siruppiddy

28/6/14

பொய்க் குற்றச்சாட்டுகளை தயார் செய்கிறது அரசாங்கம் !!

 விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தயார் செய்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். சில முஸ்லிம்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனித புதைக்குழியை தோண்ட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அவை குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் குருக்கள் மடத்துக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியிருப்பதானது விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டமிட்டே அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளை தயாரித்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றைய செய்திகள்

24/6/14

மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நிகழ்வு

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

முன்பதாக பாடசாலையின் பிரதான வாயிலிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடியும், பாடசாலைக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டன.

அடுத்து மகிந்தோதய தொழில்நுட்பப் பீடத்துக்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்ததுடன் இந்நிகழ்வுக்கான நினைவுக்கல்லினையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

பாடசாலை அதிபர் செல்வி கிறேஸ் தேவதயாளினி தேவராஜா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

60 மில்லியன் ரூபா செலவில் குறித்த தொழில்நுட்பப்பீடம் ஆறுமாத காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22/6/14

முகாம்களை விஸ்தரிப்பதற்கு வட மாகாணசபை தடைகளை ஏற்படுத்தி வருகின்றது!-

 வடக்கில் இராணுவ முகாம்களை விஸ்தரிப்பதற்கு வட மாகாணசபை தடை ஏற்படுத்தி வருவதாக காணி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடக்கின் இராணுவ முகாம்களை விஸ்தரிக்க காணிகளை வழங்குவதற்கு காணி அமைச்சு இணங்கியுள்ளது.
எனினும்,  இந்த நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
முகாம்களை அமைப்பதற்காக அரசாங்கம் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மக்களை ஆத்திரமூட்டி, இல்லாத அதிகாரங்கள் இருப்பதனைப் போன்று வட மாகாண சபையின் சில அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அரசியல் லாபமீட்டுவதே இந்த அரசியல்வாதிகளின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் கிடையாது என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமோ அல்லது மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமோ காணிகளை சுவீகரிப்பதற்கோ அல்லது காணிகளை வழங்கவோ மாகாண சபைகளுக்கு அதிகாரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

மற்றைய செய்திகள்

20/6/14

அன்று இராணுவத்தை அதிர வைத்த பாரிய தாக்குதல்

விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. மண்டைதீவு படைத்தளம் போராளிகளின் இலக்காக பல முறை தேர்வாகியது. அவ்வண்ணம் எதிரியின் ஆதிக்கமும், மக்களை பெரும் துன்பவியல் வாழ்விற்குள் தள்ளும் சில ஆறாத ரணங்களை எம்மக்களுக்கு அந்தப் படைத்தளம் கொடுத்தது. எதிரிக்கு சில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில இராணுவ ஆக்கிரமிர்க்கும் தீவகத்தின் உள் பகுதிகளில் இருக்கும் சிறு சிறு எதிரி முகாம்கள் மற்றும் மினிமுகாம் போன்றவற்றுக்கும் முக்கியம் வாய்த தளமாக மண்டைதீவு படைத்தளம் இருந்தது. அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப்பகுதியிடமிருந்து சிறுநீர்ப்பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இரு மாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் யாழ் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும். யாழ் குடாநாட்டின் மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர். மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையின் பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர். இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான். இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான ‘இதயபூமி’ தாக்குதல் உள்ளது. மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது. 00:0000:00 இன்றும் அவ்வண்ணம் தான், ஆயினும் எம்மக்களின் நிலங்களும் அங்கு அபகரிக்கப்பட்டு அதன் கடல்வளங்களும் சிங்கள அரசால் சூறையாடிய அழிக்கப்பட்ட வண்ணம் இருப்பது வேதனைக்குரிய விடயம். தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ் குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது

 

19/6/14

சீலன் வீரமரணமடைந்த மறுநாட்கள்....

எல்லோரும் வெஞ்சினத்துடன் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. மீசாலையில் சீலன் வீரமரணமடைந்த மறுநாட்கள் அவை.இயக்கத்தின் மிகப்பெரும் தூண் ஒன்று சாய்ந்ததன்  பின் வந்த மணித்தியாலங்கள் அவை. மிகவும் வெறுமையான பொழுதுகள்.சிங்களபடைகளின் மீதான கோபம் உச்சத்தில் தகித்துக் கொண்டிருந்த கணங்கள்.. அப்போது இருந்த முப்பதுக்கும் குறைவான போராளிகள் அனைவரும் பெரும் கோபத்துடன் இருந்த வேளை அது.உற்ற தோழனாக,எங்கள் எல்லோரின் மீதும் பாசமும் அன்பும் கொண்டிருந்த மிகப்பெரும் வீரனுமான சீலன் சிந்தி குருதி காய்வதற்கு முன்னரே அதற்கான பதிலை சிங்களம் அனுபவிக்க வேண்டும் என்று விழிமுழுதும் நெருப்புடன் உலாவிய தினங்கள்.
 
