siruppiddy

26/2/15

மீண்டும் கே.பியின் வழக்கு ஒத்தி வைப்பு!

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள கே.பியை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஜே வி பி தாக்கல் செய்திருந்த மனு இன்று சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது கே.பி தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு ஆறு மாத காலம் அவசியம் என்று சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.
அத்துடன் கே.பிக்கு எதிராக 193 குற்றங்கள் 
சுமத்தப்பட்டுள்ளதாகவும், 
இதனை விசாரணை செய்துவருவதாகவும் சட்ட அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி கூறினார்.இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதன்படி மீண்டும் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையில் பிற்போட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/2/15

மஹிந்தவுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மார்ச் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.
முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9ஆம் திகதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி நாட்டில்
 குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டே மஹிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமை மீறல் செயலாகும் என்று மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15/2/15

கொலை மிரட்டல்விஜயகலாவிற்கு!!

தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மைத்திரி அரசின் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி  விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 
நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு  கொண்ட சிலர் தன்னை அச்சுறுத்தினர் எனத் தெரிவித்து இன்று அதிகாலை முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலிருந்து ஈபிடிபியை வெளியேற்றும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக விஜயகலா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

10/2/15

நெதர்லாந்தின் தீர்ப்பு விரைவில்!விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? இல்லையா?

கடந்த 26.04.2010 இல் கைதுசெய்யப்பட்டு, முதல் தீர்ப்பின் முழுத்தண்டனையையும் அனுபவித்து விடுதலைபெற்ற 5 முக்கிய தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களிற்கும் எதிரான வழக்கானது உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் இறுதிவாதாட்டமும் செயற்பாட்டாளர்களின் இறுதிவார்த்தைகளும் எதிர்வரும் 16.02.2015 திங்கள் காலை 9.30 மணிக்கு டென் காக் உயர்நீதிமன்றத்தில்
 நடைபெறவுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டவரானவர் தான் தமிழீழவிடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக்கிளைப் பொறுப்பாளர் என்பதை அப்போதைய தனது சட்டத்தரணிகளின் எதிர்ப்பின் மத்தியில் தானாக முன்வந்து நீதிமன்றில் கூறியிருந்தார். இதனால், இவ்வழக்கின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியது. இதன்பின் இவ்வழக்கின் முக்கிய விசாரணைகள் நடைபெறமுன்பே, இவரின் அப்போதைய Bohler சட்டத்தரணிகளான Tamara, Pestman என்பவர்கள் திடீரென இவ்வழக்கிலிருந்து விலகிக்கொண்டனர். இதனால் இவ்வழக்கின் விசாரணைகளானது
 மேலும் தாமதமாகியது. இவரின் முதன்மை சட்டத்தரணியான Victor Koppe என்பவர் கம்போடியாவில் பிறிதொரு வழக்கில் வாதாடுவதால், அவருக்கு நேரமின்மையால் இவருக்குத் துணையாகசெயற்பட்ட மேலே குறிப்பிட்ட Tamara என்பவரே சட்டத்தரணியாக இவ்வழக்கை தொடர்ந்து நடாத்தி பின்பு திடீரென விலகியவராவார்.

