siruppiddy

28/7/13

பணத்திற்காக கட்சித் தாவவில்லை



பணத்திற்காக கட்சித் தாவவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் அனைவருக்கும் எதிராகவும் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது வழமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தாம், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை எனவும், பணம் பெற்றுக்கொண்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனி எதிர்காலம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
62 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் உண்மை வெளிப்பட்டு;ள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்

அறிக்கை சமர்ப்பிக்க நவனீதம்பிள்ளை உள்ளார்


இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை விஜயம் குறித்து, நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி முதல் 27ம் திகதி வரையி;ல் பேரவையின் 24ம் அமர்வுகள் நடைபெறவுள்ளது.
அமர்வுகளின் ஆரம்ப உரையை நவனீதம்பிள்ளை ஆற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வம் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையில் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்கு இந்த விஜயம் சந்தர்ப்பமாக அமையும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

27/7/13

கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் -



பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் - பெபரல்

பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார்.

சுதந்திரமானதும், சுயாதீனமானதுமான தேர்தல்களை உறுதிப்படுத்த கூடுதலான தேர்தல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு முறைமையை எமது நாட்டுடன் ஒப்பீடு செய்ய முடியாது எனவும், பாரிய பொருட் செலவில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாகாணசபைகளிலும் நடைபெறவுள்ள தேர்தல்களுக்காக 4500 பேரை கடமையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்

26/7/13

அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில் சனிக்கிழமை யூலை 27 மாபெரும்



கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல்- ஆறாத வடுக்களாக தமிழர் உள்ளங்களில் பதிந்த நெருப்பு நினைவுகள் யாவும் ஆழமாகப் பதித்து நிற்கின்றன. யூலை 1983 இலங்கைத் தீவில் தென்னிலங்கைத் தமிழர் மீதும் சிறைச்சாலைகளில் இருந்த தமிழ்க் கைதிகள் மீதும் இனவாத சிறிலங்கா அரச பின்னணியோடு சிங்களக் காடையர்கள் கட்டவிழ்த்த கொடிய இன அழிப்பு நடைபெற்று30 ஆண்டுகள் கடந்து நிற்கின்ற நிலையிலும் இன்றும் தொடர்கின்றன. சிறிலங்கா இனவாத அரசாலும் சிங்கள இன வெறியர்களாலும் தமிழ் மக்கள் மீதான கொடிய இன அழிப்பு நடவடிக்கைகளால் முடிவிலா துயரங்களில் மூழ்கிக் கிடக்கும் எம் தாயகத் தமிழினத்தை காத்து எம் மண்ணின் விடுதலையையும் எம் மக்களின் மறுவாழ்வையும் உறுதி செய்வது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கடனாகும். மறுக்கப்பட்ட எமக்கான நீதியை வென்றெடுக்கும் வரையில் நீதி நோக்கிய எம் போராட்டங்கள் தொடரப்பட வேண்டும்.
உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை யூலை 27ஆம் நாள் 2013 மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது.
 இடம்: அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில்
(Albert Campbell Square - Scarborough Civic Center)
காலம்: யூலை 27, சனிக்கிழமை
நேரம்: மாலை: 6:00 மணி
ஜுலை 83 ல் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவு கூர்வதுடன், போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும். போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் நடைபெறவுள்ளது.
சர்வதேசமும், மனித உரிமை அமைப்புக்களும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்ற இவ்வேளையில் புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் தமிழின அழிப்பையும், ஐ.நா தலைமையில் தமிழீழ சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பையும் முன்நிறுத்தி எம் இனத்தின் விடிவிற்காக ஒவ்வொரு தமிழனும் ஒற்றுமையாக ஒன்றுகூடுவோம்

ஊடகர்களுக்கான கருத்தரங்கு என்ற பெயரில் அச்சுறுத்தல்!



பிரதேச ஊடகவியலாளர்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு என்ற பெயரில் சிறிலங்கா அரச தகவல் திணைக்களத்தால் கடந்த செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கின் மூலம் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலுக்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களைவிட தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் இராணுவ அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அதனை விட இராணுவ ஊடகவியலாளர்களும் இராணுவப் புலனாய்வாளர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர்.
யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கிற்கு இராணுவத்தினரும் இராணுவ ஊடகவியலாளர்களும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டதன் மர்மம் என்ன என்று கேள்வியெழுப்பியுள்ள யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் இதன் மூலம் தாங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரச தகவல் திணைக்களத்தினால் கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அடிக்கடி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. இந்தக் கருத்தரங்குகளில் இராணுவத்தினர் கலந்துகொள்வதில்லை. அத்துடன், யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களோ வன்னி ஊடகவியலாளர்களோ அழைக்கப்படுவதில்லை. ஆனால், யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிற்கு இராணுவ அதிகாரிகளும் இராணுவ, தென்னிலங்கை ஊடகவியாளாகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இங்கு கலந்துகொண்ட இராணுவ ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் புகைப்படம் எடுப்பது போன்று யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களையும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அரசுக்கு சார்பாகச் செயற்பட வேண்டுமென்று தாங்கள் மறைமுகமாக அச்சுறுத்தப்பட்டதாக தாங்கள் உணர்வதாகவும் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவற்றை விட, இந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் யாழ்.அரச அதிபரே கதாநாயகன் பாத்திரம் ஏற்றிருந்தார். இங்கு கலந்துகொண்ட யாழ்.அரச அதிபர் யுத்தத்திற்கு பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை வெண்திரையில் புகைப்படங்களுடன் எடுத்துக்காட்டி விளக்கமளித்தார். ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அரச அதிபர் நின்றவாறு இந்த விளக்கவுரையை நிகழ்தினார். இந்த விளக்கவுரை தமிழ் மொழிக்கு அப்பால், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த அபிவிருத்தி குறித்த விபரங்களை தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மிக அவதானமாக வீடியோவில் பதிவுசெய்துகொண்டனர். யுத்தத்திற்கு பின்னர் யாழ்.குடாநாட்டில் பிரமிக்கத்தக்க அபிவிருத்தி நடைபெறுவதாக யாழ்.அரச அதிபர் கூறிய மேற்படி விபரங்கள் இனிமேல் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மூலம் தென்னிலங்கை மக்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பிரச்சாரம் செய்யப்படப்போகின்றது.
யாழில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி, எதிர்காலத்தில் இங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி போன்ற விடயங்களை புள்ளிவிபரங்களுடன் எடுத்தியம்பிய அரச அதிபர், யாழ்.குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்படவேண்டிய பொதுமக்களின் விபரங்கள், அவர்களை மீள்குடியேற்றி அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்களை துளியளவேனும் தொட்டுக்காட்டவில்லை.
யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் பெருமளவு ஏக்கர் கணக்கான நிலங்களை இராணுவத்தினர் சுவீகரித்து இராணுவ முகாம்கள் அமைத்து வருகின்ற நிலையில் இங்கு மீளக்குடியமர வேண்டிய லட்சக்கணக்கான மக்கள் நலன்புரி நிலையங்களில் ஏதிலிகளாக தவிக்கின்றனர். உரிய இருப்பிடம், வாழ்வாதார வசதிகள், பிள்ளைகளுக்கான கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் இன்றி கடந்த முப்பது வருங்களாக நலன்புரி நிலையங்களில் வாடுகின்ற மக்களைத் தவிர்;த்து யாழ்.குடாநாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை வேடிக்கையாக உள்ளதென்று யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்திற்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும் இனிவரும் காலங்களில் இந்த அபிவிருத்தி மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அரச அதிபர் தெரிவித்திருந்தார். ஆனால், வலி.வடக்கில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலம் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் முடங்கியுள்ளது. அதனைவிட புதிதாகவும் இராணுவம் விவசாய நிலங்களை சுவீகரித்து வருகின்றது.
மேலும், வலி.வடக்கில் மயிலிட்டிக் கடலில் யாழ்.குடாநாட்டு கடற்றொழிலாளர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளாகின்ற நிலையிலும் இங்கு தொழில் செய்ய அனுமதிக்கப்படாமையால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களைப் பற்றியோ இங்குள்ள வளம்மிகக் விவசாய பூமி மற்றும் கடல்வளம் தொடர்பாகவோ எந்தவித கருத்தையும் முன்வைக்காத அரச அதிபர் அடுத்த ஆண்டுக்குள் யாழ்.குடாநாட்டு விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய பொருளாதாரத் துறைகளில் கடும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியிருந்தார். இவரின் இந்த விளக்கக் கருத்தரங்கு நகைப்புக்கு இடமாக அமைந்திருந்தது என்று இங்கு கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்திடம் நல்ல பெயர் எடுப்பதற்காக யாழ்.அரச அதிபர் போன்ற தமிழ் அரச அதிகாரிகள் அரசாங்கத்திடம் மண்டியிடுவதானது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகவே கருதப்படும். இவர்கள் தங்கள் காலத்தில் நன்மைகளைச் செய்யாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் நின்று அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒத்து ஊதுகின்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்று குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஊடகவியலாளர் சந்திப்புகளின் போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும். வேண்டுமாயின் இராணுவ அதிகாhரிகளுக்கும் இராணுவ ஊடகவியலாளர்களுக்கும் தனியான ஊடக கருத்தரங்குகளை நடத்தலாம். அதைவிடுத்து தங்களுடன் இராணுவத்தினருக்கும் ஏற்பாடு செய்து தங்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க வேண்டாமென்றும் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

