siruppiddy

30/8/15

தனாவின் தமிழை தலைவன் காப்பான்...

ஆழி அலை ஓய்வதில்லை
உணர்வுகள் வீழ்வதில்லை…
தலைவன் மாழவில்லை
தமிழன் புகழ் மங்குவதில்லை…..
இரத்தப்பலி கேட்டமண்
பூச்செடி வளர்க்குது…..
கொய்தின்புறுவதற்கல்ல
தியாகிகளை வணங்குவதற்கு….
தெய்வங்கள் காக்க தமிழை
தலைவன் காப்பான்
ஒருநாள்…..
ஆக்கம் முல்லைக்கவி தனா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அரவிந்தின் வருத்தமும்,வறுமையும்....

விழிகள் உறங்க
மறுத்த இந்த
இராத்திரியில் தான்
மனதும்,மூளையும்
முட்டி மோதிக்கொள்கின்றன.

சடலங்களை அள்ளிக்குவிக்கும்-ஓர்
சம்பவத்தின்போது
ஏற்படும் பயமும்,
திகிலும்,கவலையும்,
கலந்த ஒரு தருணம்.

தாலி கட்டியவனயும்
தான் பெற்றவர்களையும்
ஈழத்தின் இறுதிப்போரில்
புதைத்த நிகழ்ச்சிக்கு பின்
காணப்பட்ட வேதனைகள்.

திருமணம் செய்வதாய் கூறி
அவன் செல்வங்களை
அழித்து ஏமாற்றிச் சென்றதும்
அதனால் மகன் தற்கொலை
பண்ணியதும்.

மீதி இருப்பவர்கள். நான்
வியாதிப்பட்டவள் என்று
விட்டுச்சென்று பழிங்குகளில்
வாழ்வதும்.

வருத்தமும்,வறுமையும்
ஏமாற்றமும்,துரோகங்களும்
ஊராரின் நகைப்பும்
எல்லாவற்றுக்கும்
கவலை ஒன்றுதானே
கதாபாத்திரம்.

எல்லாவற்றையும் இரைமீட்டவளாய்
துக்கத்தின் விளிம்புவரை
கவலைகள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்க
விடியும் சேவலின்கூவலோடு
பாழாய்ப்போன பழைய
குசினிக்குள் நுழைகிறாள்
தேநீருக்காய்

இப்படி எத்தனை நாள்
எத்தனை இரவுகள்
இருந்திருப்பாளோ??
இந்த தாய்.
ஆக்கம்  நெடுந்தீவு அரவிந்தின்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் காகங்கள்


கை விடப்பட்டது
கல்லறைகள்..
காணாமல் போனது
பல கல்லறைகள்.
தேடுவாரற்றனர்
காவல் தெய்வங்கள்.

ஆதிக்க வெறியரின்
ஆட்டமும் ஆணவமும்
இராணுவத்தின்
அடாவடித்தனமும்
அரங்கேறிய.ஆடுகளம்
மாவீரரின் கல்லறைகள்..

கண்ணீர் அஞ்சலிக்காய்
கார்த்திகையில் கூடிப்
பின் கூறுகளாய்
துருவங்களாய்
செயல் இழந்தவர்களாய்..
நடைப் பிணமானோம்.

மாவீரரின் கனவுகள்
கைவிடப் பட்டதாய்
கைமாறுதல்கள்
ஏதுமின்றி கனவுலகில்
மிதக்கின்றோம்..!

ஒற்றுமையின்
உன்னதர்களை
விடியல்களின்
வெளிச்சங்களை
உயிர் உள்ளவரை
போற்றும் கடன்
நாம் மறந்தாலும்
காகங்கள் மறக்கவில்லை
கல்லறைகளில் கூடித்
தினம் கரைகின்றன..!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


28/8/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் திரு ஓணம்.பண்டிகை.!

ஒவ்வொரு ஊருக்கு
ஒவ்வொரு விழா
இனிக்கும் திரு விழா!
கேரளத்தில் ஓணம்
என்றும் பெரு விழா..!

