siruppiddy

30/7/15

இணுவை சக்திதாசன் வண்ணத்தி பூச்சி

உன்னைப் போலத்தான் 
அவளும் அழகில் 
வண்ண வண்ண நிறம் காட்டினாள் 
எண்ணங்கள்
ஆயிரம் தினமும்
அவளைச்சுற்றியே பறக்க விட்டேன்

உந்தன் அழகு பெற நீயோ
மூன்றவதாரம் எடுத்தாய்
முப்பது நாளுக்குள்
வாழ்வையே முடிக்கிறாய்
எந்தக் கவலையுமின்றி
எப்படித் தான் சுறு சுறுப்பாய் பறக்கிறாயோ ?

பூக்களிலே தேனை யுண்டு
எக்களிப்பாய் மரகந்தம் பரப்புகிறாய்
வண்ணக் கலர் தந்து
மனதில் குளிர்மையை ஊட்டுறாய்
எத்தனை யாயிரம் வகைகள் உன்னிடம்
எத்தனையாயிரம் வண்ணங்கள் உன்னிடம்
மாத்தி மாத்தியே பறப்பாயாமே நிறம்

உன்னைப் போல் தான் அவளும்
எந்த கவலையுமின்றி எக்களிப்பாய்
என்னையே வட்டமிட்டாள்
மூன்று மாதம் கூட
தாக்குப்பிடிக்க முடியாத் தேவதையாய் ….
பறந்தே விட்டாள் கண்டம் விட்டு

கண்டம் விட்டு கண்டம் பாயும் உத்தியை
நீ தான் காட்டிக் கொடுத்தாயா?
தண்டச் சோறாய் நான் நிரந்தர
தண்டனை பெறுகிறேன்

நிறம் மாறும் உத்தியை
நியமென்று நம்ப மறுக்குது புத்தி

ஆக்கம்கவிஞர் இணுவையூர்
சக்திதாசன் டென்மார்க்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


29/7/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் தண்டவாளம்..!

பரந்த வெளி தனில்
எங்கள் பயணம்.
முட்டாமல் நீளுது.
அக்கம் பக்கம்
எட்டும் தூரமெனினும்
தொட்டு விட முடியாத
நீள் பயணம்..!

உனக்கும் எனக்கும்
இருக்கும் இடைவெளி
சுருங்கிட வழியில்லை.
நெருங்கிட நினைத்தால்
அடுத்தவன் வாழ்க்கை
நொருங்கிடுமாம்..!
..
நினைவுகள் நித்தம்
நெஞ்சோடு நீளுது.
கனவுகள் யாவும்
கைகூடாமல் கழியுது.
உள்ளத்து உணர்வுகள்
உறங்காமல் உலையுது.!

வாழ்க்கைப் பயணத்தில்
ஈரம் இல்லாமல்
இயங்குது நம் சுவாசம்..
சேராமல் போனாலும்
சோராமல் நகருது.
இரும்பான எங்களுக்குள்
கரும்பான காதலால்
இதயமும் கனக்குது..!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


இணுவை சக்திதாசனின் எருக்கலை

முகவரி தொலைத்த 
முள் வேலிப் பரப்பில் 
பறந்து பறந்து தொலைந்து விழுகிறேன் 
சிறகெங்கினும் முள் குத்திய ரணங்கள்

என்னையே குறி வைத்தபடி 
பூதம் போல் கழுகள்

பதுக்கிய என் சக்தியை 
புதுப்பித்தபடி 
எழுந்து பறக்கிறேன் 
முடியவில்லை என்னால் 
உணர்வினில் பறக்கின்றன 
சிறகுகள் தன்னால்

ஓய்வில்லா என் வாழ்வின்
கடசியத்தியாயம் இது 
ஓயாத முயற்சிகளுடன் 
ஊசலாடுது உயிர்

காப்பாற்ற எவருமில்லை 
விரசங்களோடு வேடிக்கை பார்ப்போர் ஏராளம் 
ஏற்றி விட்ட ஏணிகள் கூட 
ஏளனமாய் பார்ப்பதுதான் வேதனை 
தோத்துவிட்ட சுவடுகளில் 
ஏணிகளின் அடிச்சுவடிகள்

மீண்டும் காப்பாற்ற எவர் வந்தாலும் 
வேண்டாம் காவலாளி யென்றது மனம்
மீண்டும் கை தூக்க எவர் வந்தாலும் 
வேண்டாமென்றது புயம்

நீ தந்த காயங்களே போதும் 
தவமிருந்த வாழ்வின் அர்த்தங்கள் 
தோத்துப் போகவில்லை 
எருக்கலை போல் வெடித்து பறக்கும் 
உன்னோடு ஒரு சில நாள் 
இருந்ததுக்காய் வெட்கப் படுகிறேன் ..

ஆக்கம்கவிஞர் இணுவையூர்
சக்திதாசன் டென்மார்க்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

26/7/15

இன்றும் பலருக்குசிம்ம சொப்பனமாகவே இருக்கிறார் பிரபாகரன் !

திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின் 
பஸ் நிலையத்தில் மூன்றுபேரை பிடித்ததாக அறிவித்தது. 
அவர்கள் யார் என போலீசார் 22-ம் தேதி அறிவித்தனர். அந்த அறிவிப்பைக் கேட்டு இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகள் என உலகமே அதிர்ந்து போனது.
கைதான மூன்று பேரில் முதலாமவர் பெயர் கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த இவருக்கு 39 வயதாகிறது. இரண்டாவது நபர் ராஜேந்திரன், இவர் ராமேசுவரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் சசிகுமார், உச்சிபுளி அருகே உள்ள நாதாச்சி என்கிற பகுதியில் வசிக்கும் 
கார் டிரைவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


24/7/15

இசைப்பிரியா நடித்தஅல்லி விழியோரம் இறுப்பாடல் காணொளி

ஈழத்து கலைஞர்களால் மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி.
நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் 
துன்பத்தில் ஆழ்த்தின.
ஈழவர்  எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர் கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய் உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை 
ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள் கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல் இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/7/15

அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா நினைவன்சலி

அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்  பதின் எட்டாவது ஆண்டு நினைவன்சலி 
19.07.2015
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

18/7/15

எனக்குத் தெரியும் பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் என்ன நடந்தது என்று

புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது.
இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை.
எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான முறையில் புலிகள் கொன்றார்கள்.வெருகல் பகுதியில் தங்களது சகோதரிகள் போல் இருந்த பல பெண் போராளிகளை புலிகளின் வன்னிப் படையணி கொடூரமாக கற்பழித்துக் கொன்றது. இவை எல்லாவற்றிக்கும் பழி தீர்க்கவே
 நான் அரசாங்கத்துடன் இணைந்து புலிகளை ஒழிக்கப்பாடுபட்டேன். எனது முக்கிய குறிக்கோள் புலிகளின் தலைமையை மட்டும் அழிப்பதே. ஆனால் அத் தலைமையை அழிக்க முயலும் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளையும்  தன்னுடன் சேர்த்து அந்தத் தலைமை
 அழித்துவிட்டது. 
சரணடைந்த போராளிகளைக் கொல்ல வேண்டாமென்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் நான் மகிந்தவிடமும் கோத்தாவிடமும் கெஞ்சியிருந்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிடிபட்ட புலித்தலைமையை அழித்தது பெரிதல்ல. ஆனால் பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்த சம்பவம்தான் எனக்குப் பொறுக்க முடியாது இருந்தது. பிரபாகரினின் இளைய மகனைக் கொல்ல வேண்டாம் 
என்று நான் கூறிய போதும் அவனும் கொல்லப்பட்டுவிட்டான். 
அரசாங்கம் புலிகளுடன் செய்த யுத்தத்தில் அரசாங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக நானே இருந்தேன். யுத்தம் முடிந்து சில வாரங்களில் கோத்தபாய எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
 நன்றி தெரிவித்தார். ‘உமக்கு சிங்கள மக்கள் கடன் பட்டிருக்கின்றார்கள்‘ எனவும் தெரிவித்தார்.
ஆனால் இன்று என்னை சப்பித் துப்பிவிட்டார்கள். பொதுசனஐக்கிய முன்னணியில் எனக்கு இடம் தரவில்லை. கொலைகாரர்களுக்கு இடம் கொடுத்துள்ளார்கள். மட்டக்களப்பில் அக் கட்சிசார்பில் போட்டியிடுபவர்கள் பொதுமக்களைக் கொன்ற கொலைகாரர்கள். இதற்கு கடவுள் பதில் சொல்ல வேண்டும்‘ இவ்வாறு கருனா தெரிவித்துள்ளார்.
கருனாவுடன் நட்பாக இருந்த முன்னாள் சிங்கள அமைச்சருக்கு கருனா இவ்வாறு கவலையுடன் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

16/7/15

ஈழம் வென்றே தீறுவோம் மாணவர்களின்.போராட்டம் ...

மாணவர்களின் வெறித்தனமான
போராட்டம் .....
ஈழம் வென்றே தீறுவோம்....
திருவண்ணாமலையி் ல் பள்ளி,
கல்லூரி மாணவர்கள் சாலைகளில்
முழங்கால் போட்டு மனிதச்
சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11/7/15

நிஷாந்தனின்,,உனக்காய் பிறந்தேனடா,,,காணொளிப்பாடல்

எம்மவர் படைப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள் எமது படைப்புக்களை நாமே வளர்த்தாகவேண்டும் என்பதில் எமது ஈழத்துப்படைப்புக்கு நீங்கள் கொடுத்துவரும் ஊக்கத்தால்தான் இன்று எம்மவர்படை ப்புக்கள் மிளிர்வுகொண்டு உள்ளது
அதனால் உங்கள் அங்கீகாரத்தை இந்தப்பாடலும் பெறும் என்று நம்பிக்கை கொண்டள்ளார் முல்லை நிஷாந்தன் அதை உறுதிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எமக்க உண்டு அந்த வகையில் இந்தப்பாடல் உங்கள்பார்வைக்கு வருகின்றதுஅனைவரும் பார்த்து உங்கள் விமர்சனத்தை வழங்குங்கள்,,,,,
இதன் நடிகா்கள்,விமல்ராஐ்,ஆர்த்தி,மகா,ஜொனாத்
இசை-முல்லை நிஷாந்தன்
பாடல் வரி- முல்லை நிஷாந்தன்
குரல்-இசைப்பிரியன்,ஜனா
கதை-கிறிஸ்ரோப்பா்
ஒப்பனை-சாளினி சாள்ஸ்
ஒளிப்பதிவு,படத்தொகுப்பு-ஜொனாத்
தயாரிப்பு-இசைப்பிரியன்
இயக்கம்-விமல்ராஜ்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நெடுந்தீவு தனுவின் தேர்தல் வருகுதாம்.. !!


வந்திட்டு வந்திட்டு
வாக்குறுதிகள் வந்திட்டு..
தந்திட்டு தந்திட்டு
தலைகோதுவர் தந்திட்டு..
ஏந்திட்டு ஏந்திட்டு
இருகை ஏந்திட்டு..
சாய்ந்திட்டு சாய்ந்திட்டு
ஆசனத்திலும் சாய்ந்திட்டு..
போட்டிட்டு போட்டிட்டு
இருகையிலும் நகைபோட்டிட்டு
புலம்பிட்டு புலம்பிட்டு
பொய்களை மெய்யாக்க
புலம்பிட்டு…
தருவீங்களா தருவீங்களா
வாக்குறுதிகளை தருவீங்களா?
புரிவீங்களா புரிவீங்களா
எம் உணர்வ புரிவீங்களா?
கொடுப்பீங்களா கொடுப்பீங்களா
நீதியை கொடுப்பீங்களா?
ஆசனத்துக்காக அவரை காட்டி
கையேந்தல்.
கிடைத்ததும் இவரை சுட்டி
புறக்கணிப்பு.
மருண்ட மக்கள் நாம்
விரைந்தெழ வழியில்லை.
வெகுண்டெழுந்தால்
வீண் பேச்சும் இனி இல்லை

ஆக்கம் நெடுந்தீவு தனு 

 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>