பிரதேச ஊடகவியலாளர்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு என்ற பெயரில் சிறிலங்கா அரச தகவல் திணைக்களத்தால் கடந்த செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கின் மூலம் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலுக்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களைவிட தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் இராணுவ அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அதனை விட இராணுவ ஊடகவியலாளர்களும் இராணுவப் புலனாய்வாளர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர்.
யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கிற்கு இராணுவத்தினரும் இராணுவ ஊடகவியலாளர்களும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டதன் மர்மம் என்ன என்று கேள்வியெழுப்பியுள்ள யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் இதன் மூலம் தாங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரச தகவல் திணைக்களத்தினால் கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அடிக்கடி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. இந்தக் கருத்தரங்குகளில் இராணுவத்தினர் கலந்துகொள்வதில்லை. அத்துடன், யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களோ வன்னி ஊடகவியலாளர்களோ அழைக்கப்படுவதில்லை. ஆனால், யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிற்கு இராணுவ அதிகாரிகளும் இராணுவ, தென்னிலங்கை ஊடகவியாளாகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இங்கு கலந்துகொண்ட இராணுவ ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் புகைப்படம் எடுப்பது போன்று யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களையும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அரசுக்கு சார்பாகச் செயற்பட வேண்டுமென்று தாங்கள் மறைமுகமாக அச்சுறுத்தப்பட்டதாக தாங்கள் உணர்வதாகவும் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவற்றை விட, இந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் யாழ்.அரச அதிபரே கதாநாயகன் பாத்திரம் ஏற்றிருந்தார். இங்கு கலந்துகொண்ட யாழ்.அரச அதிபர் யுத்தத்திற்கு பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை வெண்திரையில் புகைப்படங்களுடன் எடுத்துக்காட்டி விளக்கமளித்தார். ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அரச அதிபர் நின்றவாறு இந்த விளக்கவுரையை நிகழ்தினார். இந்த விளக்கவுரை தமிழ் மொழிக்கு அப்பால், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த அபிவிருத்தி குறித்த விபரங்களை தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மிக அவதானமாக வீடியோவில் பதிவுசெய்துகொண்டனர். யுத்தத்திற்கு பின்னர் யாழ்.குடாநாட்டில் பிரமிக்கத்தக்க அபிவிருத்தி நடைபெறுவதாக யாழ்.அரச அதிபர் கூறிய மேற்படி விபரங்கள் இனிமேல் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மூலம் தென்னிலங்கை மக்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பிரச்சாரம் செய்யப்படப்போகின்றது.
யாழில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி, எதிர்காலத்தில் இங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி போன்ற விடயங்களை புள்ளிவிபரங்களுடன் எடுத்தியம்பிய அரச அதிபர், யாழ்.குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்படவேண்டிய பொதுமக்களின் விபரங்கள், அவர்களை மீள்குடியேற்றி அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்களை துளியளவேனும் தொட்டுக்காட்டவில்லை.
யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் பெருமளவு ஏக்கர் கணக்கான நிலங்களை இராணுவத்தினர் சுவீகரித்து இராணுவ முகாம்கள் அமைத்து வருகின்ற நிலையில் இங்கு மீளக்குடியமர வேண்டிய லட்சக்கணக்கான மக்கள் நலன்புரி நிலையங்களில் ஏதிலிகளாக தவிக்கின்றனர். உரிய இருப்பிடம், வாழ்வாதார வசதிகள், பிள்ளைகளுக்கான கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் இன்றி கடந்த முப்பது வருங்களாக நலன்புரி நிலையங்களில் வாடுகின்ற மக்களைத் தவிர்;த்து யாழ்.குடாநாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை வேடிக்கையாக உள்ளதென்று யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்திற்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும் இனிவரும் காலங்களில் இந்த அபிவிருத்தி மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அரச அதிபர் தெரிவித்திருந்தார். ஆனால், வலி.வடக்கில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலம் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் முடங்கியுள்ளது. அதனைவிட புதிதாகவும் இராணுவம் விவசாய நிலங்களை சுவீகரித்து வருகின்றது.
மேலும், வலி.வடக்கில் மயிலிட்டிக் கடலில் யாழ்.குடாநாட்டு கடற்றொழிலாளர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளாகின்ற நிலையிலும் இங்கு தொழில் செய்ய அனுமதிக்கப்படாமையால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களைப் பற்றியோ இங்குள்ள வளம்மிகக் விவசாய பூமி மற்றும் கடல்வளம் தொடர்பாகவோ எந்தவித கருத்தையும் முன்வைக்காத அரச அதிபர் அடுத்த ஆண்டுக்குள் யாழ்.குடாநாட்டு விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய பொருளாதாரத் துறைகளில் கடும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியிருந்தார். இவரின் இந்த விளக்கக் கருத்தரங்கு நகைப்புக்கு இடமாக அமைந்திருந்தது என்று இங்கு கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்திடம் நல்ல பெயர் எடுப்பதற்காக யாழ்.அரச அதிபர் போன்ற தமிழ் அரச அதிகாரிகள் அரசாங்கத்திடம் மண்டியிடுவதானது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகவே கருதப்படும். இவர்கள் தங்கள் காலத்தில் நன்மைகளைச் செய்யாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் நின்று அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒத்து ஊதுகின்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்று குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஊடகவியலாளர் சந்திப்புகளின் போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும். வேண்டுமாயின் இராணுவ அதிகாhரிகளுக்கும் இராணுவ ஊடகவியலாளர்களுக்கும் தனியான ஊடக கருத்தரங்குகளை நடத்தலாம். அதைவிடுத்து தங்களுடன் இராணுவத்தினருக்கும் ஏற்பாடு செய்து தங்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க வேண்டாமென்றும் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

25/7/13

பெண்களின் விவரங்களை திரட்டும் படையினர்!


 யாழ். குடாநாட்டில் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தந்தப் பகுதிகளிலுள்ள படையினரே மக்களைப் பொது இடத்துக்கு அழைத்து இந்த விவரங்களைப் பதிவு செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
அடுத்ததாக இவ்வாறான விவரங்களை திரட்டுவது தனியாகவும் வறுமையுடனும் வாழும் பெண்களை இலக்குவைத்து சமூக விரோத செயலில் சிங்களப் படையினர் ஈடுபடலாம் எனவும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நேற்று முன்தினமும் திங்கட்கிழமை உடுவில் ஆலடி வைரவர் கோயிலடிகுச் சென்ற மானிப்பாய் படை அதிகாரிகள் மக்களிடம் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
விதவைப் பெண்கள் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் தொடர்பான குடும்ப விவரங்களையே அவர்கள் பதிவு செய்துள்ளனர்.இவையெல்லாம் அவர்களின் மீதான மனிதாபிமானத்திற்காக மேற்கொள்ளப்படவில்லை எனவும் வரும் மாகாணசபை தேர்தலை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்படுகிறது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்

மாகாணசபைதேர்தலில் மக்களுக்கு நம்பிக்கையின்னை-


நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களுக்க நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
அதிகளவான அரசயில் வாதிகள் தேர்தல்காலங்களில் வளங்கும் வாக்குறிதிகளை நிறைவேற்றதவறுகின்றன இதனால் அதிகளவான மக்கள் தேர்தலில் நம்பிக்கையற்று போயுள்ளார்கள்.
இதனால் மக்கள் மனதில் ஜனநாயகம் குறித்து நம்பிக்கையின்மை காணப்படுவதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்

தாரைவார்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க அரசு??