சோர்வுகள் கலைத்து
ஒற்றுமை தளைத்து
ஒருங்கே இணத்து
வடிவம் பெறும்
வண்ணத் திருவிழா..!

கோலங்களின் எழுச்சியும்
கோதையரின் ஆற்றலும்
கைத்திறன் நேர்த்தியும்
வர்ண வர்ணக் கோலங்களாய்
வீதியெங்கனும் காட்சிகளாய்
மெருகு பெறும் திருவிழா..!

கலைநயங்களின்
ஆரவாரங்கள்
நாட்டிய நடனங்கள்
நர்த்தகிகளின்
வித்தகத் திறனால்
அபிநயங்களாய்
அரங்கேறும் திருவிழா.!

ஓணம் எனும் விழாவுக்கு
ஓடங்கள் செலுத்தும்
போட்டி நிகழ்வும்
தனிச் சிறப்பு
ஆடவர் ஆட்சிக்குள்
ஓடங்கள் அணிவகுத்து
நதிகளில் வீரியமாகப்
பாய்ந்தோடும் பேரழகு
இன்றைய நாளில் அழகிய
திரு விழா கேரளத்தில்.!

வாழ்த்துவோம் வாரீர்.
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி






27/8/15

ஜெசுதா யோயின் அரைவயிறாயினும் ஆனந்தம் கண்ட நாள்

சுற்றிலும் சுவர்கள்
மேல் நோக்கி என் கண்கள்
வெறித்த பார்வை..!
மெல்லிதாக ஒரு மின்மினி வெளிச்சம்
எண்ணங்கள் பின்னோக்கின….
…….!!
மண்ணெண்ணெய் குப்பி விளக்கு நினைவுக்கு வந்தது
காற்றில் அதன் ஒளி அசைந்து
மங்கிய போதும்..

உற்றுப் படித்த நாட்கள்.
தெளிவான சிந்தனை
சுற்றிலும் உண்மைகள்
சோர்வில்ல கண்கள் 
அரைவயிறாயினும் ஆனந்தம் கண்ட நாள்
அடுத்த நாளை பற்றிய சிந்தனை வந்ததில்லை
அன்பான உள்ளங்கள் அருகில் ….
இன்னும் எத்தனை எத்தனை ….:;

மீண்டும் மீண்டேன் சுயத்துக்கு
இன்று எல்லாம் உண்டு 
நிம்மதி இல்லை 
பொய்மைகள் ஏராளமான 
உண்மைகள் இன்றி
அன்புக்குப் பற்றக்குறை
அதிலு ஏமாற்றம்
எதையும் நம்பமுடியா சூழல்…!!!

விரக்தியோடு எழுந்து 
வழமையான கடமைக்குள்
உட்புகுந்தேன்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
                                                  ஆக்கம் ஜெசுதா 


26/8/15

ஜோடிகள்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் .!

 மௌன
மொழி
மெல்லிய
நாணம்.
சற்று சலனம்
பறக்கும்
நிலை
மயக்கும்
மாலை
மனங்களின்
ஊமை நாட்டியம்
மாயம்
காயம்
தாண்டிய
தெய்வீகம்
காதலாகி
நிதம் கண்ட
கனவுகள்
ஓராயிரம்..!

எண்ண அலை
தெளிவான
நீரோடை
அழகிய
முடிவும்
முகமலர்வும்
உணர்வுகளின்
உராய்வில்
சத்தங்கள்
இல்லாத
இதழ் யுத்தங்கள்
இனிமை சேர்க்கும்
இனிய இரவுகள்
வாரி அணக்கும்
வசந்தங்கள்
வாழ்க்கையில்
தனி சுகம் காணும்
ஜோடிகள்..! 
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

