siruppiddy

25/5/13

ராஜீவ் கொலையில் வெளிவராத??


 
அதிர்ச்சிக் காட்சிகள்! புலிகள் தொடர்பில்லை நிரூபனம்…

வடக்குத் தேர்தலை ஒத்திவைத்து அதிகாரங்களை குறைக்க முற்பட்டால்??

நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தில் வைத்துக்கொண்டு வட மாகாணசபை தேர்தலுக்கோ 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கோ அரசாங்கம் அஞ்ச வேண்டியத்தில்லை.
மாறாக வடக்கு தேர்தலை ஒத்திவைத்து மாகாண சபை முறைமயியில் அதிகாரக் குறைப்பை மேற்கொள்ள முற்பட்டால் நிலைமை மோசமடையுமென கம்யூனிஸ் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் தேவைப்படின் பாராளுமன்ற தெரிவிக்குழுவை அமைத்து மாகாணசபை அதிகாரங்கள் குறித்து பேசலாம். இது குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல.
அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பு தொடந்தும் நம்பிக்கையை இழக்குமானால், நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் மேலும் நெருக்கடிகளையே கொடுக்கும் நிலையேற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி?

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவோம்.
இறுதிவரை இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தவே எதிர்ப்பார்க்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வகையில் வாக்காளர் இடாப்பு பதிவு சட்டமூலத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து எதிர்வரும் ஆறாம் திகதி அதனை நிறைவேற்றவுள்ளோம்.
தமிழ்க் கூட்டமைப்பு என்னதான் எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமென என்றும் பஷில் குறிப்பிட்டுள்ளார்

மீண்டும் விஸ்வரூபம் கொள்ளப் போகிறார் தலைவர்

இந்திய அரசியலில் முதுகெழும்பு இல்லாதவர் என வர்ணிக்கப்படும் மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் வி.நாராயணசாமி  வெளியிட்ட கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையைத் தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் என்பவர் தெற்கு வலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
 இராஜாங்க அமைச்சர் நாராயணசாமி மே மாதம் 20 ஆம் திகதி விடுத்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு கோழை எனவும் அவர் பெண்களையும் சிறுவர்களையும் மனித கேடயமாகப் பயன்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
 அமைச்சரின் கூற்றானது பொறுப்பில்லாத ஒன்றாகும் எனவும் இறந்துபோன ஒரு வருக்கு எதிராகக் குற்றம் சுமத்துவதாகும் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமிக்கு எதிராக இந்திய தண்டனைக்கோவை பிரிவில் 153(ஏ) யின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
 வி.நாராயணசாமி நீண்டகாலமாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

24/5/13

மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை,


ஐ.நா.வின் தலையீடு அவசியம்:யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், இடம் பெயர்ந்த மக்கள் இன்னமும் பூரணமாக மீளக்குடியேற்றப்படவில்லை. இராணுவத்தினர் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை சுவீகரித்துள்ளமையினால் மீள்குடியேற்றம் என்பது முற்றுப்பெறவில்லை. இந்த விடயம் குறித்து ஐ.நா. கவனம் செலுத்தவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. வின். மனிதாபிமானப்பணிக்களுக்கான ஒருங்கிணைந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரி ஜக்னஸ் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்களை சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பின் போதே கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக வடபகுதியில் தங்கியுள்ள ஜக்னஸ் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும் இராணுவ கட்டளைத் தளபதிகளையும் இடம் பெயர்ந்து மீளக்குடியேறியுள்ள மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளனர். இதன் ஒரு கட்டமாகவே கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், மற்றும் வன்னி மாவட்ட எம்.பி.க்களை இக்குழுவினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்

இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்..

 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் குறித்து கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான முள்ளிவாய்க்கால் நிகழ்வில்


வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.
 முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள்,
தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்கள்,
அடுத்து ஆண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அவா் ஆற்றிய உரை காணொளி!

22/5/13

பலாலி முகாம் - சிறிலங்காவின் இலக்கு என்ன?



யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பெரும்பாலான இராணுவ முகாம்கள் பலாலிக்கு இடம்மாற்றப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்,பாதுகாப்பு காரணகளுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பேணப்படும் என்றும் ஏனைய அனைத்து முகாம்களும் பலாலி படைத்தளத்துக்கு மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறிலங்கா இராணுவத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வட தமிழீழத்தில் தேர்தல் ஒன்றை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை நடத்தவும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது,,,

கைதுசெய்யப்பட்டுள்ள புலிகள் தாக்குதலுக்கு தயாரானார்களா?