 
 கச்சதீவை விட்டுகொடுப்பதன் மூலம் அது தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது ஒழித்து அதை அடிப்படையாக கொண்டு 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு 13ம் திருத்தத்தை அடியோடு அழித்தொழிக்க அரசுக்குள் சதியாலோசனை நடைபெறுகிறது.
ஆனால் இன்று 13ம் திருத்தம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு அங்கம். அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு அரசாங்கம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்துள்ளது.ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தங்களை கிழித்தாலும் ஒழித்தாலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்வது என்பது இன்று இந்தியாவையும் தாண்டிய சர்வதேச பிரச்சினையாகி விட்டது என்பதை நான் அரசுக்கு உறுதியுடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது கச்சதீவு தொடர்பாக இன்று இந்திய உயர் நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை படைகளின் தொல்லையில் இருந்து மீட்பதற்கு ஒரே வழிஇ கச்சதீவை மீட்பதுதான் என்று தமிழகத்தில் இன்று கருத்து உருவாகி வருகின்றது. கச்சதீவை இந்திய மத்திய அரசு மீளப்பெறுமானால் அதை காரணமாக காட்டி 1987ல் செய்துகொள்ளப்பட்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்குள் திட்டம் தீட்டப்படுகின்றது. அதன்மூலம் 13ம் திருத்தத்துக்கு முழுமையாக முடிவு காணாலாம் என அரசுக்குள் உள்ள இனவாத பிரிவு நினைக்கின்றது.
ஆனால் இன்று பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்பது ஐநா சபையின் பிரச்சினையாகி விட்டது என்பது இந்த இனவாதிகள் உணர வேண்டும். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை கிழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தமது இனவாத கட்டுக்குள் தொடர்ந்து வைத்துகொள்ள முடியும் என்ற கனவை இலங்கை அரசு கைவிட வேண்டும்.
அதேபோல்இ இலங்கையில் மலையகத்திலும் வட-கிழக்கிலும் வாழும் தமிழர்களின் அபிலாஷைகளையும் தமிழக மக்களின் அபிலாஷைகளையும் கணக்கில் எடுக்காமல் தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களை திருப்தி படுத்துவதற்காக தன்னிச்சையாக ஒப்பந்தங்களை செய்து வந்த தவறுகளை இந்திய மத்திய அரசு உணர வேண்டும்.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் முதல் இன்று வரை இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கங்களை சந்தோசப்படுத்த எடுத்த எந்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இது இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசு மீண்டும் மீண்டும் கற்று கொடுத்து வரும் பாடம்.
வீரவன்சவுக்கு மாவை சேனாதிராசா மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம்
13ம் திருத்தத்தில் இருக்கின்ற அரைக்குறை அதிகாரங்களையும் வெட்டி குறைக்க விமல் வீரவன்ச போன்றோர் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 13ம் திருத்தத்தில் அதிகாரங்களை அகற்றாவிட்டால் அரசில் இருந்து அகன்றுவிடுவேன் என தான் சொன்னது இன்று இந்த மனிதருக்கு மறந்து விட்டது.
இப்போது இவர் திடீர் என மாவை சேனாதிராசா மீது பாசம் கொண்டு கதை பேசுகின்றார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவையை ஒதுக்கிவிட்டு எங்கோ வழக்கு பேசிகொண்டிருந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளாக நியமித்தது நியாயமா என இவர் இன்று ஊடகங்களுக்கு முன்னால் வந்து கண்ணீர் வடிக்கிறார். அண்ணன் மாவையை நினைத்து தம்பி வீரவன்ச அழுவதாக சொல்கிறார்.
தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் யார் முதல்வர் வேட்பாளர் யார் என்பவைகளை கூட்டமைப்புதான் முடிவு செய்ய முடியும். அத்துடன் மாவை சேனாதிராசா முன்வந்து விக்கினேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியும் விட்டார். ஆனால் வீரவன்சவின் முதலை கண்ணீர் நிற்கவில்லை.
இவர்தான் சில நாட்களுக்கு முன் மாவை சேனாதிராசாவை கடுமையாக தாக்கி பேசினார். பிரிவினைவாத பயங்கரவாத கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை தடை செய்ய வேண்டும் என சொன்னார். அந்த கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராசாவை நாடு கடத்த வேண்டும் எனவும் சொன்னார்.
இந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் அரசியலில் சர்க்கஸ் கோமாளிகள். இத்தகைய கோமாளிகள் இன்று நிறைய இருக்கின்றார்கள். தாம் அன்று என்ன சொன்னோம் இன்று என்ன சொல்கிறோம் என்பது இவர்களுக்கு மறந்து போய் விடுகிறது. இந்த கோமாளிகளை பார்த்து என்றும் நேர்வழியில் பயணிக்கும் நாம் இன்று சிரித்து மகிழ்கின்றோம். நம்முடன் சேர்ந்து நாட்டு மக்களும் கைகொட்டி சிரித்து மகிழ்கிறார்கள்.
ஆஸ்திரேலிய படகு பயணம்
நம் நாட்டு மக்கள் நாட்டை விட்டு ஓடுவதும் ஓடி கடலில் மூழ்குவதும் இன்று இந்த நாட்டு அரசாங்கத்துக்கு பெரிய விடயமாக தெரியவில்லை. ஆஸ்திரேலியா செல்கிறோம் என சொல்லிக்கொண்டு கணிசமான இலங்கை குடிமக்கள் படகுகளில் செல்வதை நாம் கடுமையாக எதிர்த்து கண்டிக்கின்றோம்.
கிறிஸ்மஸ் தீவு பகுதியை சென்று அடைபவர்களைதான் நாம் கணக்கில் எடுக்கின்றோம். இன்னும் கணிசமானோர் போகும் வழியிலேயே கடலில் மூழ்கி விடுகின்றனர் என நான் சந்தேகிக்கின்றேன். இவர்கள் இந்த நாட்டு மக்கள். இவர்களை தடுத்து நிறுத்த இந்த நாட்டு கடற்படை முழு மனதுடன் செயற்படுகின்றதா என நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.
சிலரை போகவிட்டு சிலரை மட்டும் தடுத்து நிறுத்துகின்றீர்களா? என நான் கேட்க விரும்புகின்றேன். அல்லது போகின்றவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அப்படியாவது தமிழ் மக்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் குறைய வேண்டும் என அரசாங்கம் சும்மா இருக்கின்றதா?
படகில் சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா போவதை நிறுத்துங்கள் என இங்கிருந்து இன்று நாட்டை விட்டு ஓடுகின்றவர்களை நான் கேட்டு கொள்கின்றேன். இன்று நாட்டில் நிலைமை முற்றிலும் சீராகவில்லை. ஆனால் நாம் இங்கே இருந்து இன்று ஜனநாயகரீதியாக போராட வேண்டும். அதைவிடுத்து சட்டவிரோத படகு பயணம் வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன்

தீயை பற்றவைத்த வீரர்களின் நினைவுநாள்!


 தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும்புலிகள் சென்று தாக்குதல் நடத்தில வீரவரலாறுபடைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்ப முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்கள்.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி வீரர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.இந்த தாக்குதல் சம்பவத்தினை இன்றைய நாளில் நினைவிற்கொண்டு வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்கதல்களையும் நினைவிற்கொண்டு எமது அடுத்த தலைமுறைக்க விடுதலைப்புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்துசெல்லவேண்டிய தேவை இன்று இனப்பற்றுள்ள ஒவ்வொரு தமிழருக்கம் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.
கட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர்வாழ்இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான்கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த எங்கள் கரும்புலி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவிற்கொள்கின்றோம்.
தமிழீதேசியத்தலைவர் அவர்களின் மதிநுட்பத்தின் வெளிப்பாடாக இந்த கட்டுநாயக்கா வான்படைத்தளத்தினை தகர்து சிறீலங்கா அரசிற்கும் படையினருக்கம் பாரிய இழப்பினை கொடுத்தார்கள்.

கட்டுநாயக்கா தாக்குதலில் சிறீலங்கா அரசின் விமானங்கள் 28 அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது நடத்தப்பட்ட இத்தாக்குதலானது சிறீலங்காவின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டது
முகம்தெரியாத முகவரி தெரியாத நிழற்கரும்புலிகளின் நினைவுளை நெஞ்சில் சுமந்து வணங்குகின்றோம் மாவீரர்களை

24/7/13

பொதுத்துறை பலவீனமான நிலையில் ??



நாட்டின் பொதுத்துறை பலவீனமான நிலையில் காணப்படுவதாக பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணேசேகர தலைமையில் இந்தக் குழு நேற்றைய தினம் பாராளுமன்றில் அறிக்கையை சமர்ப்பித்திருந்து.

பொதுத்துறை நிறுவனங்கள் நட்டமடைவதற்கான காரணங்கள் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை சேவைகள் வீழ்ச்சியடைவதனை தடுப்பதற்கு பொதுத்துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 16 அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் எயார், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை சேவையின் தொழில்சார் நிலைமையை மேம்படுத்த வேண்டும் எனவும் அதற்கு தற்போதைய சம்பள முறைமைகள் வழியமைக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காத்திரமான சேவைகளைப் பெற்றுக்கொள்ள சிறந்த தொழில்சார் தகமையுடையவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு நியாயமான சம்பளங்கள் வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து பிழையானது




பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக்கின் கருத்து முற்றிலும் பிழையானது என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டான்சூக் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் விசாரணைகள் கால தாமதமடைவதாகவும் விசாரணைகளை மூடிமறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என டான்சூக் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசாங்கம் தயார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். டான்சூக் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ஜனாதிபதியை சந்திப்பாரா என்பதனை உறுதிபடக் கூற முடியாது எனவும் அவ்வாறான ஓர் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டான் சூக் உள்ளிட்ட பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர் குழு ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கிடையாது எனவும் உயர் மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

23/7/13

ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் என்ன?



சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.  வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர்.. பற்றிக் வென்ட்ரெல் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள தீர்மானம், 2012இல் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று செய்தியாளர் ஒருவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல்லிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக நேற்று குறிப்பிட்டிருந்தேன்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா இன்னும் அதிகம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், 2012ம் ஆண்டு தீர்மானத்தின் மீது இந்த தீர்மானம் கொண்டு வரப்படும்.

இந்தத் தீர்மானம், சிறிலங்கா அரசாங்கத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட, தனது மக்களுக்கான கடப்பாடுகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளும்.

இது தான் தீர்மானத்தின் உள்ளடக்கம். இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவு அளிப்போம்.” என்று பதிலளித்துள்ளார்

22/7/13

ஆட்டங்காணுமா சிறிலங்கா சமந்தா பவரின் வருகையால் ?!


 ஐ.நாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமந்தா பவரின், முக்கியமான நிகழ்ச்சி நிரலில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சமந்தா பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் குறித்தும், சமந்தா பவரின் திட்டங்கள் குறித்தும் அமெரிக்க செனெட் சபைக்கு, வெளியுறவுக் குழுவின் தலைவர் றொபேட் மெனென்டெஸ் கடந்த புதன்கிழமை விளக்கமளித்துள்ளார்.