24/8/15

கவிமகன்.இ எழுதிய விழிநீரல் பூத்த செந்தாமரை

ஆற்றங்கரை மணலில் 
நான் கிறுக்கிய கோடுகள் 
உன் பெயரை உரைத்து
சிரித்து மகிழ்ந்தன
என் உதடுகளுக்குள் அல்லாமல்
அடி மனசில் உன் நாமம்
பதிந்து கிடந்தது
இந்த அந்நிய வாழ்வின்
பொழுதொன்றில் தான்
நான் உன்னை உணர்ந்தேன்
தெரியா வதனமாய் தான்
என் மனமென்னும் விளை
நிலத்தில் நீ நாடா கத்தரித்தாய்

எழுதுகோல் கொண்டு 
உருவகித்த எழுத்துக்களால் 
உன் எண்ணங்களில் நான் 
மஞ்சமிட்டுக் கொண்டேன் 
என்ற பஞ்சான 
உன் நினைவுகளை 
என் மீது நீ உதிர்த்த போது
என் மனம் கைப்பற்றி கொண்டது 
உன் உள உணர்வுகளை 
வாதிட்டாய் கருத்திட்டாய் 
மேம்படவே என் உயிர் வரிகள் 
வார்த்தை தந்து 
என்னை செதுக்கினாய்

கைகள் வீசி நடந்த போது 
எழுந்த சந்தம் உந்தன் 
கதைகள் கூறி சென்றது
சப்த நாடிகளும் அடங்க
பல சண்டைகளில் என்னை
வார்த்தைகளால் வசீகரிப்பாய்
ஆனால் வஞ்சிப்பாய் 
மனம் உடைந்து நீ ஏற்றிய 
தீப ஒளி காற்றில் நிமிர்ந்து 
நிற்க முடியாது 
கலி எனும் இருளுக்குள் 
மூழ்க ஆரம்பிக்கும் ஆனால் 
பொழுது வினாடியாய்
கடக்க முன்னே 
“கவி”என்ற ஒரு சொல்
புயலை நிர்மூலம் செய்யும் 
ஒளியை நிமிர வைக்கும்

நட்பெனும் ஆயுதத்தால் 
என்னை ஆளுகை செய்வாய்
மீண்டும் சந்தோச அலை 
என் நரம்பு மண்டலத்தில் 
நர்த்தனம் புரியும் 
இப்போது என் உயிர்
உன் வாசணையை தேடுகிறது 
கரை கடந்து ஓடும்
விழி நீரில் பூத்த அல்லியானாய்
விழிகள் சாக துடிக்கின்றன
நீ கூறிய “பிரிவு” என்ற 
விஷ வார்த்தைகளை 
உட் கொண்டதால்…
 ஆக்கம் கவிமகன்.இ 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23/8/15

இன்று முதல் .நல்லாட்சிக்கான புதிய தேசிய அரசாங்கம் இயக்கம்


இதன்படி 70 பேரைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொள்வர்.
இந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 95 பேரில் 50பேர் புதிய தேசிய அரசாங்கத்தில் பங்கேற்கவுள்ளனர்
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக வரையறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது
40 பிரதியமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்
இந்தநிலையில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது
தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் திகதியுடன் முடிவுக்கு வரும்.
இதன் பின்னர் இரண்டு தரப்பும் விரும்பினால் அதனை நீடித்துக்கொள்ளமுடியும்
இந்தநிலையில் புதிய தேசிய அரசாங்கம் அடிப்படை உரிமைகள்,  ஊழல் ஒழிப்பு,  சுகாதாரம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம் இணைசாரா கொள்கை அபிவிருத்தி என்ற 
அடிப்படையில் செயற்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21/8/15

தாம்பத்தியம் இணுவை சக்திதாசனனின்

எல்லாமடங்கி 
நீலா மட்டும் இவனோடு விழித்தபடி 
அரைப் புன்னகையில் 
அம்மணமாய் தெரிந்தது பூமி
ஊரை விட்டு வந்தபின் 
புதுசு புதுசாய் வான வெளியில் 
வேடிக்கைகள் …
மத்தாப்பாய் சில கணங்கள் 
வேடிக்கை காட்டி விட்டு 
தோப்புக்குள் விழுந்து நொருங்கும் சத்தங்கள்
விதம் விதமான வார்ப்புக்களில் 
விடியல் பொழுதுகள் 
விழுந்து நொருங்கிய மத்தாப்பு 
விழுந்ததுக்கான தடயங்களே இல்லை