கடந்த ஒரு வாராத்துக்குள் இந்தியாவிலும் சிறீலங்காவிலும் மூன்று முன்னால் போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விபரங்கள் வருமாறு,
   தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரோபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
   இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக விசாரணைகளின் போது முதலில் தெரிவித்துள்ளார். எனினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் கடல் வழியாக தாம் இந்தியாவை அடைந்ததாகவும் நைரோபிக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
   சிறீலங்கா அரசாங்கம் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 35 வயதான தேவ சதீஸ் குமார் எனபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை விமான நிலையத்தில் வைத்து குறித் நபரை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
   இதேவேளை, சிறீலங்கா தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ தமது வெற்றி நாளாக கொண்டாட தயாராக இருந்த வேளை, மே 17ம் திகதி வெற்றிகொண்டாட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட பகுதியான காலிமுகத்திடலுக்கு  அருகிலுள்ள கொல்லுப்பிட்டிப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்கள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் இரு முன்னால் போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
   இந்த நிகழ்வில் கோத்தபாயவும் மகிந்தவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

19/5/13

புலிகள்-இந்திய மோதல்களின் உண்மையான காரணகர்த்தா ??

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டதற்கும், அதனைத் தொடர்ந்து இந்தியா மூக்குடைபட்டுக் கொண்டதற்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலத்தில் கடமையாற்றிய ஜே.என் தீக்ஷித் அவர்களே பிரதான காரணம் என்று பின்நாட்களில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பல அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறை பற்றிய கொள்கை வகுப்பாளராக இருந்த ஒரு முக்கிய இராஜ தந்திரியான ஜே.என் தீக்ஷித் அவர்கள், புலிகள் விடயத்தில் கடைப்பிடித்திருந்த பிழையான அணுகுமுறைகளே, இலங்கையில் இந்தியா மிகப் பெரியதும், அவமானகரமானதுமான தோல்வியை அடைந்து திரும்ப காரணம் என்று பல இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அரசியல் விடயங்களில் போதிய அனுபவமற்ற ஒருவராகவே இருந்தார். வெளிநாடுகள் தொடர்பான விடயங்கள் அனைத்திற்கும் அவர் பெரும்பாலும் இராஜதந்திரிகளையும், ஆலோசகர்களையுமே நம்பியிருந்தார். அந்தவகையில் இலங்கை பிரச்சனையில் ஜே.என்.தீக்ஷித் அவர்களை பெரிதும் நம்பிச் செயற்பட்ட ராஜீவ் காந்தியை, புலிகள் விடயத்தில் தீக்ஷித் பிழையாக வழிநடத்திவிட்டதாகவே இந்தியப் படைகளின் தளபதிகள் பலர் குற்றம் சுமத்துகின்றார்கள்.

திலீபனை சந்திக்கத் தயங்கிய தீட்ஷித்:

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் என்ற உயரதிகாரி.

திலீபனின் உண்ணாவிரதத்தை இந்தியா அணுகியது தொடர்பாக இணையத் தளம் ஒன்றிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில், “ஈழத் தமிழர் பிரச்சினை இத்தனை மோசமாகுவதற்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீக்ஷித்தே காரணம்” என்று குற்றம் சுமத்தியிருந்தார்
{காணொளி} ஹரிகிரத் சிங் தனது செவ்வியில், மேலும் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தை சுமுகமாகத் தீர்த்துவைப்பதற்கு எங்களாலான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருந்தோம். திலீபனைச் சந்திப்பதற்கு நான் விரும்பினேன். அதற்கான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆனால் சில புலிப் போராளிகள் என்னிடம் கூறினார்கள், “ஜெனரல், மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் நீங்கள் மக்களின் முன்னால் செல்வது உங்களுக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும்” என்று என்னிடம் கூறி, உண்ணாவிரத மேடைக்கு செல்ல என்னை அனுமதிக்கவில்லை. நான் திலீபனிடம் சென்று, உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் கோர இருந்தேன்.

ஆனால் திலீபனால் எப்படி உண்ணாவிரதத்தை கைவிட முடியும்? இந்தியப் பிரதமரால் புலிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது என்று திலீபன் ஏற்கனவே உறுதியாகத் தெரிவித்திருந்தார். இந்தியப் பிரதமர் தரப்பில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்கியிருந்தது.