இவ்வழக்கின் முக்கியமான விசாரணைகள், வாதாட்டங்கள் கடந்தஆண்டு 2013 ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை த.வி.புலிகளிற்கெதிரான தடைவழக்கின் லக்சம்போர்க் தீர்ப்பு வரும்வரைக்கும் பிற்போடுமாறு அனைத்து சட்டத்தரணிகளும் வாதாடியிருந்தனர். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக்கிளைப் பொறுப்பாளரானவர்,
 தான் இவ்வழக்கின் விசாரணைகளிற்கு முழுஒத்துழைப்பும் தந்திருப்பதால் லக்சம்பேர்க் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்க்காமல் இவ்வழக்கின் தீர்ப்பை நெதர்லாந்து நீதிமன்றமே கூறுமாறு நீதிபதிகளைக் கேட்டிருந்தார். இருப்பினும், லக்சம்பேர்க் தீர்ப்பானது வரும்வரைக்கும் நெதர்லாந்தின் தீர்ப்பானது கடந்தவருடம் பின் போடப்பட்டது.
லக்சம்பேர்க்கின் முதல் தீர்ப்பானது வெளியாகிய இன்றைய நிலையில், அத்தீர்ப்பில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதுபற்றி ஒரு தெளிவாக குறிப்பிடவில்லை என்பதாலும் அவ்வழக்கிற்கும் நெதர்லாந்து வழக்கிற்கும் நேரடிச்சம்பந்தம் இல்லை என்றும் நெதர்லாந்தின் அரசதரப்பினர் டென் காக் நீதிமன்றில் வாதாடியிருந்தனர். அத்துடன் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்பது குறித்து தங்களிற்கு (அரசதரப்பு) அக்கறை இல்லையென்றும் அதனால்
 இக்குற்றச்சாட்டைத் தவிர்த்து பிறகுற்றச்சாட்டுகளிற்கு நீதிமன்றம் தீர்ப்பபுக்கூறுவதற்காக குற்றம்சாட்டப்பட்ட இத்தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் அனைத்துச் சட்டத்தரணிகளுடனும் ஒரு உடன்பாட்டை அடைவதற்கு முயன்றனர். இதற்கு அனைத்து சட்டத்தரணிகளும் ஓத்துழைத்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட த.வி.புலிகளின் நெதர்லாந்துக்கிளைப் பொறுப்பாளர் மட்டும் ஒத்துழைக்க மறுத்திருந்தார். இவர் ஒத்துழைக்காததால், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா -இல்லையா 
என்பதில் தங்களிற்கு அக்கறை இல்லையென்றும் இதனால் இக்குற்றச்சாட்டிற்கு தீர்ப்புக்கூறுவதை தவிர்க்குமாறும் அரசதரப்புடன் இணைந்து வாதாடுவதற்கு தயாராகவிருந்த அனைத்து சட்டத்தரணிகளும் தங்கள் வாதாட்டத்தை கைவிட்டிருந்தனர்.
தனது சட்டத்தரணிக்கு ஒத்துழைக்க மறுத்த இக்கிளையின் பொறுப்பாளரானவர் தனது வேண்டுகோளில், த.வி.புலிகள் பயங்கரவாதிகளோ அல்லது குற்றவியல் அமைப்போ இல்லையென்றும் புலிகள் தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற ஒரு விடுதலை அமைப்பு என்றும் இலங்கையில் தமிழ்மக்கள் சிங்களஅரசின் அடக்குமுறைக்குள்ளும் இனப்படுகொலைக்குள்ளும் வாழ்ந்தார்கள் 
என்றும் இதற்காகவே த.வி.புலிகளின் தலைமையில் ஆயுதப்போராட்டம் நடந்தது என்றும் தனது விசாரணைகளில் எடுத்துரைத்து இதற்காகவே தானாக முன்வந்து இவ்வழக்கிற்கு தங்கள் செயற்பாடுகள்பற்றி ஒத்துழைத்ததாகவும் கூறினார். இதனால், நெதர்லாந்தின் இவ்உயர்நீதிமன்றமானது விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்பதுபற்றியும் ஐரோப்பிய பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்த்தது சரியா என்று தனது தீர்ப்பில் கூறவேண்டும் என்றும் நெதர்லாந்தில் 
நாங்கள் கட்டாயப்படுத்தி நிதிசேகரிக்கவில்லை எனவும் தடைப்பட்டியலில் அமைப்பு இடப்பட்டதால்தான் மக்கள் பயத்தின் அடிப்படையில் பொய்ச்சாட்சி கூறியிருக்கின்றனர் எனவும் இவ்வழக்கின் நீதியாணையாளரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்

7/2/15

எக்காரணம் கொண்டும் வடக்கில் படைக்குறைப்பு நடக்காது!!!