கை கோர்த்தபடி ஆணும் பெண்ணும்
நடைபயிலும் அற்புதம் 
பூங்காவனமாக … .தம்பதிகள் !
*வாழ்ந்தால் இப்படி யெல்லோ 
அங்கலாய்த்தபடி 
இவன் மனம்*
சில நாட்களாக வில்லை தூரம் 
இடை வெளிகள் ….
கையை விட்டவர்கள் தனித் தனியாய் 
நடை பயில …..
காணவில்லை பின் இருவரையும்

சில கால இடை வெளியில் 
கண்டெடுத்து தந்தது காலம் 
நாயோடு அவன் மட்டும் நடு வழியில்
எங்கே உன் அவள் என்றேன் 
விவாகரத்தாகி விட்டது என்றான் அவன்

கால இடை வெளி கடந்தாலும் 
கை பிடித்து நடக்காது அன்பு பிடியில்
காலங்கள் கடக்கும் தன் இனிய உறவில் 
இளகிப் போனது இவன் மனம் !
ஆக்கம்  இணுவையூர்sathiசக்திதாசன் டென்மார்க்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

18/8/15

நினைத்தாலே இனிக்கும்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்.!

சிந்தையில்
எங்களூர் சந்தை.
வருடங்கள் 
தாண்டினாலும்
மறக்காத முகங்கள்….!

கலகலப்பானவர்
ஆனாலும் மிகவும்
கண்டிப்பானவர்கள்.
அன்பானவர்கள்
ஆனாலும்
அதட்டக் கூடியவர்.!

மீனைக் கூறியும்
கூறாமலும் விற்கும்
திறன் வாய்ந்தவர்.
இரக்கம் நிறைந்தவர்
ஆனாலும் சொன்ன
விலையில் நின்று
இறங்காதவர்…!

நியாயம் விலையில்
நிறைய இருக்கும்
அறா விலை கேட்டால்
அறம் பாடத் தொடங்குவர்
ஆனாலும் நல்லவர்….!

நாசூக்கான நக்கலும்
நளினமும் கேட்டு
நாணிக்குறுக வைத்திடும்
வல்லவர்..விலை
கேட்டவர் வாயடைப்பார்.
சொன்ன விலைக்கு
பெற்று விட்டால்
குட்டி மீனொன்றினை
இனாமாய் தந்திடுவார்.
இவர்கள் முகம்….
நினைத்தாலே இனிக்கிறது
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>

17/8/15

தேர்தல் வாக்களிப்பு நிறைவு: இறுதி வாக்களிப்பு வீதம்

2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது.
மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது.
யாழ்ப்பாணம் – 60%
வன்னி – மன்னார் – 70%
மட்டக்களப்பு – 60%
திருகோணமலை – 75%
திகாமடுல்ல – 65%
கொழும்பு – 65%
கம்பஹா – 70%
கண்டி – 75%
மாத்தளை – 70%
நுவரெலியா – 70%
களுத்துரை  – 65%
காலி – 70%
மாத்தறை – 70%
புத்தளம் – 66.5%
குருநாகல் – 68%
பதுளை – 70%
மொனராகலை – 65%
இரத்தினபுரி – 70-75%
அநுராதபுர – 65-70%
கேகாலை – 70-75%
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15/8/15

உங்கள் அர்த்தனனின் இயல்பு...