திலீபனை வந்து சந்திக்கும்படி நான் இந்திய தூதுவரை பல தடவைகள் கேட்டிருந்தேன். “வந்து சந்தியுங்கள்..”, “வந்து சந்தியுங்கள்...”, “வந்து சந்தியுங்கள்...” என்று தொடர்ந்து அவரிடம் கோரியபடியே இருந்தேன். ஆனால், அவர் அங்கு வர மிகுந்த தயக்கம் காண்பித்தார். அங்கு வருவதற்கு அவர் விரும்பவும் இல்லை. கடைசியாக இந்தியத் தூதுவர் அங்கு வந்தபோது, எல்லாமே முடிந்துபோயிருந்தது. அந்த இளைஞன் அநியாயமாக இறந்துவிட்டிருந்தான். இந்தியத் தூதுவர் திலீபனின் உயிரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். இலங்கையில் பின்நாட்களில் இந்தியாவிற்கு பல சங்கடங்கள் நிகழ்வதற்கு இந்தச் சம்பவமே முதற் காரணமாக அமைந்திருந்தது.

தீக்ஷித்தின் ஆணவத்திற்கு “வைகோ” கொடுத்த அடி:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஸ்தாபகரான திரு.வை.கோபால்சாமி (வைகோ) அவர்கள், தி.மு.கா.வின் ஒரு “போர் வாளாக” இருந்த காலத்தில், மகாத்மா காந்தியை திலீபனுடன் ஒப்பிட்டு, தெரிவித்திருந்த கருத்தை, இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

திலீபன் பற்றி தீக்ஷித் வெளியிட்டிருந்த ஒரு கருத்திற்கு பதிலாகவே, திரு.வைகோ இதனைத் தெரிவித்திருந்தார்.

திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருந்த போது, இந்தியத் தூதுவர் தீக்ஷித் இடம் திலிபனின் உண்ணாவிரதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த தீக்சித், “திலீபன் என்ன மகாத்மா காந்தியா?” என்று இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.

தீட்சித்தின் இந்தக் கூற்று பற்றி பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த திரு.வை.கோபால்சாமி அவர்கள், “திலீபன் மகாத்மா காந்தியைவிட சிறந்தவன்” என்று அடித்துக் கூறியிருந்தார். திரு வைகோ, தனது இந்த வாதத்திற்காக மகாத்மா காந்தியின் சுயசரிதையான “சத்தியசோதனையில் இருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காண்பித்திருந்தார்.

மகாத்மா காந்தியின் இளமைப்பருவத்தின்போது அவரது தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் பூதவுடல் அஞ்சலிக்காக வீட்டின் கூடத்தில் கிடத்தி இருக்கையில், தனது இளமையின் பாலியல் உணர்ச்சிகளை காந்தியால் கட்டுப்படுத்தமுடியாமல் மறைவில் சென்று அதனை தீர்த்துக்கொண்டதாக “சத்தியசோதனையில் காந்தி தெரிவித்திருந்தார்.

இளவயதின் உணர்ச்சிகளை மகாத்மாவினாலேயே அடக்கமுடியாது இருந்துள்ளது. ஒரு சோகமான நேரத்தில்கூட மகாத்மாவினால் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியாமல் அதற்கு வடிகால் தேடிச் சென்றுள்ளார்.

ஆனால் திலீபனோ தனது இள வயதில், அந்த வயதிற்கான அனைத்து உணர்ச்சிகளையும் உதறித்தள்ளிவிட்டு, தனது கொள்கைக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்திருந்தான். அந்த வகையில் “திலீபன் மகாத்மா காந்தியை விட சிறந்தவன்” என்று திரு.வை.கோபால்சாமி, தீக்ஷித்தின் கருத்துக்கு பதில் அளித்திருந்தார்.

பிரபா-தீட்ஷித் சந்திப்பு:

1987ம் ஆண்டு, செப்டெம்பர் 22ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார். தீட்ஷித்தை சந்திப்பதற்காக, புலிகளின் தலைவர் பிரபாரகரன் அவர்களும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களும் அங்கு சென்றிருந்தார்கள்.

(இந்தியாவில் தங்கியிருந்து அரசியல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த திரு.அன்டன் பாலசிங்கம் அவர்கள், திலீபனின் உண்ணாவிரதத்தைத் தொர்ந்து ஈழத்தில் ஏற்பட ஆரம்பித்திருந்த அரசியல் குழப்பங்களின் நிமிர்த்தமே புலிகளின் தலைவரால் யாழ்ப்பாணத்திற்கு அவசரஅவசரமாக அழைக்கப்பட்டிருந்தார்.)