சீலனின் மரணத்துக்கு சரியான பதில் சிங்களத்துக்கு கொடுத்தே தீரவேண்டும் என்பதே அனைவரது மன எண்ணமாக இருந்தது. தலைவரும் அந்நேரம் தாயகத்தில் நின்றதால் நிலைமை கட்டுக்குள் இருந்தது.
 
'வீணான மோதல்களை எவரும் எந்த இடத்திலும் ஆரம்பிக்க வேண்டாம்...மோதல்வரும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்..ஏனெனில் சீலனின் மரணத்துக்கு சிங்களம் நினைத்தே பார்த்திருக்காத பதில் தரும் செயற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன...' என்ற தகவல் நேரடியாக தலைவராலேயே எல்லா போராளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது..
குறிப்பாக கிட்டு, செல்லக்கிளிஅம்மான், அருணா ஆகியோருக்கு கண்டிப்பான உத்தரவாக சொல்லப்பட்டுவிட்டது.
"வலிந்து ஏதாவது செய்து ஏற்பாடுகளை குழப்பவேண்டாம்" என்று.
 

என்னவிதமான பதில் சிங்களத்துக்கு காத்து இருக்கின்றது,எங்கே, எப்போது போன்றவற்றை கேட்பது இயக்கமரபு இல்லையென்றாலும் அந்த தாக்குதலில் தாமும் இருந்தாக வேண்டும் என்ற கோரிக்கை தலைவரை சந்திக்கும் அனைத்து போராளிகளாலும் கேட்கப்பட்டே இருந்தது.ஒரு சிரிப்பு மட்டுமே அதற்கான பதில்...ஆயிரம் அர்த்தங்கள் அதற்குள்.
 
நாட்கள் ஒன்று இரண்டு நகர்ந்த நிலையில் தலைவரிடம் இருந்து ஒரு அழைப்பு.
 
'சீலன், புலேந்திரன் ஆட்கள் சாவகச்சேரியில் காயடைந்தபோது முதலில் அவர்களின் காயங்களின் நிலையை பரீசோதித்த மருத்துவபல்கலைகழக மாணவர்கள் இருவரையும் உடனே சந்திக்கவேண்டும் என்ற வேண்டுகோள்...
 
எல்லோரும் மிகமிக கடுமையான பதில் ஒன்று வரலாற்றிலேயே இல்லாத விதத்தில் உறைப்பாக சிங்களம் அலறி நொருங்கும் விதத்தில் வகையில் அமையவேண்டும் என்றும், தாக்குதல்,அதன் வீரியம்எதிரிக்கு அதிக அழிவு,என்பன பற்றியே சிந்தித்து கொண்டிருந்த போது மருத்துவபல்கலைகழக மாணவர்களை தலைவர் அழைத்தது தாக்குதலின்போது காயமடையும் போராளிகளுக்கு அவசரசிகிச்சை அளிப்பதற்கான முன்ஏற்பாடே என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.
 
எதற்காக என்று அறிவது கூடாது எனினும் ஏதோ ஒரு மிகமுக்கிய அலுவல் என்பதால் அவர்களும் மறுநாளே வந்தனர்.. அவர்கள் வந்த உடனேயே அவர்களுடனான சந்திப்பு நீர்வேலிப்பகுதியின் ஓரிடத்தில் தலைவருடன் நடந்தது. அவர்களும் நினைத்து வந்திருந்தது அவசரசிகிச்சைக்கான அழைப்பே என்று. ஆனால் தலைவர் மிகவும் நேரடியாகவே அவர்களுடன் கதைக்க ஆரம்பிக்கிறார்.
 

'ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் நாம் பாவிக்கும் வெடிகுண்டின் அதிர்வு அருகில் வசிக்கும் மக்களின் காது,மனம் என்பனவற்றில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்..'
 
'குழந்தைகளுக்கு எந்தளவுக்கு அவர்களின் கேட்கும் சக்தியை பாதிக்கும்...'
'சிறுவர்களின் இந்த வெடிஅதிர்வு என்னவிதமான பிரச்சனைகளை கொடுக்கும்'

இந்த சந்திப்பின்போது உடன் இருந்த போராளிகள் விறைத்து போய் இருந்தனர்.அட,

இந்த தாக்குதலில் எவ்வளவு அதிகமான சக்கையை( வெடிமருந்தை) பாவித்து எதிரியை சிதறடிக்கலாம் என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த அதே வேளையில் இந்த மனிதன் எதனை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தபோது வானமளந்து பெரு உருவமாக நின்றான் தலைவன்.
 