அப்புறம்!!!
நான் என்ன‌
கதையா
சொல்லிக்கிட்டிருக்கன்
லூசாடா நீ!!
அமிர்தம்
குழைத்த‌
அவஸ்த்தைக்காகவே
மறுபடியும்
கேட்டுக்கொண்டேன்..
அப்புறம்!!
இப்போதும்
யாரோ ஒருவர்
அதை பிரயோகிக்க‌
முயலுகையில்
என் பிரபஞ்சம்
உடையும்
ஓர் பிரமை…
எங்கிருக்கிறாய்
முடிந்தால்
மொழிந்து போ!
சமுத்திர
அலையின்
நுரையில்…
உன்
காலடித்தடங்களின்
இருப்பிடங்களை
கவர்ந்துகொண்டே
வந்துவிடுகிறேன்
உன் இருப்பிடம்… 
கவிதை ஆக்கம்-அர்த்தனன்



வழி மீது விழி கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் ..!

வலியோடு
இவர்கள்
பெரும் பகுதி
கழிந்ததும்\
கழிவதும்
கழியப் போவதும்
எழுதாத விதியாகும்..!

அன்றொரு நாள்
காதலனுக்காய்
கடிதக்காரனுக்காய்
பத்திரிகை! பால்
காரனுக்காய்
க.பொ.த பரீட்சை
முடிவுக்காய்
கால் கடுக்கக்
காத்திருப்பு..!

பிறிதொரு நாளில்
கைப்பிடித்தவன்
வருகைக்காய்
மல்லிக்கைப்
பூவுக்காய் புன்னகை
பூத்த படி
கனவுகளோடு
காத்திருப்பு..!

அராஜகத் தாண்டவம்
தலை விரித்தாடிய
வேளைகளில்
காரியாலயத்தால்
கணவன் வரவில்
தப்பேதும் நடந்திடக்
கூடாதெனும்
ஏக்கச் சுமைகளோடு
காத்திருப்பு…

இன்று பிள்ளைகளின்
வருகைக்காய்
எண்ணங்கள்
விரிந்தோடக்
கண்ணீரில்
காலமெல்லாம்
காத்திருப்பு.
வழி மீது
இவர்கள் விழி.
வாழ்வெல்லாம்
நீள்கின்றதே..!
பெண்மையின்
பேரழகு இதுmmmm..

ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

13/8/15

சிறுதை நோர்வே உஷாவின் ஆருயிரே,,,,,

கோடைகாலம் என்கிற நினைவிருக்கிறது. ஆனாலும் சின்னதாய் ஒரு நடுக்கம் பரவி உடல் சில்லிடுகிறது. போர்வையை யாராவது இழுத்து விட மாட்டார்களா என்று தோன்றிய மறு கணமே வியர்த்துக் 
கொண்டு வருகிறது. மூச்சு அடிக்கடித் திணறுகிறது. அப்போதெல்லாம் என்னைச் சுற்றி ஆள் நடமாட்டமும் சலசலப்பும் அதிகமாகிறது. பின்னர் ஆழ்ந்த அமைதி. என்னுள் ஏதோ செயலிழந்து போய்க் கொண்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.
 வெளியே என் ரங்கன் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்கிறது. வசீகரமான குரல். எவ்வளவு தான் பெரிய ஒரு ஆணாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் அள்ளி அணைத்துக் கொள்ளத் தூண்டும்
 அன்பு தடவிய குரல்.. திடீரென்று படபடப்பாக இருந்தது. எழுந்திருக்க என்னுள் ஒரு அணுவும் இடமளிக்கவில்லை. நம் உடல் இப்படியா 
பாறாங்கல்லாய்க் கனக்கும்? ரங்கா…. என் செல்வமே…. உன்னுடன் சுயநலமாக நடந்து கொண்டு விட்டேனா? இத்தனை 
வருடமும் என்ன சாதித்தேன்! உனக்கு எதையுமே செய்து கொடுக்காது மகா பாவியாகப் போகப் போகிறேனே! அருகே அவனை 
உட்கார வைத்து, என் கண்களிலும் மனதிலும் நிறைத்துக் கொண்டு.. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு… அவன் மனதில் ஏதும்
 ஏக்கங்கள் இருக்கின்றனவா எனத் தெரிந்து கொண்டு…… அவனுக்குச் செய்த அனியாயங்களிற்காக என்னை மன்னித்து விடும்படி கேட்க வேண்டும்…. என் குழந்தை பேசக் கேட்டு அவன் மடியில் இந்த உயிர் பிரிய வேண்டும்…. 
ஆனால் முடியுமா என்னால்…? கண்ணீர் கன்னங்களில் இறங்குவதை உணர முடிகிறது. ஆனால் துடைக்கக் கைகள் எழவில்லை.
20 நாட்கள் கோமாவில் கிடந்திருக்கிறேனாம்.
 இன்றோ.. நாளையோ.. தான் தாங்குவேனாம்… அவ்வப்போது கேட்ட பேச்சுக்குரல்களால் என் நிலமை எனக்கு நன்றாகவே புரிந்தது. சில மணி நேரங்களில் நான்.. காற்றாகி விடப் போகிறேன். குப்பையாய்க் கிடக்கப் போகும் அசைவற்ற உடலை வெளியிருந்து வேடிக்கை பார்க்கப் போகும் உன்னதமான தருணம் நெருங்குகிறது. சாவைப் பற்றிப் புதிதாகச் சிந்திப்பதற்கு இந்தக் கணம் எனக்கு எதுவுமே இல்லை
. என் பாதி வாழ்வு என் சாவை இலக்காகக் கொண்டு வாழ்ந்தது தான். ஒவ்வொரு கணமும் ஒரு வியாபாரியைப் போல நான் உயிர் வாழ வேண்டிய அவசியத்தையும் இறந்து போக
வேண்டும் என்ற தீராத வேட்கையையும் தராசிலிட்டு, இரண்டு தரப்பு நியாயங்களையும் இரவு பகலாக ஆராயந்ததில் வாழ்ந்த வாழ்க்கை தான் என்னுடையது. இந்த நிமிடம் தான் என்னுடையது. சில மணி நேரங்களில்… உருத் தெரியாமல் எனக்குள் கலந்து விட்ட ஏக்கங்களும் வலிகளும் சத்தமின்றி என்னுடனேயே சமாதியாகும். வலியற்ற அந்தப் பொழுதுக்காக காத்திருக்கிறேன்…..
ஆனால்.. என் சின்னு பாவம். தனித்து விடுவானே.. தன் மனதில் உள்ளதையெல்லாம் கொண்டு போய் எங்கே கொட்டுவான். அவன் சந்தோஷமாக, உற்சாகமாக, தன் தனிமை தெரியாதவனாய் வளர வேண்டும் என்று நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்தில்… 
அவனது எதிர்காலத்திற்கு உபயோகமாய் நிரந்தர படிப்பு, உத்தியோகம் என்று ஒரு தாயாகச் செய்து முடிக்க வேண்டிய கடமைகளிலிருந்து தவறி விட்டேனா…?
«எல்லாம் உன் திமிர் ஒரு பொம்பிளையின் வளர்ப்பு. ஒரு தகப்பன் இருந்து வளர்த்திருந்தால் இந்த வயதுக்கு அவன் ஒரு நல்ல வேலையில் இருந்திருப்பான். உன்னால் தான் அவன்ர வாழ்க்கை இப்ப கேள்வியா இருக்குது!»
