siruppiddy

29/9/13

தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல்: - கனடாவில் இன்று ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு (PRESS CONFERENCE) - செப்டெம்பர் 29 2013 இன்று கனடாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 1 ஆம் நாள் நாடு கடந்த

தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைக்கப்பட்டு அக்டோபர் 26 ஆம் நாள் பொதுத் தேர்தல் தமிழர் செறிவாக வாழும் அனைத்துப் புலம் பெயர் நாடுகளிலும் நடைபெறவிருக்கிறது.
   
மக்கள் மத்தியில. தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் எடுத்துச் ல்லப்பட ண்டும் என்னும் நோக்குடன் தமிழர்கள் அதிக அளவில் ழும் கனடா நாட்டில் ப்டெம்பர் மாதம் 29 ஆம் நாள் ஊடகங்களுடனான கலந்துரையாடல் ஒன்று நாடு டந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் ஒழுங்கு
 செய்யப் பட்டிருக்கிறது.

கலந்துரையாடல் தொடர்பான விபரங்ள்:
காலம்: செப்டெம்பர் 29 2013
நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
இடம்: மாக்கம் சிவிக் சென்டர்

கனடா அறை (Canada Room)
101 Town Centre Blvd.
Markham, L3R 9W3
இக் கலந்துரையாடலில் அனைத்து ஊடகத்தினரும் பங்கு கொண்டு ஒத்தாசை வழங்குமா கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமதி. செ. ஸ்ரீதாஸ்
தலைமைத் தேர்தல் ஆணையாளர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
416-756-4607
 

தென்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டமைப்பு


தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை

தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை

வழங்கியுள்ளனர். அத்துடன் தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அங்குள்ள
தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என கூட்டமைப்பு எண்ணுகிறது. 

26/9/13

திலீபனின் இழப்பு பராத நாட்டை தலைகுனியவைத்த நிகழ்வு!


தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார்.

ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்..

அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்படையினை உருவாக்கி வரலாறு படைத்த கேணல் சங்கர் அண்ணா அவர்கள் 26.09.1998 அன்று சிறீலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்து 15ஆம் ஆண்டு நினைவு நாட்களையம் இன்றைய நாளில் நினைவிற்கொள்கின்றோம்..
திலீபன் ஒருஈடுஇணையற்ற மகாத்தான தியாகத்தை புரிந்தான் அவனது மரணம் ஒருமாபெரும் வரலாற்று நிகழ்வு

தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி.

எனது அன்பார்ந்த மக்களே..
திலீபன் யாருக்கா இறந்தான் எதற்காக இறந்தான் அவனது இறப்பின் அர்த்தம் என்ன?
அவனது இறப்பு ஏன்ஒரு மகத்தான நிகழ்சியாக மக்கள் எல்லோரையும் எழுச்சிகொள்ளசெய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்ததுதிலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்கா இறந்தான் உங்கள் மண்ணுக்காக இறந்தான் உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்கா கௌரவத்திற்காக இறந்தான்

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்கா ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.. என்றும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஈகைச்சுடன் லெப்ரினன் கேணல் திலீபன் நினைவாக தெரிவித்துள்ளார்.

பாரதம் தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது பாரதம் தான் எமது ஆயதப்போராட்டத்தை நிறுத்திவைத்ததுஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமைகோரி போராடவேண்டும் எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்த அம்பை தொடுத்தான்
 திலீபன்.

அத்தோடு அகிம்சை வடிவத்தை ஆயதமாக எடுத்துக்கொண்டான் நீராகாரம் கூட அருந்தாது மரணநோன்பை திலீபன் தழுவிகொள்வதற்கு 24மணிநேரம் முன்பே இந்திய தூதர் டிக்சிற்கு முன்னறிவித்தல் கொடுத்தோம் ஆனால் எதுவும் நடைபெறவில்லை அதற்கு மாறாக திலீபனின் உண்ணாவிரதத்தை கேவலமாக கொச்சைப்படுத்தியது என்றும் தமிழீழ விடுதலை போராட்டத்தின் நீண்டகால நிகழ்வுகளை தலைவர் அவர்கள் அன்றே சொல்லியிருந்தார்
.{காணொளி, }

25/9/13

ஓரு முனை நோக்கிய இரு கருத்ததமர்வுகள் கனடாவிலும் இங்கிலாந்திலும்: -


முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் அக-புறச் சூழலில் இலங்கைக்தீவுக்கு வெளியேயான ஈழத் தமிழர் அரசியலின் ஒர் அங்கமாக கனடாவிலும் இங்கிலாந்திலும் இரண்டு மாநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைகொண்டு நடைபெறுகின்றதென

அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் செப்டெம்பர் 28-29 நாட்களில் இடம்பெறுகின்ற இவ்விரு மாநாட்டிலும் துறைசார் வளஅறிஞர்கள் பலரும் பங்கெடுக்கவுள்னர்கனடாவில் 'நாடு கடந்த அரசியல் தத்துவ அடிப்படைகளும் அதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கும்' எனும் கருப்பொருளிலும் இங்கிலாந்தில் 'முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே என்றும் அதற்குப் பரிகாரமான முறையில் தமிழரின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தும் வழிமுறைகள் என்ன?' என்ற கருப்பொருளிலும்

இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரோவில் ஒருநாள் கருத்தரங்கமாக நடக்கவிருக்கும் நிகழ்வில் 'தமிழரின் நாடு கடந்த அரசியலின் பலவேறு நுணுக்கமான பார்வைகள்' என்பதே கருப்பொருளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு

வளஅறிஞர்களின் கருத்துரைகளை அடுத்து சபையினரும் பங்குபற்றும் விவாத உiயாடல் அரங்காவும் அரங்கு விரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாநாடுகள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கனடா மாநாடு :
1.'தமிழரின் நாடுகடந்த அரசியலும் எமது சமகால நிகழ்ச்சி நிரலும்'
2.'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் சவால்கள் எதிர்காலம்'
3.'நாடுகடந்த அரசியலும் தமிழரின் ஒருங்கிணைவும்'

ஆகிய விடயங்களில் அறிஞர்களின் கருத்துரைகள் இங்கே வழங்கப்படவுள்ளன. நூ.தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி நிகழ்வை நெறிப்படுத்துவார். பல அறிஞர்களின் பங்கேற்போடு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கலையரசனும் காணொளி வாயிலாகப் பங்குபற்றுவார்.

புலம்பெயர் தமிழரின் நாளாந்த வாழ்வின் நாடுகடந்த தன்மை பற்றிய புதுமையான எண்ணக் கருத்துகள் ஏற்கெனவே கவனிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ஆனால் கடந்த தசாப்தங்களில் தமது போராட்டங்கள் எதிர்ப்புகள் மூலம் ஈழத்தமிழர் நாடுகடந்த அரசியலை தம் சுதந்திரத்திற்காக பயன்படுத்திய தன்மை என்பது நாம் தீவிரமாகக் கற்று கருத்துருவாக்கம் செய்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

நாடுகடந்த மற்றும் சர்வதேச வீச்சில் உருவான வௌவேறு சமகாலத் தமிழ் அரசியல் உருவாக்கங்களோடு தமிழரின் நாடுகடந்த அரசியலின் வடிவிலும் தன்மையிலும் முள்ளி வாய்க்காலுக்குப் பின்னரான காலப் பகுதியானது ஒரு திருப்பத்தைக் குறிக்கிறது.

காணுகின்ற இந்த அரசியல் உருவாக்கங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தாழத்திலும் அதன் சனநாயக அரசியற் செயற்பாட்டிலும் தனித்துவமாய் உள்ளது.

தமிழரின் நாடுகடந்த அரசியல் மற்றும் அதன் நடைமுறை பற்றிய வெளி முழுவதினதும் கோட்பாட்டுத் தெளிவுகளையும் கற்ற பாடங்களையும் அதன் கருத்தாளம் நடைமுறை பெறுமதிகளையும் ஆழமாக ஆராயவேண்டிய காலம் கனிந்துள்ளது.

தாயகத்திலும் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் தமிழரிடையேயும் ஏற்பட்டுள்ள சமகால நிலைமைகளின் அடிப்படையில் அறிஞர்கள் சமர்ப்பிக்கும் வேறுபட்ட கருத்துரைகளாலும் தொடரும் அவையினர் கருத்தாடலாலும் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ள கருத்தரங்கம் அதற்கான ஒரு செயல்முறை வடிவமாக அமையும் என்பதை நிரூபிக்கும்.
இங்கிலாந்து மாநாடு :

'இலங்கையில் தமிழினப் படுகொலையும் பொறுப்புக் கூறலும் ;அத்தோடு உலகிற்கு அதன் குறிப்பான முக்கியத்துவமும்' என்பது பற்றிய லண்டன் கருத்தரங்கம் செப்ரெம்பர் 28-29 சனி ஞாயிறு இருநாட்களும் நடைபெறும். அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக் குழு உறுப்பினர் பேராசிரியர் சொர்ணராஜா செயற்படுவார்.
இனப்படுகொலையில் ஈடுபடும் சிறிலங்காவிற்கு மட்டுமல்லாது ஏனைய நாடுகளுக்கும் ஒரு தைரியத்தை ஏற்படுத்துகின்ற ஈழத் தமிழரின்

இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்களை அதற்குப் பொறுப்புக் கூற வைப்பதை உறுதிப் படுத்தும் ஒன்றாகவே இக்கருத்தரங்கு அமையும். இதில் இலங்கைத்தீவில் நடந்த படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை அதற்குப் பொறுப்புக் கூறவைக்கும் வழிமுறைகள் பற்றி பரிசீலிக்கப்படும். எவ்வளவுதான் உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குள்ளாவதற்கான ஒரு உறுதியான செயற்பாட்டின் முன்னுதாரணங்களாக அவை அமையும்.

இன்று அனைத்துலக மட்டத்தில் இடம்பெறும் பல்வேறு இனமுரண்பாடுகள் காரணமாக அப்படியான சர்வதேச சட்டங்களில் வெளிப்படுகின்ற உண்மைக் கோட்பாடுகள் பாரிய முக்கியத்துவம் பெறுகின்றன. இனப்படுகொலைக்கு பரிகாரமாக அவ்வினத்தின் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது பற்றியும் சர்வதேச சட்டங்களில் உள்ள ஏனைய கோட்பாடுகள் பற்றியும் இந்த இருநாள் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

பேராசிரியர் பிரான்சிஸ் போயில், பேராசிரியர் சொர்ணராஜா, பேராசிரியர் பீட்டர் ஷார்க், சட்டத்தரண் டேவிட் மாடாஸ், திரு கிருபாகரன், சட்டத்தரணி அலி பெய்டோவ், திரு பிரயன் செனிவிரட்ன (கானொளி மூலம்), பேராசிரியர் மணிவண்ணன் (காணொளி மூலம்) போன்ற இன்னும் பலர் பங்கேற்க உள்ளார்கள்.

இவ்விரு மாநாடுகள் பற்றிய மேலதிக தொடர்புகளுக்கு:- லண்டன் :- பிரதி அமைச்சர் திரு மணிவண்ணன் email: manip30@gmail.com - கனடா:- அமைச்சர் திரு நிமல் விநாயகமூர்த்தி email: nimal.vinayagamoorthy@tgte.org
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

24/9/13

மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது


தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா, ஜோசினா மாசெல் பெற்றுக் கொண்டனர்.
 

23/9/13

மக்கள் அங்கீகாரம்இராணுவத்தை அகற்றுவது உறுதி:

                                                              
நாங்கள் பயங்கர வாதிகள் அல்ல மக்கள் அங்கீகாரம்: அனந்திஇராணுவ மயமாதலை அகற்றல் மற்றும் தமிழர்களின் அடிப்படை அம்சங்களை தமிழர்கள் வெல்வதற்கு தமிழ் மக்கள்

முழு அங்கீகாரம் என முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்ல மக்கள் அங்கீகாரம் என அனந்தி சசிதரன் ஆகியவர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டுள்ளனர். -

22/9/13

கண்டி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்

 
                                       கண்டியை கைப்பற்றியது ஐ.ம.சு.மு.
வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 355,812
ஐக்கிய தேசியக் கட்சி - 200,187
ஜனநாயகக் கட்சி - 37,431
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 18,787
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 11,137

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 638,097
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 39,148
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 677,245
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1,015,315

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 09 ஆசனங்கள
ஜனநாயகக் கட்சி - 02 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 01 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

நுவரெலியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்

 
                                  நுவரெலியாவும் ஐ.ம.சு.மு. விடம்

வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 225,307
ஐக்கிய தேசியக் கட்சி - 67,263
மலையக மக்கள் முன்னணி - 23,455


செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் -327,143
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 27,677
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -354,820
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 507,693

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி - 01 ஆசனம்

மாத்தளையில் ஐ.ம.சு.மு. வெற்றி: மீண்டும் தமிழ்ப் பிரதிநிதித்துவம்


மத்திய மாகாண சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது.

இரு இலட்சத்தி 35 ஆயிரத்து 128 வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களையும். 63 ஆயிரத்து 365 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக்

 கட்சி மூன்று உறுப்பினர்களையும், 10 ஆயிரத்து 498 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும் மத்திய மாகாண சபைக்கு அனுப்பத் தகுதி பெற்றுள்ளன

பலரது எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த தமிழ்ப் பிரதிநிதித்துவம் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இம்முறை மீளப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வழமைக்கு மாறாக இம்முறை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது சேவல் சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது

21/9/13

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளி., யாழ்., வவு. தமிழரசுக்கட்சி

 
 முல்லை., கிளி., யாழ்., வவு. தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
அதன்படி,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146
ஐக்கிய தேசியக் கட்சி 2
ஜனநாயகக் கட்சி 1
மேற்படி வாக்குகளைப் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 795,
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 756
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 160
ஐக்கிய தேசியக் கட்சி  01
சுதந்திர ஐக்கிய முன்னணி 01
தொழிலாளர் கட்சி 01
மேற்படி வாக்குகளைப் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 970,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  929,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 919
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 10.
வவுனியா  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323
ஐக்கிய தேசியக் கட்சி 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 24
மக்கள் விடுதலை முன்னணி 15
ஜனநாயக கட்சி 12
சுயேட்சைக் குழு-6   05
சுயேட்சைக் குழு-7  01
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1402,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1371,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 1346
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 25.
யாழ்ப்பாண  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35
சுயேட்சைக் குழு-6 16
சுயேட்சைக் குழு-7 12
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு 10
சுயேட்சைக் குழு-1 10

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 9301,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8949
செல்லுபடியான மொத்த வாக்குகள்  8835
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 114.