புலிகளின் தலைவர்களைச் சந்தித்த தீக்ஷித் பெருஞ் செருக்கோடும், கடும் சினத்தோடும் காணப்பட்டதாக, புலிகளின் அரசியல் ஆலோசகர் பின்னாளில் நினைவு கூர்ந்திருந்தார்.

“திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு எதிராக தமிழ் மக்களைத் தூண்டிவிடும் செயல்” என்றும் தன்னைப் பொறுத்தவரையில் “இது ஆத்திரமூட்டும் ஒரு செயல்” என்றும் தீக்ஷித் கண்டனம் தெரிவித்தார். புலிகளை மிகவும் மோசமாக விமர்சித்த தீக்ஷித், புலிகள் அமைப்புக்கு எதிராக பலவித மிரட்டல்களையும் விடுத்தார்.

பிரபாகரன் அவர்கள் அங்கே நிறையப் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கின்றார். தீக்ஷித்தின் ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பொறுமையாக செவிமடுத்த திரு. பிரபாகரன், தீக்ஷித்திடம் ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார்.

“தீக்ஷித் நல்லூர் சென்று, மரணப் படுக்கையில் இருக்கும் திலீபனுடன் பேசி, இந்தியா ஏற்கனவே வழங்கியிருந்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு திலீபனிடம் கோரிக்கைவிடவேண்டும்” என்று திரு.பிரபாகரன் தீக்ஷித்திடம் பரிந்து கேட்டுக்கொண்டார்.

ஆனால், தீக்ஷித் தனக்கே உரித்தான செருக்குடனும், மமதையுடனும், புலிகளின் தலைவர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தார்.

தனது பயணத்திட்டத்தில் திலீபனைச் சந்திக்கும் விடயம் உள்ளடக்கப்படவில்லை என்று கூறி, புலிகளின் தலைவரின் வேண்டுகோளை உதறித்தள்ளினார். அன்றைய தினம், தீக்ஷித் மட்டும் சிறிது கருணை காண்பித்திருந்தால், தமிழ் மக்கள் மிகவும் நேசித்த ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றி இருக்கமுடியும்.

தமிழை நேசித்த பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். தமிழர் தாயகத்திற்கு அழையா விருந்தாளிகளாக வந்திருந்த பல இந்தியப் படை வீரர்களின் உயிர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் தீக்ஷித்தின் ஆணவம், ஈழ மண்ணில் ஒரு மிகப் பெரிய அலவத்தை நிகழ்த்தும் ஒரு முடிவை நோக்கி அனைத்தையும் இட்டுச் சென்றது.

ஈழ தேசம் முழுவதும் பரவ ஆரம்பித்த உண்ணா விரதங்கள்:

இதற்கிடையில், திலீபனுக்கு ஆதரவாகவும் அவர் முன்வைத்த கோரிக்கைகளை முன்வைத்தும், ஈழ தேசம் முழுவதும் பல இளைஞர்கள் உண்ணாவிரதத்தில் குதித்திருந்தார்கள். மட்டக்களப்பில் மதன் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

அதேபோன்று முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். திருகோணமலையிலும் கிருபா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சாகும்வரையிலான உண்ணாநோன்பை ஆரம்பித்திருந்தார். தமிழ் தேசம் முழுவதுமே உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தது.

மறுநாள், அதாவது 26ம் திகதி முதல் யாழ்குடா முழுவதிலுமுள்ள ஆரச மற்றும் தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவைகளும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும், மறியலும் செய்து வேலைப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்கள்.

திலீபன் மரணம்:

26.09.1987 காலை 10.48 மணிக்கு, திலீபன் என்ற மாவீரன் தனது உயிரை தமிழுக்காக, தான் நேசித்த தமிழ் மக்களுக்காக தியாகம் செய்திருந்தான்.

இந்தியாவின் வரலாற்றில் இரத்தத்தால் பொறிக்கப்பட்ட ஒரு “ஆச்சரியக் குறியாக” - திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும், அவனது மரணமும் அமைந்திருந்தது

இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுதினம்

 
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த வெற்றியின் 4 ஆண்டு தினத்தை இலங்கை அரசு கொண்டாடியது.

