப்படுபவர்கள். அதனால்தான் என்னை தூர தள்ளி வைக்க நினைக்கிறார்கள். ஏனென்றால் நான் சொல்லும் கருத்துகள் பலரை சுடுகின்றன. உண்மை சுடத்தான் செய்யும்.

காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு, சொந்த நிலத்தில் வீடு கட்டி வாழும் உரிமையை பெற்று மலையக சமூகம், இந்நாட்டில் வாடகைக்கு வாழும் சமூகம் என்ற அவப்பெயரை அகற்ற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்கள் இருப்பதை போல் மலையகத்தில் ஒரு மலையக பல்கலைக்கழகம் தேவை என்பதை உணர வேண்டும். 15,000 பேருக்கு ஒரு பிரதேச சபை ஏனைய இடங்களில் இருக்கும்போது, ஏன் மலையகத்தில் மாத்திரம் நீண்ட காலமாக 200,000 பேருக்கு

ஒரு பிரதேசசபை இருக்கின்றது என கேள்வி எழுப்ப வேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று, கல்வியுரிமை, காணியுரிமை, ஆட்சியுரிமை ஆகியவற்றை உறுதிபடுத்தும் இந்த இலக்குகளை நோக்கி மலையக அரசியல்வாதிகளை தள்ளுங்கள்
 

8/12/13

ஜெனிவாவில் வைப்பதற்கு ஆப்பு சீவும் அமெரிக்கா !

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாத அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கான களஆய்வில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக, அமெரிக்க காங்கிரசை சேர்ந்த, டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர், கொழும்பில், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டோரை சந்தித்துள்ளனர்.

நேற்றிரவு இவர்கள், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனையும், அமெரிக்கா தூதுவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இராப்பாசன விருந்துடன் சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்காவில் தமிழர்களின் நிலை, வடக்கு மாகாணத்தில் தேர்தலுக்குப் பிந்திய நிலவரங்கள், ஜெனிவா தீர்மானங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, கேட்டறிந்துள்ளனர்.

மேலும், இராணுவத் தலையீடுகள், காணாமற்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும், அமெரிக்க குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாத அமர்வில் , சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நகர்வுகளில் ஈடுபடுவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்வதற்காகவே அமெரிக்க காங்கிரஸ் குழு சிறிலங்கா வந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவினர் இன்று திருகோணமலைக்கு செல்லவுள்ளதுடன், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று களஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
 

7/12/13

சிறிலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் கண்டிப்பு


சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற அமெரிக்கா கூறியுள்ளது.

வொசிங்டனின் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார்.

“அண்மையில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த போரை அடுத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலஅவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஐ.நாவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அதற்கு அவசரப்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவரும் கூட, அமெரிக்காவும், ஐ.நாவும் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார்.
எனவே, மனிதஉரிமைகள் மற்றும் சிறிலங்காவின் ஏனைய நிலவரங்கள் தொடர்பாக, தற்போது என்ன நடக்கிறது?” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மேரி ஹாப்,
“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்தும் தமது கடப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை சட்டமீறல்கள் குறித்த மோசமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பதிலளிக்கும் வகையில் நம்பகமான நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வருகிறது.

ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், சட்டத்தின் ஆட்சி சிதைக்கப்படுவது, மதசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் நாம் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்வது குறித்தும் கரிசனை கொண்டுள்ளோம்.
வெளிப்படையாக இவை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய தேவை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்

5/12/13

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் சொந்தமாக விசாரணை நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்று மீண்டும் எச்சரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ இந்த எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளார்.
   
“நாம் இந்த விவகாரத்தை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எழுப்புவோம். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தாது போனால், அவர்கள் அதைச் செய்ய மறுத்தால், நாம், சுதந்திரமான, நம்பகமான, அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள ஏனைய நாடுகளுடன் எவ்வாறு அதைச் சிறப்பாகச் செய்வது, அதன் விபரங்கள் குறித்து கலந்துரையாடுவோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

4/12/13

பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் விரிசல் .,.

பாகிஸ்தான் ஊடாக ஆப்கானிஸ்தானில் உள்ள தமது படையினருக்கான பொருட்களை ஏற்றியிறக்கும் பணிகளை அமரிக்கா நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா அண்மையில் நடத்திய வான் தாக்குதல்களின் போது பாகிஸ்தானிய பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் ஊடாக பொருட்களை ஏற்றியிறக்கும் அமெரிக்கா வாகன ஓட்டுநர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏற்றியிறக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் விரைவில் அது ஆரம்பிக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



2/12/13

திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா பணத்தை பெற்றுள்ளது

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை இலங்கை திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மேலதிக பற்றாக பெற்றுள்ளது.