இவருக்கு அமெரிக்க செனெட் உறுப்பினர்களின் பேராதரவு உள்ள நிலையில், இவரது நியமனம், நாளை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வாக்கெடுப்பின் போது உறுதிப்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

இதனால், மனிதஉரிமைகள் விவகாரத்தில் சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிலவிவரும் மோதல்கள் இப்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த ஆண்டு மார்ச் கூட்டத்தொடரின் போது, சிறிலங்கா விவகாரத்தை ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தனது இறுக்கமான போக்கை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

மஹிந்தவை அழுத்தும் சிங்கள இனவாதிகள்


 13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தாமல் தேர்தலை நடத்தினால், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இனவாதிகள் கோஷ எழுப்ப தொடங்கியுள்ளனர்.
 

இது தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது, வட தமிழீழத்தில் தேர்தலை நடத்தினால் அது ஈழத்தை உருவாக்கும் என கடும்போக்குவாத சிந்தனை கொண்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட தமிழீழத்தில் தேர்தல், பொதுநலவாய மாநாடு ஆகியன முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் அரசு திருத்தங்களை மேற்கொள்ளும் என வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவிக்கையில்,

"பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமானால், அதைப் பயன்படுத்திக்கொண்டு ஈழத்தை உருவாக்குவதற்கான அரசியல் போரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும்.

'வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் 13 இலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதென்பது முடியாத காரியமாகும்.

அரசின் முயற்சிக்குக் கூட்டமைப்பு நிச்சயம் தடங்கல் ஏற்படுத்திவிடும். எனவே, நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்காது நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மேற்படி அதிகாரங்களை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

13 இல் மாற்றமின்றி தேர்தல் நடத்தப்படுமாயின், அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன், தனி ஈழ முயற்சிக்கும் வழிவகுக்கும்.

ஆகவே, இந்தியாவைப் பற்றியோ அல்லது பொதுநலவாய மாநாடு குறித்தோ யோசிக்காது 13இல் இருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கவேண்டும். சிங்கள மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசு உணரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்
 

21/7/13

விடுதலைப்புலிகளுக்கு உயிர் ஊட்டிய அழகிரிசாமிக்கு வீர வணக்கம்

இன்று தாய்த் தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. திரு.வை.கோ, திரு. பழ நெடுமாறன், திரு.சீமான், திரு. குமரேசன் போன்ற தமிழீழ, தமிழின உணர்வாளர்களும் , திரு சாலமன் பாப்பையா போன்ற தமிழ்மொழி ஆர்வளர்களும், தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரும் காலையில் இருந்து மதியம் வரை அன்னாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும் மாலை போட்டும் வணக்கம் செலுத்திவந்தனர் . மதியம் 12:30 மணியளவில் அன்னாரின் உடல் அவரது தோட்டக் காணி உள்ள இடமான தவசிமேடை என்னும்ÂÂ கிராமத்திற்கு பெரும் திரளான மக்கள் புடை சூழ கொண்டு சென்றனர். மாலை 3:00 மணிக்கு அவரது தோட்டக்காணியில் உலகதமிழர் பேரமைப்பின் துணை தலைவரான திரு.வீரப்பன் தலைமையில்ÂÂ இறுதி வணக்க உரை தொடங்கியது. இதில் ம.தி.மு.க அழகுசுந்தரம் , அ.தி.மு.க கண்ணன் , பெரியார் தொண்டன் வரதராசன் , கவிஞர் அறிவுமதி ,ஆகியோர் உரையாற்றினர். அமரர் அழகிரிசாமி அவர்களின் நீண்டகால நண்பரும் உலகதமிழர் பேரமைப்பின் தலைவருமான திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்கள் இறுதி வணக்க உரையின் போது "1957 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆரம்பமான எமது மாணவப்பருவ சந்திப்பானது 56 வருடங்களாக தொடர்ந்த எமது நட்பானது எனது வாழ்விலும், அரசியல் செயல்பாட்டிலும் , தமிழீழ விடுதலை களத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சியிலும் எனக்கு பெரும் துணையாக நின்றார். எந்த அரசியல் போராட்டமாக இருந்தாலும் நான் எள் என்றால் அவர் எண்ணையாக அச்செயலை செய்து முடித்து வைக்கும் ஆற்றல் நிறைந்தவர் . அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1945 ஆம் ஆண்டுக்கு பிறகு அறிஞர் அண்ணாவை அழைத்து வந்து பேச வைத்தபெருமை இவரையே சாரும் ஆனால் தன்னை முன்னிலை படுத்தாமல் எக்காரியத்தையும் செய்து முடிப்பதில் வல்லவராக இருந்தார் . பொடா சட்டத்தில் இவரது மகனான மருத்துவர் தாயப்பன்ÂÂ அவர்கள்ÂÂ பதினைந்து மாதமாக சிறையில் இருந்த பொழுது நான் தாயப்பனுக்காக வருத்தப்பட அவரோ எனக்காக கவலைப்பட்டார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சிக்காக இவரது சிறுமலை என்னும் கிராமத்தில் உள்ள காணியை கொடுத்து உதவினார். இதற்காக எந்தப்பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயாராகவே இருந்தார். இறுதியாக ÂÂ ÂÂ வீர வணக்கம்ÂÂ வீர வணக்கம் ÂÂ ÂÂ தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உயிர் ஊட்டிய ÂÂ ÂÂ அழகிரிசாமிக்கு வீர வணக்கம் எனும் முழக்கத்துடன் அன்னாரின் வித்துடல் விதைகுழியில் விதைக்கப்பட்டது ,{புகைப்படங்கள் இணைப்பு  }


கௌரவிப்போம் வீராங்கனைகளை!!!


 இலங்கையின் மிக மிகக் கேவலமான மனித உரிமை மீறல்கள் குறித்து லசந்த விக்கிரமதுங்க சொன்னதைப் பற்றிப் பேசும்முன் சென்ற இதழைப் படித்ததும் என்னைத் தொடர்புகொண்ட வாசக நண்பர்களின் மனக்குமுறல்களுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் விதத்தில் குறைந்தது 5 விளக்கங்களையாவது தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
1. இலங்கையில் இனப்படுகொலைதான் நடக்கிறது - என்பதை இந்தியா நிச்சயமாக அறிந்திருந்தது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அந்த இனப்படுகொலையின் ஒரு பகுதியாக திட்டமிட்ட பாலியல் வன்முறையில் சிங்கள ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது என்பது மட்டும் இந்தியாவுக்குத் தெரியாமலிருக்குமா என்ன! நா.சா.வுக்கும் நாச்சிகளுக்கும் தெரிந்திருக்காவிட்டாலும் உயர் பதவிகளில் இருந்த இரண்டு சேட்டன்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஒருவர் - சிவசங்கர் மேனன். இன்னொருவர் - எம்.கே.நாராயணன். இவர்களுக்குத் தெரியாமல் அங்கே ஒரு துரும்பு கூட அசைந்திருக்காது. ஒரு வேளை இப்படியொரு திட்டமிட்ட கற்பழிப்பு நடவடிக்கையை இலங்கை மேற்கொள்ளுமென்பது தங்களுக்கு முன்னதாகத் தெரியாது என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருந்தால் அதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.
2. நம்முடைய இதயத்தைச் சுக்குநூறாகத் தகர்க்கும் இந்தக் கொடுமை ஈழத்தில் இன்றும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அவலத்தை வெளிப்படையாக எதிர்க்கவும் இயலாத நிலையில் ஒரு இனமே நசுங்கி நாசமாகிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கில் பலாத்காரம் தொடர்வதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே வேதனையுடன் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. (மார்க்சிஸ்ட் தோழர்கள் கவனத்துக்கு... அதிலும் குறிப்பாக சகோதரி வாசுகி கவனத்துக்கு!)
3. இதை எப்படித் தடுப்பது - என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மனசாட்சி என்கிற ஒன்று சர்வதேசத்துக்கு இருந்தால் தடுத்துவிட முடியும். சர்வதேசத்துக்கு அது இருப்பதாகத் தெரியவில்லை. தாய்த் தமிழ் நாட்டில் உள்ள ஏழரை கோடித் தமிழர்களுக்கு சுரணை இருந்தாலும் தடுத்துவிடலாம். தமிழ்நாட்டுக்கு இது இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியொரு நிலையில் இந்த வக்கிரம் பிடித்த தாக்குதல் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியில் தமிழ் உணர்வாளர்களில் உண்மையானவர்கள் உடனடியாக இறங்குவது நல்லது.
4. நமக்குக் கிடைத்திருக்கிற உடனடி வாய்ப்பு - நவம்பரில் இலங்கையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாடு. ஒட்டுமொத்த ராணுவத்தையும் 'கற்பழிப்பு' சேவையில் முழுமூச்சாக ஈடுபடுத்தியுள்ள இலங்கைக்கு காமன்வெல்த் மாநாடு ஒரு கேடா - என்கிற கேள்வியை இப்போதே... இந்தக் கணத்திலேயே... உரத்த குரலில் எழுப்பவேண்டும் நாம். சர்வதேசத்திலும் - ஏன் - இந்தியாவிலும் கூட அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையின் வக்கிரபுத்தியை அம்பலப்படுத்தி அதன்மூலம் காமன்வெல்த் மாநாட்டை நிறுத்திவிட்டோம் என்று வையுங்கள்... அதற்குப் பிறகு இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த நீண்ட காலம் ஆகாது. (இலங்கையின் தரத்துக்கு மாமன் வெல்த் மாநாடோ மச்சான்வெல்த் மாநாடோ நடத்தித் தொலைக்க வேண்டியது தானே! அதுகெட்ட கேட்டுக்கு எதற்கு காமன்வெல்த் மாநாடு?)
5. நான்கைந்து மாதங்களுக்கு முன்பே இந்தக் கொடுமை குறித்து இதே பகுதியில் எழுதியிருந்தேன். மாலதி - கார்த்திக் இணைந்து எழுதியுள்ள கட்டுரை மீண்டும் அதுபற்றி எழுதத் தூண்டியது. கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற கவிதையின் கடைசி இரு வரிகளை - அது கொடுக்கிற வலிகளைத் தாங்கிக் கொள்கிற சக்தி எனக்கு உண்மையிலேயே இல்லை. அதனால்தான் அந்த இரு வரிகளைத் தவிர்த்தேன். வாசகர்கள் மன்னிக்கவேண்டும்.
மிகுந்த மனச்சங்கடத்துடன்தான் இதுகுறித்து எழுதுகிறேன். படிக்கும்போது உங்களுக்கு எழுகிற அதே வேதனை எழுதும்போது எனக்கும் இருக்கிறது. 26வது மைலில் இருந்தும் 2009ல் ஒன்றரை லட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை நம்மால். 4 ஆண்டுகள் கழித்தும் தொடர்கிற மனித அவலத்தைத் தடுத்து நிறுத்தவும் இயலவில்லை. பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது சுற்றிலும் நின்றிருந்த நெட்டை மரங்களென நிற்கிறோம் இன்றுவரை.
நம்முடைய இந்தக் கையாலாகாத் தனத்தைப் பயன்படுத்தித்தான் வீடு கட்டுகிறோம் ரயில்பாதை போடுகிறோம் - என்று கூச்ச நாச்சமில்லாமல் தொலைக்காட்சிகளில் 'பிலிம்' காட்டுகிறார்கள் நாச்சிகள். 13ஐக் காப்பாற்றுங்கள் - என்று டெல்லியில் அவர்கள் மாநாடு நடத்துவது இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக அல்லாமல் வேறு எதற்காக? இதைப் புரிந்துகொள்ளாமல் விவரமேயில்லாமல் 'உடல் மண்ணுக்கு உயிர் பதிமூன்றுக்கு' ரேஞ்சில் தண்டவாளத்தில் தலைவைக்கத் தயாராகிறது - தமிழகத்தின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு கோஷ்டியான டெசோ.
இன்னொருபுறம் 'உலகில்இ போர் அல்லது உள்நாட்டுப் போர் நடந்த பகுதிகளில் இதுமாதிரி பாலியல் வன்முறைகள் நடப்பதெல்லாம் சகஜம்' என்கிற வக்கிரம் பிடித்த வியாக்கியானத்தை வெட்கமேயில்லாமல் வெளியிடுபவர்கள். இப்படி தம்முடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் பார்க்கும் எவரும் இந்தக் கொடுமையை இழைத்த ஃ இழைக்கிற பொறுக்கிகளின் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவர்கள். தங்கள் மகளோ தங்கையோ தமக்கையோ தாயோ இப்படி நசுக்கப்பட்டிருந்தால் 'இதெல்லாம் சகஜம்' என்று டயலாக் விடுவார்களா இவர்கள்? தன் கண்ணென்றால் வெண்ணெய் அடுத்தவன் கண்ணென்றால் சுண்ணாம்பா?
அப்படியே பார்த்தாலும் 'போர் நடந்த பகுதி' - என்று 2009க்குப் பிறகுதானே சொல்ல முடியும்? அதற்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே தனித்த இறையாண்மை கொண்ட ஆட்சி அதிகாரத்தை ஈழத் தமிழ் உறவுகள் இழந்ததிலிருந்தே சிங்கள ஆதிக்கத்துக்கு அடிபணிய நேர்ந்த நாளிலிருந்தே இதுதானே நடக்கிறது அங்கு. இனக்கலவரங்கள் என்றாலும் சரி திட்டமிட்ட படுகொலைகள் என்றாலும் சரி பாதுகாப்புப் படை - ராணுவம் - காவல்துறை நடவடிக்கை என்றாலும் சரி - அந்தப் போர்வையில் கற்பழிப்பும் கேங் ரேப்பும் தானே நடக்கிறது. அது என்ன ராணுவ வீரர்களின் படையா காம வெறியர்களின் படையா?
'விடுதலைப் புலிகளின் சுண்டுவிரல் கூட சிங்களச் சகோதரிகளை நோக்கி நீண்டதில்லை' என்று சென்ற இதழில் எழுதியது இங்கே சிலரால் மூடிமறைக்கப்படும் உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்காகத்தான்! இவர்கள் சித்தரிப்பதைப்போல் பயங்கரவாதிகளாக இல்லாமல் - தர்ம நியாயத்துக்கு பயப்படும் விடுதலைப் போராட்ட வீரர்களாக அவர்கள் இருந்ததால்தான் சிறைப்பிடிக்கப்பட்ட 'சாகரவர்தன' கப்பலின் கேப்டனும் அவனது காதலியும் வன்னி மண்ணிலிருந்து ஒரு துரும்புகூட படாமல் பத்திரமாக வெளியேற முடிந்தது. அந்த இளம் சிங்களச் சகோதரி பிரபாகரனின் தோழர்களை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நாளாவது மறக்க முடியுமா?
ஒரே ஒரு பிரபாகரனுக்காக ஒன்றரை லட்சம் பேரை ஓட ஓட விரட்டிக்கொன்றது நியாயம்தான் - என்று நினைக்கிற அளவுக்கு கண்மூடித்தனமாக பிரபாகரனை வெறுக்கும் சோ.ராமசாமிகளையும் சுப்பிரமணிய சுவாமிகளையும் பார்த்துக் கேட்கிறேன் - பிரபாகரனோ அவனது தோழர்களோ ஒரே ஒரு சிங்களச் சகோதரியையாவது தங்களது நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் சிதைத்ததாக உங்கள் சுண்டுவிரலை நீட்டி நீங்கள் குற்றஞ் சாட்ட முடியுமா? அந்த மாவீரர்களுக்கும்இ எங்கள் உறவுகளின் மண்ணில் உறுப்பாயுதத்துடன் கொழுப்பெடுத்துத் திரிந்துகொண்டிருக்கும் கொழும்புப் பொறுக்கிகளுக்கும் இருக்கிற வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா இல்லையா? 'உங்களுக்கெல்லாம் என்ன கண்ணவிஞ்சா போச்சி?'
போரே முடிந்துவிட்டதாகவும் அமைதி திரும்பி விட்டதாகவும் இலங்கை அறிவித்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதற்குப் பிறகும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் எங்கள் சகோதரிகள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவது எதற்காக? அவர்களது மன உறுதியைச் சிதைப்பதற்காகத்தான் இந்த நடைமுறை என்றால்இ திமிரெடுத்துத் திரியும் அந்தப் பொலிகாளைகளின் உறுப்புகள் கூட ஒருநாள் வெடிவைத்துத் தகர்க்கப்படும்..... பொறுப்பில் இருக்கிற பொறுக்கிகள் புரிந்துகொள்ள வேண்டும் இதை!
வெறும் பெண் என்பதற்காகச் சிதைக்கப்படவில்லை தமிழ்ப் பெண் என்பதற்காகத்தான் சிதைக்கப்படுகிறோம் - என்பதை பாதிப்புக்கு உள்ளாகும் ஒவ்வொரு சகோதரியும் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருப்பதாகக் கூறுகிறார் மாலதி. தாங்கமுடியாமல் திருப்பி அடிக்கும் நிலை வரும்போது அவர்களும் சேர்ந்து அடிப்பார்களா மாட்டார்களா?
கற்பழிப்பு - என்பது உடல்ரீதியான சித்திரவதை மட்டுமல்ல. ஒரு இனத்தின் சுய கௌரவத்தை சுய மதிப்பை எதிர்காலக் கனவைத் தகர்ப்பது. இதற்காகத்தான் இந்த ஈனத்தனமான இழிவான நடவடிக்கையைத் தொடர்கின்றன பௌத்த சிங்கள மிருகங்கள். எங்கள் சகோதரிகளை அசிங்கப்படுத்துவது அவர்களது பெருமித உணர்வையும் மன உறுதியையும் நசுக்குவதற்காகத் தான்! அவர்களது இன அடையாளத்தை அழிப்பதற்காகத் தான்! இங்கேயிருந்து அங்கே போய்விட்டுத் திரும்பிய ஒரே ஒரு பத்திரிகையாளருக்குக் கூடவா இதை வெளிப்படையாக எழுதும் மனத்துணிவு இல்லாது போய்விட்டது! இவர்களின் இந்த மௌனத்துக்கும் பான் கீ மூன் சாதித்த கள்ள மௌனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இதைவிடக் கொடுமையான ஓர் உண்மையைஇ அண்மையில் சந்தித்த ஈழச் சகோதரர் ஒருவர் கண்ணீர் மல்கப் பகிர்ந்து கொண்டார். '2009ல் நடந்து முடிந்த இனப்படுகொலைக்குப் பின் தமிழினத்தை வேறு மாதிரி சிதைக்கும் நடவடிக்கையில் இலங்கை இறங்கியிருக்கிறது. புதிய தலைமுறையை உருவாக்குபவர்கள் பெண்கள் தானே... அவர்களுக்குள் சிங்களக் கருவைத் திணிப்பதன் மூலம் தனித்த இன அடையாளத்தை அழித்துவிட சிங்கள மிருகங்கள் நினைக்கின்றன. பௌத்த சிங்கள அரசு இதற்கான விரிவான திட்டத்தை வகுத்து சிப்பாய்கள் மூலம் இதைச் செயல்படுத்தி வருகிறது' என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது குரல் உடைந்துவிட்டது.
போரில் தாய் தந்தையை இழந்த சிறுமிகள் சிலரைச் சிங்களச் சிப்பாய்கள் தங்கள் 'பாதுகாப்பில்' வைத்திருப்பதாகக் கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்டபோது கண்ணீர் மட்டுமே அவரது பதிலாக இருந்தது. அந்த விழிகளின் மொழியில் வெளிப்பட்ட உணர்வுஇ அந்தக் குழந்தைகள் எந்த மாதிரியான பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்த உடைந்து போயிற்று மனசு. அன்றிரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அந்தக் கண்ணீர்த் துளிகளே கண்முன் நின்றன.
ஆதாரம் இல்லாமல் எதையுமே பேசுவதில்லை நான். யோசித்து யோசித்துத்தான் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். எழுதுவதில் மட்டுமல்ல என்னுடைய திரைப்படத்திலும் இதைத்தான் முன் நிறுத்துகிறேன். நடந்தது இனப்படுகொலை தான் என்பதை ஆதாரத்துடன்தான் பேசியது என்னுடைய - 'உச்சிதனை முகர்ந்தால்.' அது மட்டக்களப்புக்கு அருகே 2009 மார்ச் முதல் தேதி சிங்கள ராணுவ மிருகங்களால் சிதைக்கப்பட்ட ஒய்.புனிதவதியின் கதை. அந்த 13 வயதுக் குழந்தைக்கு 'கேங் ரேப்' என்பதற்கு அர்த்தம் புரியுமா? ஆனால் அவளுக்கு அதுதான் நடந்தது. அதைத்தான் படமாக்கியிருந்தேன்.
ஒரு காட்டுப் பறவை போல தன்னுடைய கிராமத்தில் சுதந்திரமாகப் பறந்து திரிந்த அந்த 13 வயதுக் குழந்தை ஒரு அதிகாலைப் பொழுதில் தான் அப்படிக் கிழித்தெறியப்படக்கூடும் என்று என்றைக்காவது நினைத்திருப்பாளா? அந்தக் கணத்தில் அந்தக் குழந்தை எப்படித் துடித்திருக்கும்.. எத்தகைய நரக வேதனையை அனுபவித்திருக்கும்? அந்த வேதனையை சோ.ராமசாமியோ சுப்பிரமணிய சுவாமியோ நாராயணசாமியோ நாச்சியப்பனோ உணர முடியுமா?
டாக்டர் ஆக வேண்டும்இ பொறியாளர் ஆகவேண்டும் டீச்சர் ஆக வேண்டும் பாடகி ஆக வேண்டும் விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும் - இப்படி ஏதேனும் ஒரு கனவு தானே இருந்திருக்கும் புனிதவதிக்கு! அவள் கனவு கண்டதா நடந்தது? புனித நதி மாதிரி நகர்ந்துகொண்டிருந்த அவளது வாழ்க்கையை ஒரு நாள் அதிகாலையில் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டனர் பௌத்தப் பொறுக்கிகள். அவர்களைக் கண்டுபிடித்துக் காயடிக்கவேண்டுமா வேண்டாமா?
புனிதவதி தொடர்பான காட்சிகளைக் கண்ணீருடன்தான் படமாக்கினோம். ஊரையும் பெயரையும் தேதியையும் குறிப்பிட்டுத்தான் படத்தின் காட்சிகளை அமைத்திருந்தோம். அதையெல்லாம் வெளிப்படையாகவே பேசின அண்ணன் தமிழருவி மணியனின் வசனங்கள். இதெல்லாம் கற்பனை என்று நிராகரிக்க முடிந்ததா மத்திய அரசால்! இனப்படுகொலைக்கான வலுவான ஆதாரமான 'உச்சிதனை முகர்ந்தால்' இந்திய அரசின் அனுமதியுடன்தான் வெளிவந்திருக்கிறது. இங்கேயிருந்து மகிந்த ராஜபட்சேவுக்கு மகுடி வாசிக்கிற மானங்கெட்ட மனிதர்களால் இதை மறுக்க முடியுமா? (இவர்கள் வாசிக்காமலேயே அடம்பிடித்துப் படமெடுத்து ஆடுகிறது அந்த நச்சுப்பாம்பு... இவர்கள் வேறு வீணாக ஏன் வாசிக்கிறார்கள்?)
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்போரில் 'கேங் ரேப்' செய்யப்பட்டவர்கள் மற்றும் தொடர் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டிருப்பவர்களின் நிலைமை தான் படுமோசம். இரண்டிலுமே சிறுகச் சிறுக உடல் சிதைந்துஇ நரக வேதனையைத் தொடர்ந்து அனுபவித்து மரணத்தைத் தழுவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிறப்புறுப்பில் குணப்படுத்த இயலாத நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். எந்தெந்த மிருகத்துக்கு என்னென்ன வியாதி இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்?
இவர்களைக் கூட காப்பாற்ற இயலாத மனித சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறியிருப்பதும் இந்த நிலையிலும் தமிழ் மொழிக்காக உயிரையே விட்டுவிடுவோம் என்கிற அதன் கித்தாப்பு மட்டும் ஒரு புள்ளி கூட குறையாததும் கொடுமையிலும் கொடுமை! உங்க உயிரைக் கொடுத்து மொழியைக் காப்பாற்றி எங்கள் சகோதரிகளின் சவக்குழி மேல ஒரு நாலு வரி கவிதை எழுதுங்கப்பா! புண்ணியமாப் போகும்!
ஒரு பாரம்பரிய சமூகத்தில் போரின் பெயரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி மனத்தளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவரின் வலியை வேதனையை அதுவரை பெருமிதத்துடன் வாழ்ந்த அவரது குடும்பமோ அவரது சமூகமோ ஜீரணிக்க நீண்ட நெடுங்காலமாகும். எளிதில் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஆழமான வடு அது. இந்த வேதனையை எதிரி எதிர்பார்த்ததற்கு நேர் எதிர்த் திசையில் திருப்புகிற மாற்று யோசனை ஒன்றை 'காணாமல் போனவர்களில்' ஒருவரான டாக்டர் எழுமதி கதிரவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை பொருத்தமான நேரத்தில் மாலதி நினைவு கூர்ந்திருக்கிறார்.
'பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இத்தகைய சகோதரிகள் குறித்த சமூகப் பார்வையில் மாற்றம் தேவை. வியட்நாம் விடுதலைப் போர் முடிந்த பிறகு அமெரிக்கப் படையினரால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் உயிருடன் மிஞ்சியிருந்தவர்கள் - 'தேசிய வீராங்கனைகள்' என்று அறிவிக்கப்பட்டனர். அவர்களை நாடே போற்றிக் கொண்டாடியது. பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளைப் பார்த்து அனுதாபப்படுவதைத் தவிர்த்து அவர்களை தேசிய வீராங்கனைகளாகப் போற்ற நாமும் முன்வரவேண்டும். அதுதான் மனத்தளவில் உடைந்து போயிருக்கும் அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும்' என்பது எழுமதியின் வாதம்.
எந்த இனத்தின் பெண்களைச் சிதைத்து அதன்மூலம் அந்த இனத்தின் சுதந்திர வேட்கையைத் தகர்க்க எதிரி நினைத்தானோ அந்தச் சகோதரிகள் மூலமே விடுதலைத் தீ மூண்டு எழ இத்தகைய கௌரவங்கள் நிச்சயம் உதவும். எனவே நமது பாரம்பரிய சமூகம் இதற்கான ஏற்பாட்டை வியட்நாம் வழியில் செய்யவேண்டும். எங்கள் புனிதவதி உட்பட ஒவ்வொரு சகோதரியும் போற்றப்படும் நிலை உருவாவதுதான் எதிரியின் செருப்பைக் கொண்டோ அவனது உறுப்பைக் கொண்டோ அவனைத் திருப்பி அடிப்பதாக இருக்கும்.
இந்த நூற்றாண்டின் மிக மிகக் கொடுமையான இந்த மனித அவலத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால் மனசு கொதிக்கும். தங்களுடைய இனச் சகோதரிகளின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த இனம் உயிரைக் கொடுத்துப் போராடியது. அந்த எதிரி அந்தப் பெண்களின் சுய கௌரவத்தை பலாத்காரமாக அழித்து அதையே அந்த இனத்தை அழிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கிறான்... சிங்கள இன விருத்தியை சிங்களப் பெண்கள் மூலம் மட்டுமில்லாமல் தமிழ்ப் பெண்கள் மூலமும் நடத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து அமல்படுத்துகிறார்கள் ராஜபட்சே சகோதரர்கள். இதுதான் கொடுமை!
ஏம்பாஇ எரிக் சோல்ஹேம்இ அமைதி உடன்பாட்டை நாசமாக்கிய பிறகு அமைதியாகவே இருந்தா எப்படி? இனவிருத்தி தொடர்பான இந்தக் கண்டுபிடிப்புக்காக ராஜபட்சேவுக்கும் ஒரு நோபல் பரிசு கிடைக்க ஏற்பாடு பண்ணுப்பா! நார்வேயில இருந்துகிட்டு இதுகூட செய்யாட்டா எப்படி? ஏழரைக் கோடி தமிழர்கள் இருக்கிற இந்தியாவில் இருந்து கொண்டே 'அந்த மக்கள் உணவும் வேலையும் தான் கேட்கிறார்கள்' என்று பேசுகிற நாச்சியப்பன்களுக்கும் ரங்கராஜன்களுக்கும் இருக்கிற ராஜ விசுவாசம் கூட உனக்கு இல்லாட்டா எப்படி சோல்ஹேம்?

20/7/13

நாடு அமைப்பதற்கல்ல, இழந்த தேசத்தை மீளப்பெறவே இந்தப் போராட்டம்!


தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் மகிந்த கூறியிருக்கின்றார்.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பட்டு நிவர்த்திக்கப்படவில்லை. ஒரு பிரச்சினை தோற்றம் பெறுவதற்கு ஒன்றோ பலவோ காரணங்கள் இருக்கலாம். அந்தப் பிரச்சினைக்கு ஒன்றோ பலவோ தீர்வுகளும் இருக்கலாம். அதனால் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கப்பட வேண்டியது முக்கியமானதாகவிருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளும் அவ்வாறுதான். பிரித்தானியர்களிடம் காலனித்துவ நாடாக இருந்த இலங்கைத் தீவு அந்தக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்தே தமிழ் மக்களின் பிரச்சினை தோற்றம் பெற்றுவிட்டது. அதாவது, பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து சிறீலங்காவுடன் சேர்ந்தே விடுதலை பெற்ற தமிழர் தாயகப் பிரதேசங்களை சிறீலங்கா உடனடியாகவே தனது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்துவிட்டது. அந்தக் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக, தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் ஐரோப்பியரின் காலனித்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட போது தமிழர் தாயகத்தில் இரண்டு அரசாங்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. வன்னி அரசு, யாழ்ப்பாண அரசு என்று இருந்த அரசாங்கங்களை தமிழர்கள் பரிபாலித்திருக்கின்றனர். அன்றைய காலத்தில் தமிழ் மன்னர்களுக்கு சிங்களவர்கள் திறை செலுத்தி வாழ்ந்திருக்கின்றனர்.
யாழ்பாணத்திலும் வன்னியிலும் பல சிற்றரசர்கள் அரசாண்டனர். அவர்கள் யாருக்கும் அடிபணியவில்லை. வன்னியை ஆண்ட கடைசி மன்னனாகவும் சிறந்த மன்னாகவும் பண்டாரவன்னியனும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனாகவும் சிறந்த மன்னனாகவும் சங்கிலியனும் வரலாற்றுப் பதிவாகியிருக்கின்றனர். போர்த்துக்கீசர் 1505ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வருகை தந்து தமிழர் தாயகப் பிரதேசங்களின் வடபகுதிக் கரையோரங்களைக் கைப்பற்ற முனைந்தபோது வன்னி மற்றும் யாழ்ப்பாண சிற்றரசர்களின் கடுமையான எதிர்த் தாக்குதல்களைச் சந்திக்க நேர்ந்தது.
போர்த்துக்கீசருடன் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மன்னர்களும் அவர்களின் படைகளும் கடும் சண்டையிட்டு தமது வீரத்தை அன்றே வெளிப்படுத்தியிருக்கின்றனர். சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாரப்படுத்துவது போன்று தலைவர் பிரபாகரன்தான் ஈழப் போராட்டத்தை தொடங்கி தமிழ் மக்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியவரல்ல. காலத்திற்கு காலம் தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
கடந்த காலங்களில் தமிழர் தாயகத்தை ஆண்ட மன்னர்களிடம் இருந்த வீரத்தின் அடுத்த தலைமுறையாகவே பிரபாகரனும் அவரது போராளிகளும் தோற்றம் பெற்றனர். இந்தப் போராட்டம் காலத்திற்கேற்ப ஆயுதப் போராட்டமாக மாறியது. அன்று தமிழர் தாயகத்தில் தமிழ் மன்னர்கள் போராட்டம் நடத்தியதற்கும் இன்று பிரபாகரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றமைக்கும் காரணம் ஒன்றுதான். அதுதான் தமிழ் மக்களின் உரிமைகள். உரிமைகள் மறுக்கப்படுகின்ற எந்தவொரு இனமும் பொங்கியெழுவது தவிர்க்க முடியாதது.
அடக்கியொடுக்கப்படுகின்ற எந்தவொரு இனத்திடமிருந்தும் போர்க்குணம் வெளிப்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது. ஐந்தறிவு ஜீவன்களான நாய், பூனை, பாம்பு, ஆடு, மாடு, மற்றும் பறவைகள் போன்ற அனைத்துப் பிராணிகளும், ஊர்வனவும் தாங்கள் தாங்களாகவே இருக்கும்.
ஆனால் அவைகளின் இருப்பிடங்களைச் சேதப்படுத்தவோ, அவைகளுக்கு தீங்கு செய்யவோ முற்பட்டால் திருப்பித் தாக்கும். அதேபோன்று தானே தமிழர்களும் போராடினார்கள். தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கூறியதைப் போன்று ‘இடிக்க வந்தது மாடு அடித்தோம். அடித்தது குற்றமா?’ மாட்டுக்கு அடித்தது குற்றம் என்று கூறுபவர்கள் மாட்டை அவிழ்து வீதியில் விட்டிருக்க கூடாதே? தேசியத் தலைவர் அடிக்கடி கூறுவார். ‘நாங்கள் போராட்ட விரும்பிகள் அல்ல. போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது. நாங்கள் அதை எதிர்கொண்டோம்.’ குட்டக் குட்டக் குனிபவனும் மடையன் குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்பதைப் போன்று சிங்களவன் எங்கள் மீது ஏறிச் சவாரி செய்தான். ஏற்றுக்கொண்டோம். அவனைச் சுமந்தோம். ஆனால், அவன் தான் சவாரி செய்தது போதாதென்று தனது உடமைகள் அனைத்தையும் எங்கள் மீது ஏற்றிக்கொண்டு சவாரி செய்ய முற்பட்டான். நாங்கள் அதை எதிர்த்தோம். அவன் எங்களைத் தாக்கத் தொடங்கினான். நாங்கள் தற்காப்புக்காக தாக்கினோம். இது பிழையா?
சிங்களவன் தமிழனைத் தாக்கலாம். அது ஜனநாயகம். தமிழன் திருப்பித் தாக்கினால் அது பயங்கரவாதம். இது என்ன நீதி? எங்கே இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. ஐ.நா சபையையும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எங்கே இந்தப் பாடத்திட்டத்தை தயாரித்தன.
ஒரு அரசாங்கம் தனது நாட்டு மக்களை எப்படியும் வதைக்கலாம். தாக்கலாம். அடித்துக் கொல்லாம். தேவையேற்பட்டால் உடலை மறைத்தும் வைக்கலாம். மனிதர்களைக் காணாமல் போகச் செய்யலாம். ஆனால், குடிமக்கள் திருப்பி எதுவும் செய்யக்கூடாது. பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இது தான் ஐ.நா.வினதும் அமெரிக்
காவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் மனித உரிமைச் சட்டங்கள். பசுவைக் கொல்வது பாவம் என்று இந்து மதம் சொல்கின்றது. ஆனால், அதே இந்து மதத்தை ஒட்டியெழுந்த மனுநீதியில், கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இது தான் முறையான சட்டம். இதுதான் முறையான நீதி. உயிர்க்கொலை, தவறுகள், பழி, பாவங்கள் செய்யக்கூடாது தான். ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் அந்த நாட்டினுடைய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த நாட்டின் ஆதிக்கம் மிக்க சக்திகளால் குறித்த ஒரு பகுதி மக்கள் மீது கொலை முயற்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?
தமிழர்கள் இதைத்தான் செய்தார்கள். அடித்தவனைத் திருப்பி அடித்தார்கள். இதைத்தானே அநியாயம் என்கிறீர்கள். இதைத்தானே அராஜகம் என்கிறீர்கள். இதுதானே உங்கள் அர்த்தத்தில் பயங்கரவாதம். தமிழர்களின் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து இதனை அழிக்க சிறீலங்காவிற்கு உதவிய மேற்குலகமே, எமது போராட்டத்தை அழித்த பின்னராவது எமது உரிமைகள் பற்றி ஆராய்ந்தீர்களா? ஏன் போராட்டம் தோற்றம் பெற்றது என்று உருப்படியான ஆய்வு ஒன்றைச் செய்து எமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தர முயன்றீர்களா?
தமிழர்களை கொத்துக்கொத்தாக அழிப்பதற்கு இரசாயன ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தீர்கள். சிறீலங்காப் படைகள் இன்று தமிழர் தாயகத்தை சுடுகாடாக மாற்றியிருக்கின்றனர். எமது அழிவுக்கு யார் பதில் சொல்வது? போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற கோசத்துடன் சிங்கள அரசாங்கங்கள் எங்களை அழிக்க வந்தபோது சர்வதேசம் தடுத்திருந்தால் இன்று எங்கள் சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் எங்களோடே இருந்திருப்பார்கள்.