இந்நிலையில் இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டணி கட்சியினர், இறுதி கட்டப்போரில் உயிர் நீத்த தமிழர்களுக்காக வவுனியாவில் ஒன்று கூடி நேற்று அஞ்சலி செலுத்தினர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த போரை நினைவு தினமாக யாரும் அனுசரிக்கக்கூடாது.
அப்படி அனுசரித்தால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கொழும்பு  பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது..

18/5/13

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இதுவரை வெளிவராத

 
 இந்த நூ ற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலாமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனப் அழிப்பு திகழ்கிறது. உலகம் தனது கண்களை மூடியிருக்க, சிங்களப் பேரினவாதம் தன் நரபலி வேட்டையை மேற்கொண்டது. எமது தேசம் கண்ணீரில் மூழ்கி, குருதியில் குளித்தது. இது தொடர்பாக பல்வேறு காணொளிகளும், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வெளிவந்திருந்தது. இத்தருணத்தில், இதுவரை வெளிவராத புகைப்படங்களை முள்ளிவாய்க்கால்பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவாக"""


                                  
 

அடங்க மறுக்கும் தமிழனின் வீரம்- படைகளை குவிக்கும்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகள் கெடுபிடிகள் மத்தியில் நேற்று பல்கலைக்கழக சமூகத்தினால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
 
 கடந்தாண்டு மாவீரர் தின கைதுகள் மற்றும் மிரட்டல்களையடுத்து இம்முறை பல்கலைக்கழக சமூகம் அடக்கிவாசிக்குமெனவே சிறிலங்கா படைத்தரப்பு நம்பியிருந்தது.

எனினும் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்கலைக்கழக விடுதிகளிலும் நினைவு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படலாமென்ற அச்சங்காரணமாகவே இத்தகைய படைக்குவிப்பு நடந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.
 
 சுமுகமான சூழலில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் படையினரது பிரசன்னம் இல்லாதிருக்கவேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதனால் அச்சமடைந்த விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவ மாணவிகள் விடுதிகளிலிருந்து நேற்று வெளியேறி தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரே பலர் இவ்வாறு செல்லத் தொடங்கியதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

16/5/13

சக்தி அமைப்பின் எச்சரிக்கை - நெருக்கடிக்குள் மஹிந்த?

 
 வட தமிழீழத்தில்  தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்த நாள் தொடக்கம் பல அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்நோக்கி வருகிறதுகுறித்த தேர்தலை தடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளதுடன், அது தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

"காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள் ஏற்படும். இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும். 
இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பணத்தை அழிக்கும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்ல, எந்த மாகாணத்திலும் நடத்தக் கூடாது.

போருக்கு முன்னர், வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாது தேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். அதற்கு எதிராக தேசப்பற்றாளர்களை அணித்திரட்டி போராட்டம் நடத்தப்படும். 
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு, மக்களின் பணத்தில் வாழும், அமைச்சர்கள் டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தேசத்துரோகிகளாக வடக்கில் தேர்தலை நடத்தி, அதிகாரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேவேளை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்படுவதற்கு முன்னர், வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அரசாங்கம் உறுதி வழங்கியதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக ஐந்தாயிரம் பேரை அழைத்துச் சென்று அந்த தீவில் குடியேற போவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் தமக்கான அரசியல் அதிகாரகளைப் பெற்று வாழ்வதற்கு கூட இந்த இனவாத, கடும்போக்குவாத சிங்களவர்கள் அனுமதிக்காத போது, சமத்துவமாக வாழ்வதாக மேற்குலகை ஏமாற்றுவதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது

சிங்கள புலனாய்வுத்துறைக்கு துணைபுரிந்த?