இது இலங்கையின் தேசிய உற்பத்தியில் 1.2 வீதமாகும். இதனை தவிர சீனா, ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் இருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்தும் 109 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ள மேலதிக பற்று காரணமாக அரச வங்கிகள் இயங்குவதில் கூட சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வருவதாக அரசாங்கம் கூறினாலும் நாட்டின் பொது நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன

1/12/13

இலங்கையின் இனப்படுகொலைக்கு ராஜபக்ஷவுக்கு 100 வீத பொறுப்பு – மன்மோகனுக்கு 50 வீத பொறுப்பு

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அப்போது இலங்கை அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பாரதீய ஜனதா கட்சியே  காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

சிதம்பரத்தின் இந்த பேச்சுக்கு தமிழக பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் பஞ்சாயத்தில் கிராம யாத்திரையை தொடங்கி வைத்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

அதன் போது, பாரதீய ஜனதா மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம் சுமத்தி உள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி  இந்தியாவுக்கு எதிராக திரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாயும் என்பதை பா.ஜனதா உணர்ந்து இருந்தது.
எனவேதான் இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது கொடுக்க மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு கொடுக்க மறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு வெறும் நாடகம். இதனால் பயன்பெற போவது ராஜபக்ஷ. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் காமன்வெல்த் மாநாட்டை பா.ஜனதா எதிர்த்தது.

இங்கிலாந்து பிரதமர் கெமரூனின் அடிப்படை தைரியம் கூட மன்மோகன் சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்த பிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ராஜபக்ஷ 100 சதவீத பொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உண்டு.
 
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணரவேண்டும். காலம் கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும்என தெரிவித்துள்ளார்.
 
 
 
 

“போர்க்கால இழப்புப் பதிவு நடவடிக்கை நம்பகமாக இல்லைஇடம்பெறவில்லை” கிழக்கிலங்கை மக்கள்:-

இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென இலங்கை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

போர்க்காலத்தில், அதுவும் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள காயங்கள், அவயவங்களின் இழப்புக்கள், சொத்துக்களுக்கு எற்பட்டுள்ள அழிவுகள், விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து, திடீரென அறிவித்து சுமார் இரண்டு வார காலப்பகுதிக்குள் தகவல்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பதிவுகள் நடக்கின்றன

 இரண்டு வார காலத்தில் இப்படியான பணியை பூர்த்திசெய்வதில் சிரமங்கள் இருப்பதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காலம் கடந்தாவது போர்க்கால இழப்புக்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இத்தகைய தகவல்களைத் திரட்டியதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்குமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இந்தப் பதிவுகளை மேற்கொள்வதற்காக கிராமசேவை அலுவலகர்கள் மட்டத்தில் சில இடங்களில் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று தகவல்களைத் திரட்டி வருகின்றார்கள்.
சில இடங்களில் கிராமசேவை அதிகாரியின் அலுவலகத்திற்குப் பொதுமக்களை அழைத்து தகவல்கள் திரட்டப்படுகிறது.

பதிவு செய்யும் கிராம சேவகர்கள்
ஆயினும் இரண்டு படிவங்களில் பெரும் எண்ணிக்கையான கேள்விகளின் ஊடாகத் தகவல் திரட்டப்படுவதனால், ஒரு குடும்பத்தின் தகவலைப் பெறுவதற்கு சுமார் அரை மணித்தியாலம் செலவிட வேண்டியிருப்பதனால், குறுகிய காலத்தினுள் இந்தத் தகவல்களைத் திரட்டுவது கடினமான காரியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

குடும்பம் ஒன்றில் அனைவரும் உயிரிழந்திருந்தால், அந்தக் குடும்பத்தின் பதிவுகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று புள்ளிவிபரவியல் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டிபிள்யூ.டி.குணவர்தன தெரிவித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில் எவரும் உயிருடன் இல்லாத காரணத்தினால் அந்தக் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது என அவர் கூறியிருக்கின்றார். இதேபோன்று குடும்பத்தில் எவரும் உயிருடன் இல்லாமல் அனைவரும் உயிரிழந்திருந்தால், அந்தக் குடும்பங்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இவை குறித்து சில மாகாணசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் போர்க்காலத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசாங்கம் மதிப்பீடு செய்யும் என்று எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

28/11/13

சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட தமிழர் தேசிய நினைவு எழுச்சி நாள்


கனடாவின் ரொறன்ரோவில் வழமை போன்று இம்முறையும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

ஏராளமான மக்கள் உணர்வெழுச்சியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தமிழீழத்தின் விடுதலைக்காய் உயிர்நீத்த விடுதலை வீரர்களுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.








 

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள சுவிஸில் மாவீரர் தின நிகழ்வுகள்


சுவிட்சர்லாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.

 பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு தாயக உணர்வுகளுடன் நடந்து வருகிறது.