ஆனால், எல்லாம் நடக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இன்று நாங்கள் புரிந்தது தான் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியிருக்கின்றீர்கள். சர்வதேச நாடுகளே, நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக்கோடுகள் உள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாங்கள் அடைந்துவிட்டோம். விடுதலைப் போராட்டம் என்றால் எப்படியானது என்று உலகுக்கு வரைவிலக்கணம் கொடுத்த எங்கள் நியாயமான, நீதியான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று அழித்தீர்கள். இனியாவது, விரைந்து செயற்பட்டு எமது இழப்புகளுக்கு நிகரான தீர்வைப் பெற்றுத்தாருங்கள். இல்லாவிடில், உங்கள் பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்காக இன்னும் இன்னும் தமிழர்கள் இனப்பலியாகிக் கொண்டிருப்பது தவிர்க்கமுயடியாததாகவே .இருக்கும்     
 

19/7/13

காவல்துறைக்கும் துப்பாக்கி குழுவிற்கும் இடையில் மோதல்


கொழும்பு கல்கிசை மவுன்ட்லெவன்யா - ஹுலுதுகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கும் மற்றுமொரு குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சண்டையிலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருட்களை தேடி கல்கிசை ஹுளுதாகொட குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றுக்கு காவல்துறையினர் இன்றிரவு சென்றிருந்த சமயம் காவல்துறையினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பாதுகாப்புக்காக காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோத்திலேயே சந்தேகநபர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

18/7/13

400 வரையான மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம் “



ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்..18-07-1996
விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.
(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)
சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.
ஓயாத அலைகள்ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.
இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.
திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.
கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.
ltte.piraba-001ஓயாத அலைகள் 1
அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடிhயமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.
எங்கே ஓடுவது?
திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.
தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பல பொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.
அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)
இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.
இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.
ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).
கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து…
ஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும்.1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர்.யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது.யாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும்.தொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான வினியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும்.
ltte.artlery“தாக்குதல்”
1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
“தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்”
முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு திரிவிட பகர என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில்..
மேஜர் கண்ணபிரான்
 மேஜர் செல்லப்பிள்ள
 மேஜர் பார்த்தீபன்
 மேஜர் மிதுபாலன்
 மேஜர் பதுமன்
 மேஜர் சுடரொளி
 கப்டன் சயந்தன்
 ஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் வீரசாவடைந்தனர்.
இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவ ந்தனர்.
“இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்”
இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.
புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.
பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன,{காணொளி}
” முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம்

தேர்தல் குழப்பம் ஏற்பட்டால் படையினர் களமிறக்கப்படும்!


 வடக்கு மாகாணத்தில் தேர்தல் பணிகளுக்காக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் எனினும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் படையினர் களமிற்கப்படுவர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பு குறித்த எவ்வித அரசியல் கட்சிகளுடனும் இணக்கம் ஏற்படுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை முன்னிட்டு முன்வைத்துள்ள சில கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக படை முகாம்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்ய்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துமாறும் இடம்பெயர்ந்தவர்களை விரைவில் மீள்குடியேற்றுமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

16/7/13

தனித் தமிழீழம் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ???


 உலகத் தமிழர்களிடையே சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

சிறிலங்காவில் இன்னும் தமிழர்கள் மீதான கொடுமைகள் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. அங்கு சிங்களவர்களுக்கு இணையான சம உரிமை அந்தஸ்து, வழங்குவதற்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி தமிழக சட்டசபையில் தனித் தமிழீழம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலக தமிழர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். இதையே தான் இலங்கைத் தமிழர்களும் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில் சிறிலங்கா அரசமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தம் கவலைக்குரியதாக உள்ளது.

தனித் தமிழீழம் அமைப்பது குறித்து எனவே, "13' ஆவது திருத்தத்தில் மாற்றங்களை சிறிலங்கா அரசு கொண்டு வராமல் தடுக்க இந்திய மத்திய அரசு அனைத்து வகையான நடவடிக்கையும், நெருக்கடிகளையும் கொடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்தலை: தடுத்து நிறுத்த கடும்போக்குவாத அமைப்புகள்


 வட தமிழீழத்தில் வரும் செப்டம்பர் மாத இறுதியில் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதனை  தடைசெய்யும் வகையில் முயற்சியில் இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
குறித்த தேர்தலை நிறுத்துவதற்கான இடைக்கால தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிங்கள அமைப்புகளும் கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக நம்பமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முயற்சியில் சிங்கள ராவய, பொதுபலசேனா அமைப்புகள் உட்பட மற்றும் சில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன்னராக குறித்த தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை ஆட்சேபித்து நீதிமன்றத்தின் ஊடாக இடைக்காலத் தடை ஒன்றினைப் பெற்றுக் கொள்ள இவை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் கொண்டதாக தற்போது நடைமுறையிலுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழர் தாயகப் பகுதிகளில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் ஏனைய மாகாண சபைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் சாத்தியம் உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் வட தமிழீழத்தில் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத்தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென இந்த அமைப்புகளும் கடசிகளும் நீதிமன்றத்தின் ஊடாகக் கோரவுள்ளன எனக் கூறப்படுகிறது

15/7/13

விடுதலை புலிகள் படால் தரவிறக்கம் செய்த வாலிபன் கைது

 
யாழ்பாணத்தில் சில தினம்களுக்கு முன்னர் யுடுபி (யௌடுபெ) இணையத்தில் இருந்து
விடுதலை புலிகளின் காணொளி பாடல்களை தரவிறக்கம் செய்த வாலிபன் ஒருவரை சிங்கள படை கைது  செய்துள்ளது

இவர் பாவித்த மொபைல் தொலைபேசி தொலைபேசி ஐபி அட்டிரசை வைத்து மேப்பம் பிடித்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

பலமகா  தாக்க  பட்ட நிலையில் தொடர்ந்து சிறுவன்  தடுத்து  வைக்க பட்டுள்ளதாக அந்த பகுதி மக்களில் சிலர் நமக்கு தெரிவித்தனர்

மாணவன் செய்த இந்த நடவடிக்கையை அடுத்து  குடும்பம் இராணுவ முகாமுக்கு அழைக்க பட்டு விசாரிக்க பட்டுள்ளனர்.

 இதில் இளம் பெண்களும் அடங்கும் அவர்களுக்கும் துன்புறுத்தல் இடம்பெற்றிருக்கலாம் என ஐயம் தெரிவிக்க பட்டுள்ளது

திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால்??


ஸ்ரீலங்காவின் 13ம் திருத்தச் சட்டத்தில் அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தினால் வீதியில் இறங்கி போரட வேண்டி நேரிடும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் முன்னாள் அரச அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால் செய்துகொள்ளப்பட்ட 13ம் திருத்தச் சட்ட உடன்படிக்கை இரத்துச் செய்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

14/7/13

பணிகளில் பெண்களை ஈடுபடுத்த விரும்புவதாக இலங்கை?


 சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் பெண் வீராங்கணைகளை ஈடுபடுத்த விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட அமைதி காக்கும் பெண் படைவீராங்கணைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
குறித்த பெண் வீராங்கணைகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும், அழைப்பு கிடைத்தால் அவர்களை கடமையில் ஈடுபடுத்த முடியும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய nதிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் பெண் அமைதி காக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக பால் நிலை சமத்துவம் தொடர்பிலான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் பெண் வீராங்கணைகள் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதேவேளை, 150 இலங்கை அமைதி காக்கும் படைவீரர்கள் லெபனானில் கடமையாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்

13/7/13

போர்க்குற்றவாளி படைகளுடன் அமெரிக்க படைகள் கூட்டுப்???

இனப் படுகொலைகளை மேற்கொண்ட சர்வதேச போர்க்குற்ற படையான சிறீலங்காவின் படைகளுடன் அமெரிக்க படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்ற நடவடிக்கையானது அமெரிக்காவின் இரட்டைவேடத்தை வெளிக்காட்டுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்ற போhக்குற்றம் தொடர்பான விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாகள் கண்டிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குற்றம் புரிந்த அந்தப் படைகளுடன் பயிற்சியில் ஈடுபடுவது, உலக நாடுகளையும் தமிழர்களையும் ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.   
கடந்த 2ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. பிளாஸ் ஸ்ரைல் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில், ஆண்டு தோறும் நடத்தப்படும், போரல்லாத கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   
அமெரிக்க கடற்படையின் சிறப்புப் போர்முறைச் சமூகத்துடன், சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சி வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.   
இதில், சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி, என்பனவும், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும், சிறப்புப் படைப்பிரிவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கட்டளைகளை நிறைவேற்றாத அரசாங்க அதிபர் ?


மகிந்த அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றாத மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.எஸ்.சரத் ரவிந்திர உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருடைய காலத்தில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் மந்தகெதியில் இடம்பெற்றத்தை காரணம் காட்டியும், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் இவரால் உரியமுறையில் செயற்படமாட்டார் என்பதனையும் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலில் இலங்கை


 
பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலில் இலங்கை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் தாம் பங்கேற்பது சரியான தீர்மானமே என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டேவிட் கெமரோன்இ தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்