  
தமிழ்மக்களுக்கு சேவை செய்வது என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்காக சிறீலங்கா இனஅழிப்பு அரசுக்கு பேருதவி புரிந்துகொண்டிருக்கும் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி, சிறீலங்காவின் புலனாய்வுத் துறையுடன் 2007 ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளர் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிற்பாடு, கோத்தபாய ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் கனடாவை தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலில் தான் சிறீலங்கா தரப்புகளுடன் 2005 ம் ஆண்டிலேயே தொடர்புகளை பேணியதாக குறிப்பிட்டிருந்தார்.
  சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன், தமிழ் மக்கள் சொல்லொண துன்பத்தை அனுபவித்து ஆயிரக்கணக்கில் பலியாகிக் கொண்டிருந்த தருணத்தில், தான் மக்களை காப்பாற்றுவதற்கான ஆயதங்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுக்திக் கொண்டிருப்பதாக கூறி கடைசி நேரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்து கழுத்தறுத்தவர் கே.பி. அதேவேளை, புலிகள் மக்களை காப்பாற்றுவதற்கான மேற்கொண்ட ஏனைய முயற்சிகளையும், தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாதித்துவிடும் என காரணம் காட்டி முடக்கினார்.
   இறுதியில் மக்களை காப்பாற்றுவதற்கு கப்பலும் வரவில்லை எந்த நாடும் வரவில்லை. சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள்தான படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயினும், மே 19ற்குப் பின்னர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நேரடியாகவும் இறுக்கமாகவும் இணைந்து செயற்படத் தொடங்கிய கே.பி, தமிழ் மக்களின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் பூச்சாண்டி காட்ட புறப்பட்டுள்ளார்.
   இதேவேளை, சவால் மிக்க சக்தியாக மாறிவரும் புலம்பெயர் தமிழ்மக்களை பலவீனப்படுத்துவதற்காக சில அமைப்புகளை புலம்பெயர் தளத்தில் உருவாக்கி நெறிப்படுத்துவதோடு, சில தனிநபர்களையும் ஊடுவல் நடவடிக்கைகளுக்காக களம் இறக்கியுள்ளர் என்ற தகவல்களும் கசியத்தொடங்கியுள்ளது.
   ஆகவே, எமது மக்களை பேரழிவுக்குள் தள்ளிய கே.பியையும் அவர் போன்ற துரோகிகளின் செயற்பாடுகளையும் இனம் கண்டு முறியடிப்பது தமிழர்களின் போராட்டத்திற்கு அவசியமாகும். ஆதலால், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் நான்காம் ஆண்டை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கும் இத்தகைய நகர்வுகளை மேற்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும் என தாயகத்திலுள்ள தமிழ்தேசிய சக்திகள் விடுக்கும் வேண்டுகோளை புலம்பெயர் தமிழர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்

 

படையினருக்கு எதிராக திரளும் தமிழர் படை -

 தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா படையினர் திட்டமிட்ட நில அபகரிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்,இதற்கு எதிராக பல தரப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. எனினும் இது ஆயுத முனையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தது.

எனினும் தமிழர்களின் கோரிக்கையை கருத்திற் கொள்ளாத சிறிலங்கா படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தமிழர் தாயகத்தின் காணி உரிமையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நேற்றையதினம் யாழ்.மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரால் சுவீகரிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்கள் 1474 பேர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறிலங்காப் படையினர் தமது படைத்தளங்களை கட்டியெழுப்புவதற்காக, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் 6381 ஏக்கர், 38.97 பேர்ச் காணியை சுவீகரிக்கவுள்ளதாகவும், இது சுமார் 25.8 சதுர கி.மீ பரப்பளவுக்குச் சமமான பாரிய நிலப்பரப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் 2011ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக இவ்வாறு காணிகளை சுவீகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 யாழ்ப்பாணம் காணி சுவீகரிப்பு அதிகாரி, மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாண மாவட்ட காணி அளவை அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 2000 பேர் வரையில் சிறிலங்கா படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக விரைவில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.நீதித்துறை வரலாற்றில் அதிகளவு வழக்குகள் ஒரு நாளில் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

15/5/13

மணிரத்னம்! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

 
வல்லவனுக்கு புல்லும் என்பது இதுதான் போல, கடல் படத்தை இயக்கி வரும் மணிரத்னம், நிலம் புயலை பயன்படுத்தி சில முக்கிய காட்சிகளை எடுத்துள்ளார்.
 கடந்த புதனன்று வங்கக் கடலில் உருவான நிலம் புயல் காரணமாக, தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளே அல்லோலகல்லோலப் பட்டது. ஆனால், புயல் வந்ததை நினைத்து மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கடற்கரையில் காத்திருந்த ஒரு குழு உள்ளது. அதுதான் மணிரத்னத்தின் கடல் படப்பிடிப்புக் குழு. புதனன்று காலையில் இருந்தே சென்னையை அடுத்த காசிமேடு, ராயபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர், நிலம் புயல் தாக்கத்தை பின்னணியாகக் கொண்டு சில முக்கியக் காட்சிகளை படம்பிடித்துள்ளது.
 இது குறித்து கடல் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி தனது இணையப் பக்கத்தில், புயல் சீற்றத்துக்கு இடையே சில காட்சிகளை படம்பிடித்தோம். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்

காணொளி குறித்து விசாரணை


செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கை தொடர்பிலான காணொளிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தலைமை தூதுவர் பி.எம். ஹம்சா நேற்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிகளுக்கான உண்மையான ஆதாரங்களை தங்களிடம் கையளிக்குமாறு அரசாங்கம் சனல்4 விடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் பின்னர் செனல் 4 தொலைகாட்சி இறுதியாக தயாரித்த மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி திரையிடப்பட்டது.