மருத்துவமாணவர்களும் தமது கற்கை நெறிகளில் பெற்ற அறிவை கொண்டு எத்தனை வேகமான அதிர்வு இருந்தால் காது செவிடுபடும், எத்தனை தூரத்தில் இருந்தால் என்பனபற்றி விரிவாக சொல்லினர்.
 
இந்த கண்ணிவெடி வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வலையை குறைப்பதற்கு ஏதேனும் வழியுண்டா என்றும் கேட்டறிந்தார்.

இது ஒரு சிறு சம்பவம்போலவே இப்போது தெரியும். இதற்கு பின்னால் அந்த தேசியதலைவனின் உண்மையான விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
 
அமைப்பின் முதலாவது சக்கைவெடிப்பு பயிற்சிகள் மாங்குளம்பண்ணையில் 1979ல் நடைபெற்ற போதுகூட அதில் பங்குகொண்டிருந்த அனைவருக்கும் சக்கைவெடிக்க வைக்கமுன்னர் தலைவர் எங்கிருந்தோ சில தடிகளை முறித்து அளவாக வெட்டி அதனை வாயில் கவ்வும்வகையில் கயிற்றில் கட்டி கழுத்தில் மாட்டிவிட்டவர்.
 
அதனூடு,அமைப்பின் முதலாவது கண்ணிவெடித்தாக்குதலான பொன்னாலை பாலத்தில் நடாத்தப்பட்டபோது சிறிதுதூரத்தில் நின்றிருந்த போராளிகளுக்கு மூக்கால் இரத்தம் வடிந்த நிகழ்வும் அந்நேரம் மதுரையில் நின்றிருந்த தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது ஒரு சிறு சம்பவம்போலவே இப்போது தெரியும். இதற்கு பின்னால் அந்த தேசியதலைவனின் உண்மையான விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
 
அமைப்பின் முதலாவது சக்கைவெடிப்பு பயிற்சிகள் மாங்குளம்பண்ணையில் 1979ல் நடைபெற்ற போதுகூட அதில் பங்குகொண்டிருந்த அனைவருக்கும் சக்கைவெடிக்க வைக்கமுன்னர் தலைவர் எங்கிருந்தோ சில தடிகளை முறித்து அளவாக வெட்டி அதனை வாயில் கவ்வும்வகையில் கயிற்றில் கட்டி கழுத்தில் மாட்டிவிட்டவர்.வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வால் வாய்,நாக்கு என்பன கடிபடக்கூடாது என்பதற்காக..
அதனூடு,அமைப்பின் முதலாவது கண்ணிவெடித்தாக்குதலான பொன்னாலை பாலத்தில் நடாத்தப்பட்டபோது சிறிதுதூரத்தில் நின்றிருந்த போராளிகளுக்கு மூக்கால் இரத்தம் வடிந்த நிகழ்வும் அந்நேரம் மதுரையில் நின்றிருந்த தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எல்லோரையும் சம்பவங்களாக கடந்துபோகும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் திரும்பதிரும்ப அலசுவதான் தேசியதலைவரின் இயல்பு.

தவிர்க்க முடியாத வகையில் அந்த ராணுவரோந்து அணியை முழுதாக அழிப்பதற்கு ஏற்ற இடமாக திண்ணைவேலி தபாற்பெட்டிசந்தியே தெரிவு செய்யப்பட்டது.அதனைவிட வேறு இடம் எதிலும் அவர்கள் தப்புவதற்கானசாத்தியங்களே  அதிகம்.
 
ஆனாலும் மக்கள் ஆழ்ந்து உறங்கிகொண்டிருக்கும் நள்ளிரவுநேரத்தில் திடீரென கண்ணிவெடி வெடித்தால்
வீடுகளுள் இருக்கும் எமது மக்களுக்கு,அதிலும் குழந்தைகள்,சிறுவர்களுக்கு ஏதேனும் கெடுதி வந்துவிடுமோ என தேடிதேடி அதனை தவிர்க்க பல்கலைகழக மாணவர்களை அழைத்து ஆலோசனை கேட்ட தலைவரின் இயல்பு இன்று நினைத்தாலும் அதிசயமாகவே இருக்கின்றது..
எத்தகைய தாயுள்ளம் நிறைந்த தலைவன் இந்த இனத்துக்கு வாய்த்திருக்கின்றான்.
 

மருத்துவபல்கலைகழக மாணவர்களுடான சந்திப்பின் பின் திண்ணைவேலியில் வைக்க வேண்டிய கண்ணிவெடியில் அடைய வேண்டிய சக்கையின் அளவு மிகமிக குறைவானதாக தலைவரால் திட்டமிடப்பட்டது.இதனால் கண்ணிவெடியில் ஒரு இராணுவத்தினரும் இறக்க மாட்டார்கள். ஆனால் அடுத்தகணம் ஆரம்பிக்கும் சூட்டுத்தாக்குதலில்   அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதால் தலைவர் தானே அந்த இடத்துக்கு வருகிறார்.
அவரால் மட்டும் எப்படி அப்படி சிந்திக்க முடிகிறது என்று இப்போதும் நினைத்து பார்க்கிறேன்.
 
உண்மையிலேயே அவரின் இயல்பு என்பது மிகமிக மெல்லியது-மென்மையானது மென்மையான மனம் கொண்டவர்களாலே அடுத்தவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளை கண்டு கொதிக்கவும் போராட துணியவும் முடிகிறது என்பது உண்மைதான்.
 

இந்த இலட்சியத்துக்கான போராட்ட வடிவமாக வேறுவழியின்றி  ஆயுதப்போராட்டமே அவருக்கு முன்னால் இருந்தது.ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தியாகங்கள் மிக அவசியம்.அதிலும் உயிரை அர்ப்பணிக்கும் தியாகம் மிகவும் அவசியம்.
 
வெறும் சுயநலசேற்றுக்குள் மூழ்கி இருக்கும் ஒரு இனத்துக்குள் ஏற்கனவே வேர்விட்டு வளர்ந்திருக்கும் சில சுயநலவிழுமியங்களை அறுத்தெறிந்து அதனை தியாகம் செய்யும் மனநிலைக்கு உயர்த்தும் ஒரு மிகப்பெரும் உளவியல் முறையை அவர் கைக்கொண்டார்.
 
சில விடயங்களை,அது வலிகூடியதாக இருந்தாலும் அந்த முறைகளை அவர் மிகமிக உன்னதமாக இந்த மக்கள்கூட்டத்துள் பரவ செய்தார்.

தியாகம் ஒன்றே மிகமிக உன்னதமானது என்ற சிந்தனையை விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள்,அர்ப்பணம் என்பனவற்றின்மூலம் எமது மக்களுக்குள் பரவ செய்தார்.அதன்மூலம் பல நூற்றாண்டுகளாக சுயநல வேலிக்குள் அடைபட்டு கிடந்த மக்களிடம் பொதுவான எண்ணமும்,ஈகமும் வளர வைத்தார்.
 
அவருக்கு தெரியும் இந்த முறையில் வலிகளும்,வேதனைகளும்,இழப்புகளும் ஏராளம் என்று.ஆனாலும் இனத்தின் உளவியலை பொதுவான நோக்கம் ஒன்றை நோக்கி கட்டியெழுப்ப இதனைவிட வேறு வழியேதும் இல்லை என்பதையும் நன்கறிவார்.
 
போராட்டத்தை வளர்க்க இது முறை.ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு பொழுதிலும் எமது மக்கள்,எமது தேச குழந்தைகள், எமது சின்னஞ்சிறார் என்று அளவற்று நேசித்ததாலேயே அவர் தேசியத்தலைவனாகிறார்.

ஆம்,எல்லோரும் கண்ணிவெடியில் எத்தனைகிலோ சக்கையை அதிகமாகி அடசி எதிரியை சிதறவைக்கலாம் என்று சிந்தித்து நின்ற வேளையிலே கண்ணிவெடி வெடிக்கும்போது என் தேசத்து குழந்தைகள் திடுக்கிடுமா..காது செவிடாகுமா என்று சிந்தித்தாரே..அதுதான்..அவரால் மட்டுமே அப்படி சிந்திக்கமுடியும்...


 

16/6/14

மோடிக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி இரகசிய அறிக்கை

இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இரகசியமான அறிக்கை ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர
மோடிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் மற்றும் பொது வேட்பாளர்களாக போட்டியிடக் கூடியவர்கள் பற்றிய தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லி உள்ள உயர் மட்டத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிச்சயமான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் பெயர்களும் இதில் அடங்கியுள்ளன.

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளின் அரசியல் பலத்தை மதிப்பிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த கட்சிகளின் ஆதரவை பெறக் கூடிய பொது வேட்பாளர்கள் அவர்களுக்கு உள்ள சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று அமைச்சர்கள் பற்றி விசேட குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயற்பாடுகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அவரது கையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6/6/14

படுகொலை என்பதா? ஜெயலலிதா மீது இலங்கை பாய்ச்சல்!

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜெயலலிதா கூறுவதற்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து,  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து இலங்கை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தகவல் தொடர்புதுறை அமைச்சர் கெகெலியா ரம்புக்வாலா, இலங்கை தமிழர் விவகாரம் குறித்து ஜெயலலிதா கூறும் கருத்திற்கு இந்தியாவிடம் முறையாக எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் நிகழ்ந்ததை இனப்படுகொலை என்று கூறுவது மிகவும் தவறானது என்று கூறிய அவர், மத்தியில் ஜெயலலிதாவின் ஆதரவு இல்லாமல் மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, ஈழத் தமிழர் விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நன்றி தெரிவித்துள்ளார்.