வடக்கில் இருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காப் படையினரைக் குறைக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்வதற்காக, முதல் முறையாக இன்று வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் ருவான் விஜேவர்த்தன.
இன்று பிற்பகல் பலாலிப் படைத்தளத்தில், சிறிலங்கா படையினர் மத்தியில் உரையாற்றிய அவர்,
”எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும்.
எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படாது என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.
பாதுகாப்புக் கவலைகள் தொடர்பாக பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும், இட்டுக்கட்டிய கதைகளையும் ஆயுதப்படையினர் நம்பக் கூடாது.
யாழ். குடாநாட்டில் இருந்து எந்தவொரு படைப்பிரிவையும் அரசாங்கம் விலக்கிக் கொள்ளாது, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளாது என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
ஆயுப் படையினருக்கான எல்லா நலன்புரித் திட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.அவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு கற்கைநெறிகள், படிப்புகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். ஐ.நாவுடன் இணைந்து அமைதிப்படையில் கூடுதல் படையினரைச் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முப்படைகளின் தளபதிகள், கூட்டுப்படைகளின் தளபதி சகிதம், யாழ்ப்பாணம் சென்றுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, நாளை கிளிநொச்சிக்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வார்.
 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

5/2/15

துப்பாக்கிச்சூடு! கோத்தா படைப்பிரிவு மீது சந்தேகம்!!

 வவுனியாவினில் துப்பாக்கிச்சூடு! புதிய அரசிற்கு தலையிடி கொடுக்கும் வகையிலான கோத்தா படைப்பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் இலங்கை காவல்துறை மீது இன்று வியாழக்கிழமை
 அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தற்போது காயமடைந்த நிலையில் வவுனியா, பொது வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார.; வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை மீதே இனந்தெரியாதோர் இந்த தாக்குதலை
நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக காலில் காயமடைந்த காவல்துறை அதிகாரியை உடனடியாக வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதித்துள்ளனர். வடக்கு முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் விசுவாசப்படைகள் தயாராகிவருவதாக கூறப்படுகின்ற நிலையினில் 
இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/2/15

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு!

 கீர்த்தி தென்னக்கோன் தமது பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் மீளவும் நாட்டிற்கு வரவழைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். இது அரசின் பாரிய பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மிகவும் அராஜக போக்கின் காரணமாக தனது பாதுகாப்பை காரணம் காட்டி ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசியல் 
ஆர்வலர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிற்பாடு புதிய அரசாங்கம் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசியல் ஆர்வலர்களுக்கு மீண்டும் நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தது. இது மிகவும் வரவேற்புக்குரிய செயற்பாடாகும். தனது பாதுகாப்பிற்கு வெளிநாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் மீளவும் நாட்டிற்கு வர வேண்டும் என்று ஆர்வத்துடன் உள்ளனர்.

மேற்படி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் சட்டத்திற்கு முரணான ஒழுங்கு முறைப்படியே நாட்டிலிருந்து தப்பி சென்றுள்ளனர். இதற்கமைய விமான நிலையம் துறைமுகங்களினூடாக செல்லாமல் படகுகளில் சென்றவர்களும் இதில் அடங்குகின்றனர். இந்நிலையில் குறித்த நபர்கள் மீளவும் நாட்டிற்கு வருகைதர வேண்டுமாயின் செல்லுபடியான கடவுச் சீட்டு அவசியம் இத்தகைய சிரமத்திற்கு உள்ளான அரசியல் ஆர்வலர்கள் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர். சட்டத்திற்கு முரணாக சென்றவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் நாட்டிற்கு வருகை தந்த பிற்பாடு குறித்த குற்றச்சாட்டினை மையப்படுத்தி பொலிஸாரினால் கைது செய்யப்படாத சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே இது குறித்து குடியகல்வு குடிவரவு சட்டம் தொடர்பில் குறித்த நபர்களுக்கு அரசினால் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களில் தெற்கு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவது மாத்திரமன்றி வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் உள்ளனர். இராணுவ வீரர்கள் பொலிஸார் மாத்திரமன்றி மக்கள் விடுதலை முன்னணி தமிழ் கட்சி சொயற்பாட்டாளர்கள் வடக்கின் சிவில் அமைப்பினர் பலர் உள்ளடங்குகின்றனர்.
எனவே குறித்த நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் மேலும் இலங்கை பிரஜையான ஜெயபாலன் போன்று குறித்த நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்களும் உள்ளனர். அவ்வாறாயின் சர்வதேச சட்டத்திற்கு அமைவாக குறித்த நபர்கள் மீளவும் இலங்கை வர வேண்டுமாயின் இலங்கை பிரஜாவுரிமையோ அல்லது இரட்டை பிரஜாவுரிமையோ வழங்க வேண்டும். எனவே இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என கோரினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>