இதனை சர்வதேச மன்னிப்பு சபையும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது உரையாற்றிய பீ.எம்.ஹம்சா, இந்த காணொளியில் தமிழ் மக்கள் பேசுகின்ற விடயங்கள் திரிபு படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் தாக்குதல் நடத்துகின்றனர் என்றே கூறுகின்றனர், எங்கும் இராணுவனம் தாக்குதல் நடத:துகிறது என்று தமிழில் கூறவில்லை.

எனினும் இராணுவம் தாக்குதல் நடத்துகின்றனர் என்று மக்கள் கூறுவதாக சனல்4 தொலைக்காட்சி திரிபு படுத்தி கூறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சனல்4 தொலைகாட்சி திட்டமிட்டே இலங்கை மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

11/5/13

சீமானின் சீற்றம்…பிணத்தை கூட?

சீமானின் சீற்றம் …இந்த உலகிற்கு அணை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் நமது முப்பாட்டன் கரிகால் பெருவளத்தான், காவிரியின் குறுக்கே அணை கட்டி, பெருகி வந்த நீரை திருப்பி விட்டு, வறண்ட நிலங்களுக்கு பாசன நீர் கொடுத்து விவசாய உற்பத்தியை பெருக்கினான். அதனால்தான் சோழ வள நாடு சோறுடைத்து என்றானது. அந்த சோழ நாடான தஞ்சை தரணியில் இன்றைக்கு வயல்கள் காய்கின்றன,{காணொளி}

9/5/13

கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று ?,,


கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒரு நபர் பலியானதுடன் மூன்று நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தைச் சந்தித்த 5 வாகனங்களில் மூன்று வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியிருக்கின்றன என்று றிச்மண்ட் பகுதிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், ஆபாத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும் தகவல்கள் வெளியாகிவுள்ளது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த விபத்திற்கான காரணம் அதிகரித்த வேகத்தில் வாகனத்தைச் ஓட்டியதே என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினைத் தொடர்ந்து நெடுஞ்சாலையின் இரு பக்க போக்குவரத்துப்பாதைகளும், நைட் வீதியின் தென் பகுதிக்கான போக்குவரத்துப்பாதையும் மூடப்பட்டுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

8/5/13

தமிழீழ சுதந்திர சாசன,,,""

பிரித்தானியா - ஜேர்மனி - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான பரப்புரைகள் தீவிரம் !
 தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில் தமிழர்கள் பரந்து வாழுகின்ற நாடுகளில் இதற்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ளதோடு அமெரிக்க மண்ணில் மே 15 - 18 திகதி வரை தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடாக இது இடம்பெறுகின்றது.
 இந்நிலையில் பிரித்தானியா - ஜேர்மனி - பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பரப்புரைக்கூட்டங்கள் மற்றும் தகவல் பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
  மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன. பிரித்தானியா :
 (04-05-2013) சனிக்கிழமை மாலை 6:30 மணி முதல்இரவு 9:30 மணி வரை Warden, Walthomstow Quaker Meeting House/1a Jewel Road, Walthomstow, UK, LONDON E17 4QUஎனும் இடத்திலும் (06-05-2013) திங்கட்கிழமை மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை Trinity Centre, First Floor Hall, East Avenue, East ham, London E12 6SGஎனும் இடத்திலும் ,பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
 ,,,,ஜேர்மனி :
 (05-05-2013) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11 மணிக்கு Oppelner str 130, 53119 Bonn எனும் முகவரியில் பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.
 பிரான்ஸ் :
 தமிழர்களின் வர்தக வலயத் தொகுதியான லாசப்பல் பகுதியில் மாலை 17:30 மணிமுதல் இரவு 20:00 மணி வரை தமிழீழ சுதந்திர சாசன தகவல்பரிமாற்றங்கள் தொண்டர்களால் இப்பகுதியில் வழங்கப்படவிருக்கின்றது.
 மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன



7/5/13

கடத்திச் சென்று நான்கு நாட்கள் மறைத்து வைத்திருந்த சிவில்,.,



28 வயது யுவதியை கடத்திச் சென்று நான்கு நாட்கள் காட்டிலுள்ள குடிசையொன்றில் மறைத்து வைத்திருந்த சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரையும் அவருக்கு உதவிய நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 யுவதியை கடத்திச் செல்ல உதவிய மற்றுமொரு சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட யுவதி நொச்சியாகம, குடாவௌ பகுதியைச் சேர்ந்தவரெனவும் குடும்ப சுகாதார தாதியாக பயிற்சியை முடித்துக் கொண்டு நியமனத்தை எதிர்பார்த்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான சிவில் பாதுகாப்பு படை வீரர் நொச்சியாகம துனுமடலாவ சோதனைச் சாவடியில் கடமையாற்றுபவராவார்.
யுவதி சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் இவரது நடத்தை பிடிக்காததால் காதல் தொடர்பை நிறுத்த முடிவு செய்திருந்ததாகவும் கடந்த 28ம் திகதி இரவு யுவதியின் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த சந்தேகநபர் யுவதியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியுலுள்ள குடிசையொன்றில் மறைத்து வைத்துள்ளார்.
யுவதியின் பெற்றோர் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் மூன்று நாட்களாக தேடியும் யுவதியை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடத்தப்பட்ட யுவதி கடந்த 3ம் திகதி தம்மை சிவில் பாதுகாப்பு படை வீரர் பலாத்காரமாக ரம்பேவெவ திருமண பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திருமணப் பதிவு மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருமண பதிவு அலுவலகத்திற்கு அருகில் காத்து நின்ற பொலிஸார் சந்தேக நபரையும் அவருக்கு உதவிய நபரையும் கைது செய்தனர்

சூட்டுக் காயங்களுடன் இராணுவச் சிப்பாயின் ,.,


  முல்லைத்தீவு மாஞ்சோலைப் பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் படைசிப்பாய் ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
 அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்த சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டவராவார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 இவரது தாயைப் பகுதியின் ஊடாக குண்டு பாய்ந்து தலைப் பகுதியூடாக குண்டு வெளியே பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதோடு இவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

6/5/13

காற்று வெளி நிகழ்ச்சியில் ""

5 மே, 2013 அன்று வெளியிடப்பட்டது
காற்று வெளி
மே 18 நினைவு நாள் தொடர்பாக வணக்கம் FM இன் காற்று வெளி நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல்.
கலந்து கொண்டோர்
சியான் சிங்கராஜா - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
சேது பாவா - நாம் தமிழர் கனடா
தேவா சபாபதி - கனடியத் தமிழர் தேசிய அவை.{காணொளி }

4/5/13

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக ,,

டேவிட் டாலி  நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் டாலி தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார்.
   அசர்பைஜான், டொமினிக்கன் குடியரசு, ஹொண்டுராஸ், பரகுவே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறைப் பொறுப்பாளா கெதரீன் அஸ்டனினால் இந்தப் புதிய நியமனங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
   இந்த நியமனங்களை குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் அங்கீகரிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான பிரதிநிதியாக டேவிட் டாலியை அரசாங்கம் அங்கீகரித்தால் இந்த நியமனம் உறுதிப்படுத்தப்படும்.
   ராஜதந்திர சேவையில் அனுப முதிர்சியும், திறமையும் மிக்கவர்கள் சில படிமுறகைளின் அடிப்படையில் தெரிவு செய்யப்ட்டுள்ளதாக அஸ்டன் தெரிவித்துள்ளார்

2/5/13

சிறிலங்கா விவகாரம்: பிரித்தானிய பிரதமருக்கு,,

சிறிலங்காவில் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன,இந்நிலையில் குறித்த மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருனுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை விவகாரங்களை கருத்திற் கொண்டு மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சில நாடுகளும் மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் பிரித்தானியா மாநாட்டில் பங்கேற்பது உசிதமாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
   கமரூன் மாநாட்டில் பங்கேற்றால் அது பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளை உதாசீனம் செய்ததாக அர்த்தப்படும் என மனித உரிமை செயற்பாட்டாளர் பிரட் கார்வர் தெரிவித்துள்ளார்.
  இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னமும் உறுதியான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என பிரித்தானிய வெளிவிவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது