siruppiddy

28/5/14

மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டம்

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மு.ப 11 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களை கடந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன்,மற்றும் சிறீதரன் வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையினில் இடம்பெற்ற இப்போராட்டத்தினில் கூட்டமைப்புடன் ஜனநாயக மக்கள் முன்னணியினரும் இணைந்து போராட்ட களத்தில் காணப்பட்டனர்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான நிலங்களும், வீடுகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. அவ்வாறு ஆக்கிமிக்கப்பட்டுள்ள காணிகளையும் வீடுகளையும் நிரந்தரமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் இராணுவமும் அரசும் ஈடுபட்டுவருகின்றன. கிளிநொச்சி நகரிலுள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்திலுள்ள பெருமளவு வீடுகள், காணிகள் மற்றும் ஸ்கந்தபுரத்திலுள்ள கரும்புத்தோட்டக் காணிகள் மற்றும் பொது அமைப்புக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலங்களை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேற்படி நில அபகரிப்பை கண்டித்தும், இராணுவத்தின் பிடியிலுள்ள வீடுகள் நிலங்கள் பொது மக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்றும், இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக் குடியமர உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தினை குழப்பி தடுத்து நிறுத்தும் நோக்கில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் பொய்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26/5/14

தெளிவான அரசியல் தீர்வு தொடர்பிலான கொள்கை யாரிடமும் இல்லை

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து தெளிவான கொள்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட்ட எவரிடமும் கிடையாது என சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் நிலவி வரகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உளிட்ட அனைவருக்குமே அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தெளிவான சிந்தனை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வடக்கு கிழக்கில் மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை சமஷ்டி ஆட்சி முறைமை வரையிலான ஓர் வலுவான அதிகாரப் பகிர்வு பொறிமுறைமையாக மாற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை கோரி வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தாம் அமைதியை பேணவில்லை எனவும் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை ஆற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கிழக்கைச் சேர்ந்த அதிலும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே அதிகளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும், புலனாய்வுப் பிரிவினர் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
 

20/5/14

தமிழின அழிப்பாளர்களின் பட்டியல் வெளியீடு!

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.
தமிழீழத் தேசிய துக்க நாளான மே18ல் வெளிவந்துள்ள இப்பட்டியலில், இலங்கையின் தமிழின அழிப்பாளர்களின் 12 பேருடைய விபரங்கள் முதற்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகமான ஆதரங்களுடனும், அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாகவும் குறித்த நபர்களுடைய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவினை மையப்படுத்திய சமகால அரசியல்தளத்தில்,இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரகா குமாரதுங்காவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், அவருடைய பெயரும் இப்பட்டியலில் வெளிவந்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐ.நாவின் பிரதிநிதி பாலித கோகணவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, ஜப்பான், பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களாக உள்ளவர்களும் இப்பட்டியலில் உள்ளக்கப்பட்டுள்ளமை இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் தமிழின அழிப்பாளர்களது பெயர்ப்பட்டியல் தொடர்ந்தும் உரிய ஆவணமாக வெளியிடப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மீது அனைத்துலக அளவிலான பயணத்தடை, சொத்துமுடக்கம் உட்பட அனைத்துலக குற்றவியில் நீதிமன்றங்களில் இவர்களை நிறுத்துவதற்கான செயல்முனைப்புக் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள இப்பட்டியல் உரியமுறையில் அனைத்துலக நாடுகளதும், அனைத்துலக அமைப்புக்களுக்கும் கவனத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கொண்டு செல்லப்படவுள்ளது.
 
 

17/5/14

தமிழனப்படுகொலை மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள்

முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமி...ப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
இடம் St peter and Paul உள்ளக மண்டபத்தில்
231 Milner Avenue
மே-18, 2014
காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை வணக்க நிகழ்வு
மாலை 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை மேடை நிகழ்வுகள்

அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம்
நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் அமைப்புக்களும்.

9/5/14

தீவிர செயற்பாட்டில் விடுதலைப் புலிகள் : அமெரிக்க

 தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளனர் என அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிக்கை மூலம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சில புலம்பெயர் அமைப்புக்கள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி பெறப்படுவதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெருந்தொகையான புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஆயுதங்கள், தகவல் தொடர்பு, நிதி மற்றும் ஏனைய தேவையான பொருட்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புலிகள் தங்கள் வேலைகளுக்கு நிதி சேகரிப்பதுடன், தொண்டு வேலை என திசை திருப்ப முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் பல தனிநபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது.

இதுவரை கனடா மட்டுமே இந்தப் பட்டியலை ஏற்க முடியாது என மறுத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

6/5/14

தோட்டக்கள் வெடிமருந்து தாவடி பகுதியில் மீட்பு

யாழ்.தாவடி தெற்கு  பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம்  செவ்வாய்க்கிழமை (06) உறுதிப்படுத்துள்ளது.
ஜே – 192 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள இந்தப் பிரதேசத்திலிருந்து யூரியா பையினுள் கட்டப்பட்டிருந்த 5 ஆயிரம் ரி.56 துப்பாக்கி ரவைகள், இதர தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
குறித்த காணியினை காணி உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோது, ஆயுதங்கள் இருப்பதைக் கண்ணுற்று 511 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தினைத் தொடர்ந்து இராணுவத்தினர்
 

2/5/14

அமெரிக்கா மீண்டும் கவலை இலங்கையின் செயற்பாடுகள் குறித்து


இலங்கை அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க தவறியமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால், அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் இதனை கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த போதும், அந்நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் இன்னும் வலுவற்ற நிலையிலேயே இருக்கின்றது.

அத்துடன் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை ஏற்படுத்த தவறியுள்ளமை ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா, இலங்கை மக்களுடன் நீடித்த சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றி வருகிறது எனவும் பிஸ்வால் கூறியுள்ளார்.