19/9/13

திருமணம்முன்னாள் போராளி உட்பட 3 ஜோடிகளுக்கு



புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு இன்று  கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சி – முல்லைத்தீவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

இதன்போது 3 திருமணங்கள் நடைபெற்றதுடன் அவை முறையே இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க சமய சம்பிரதாயப்படி நடைபெற்றுள்ளது.
விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்து தற்போது

புனர்வாழ்வளிக்கப்பட்டு  சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இதேபோல் சகோதர இனத்தவரான சிவில் பாதுகாப்பு படை வீரர் ஹர்ஷ நூவான் தனது காதலியான சுகந்தினியை சிங்கள முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

எனினும் இங்கு நடைபெற்ற மற்றுமொரு திருமணம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.

விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த மிகவும் உயரம் குறைந்த முன்னாள் உறுப்பினரான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

தரகர் வேலை பார்க்கும் அரசாங்கம் குறித்து சர்வதேசம்


நவநீதம்பிள்ளை எமது தாய்க்கு சமமான ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்தபோதும் அவருக்கு திருமணம் முடித்து வைக்கும் தரகர் வேலையைச் செய்யும் அரசு பற்றி சர்வதேசம் என்ன நினைக்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான அசாத் சாலி தெரிவித்தார்.

கண்டியிலுள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்
இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து, தனது அயராத கல்வி முயற்சியால் உயர் நிலையை அடைந்து அதன் மூலம் அவர் ஒரு நீதிபதியாகி பின்னர் அவர் மனித உரிமைகள் ஆணையாளராக உயர் பதவிக்கு வந்தவர். இவரை நாம் எமது தாயின் நிலையில் வைத்து அவரை ஆதரித்து அவர் வந்துள்ள நோக்கத்தை முடித்து விட்டுச் செல்ல எமது வழமையான சம்பிரதாயங்களை செய்திருக்கலாம்.

இதை விட்டு வயது முதிர்ந்த அவருக்கு திருமண முன் மொழிவு ஒன்றை அரசு செய்கிறது அல்லது அரசின் பங்காளியான ஒரு அமைச்சர் செய்வதென்றால் சர்வதேச சமூகம் எமது நாட்

டைப் பற்றி என்ன சினைத்திருக்கும். இதனால் பிரச்சினை தீருமா?
18 ஆவது திருத்தத்திற்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தற்போது கண்டியில் வைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த வருத்தம் காரணமாக நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தை மாற்ற முடியுமா?

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீல.மு.கா. அங்கத்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் நாடகம்.

மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இலங்கை 137 ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரம் மியன்மார், பங்களாதேஷ், உகண்டா, நேபாளம் போன்ற நாடுகள் எமக்குமேல் உள்ளன. அப்படியாயின் எமது நிலை என்ன?
இந்த அரசு சரியான சேவையைச் செய்திருப்பின் சண்டியர்களை கண்டிக்கு அழைத்து வரத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்

18/9/13

இன்னொரு பிரபாகரன் விக்னேஸ்வரன் ,


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட கதியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்.

அண்மையில், ஊடகத்துறை அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வர், அனுராதபுரத்தில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

“மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பதிலாக, தற்போது இன்னொரு பிரபாகரன் தோற்றம் பெற்றுள்ளார்.
அந்தப் பிரபாகரன் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான விக்னேஸ்வரன்.

முப்பது ஆண்டுகளாக நடத்திய போரின் மூலம், புலிகளால் அடைய முடியாத ஈழத்தை, வடக்கு, கிழக்கை இணைப்பதன் மூலம் அடைந்து கொள்ளும் கனவுடன், அவர் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காகக் களமிறங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான முடிவை, விக்னேஸ்வரனும் அடைவது நிச்சயம்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் தமது பகுதிக்கு மட்டும் காவல்துறை, காணி அதிகாரங்களைக் கேட்கிறார்.

தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், அனைத்துலகதினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சிறிலங்காவின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

17/9/13

தேர்தலைநாடத்தி தமிழீழம் அமைந்துவிடும் -


தமிழர் தாயகத்தில் தேர்தலை ஒன்றை நாடத்தி அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மாபெரும் அரசியல் தவறு என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 "13வது திருத்தத்தில் காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு அதன் பின்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறும் தெரிவித்தோம். ஆனால் அதனை அரசு செய்யாது வடமாகாண சபை தேர்தலை அறிவித்தது.

 அதனடிப்படையிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து வெளியேறினோம் இது எமது கட்சியின் முடிவு. எனினும் வட மாகாண சபை தேர்தலை நடத்துவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முடிவு.

 இன்று நாம் கூறியது உண்மையாகியுள்ளது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தன்னாட்சி அதிகாரம் வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட தனித் தமிழீழத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து விடயங்களையும் முன் வைத்துள்ளது.

 அரசாங்கம் செய்த மாபெரும் அரசியல் தவறால் இன்று இனவாத சக்திக்கு அதிகாரம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வர படையினர் அர்ப்பணிப்புடன் பெற்றுக் கொடுத்த வெற்றியையும் பின்னோக்கி நகர்த்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 இருப்பினும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென தேசிய ரீதியான அமைப்புக்கள் வலியுறுததிய போதும் சர்வதேசம் விசேடமாக இந்தியாவின் கடும் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் தேர்தலை நடத்துகின்றது.

 விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் தமிழ் மக்களின் அமைதியை குழப்பியது இந்தியாவே" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்


 
தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய

தமிழ்தேசியத்திற்காய் போராடுவோருக்கே தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை மாலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது.
இலங்கை ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுபட்ட காலத்திலிருந்தே சிறுபான்மையினங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களும் அடக்கு முறைகளும் இந்த நாட்டில் முளைவிடத் தொடங்கி யதும் அதற்கு எதிராக அகிம்சைப் போராட்டங்கள் பலனற்றுப்போய் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்து இன்று

மீண்டும் சாத்வீக போராட்டத்திற்காக தயார் ஆகின்றது தமிழ்பேசும் சிறுபான்மையினம்.
இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் இணைந்த தாயக நிலப்பரப்பான வடக்குக் கிழக்கு மண்ணை தன் கோரப்பற்களால்

கௌவிக்கொண்டிருந்த போர் முடிவிற்கு வந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டநிலையிலும் இனப்பிரச்சனைக்குரிய தீர்க்கமான முடிவுகளோ முன்மொழிவுகளோ ஆளும் தரப்பிடமிருந்து இதுவரை கிடைக்காதமையே வேதனைக்குரிய விடயம்.

அபிவிருத்த என்ற பெயரில் தென்னிலங்கையை விட வடக்கு கிழக்கை சீர் படுத்திவிட்டு இது தான் தீர்வு என்று அழுக்கி பிடிப்பதானது சிறுபிள்ளைத்தனமான முடிவாகும். இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தியைப் பற்றி பலரும் பலவாறாக பேசுகின்றார்கள் அபிவிருத்தியால் மக்களின்

மனங்களை மாற்றலாம் என்று ஆளும் தரப்பு சிந்திக்கின்றது. ஆனாலும் ஒன்றை மட்டும் உணர வேண்டும். பழைய புத்தகத்திற்கு புது உறைகளைப் போட்டு விட்டு அதனை கறையான் புற்றுக்கு அருகில் வைப்பதை போன்றதே இலங்கை அரசின் அபிவிருத்தி நோக்கம்.

அதாவது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் அனைத்து இனங்களும் சமத்துவம் சகோதரத்துவம் என்னும் அடிப்படையில் ஒற்றுமையுடன் இணைந்து வாழவேண்டும் என்று அடிக்கொரு அறிக்கை விடுகின்ற அதே அரசாங்கம் தான் இனவாத நெருப்பை கக்கிக் கொண்டிருக்கின்றது.

தம்pழ் பேசும் மக்களுக்கு தேiவாயனது சலுகைகளோ சன்மானங்களோ இல்லை. மரபு வழியாக தம் உயிரோடும் உடலோடும் பிரண்டு உருண்ட சொந்த மண்ணில் எந்த வித அச்சுறுத்தல்களும் இன்றி நிம்மதியாகவும் தன்னிறைவாகவும் வாழ்வதற்கான உரிமையினையே காலம் காலமாக

வேண்டி நிற்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மக்களின் மனங்களை வெல்லாம் என்று இலங்கையரசு தொடந்தும் எதிர்பார்பதே கவலைக்குரிய விடயமாகும்.

வரலாற்று காலத்திருந்தே இலங்கை முழுவதும் தமிழ் இனப் பரம்பல்கள் காணப்பட்டன. பின்னர் வடஇந்தியாவிலிருந்து வந்த விஜயனை பிற்பட்ட அரசுகளால் தமிழ்மக்களுக்கான நிலவுரிமை வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில் திட்டமிட்டு சுருக்கப்பட்டு வந்தது. தன் பின்னர் வடக்கு கிழக்கு நிலங்களிலே திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் தமிழ்பேசும்

மக்களுக்கான நிலவுரிமையினை 1948 க்கு பின்னர் வந்த அரசுகள் சுருக்கிக்கொண்டு வந்துள்ளன. இன்னும் அதேயே நிறைவேற்றுவதற்கு வென்றுள்ள அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது.

இதனடிப்படையிலேயே வடக்கோடு இணைந்திருந்த கிழக்கு மாகாணத்தை வலிந்து பிரித்து விட்டு மூவினங்களும் சமமாக வாழ்கின்ற அம்மாகாணத்தில் எதுவித சலனமும் இன்றி தேர்தலை நடத்தி இரண்டு முறையும் கிழக்கு மாகாணசபையை பிடித்து பொம்மையாட்சி நடத்துகின்றது இலங்கை அரசாங்கம்.

ஆனால் வடக்கில் மிகப்பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்வதால் தம் வெற்றி குறித்த சந்தேகத்தில் வடமாகாணத் தேர்தலை இதுவரை காலமும் இழுத்தடித்து வந்துள்ளனர். இந்நிலையில் சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இந்ந வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதற்காக தமிழ் பேசும் மக்களது வாக்குகளை சிதறடிப்பதற்காக எதுவித அரசியல் வரலாற்று அறிவுமற்ற நபர்களை பல்வேறு சுயேட்சை குழுக்களாக களம் இறக்கி அற்ப சொற்ப சலுகைகளையும் வாக்குறுதிகளையும் தொடர்ந்தும் வழங்கிவருவது தமிழ்மக்களை மேலும் மேலும் ஏமாற்றும் செயலாகும்.
அன்புக்குரிய எமது மக்களே !

இன்று முழு உலகமே இந்த தேர்தலை முழுமனதுடன் எதிர்பார்க்கின்றது. எதற்காக இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை இந்தமுறைத் தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப்போகின்றது. தமிழ் மக்களாகிய நாம்

முழுமையான வாக்குப்பதிவுகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். எனவே காலத்தையும் சூழ்நிலையையும் தேவையினையும் உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை

நிலைநாட்டக்கூடிய தமிழ்தேசியத்திற்காய் போராடுவோருக்கே உங்களது வாக்குகளை வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் உரிமையுடன் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம்.

16/9/13

பெரும் திரளான மக்கள் !தலைவர் பிரபாகரன் பதாதைகளோடு

  
 
இன்றைய தினம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைக் கழகத்துக்கு முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் இதில் சென்று கலந்துகொண்டுள்ளார்கள். ஐ.நாவில் தற்போது மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தி , ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டவே இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையம். பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று இப்போராட்டத்தில் கலந்துகொண்டு சர்வதேச விசாரனை தேவை மற்றும் போர்குற்ற விசாரணை தேவை என்பதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அண்மையில் ஜெனீவா முன்றலில் தன்னுடலை தீக்கிரையாக்கிய ஈகைபேரொளி செந்தில்குமரனது, நிழற்படத்திற்கு மலர்மாலை சூட்டி அகவணக்கம் செலுத்திய பின்னரே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது என மேலும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


 

15/9/13

பழ.நெடுமாறன், காசியானந்தன் ஜெனீவா ஒன்று கூடல்


 
படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற ஜெனீவா முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் - பழ.நெடுமாறன், காசியானந்தன் அழைப்பு
( காணொளி)

 

14/9/13

ஐ.நாவின் கதவினைஅனைத்து தமிழ்மக்களும் தட்டவேண்டும்-


இனஅழிப்பின் ஆதாரங்களை ஒளிப்படங்களை முன்வைத்து ஐ.நா முன்றலில் நீதிகேட்டு போராடும் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமை கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரளவேண்டும் இதன் ஊடாக ஈழவிடுதலையினை முன்னெடுக்க வேண்டும்

புலம்பெயர்ந்து ஜரோப்பிய நாடுகளில் வாழும் எம்தமிழ் உறவுகளே அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்று பார்த்துக்கொண்டிராமல் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதனை நீங்கள் செய்யுங்கள்.
இனஅழிப்பின் ஆதாரங்களை தங்கள் நாடுகளில் ஏனைய இனத்தவர்களுக்கு தெரிவியுங்கள்

ரி.ரி.என் தொலைக்காட்சியில் சந்திப்பு நிகழ்சியில் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்,{காணொளி}

 

12/9/13

எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது விசாரணை

 
நடத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு! விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு

மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள்

 விடுதலைப்புலி உறுப்பினர்கள் அராசங்கத்தின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை

இராணுவத்தினரிடம் கையளித்ததாகவும், இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று, தமது பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதாகவும், அவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
   
நான்கு வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இராணுவமோ அல்லது அரசாங்கமோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும். எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விசாரணை செய்வதுடன், அவர்களை

 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி, எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பில் ஆட் கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் தொடர்பாக இராணுவ தரப்பில் கால தாமதத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தங்களிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்களுடைய ஆம்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை

 விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் மேல் நீதிமன்றத்தில் கோரியதையடுத்து, இது தொடர்பான நீதவான் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஆரம்பித்து கூடிய விரைவில் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது, இதேவேளை, மற்றுமொரு தொகுதியாகிய மேலும் 7 பேர் தொடர்பிலான

 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான இராணுவ தரப்பு கருத்துக்களை வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வவுனியா மேல் நீதிமன்றம் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்த்தரப்பினராகிய இராணுவ தரப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

 

11/9/13

சி.ஐ.எ இலங்கைக்கு திடீர் விஜயம்



சீனாவின் மேலாண்மை இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது என்ற பேச்சுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெளியக புலனாய்வு அமைப்பான சி.ஐ.எ இலங்கைத் தீவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் சி.ஐ.எ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இந்த போதை பொருளானது, பிரபல தாதாக்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிமின் 'டி கம்பனி' யினால் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

இதனடிப்படையில், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் குறித்து சி.ஐ.எ புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில், இலங்கையில் இது தொடர்பில் விசாரணை நடாத்தும் பொலிஸ் அதிகாரிகளையும் சி.ஐ.எ அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.

அத்துடன், பாகிஸ்தான்  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் விடயத்தை காரணமாகக் காட்டினாலும், சிறீலங்காவுக்கு பதிலடி வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இது அமையக்கூடும் என்ற அச்சம் சிறீலங்கா அரசுக்கு உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆட்சிமாற்றத்திற்கான முதல் அடியாக இருக்கலாம் என்ற அச்சம் அலரிமாளிகையில் நிலவுவதாகவும் அறியமுடிகிறது

10/9/13

அரசு தருவதை தாராளமாக வாங்குங்கள் ஆனால் வாக்குகளை,,


அரசாங்கத் தரப்பு தங்களுடைய சொந்தப் பணத்தையோ பொருட்களையோ உங்களுக்குத் தரவில்லை. தேர்தல் காலத்தில் உங்களை ஏமாற்றி வாக்குகளைக் கொள்ளையிடுவதற்காக அரசாங்கம் தலைகீழாக நின்று உங்களுக்கு அள்ளி வழங்க முன்வருகின்றது. நீங்கள் எவரும் அரசாங்கம் தருவதைப் புறக்காணிக்காது அப்படியே அனைத்தையும் வாங்குங்கள்.

 ஆனால் உலகமே எதிர்பார்த்துக் காத்து நிற்கும் இந்தத் தேர்தலில் உங்கள் வாக்குக்களை எமக்கு அளித்து தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையை உலகுக்கு காட்டுங்கள் என வடமாகாண வாக்காளர்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்டபாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது -


 பன்னாட்டு இளைஞர் மாநாடு  நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் குறுதி தோய்ந்த இலங்கைத் தீவில் 'காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை' நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில்

இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு 'காமன்வெல்த்தின் கெளரவத் தலைவர்' என்ற மகுடம் சூட்டப் போகின்றது. இலங்கை அரசானது - கடந்த 2009 ஆண்டு நடந்த

இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒரு சிங்கள இனவெறி அரசு, போருக்குப் பின்னாலும், தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு இராணுவ சர்வாதிகார அரசு தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்து பெளத்த மயமாக்கி வரும் ஒரு பெளத்த மதவெறி அரசு. தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களர்களைக் குடியேற்றிவரும் ஒரு இன அழிப்பு அரசு.
   
இந்த இனக்கொலை இலங்கை அரசு மீது படிந்து கிடக்கும் அழிக்க முடியாத இரத்தக் கறையைத் துடைப்பதற்கான ஏற்பாடே அங்கு நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாடு. சேவ் தமிழ்ஸ் இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற

முழக்கத்தோடு இன்று (செப்டம்பர் 7) சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு மாநாட்டு கோரிக்கைகளுக்கு வலு தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் மாணவர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்திற்கு வெளியில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு

சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர்.
தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின்

 கோரிக்கைகளை வலியுறுத்தியும் தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் அவர்களும் தில்லிப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிர்த்யுன் செய் அவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். மேலும் உலகத் தமிழர் அமைப்பு (WTO), USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET),நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) உள்ளிட்ட

புலம்பெயர் அமைப்புகள் 'காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது' என்று கோரியும் இம்மாநாட்டை வாழ்த்தி செய்தி அனுப்பியிருந்தனர்.
தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழு அவர்களின் பறை இசையோடு துவங்கிய மாநாட்டின் பிற்பகல் நிகழ்வு 

இந்நிகழ்வு கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிக்கு பிறகு அரசியல் அமர்வு தொடங்கியது. மாலையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் தலைமையில் அரசியல் அமர்வு

நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்கள் மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜவாஹிருல்லா, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருண், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹலான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பேராசிரியர் மணிவண்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை

இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில் காமன் வெல்த் மாநாட்டை

 நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடைபெற்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைப் பதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

சிங்கள அரசின் இனப்படுகொலையை ஆதரித்து ஈழத் தமிழர்களின் அரசியல் வேட்கையை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசைக் கண்டிக்கும் முகமாகவும், அதைத் தடுத்து நிறுத்த ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ள, உலங்கெங்கும் பரவி வாழும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து

நிற்கின்றோம். என்பதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதே இந்த மாநாட்டின் நோக்கம். இம்மாநாட்டில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். 2013 மார்ச் மாதம் சுடர்விடத் துவங்கிய மாணவப் போராட்டங்களின்

பேரெழுச்சியின் தொடர் நிகழ்வாக இம்மாநாடு அமைந்திருந்தது. இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக இலங்கைப் புறக்கணிப்பு கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் இப்போராட்டங்களை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்டனர்.








 

7/9/13

கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி!


பிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு புலிக்கொடியை அடையாளமாகப் போட்டு உள்ளார்கள்.
அதாவது தமிழர்கள் என்பதற்கு அடையாளம் எதுவென கேட்டால் அது எனது தேசியகொடியான புலிக்கொடி தான் என்பது  பிரித்தானியர்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது. 

வீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒரு தமிழ் குடும்பம் இக் கவுன்சிலுக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறித்த வீடு தொடர்பான வீடியோ ஒன்று தம்மிடம் உள்ளதாகவும், எந்த மொழியில் அதனை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட வீடியோ ஆரம்பமாக முன்னர், எந்த மொழியில் அதனை பார்க்கவேண்டும் என்று தேர்ந்து எடுக்கும் திரையில் தமிழ் மொழியும் இருந்தது. அதில் தமிழுக்கு பக்கமாக அதன் கொடியாக புலிக்கொடி இருக்கிறது.

அதனைப் பார்த்த அத் தமிழ் குடும்பம் , மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்கள். இதனைப் பார்க்கும்போது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஒரு போட்டோ எடுக்கவா என்று அவர் கேட்டு, போட்டோ எடுத்துள்ளார். பிரெஞ்சு, சோமாலியா, சீனா, துருக்கி என்று பல நாட்டு மொழிகளுக்கு மத்தியில், தமிழ் காணப்படுவது, அதற்கு புலிக்கொடியை சின்னமாகப் போட்டதும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம் ஆகும்.


பிரித்தானியா மற்றும் வேறு நாடுகளில் உள்ள சிலர் போராட்டம் நடக்கும்வேளை புலிக்கொடிகளை கொண்டுவரவேண்டாம், அதனை பொலிசார் பார்த்தால் ஆகாது என்று சொல்லுவார்கள். ஆனால் சொல்லப்போனால் அனைத்து இன மக்களும் புலிக்கொடியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தற்போது தோன்றுகிறது.

குறித்த கவுன்சிலுக்கு எமது நன்றிகளை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இது தொடர்பாக இரு சுவாரசியமான தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், பிரித்தானிய உள்துறை அதிகாரிகள் சிலர் பிரித்தானிய தமிழர் பேரவையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்கள். எல்லா நாட்டு மொழிகளுக்கும் அன் நாட்டின் கொடிகளை பாவிக்கிறோம். ஆனால் பல நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழிக்கு என்ன நாட்டுக் கொடியைப் போடுவது என்று கேட்டுள்ளார்கள்.


இதனையடுத்து வரலாற்று ஆவணங்கள் சிலவற்றை தாயார் படுத்திய பிரித்தானிய தமிழர் பேரவையினர், புலிக்கொடியே தமிழர்களின் தேசிய கொடி என்பதனை அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளார்கள். பல ஆவணங்களையும் சான்றுகளையும் பார்வையிட்ட அவர்கள், இறுதில் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதன் காரணாமவே பிரித்தானியாவில் உள்ள அரச திணைக்களங்களில், தமிழ் மொழிக்கு பக்கத்தில், இனி புலிக்கொடி வரும் நிலை தோன்றியுள்ளது. இதற்கு காரணமான பிரித்தானிய தமிழர் பேரவையை பாராட்டலாம்.

5/9/13

விமானங்களை தாக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது !!


 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் தீவிரவாதிகள், பொதுமக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் உருவாக்கி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது, அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் சிக்னல்கள் மூலம் தான் இயக்கப்படுகின்றன. இவற்றை தங்களது சிக்னல்கள் மூலம் வழிமறித்து திசை திருப்புவதற்காக புதிய சிக்னல் முறையை அல்கொய்தா தீவிரவாதிகள் உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலுன்கள் மற்றும் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை அனுப்பி அமெரிக்க ஏவுகணை, ஆளில்லா விமானங்களின் சிக்னல்களை தடுத்து திசை திருப்பம் தொழில் நுட்பத்தையும் அவர்கள் உருவாக்கி உள்ளனர்.

ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

4/9/13

நவிப்பிள்ளை;விடுதலைப்புலி ஆதரவாளர்களின்



விடுதலைப்புலி ஆதரவாளர்களின் கோரிக்கையின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் இடம்பெற்றது என 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

வெளிநாடுகளில் பிரசாரம் செய்யும் பிரிவினரின் கோரிக்கையின் பேரிலேயே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் இடம்பெற்றது என்று இலங்கையின் நாட்டில் போர் முடிவடைந்துள்ள போதும் பயங்கரவாதத்தை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் குறிப்பிடடுள்ளார்.
போரின் பின்னர் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில்  கொழும்பில் உரையாற்றும் போதே கோட்டாபய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே சர்வதேசத்தில் இலங்கை மீது அழுத்தத்தை அதிகரிக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளினால் இலங்கையின் உள்நாட்டு விவகாரம், சர்வதேச நாடுகளுக்கும். ஐக்கிய நாடுகளுக்கும் அட்டவணைகளாக மாறியுள்ளன என்றும் கோட்டாபய மேலும் குறிப்பிட்டார்

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தான் விஜயம் மேற்கொண்டதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.