ஆக்ரோஷம் என்ற வார்த்தை ராமுக்குத் தான் நன்றாகப் பொருந்தும். கண்களில், முகத்தில்.. ஒவ்வொரு அணுவும் நெருப்பை வெறுப்பாய் உமிழ வார்த்தைகளை விட்டெறிய அவனால் தான் முடியும். அந்தளவிற்கு நான் அவனுக்கு என்ன தவறு செய்து விட்டேன் என்று யோசித்துக் களைத்த வேளையில் தான் ஒரு நாள் அவனை விட்டு நான் குழந்தையுடன் வெளியேறினேன்.
தெரிந்தோ தெரியாமலோ… ராமின் வளர்ப்பில் வளரக்கூடிய ஒரு குழந்தையின் சின்ன ஒரு சாயல் கூடத் தெரியாமல் ரங்கனை வளர்த்து விட்டேன். குழந்தையைச் சந்தோஷப்படுத்திய மலை 
ஏறுதல் முதல் புல்லாங்குழல் இசை வரை என் சக்திக்கு மீறி எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வைத்தேன். அதற்காக நேரம் காலமின்றி உழைக்க வேண்டியிருந்தது. சரியோ, தவறோ…என் மன 
உளைச்சலுக்கும் என் குழந்தை மனதில் ஏக்கங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஒரே வழி மனதுக்குப் பிடித்த விஷயங்களில் வரையறை இல்லாத ஈடுபாட்டைச்
செலுத்துவதே என்று ஒரு கண்மூடித்தனமான எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ராம் சொல்வது போல் அது முட்டாள்த்தனமோ. குழந்தையின் வாழ்வை கருத்தில் கொண்டு ராமுடனேயே வாழ்ந்திருக்க வேண்டுமோ.
ராமுடன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கெட்ட கனவு போலத் தெரிகிறது. எவருக்கும் புலப்படாத அர்த்தங்கள் அவனுக்கு வெகு சுலபமாகப் புரியும். நான் குழந்தையை இந்த நாட்டுக்கே பிரதமராக்கியிருந்தாலும் 
அதற்கும் கூட ஏதாவது குறை கூற அவன் விரல் என்னை நோக்கி நீளும். நல்ல வேளையாக அவன் என் சாவுக்கு இல்லை. முன்னுக்குப் பின் முரணான பேச்சிலிருந்தும் அவனது நடிப்புத் திறமையைப் பார்ப்பதிலிருந்தும் விடுதலை…
தன் மனைவி பிள்ளைகளுடன் வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறானாம். அரசல் புரசலாய்க் காதில் கேட்ட சங்கதி தான் இதுவும். நல்ல வேளையாக என் கேட்கும் சக்திக்கு இது வரை எந்தப் பிரச்சனையும் 
இல்லை.
ராமை விட்டு நான் வெளியேறிய போது பாவம், குழந்தை சரியாகப் பேசக் கூடத் தொடங்கியிருக்கவில்லை. பிறர் கண்களுக்கு நான் துணிந்தவளாகத் தெரிந்திருக்கலாம். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற தெளிவு என் புத்திக்குத் தெரிந்தாலும் அதன்படி வாழ விடாமல் எனக்குள் இருந்த காயங்கள்… ஏமாற்றங்கள், பாதுகாப்பின்மை… எனக் கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சல் என்னை எரிக்கத் தொடங்கியிருந்தது… 
ஒரு சின்னத் தவறும் செய்யாமல் எப்போதும் விழிப்பாக…ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஆரம்பித்த மன அழுத்தம்…. ராமைத் திருமணம் செய்த பின்பு ஆரம்பித்தது….. 
அவனுடன் வாழ்ந்த போதும் சரி… பின் தனியே வந்து விட்ட பின்பும் சரி… ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தது. அவ்வப்போது மாத்திரைகளைப் போட்டு உள்ளுக்குள் கனன்ற மன உளைச்சலை அணைத்துக் கொண்டு என் குழந்தைக்கான உலகத்தில் 24 வருடங்கள் ஓட்டியாகிவிட்டது.
ராம் சொல்வது போல் ஒரு ஆணின் உதவியின்றிக் குழந்தையை வளர்த்ததால் தான் பல விஷயங்களில் கவனம் 
செலுத்த விட்டு அவனது வாழ்க்கையைக் கெடுத்து விட்டேனோ..? என் குழந்தை பட்டப்படிப்பு முடித்த பிறகும் வேலை எதுவும் கிடைத்த பாடாக இல்லையே. ஒரு ஆண்
குழந்தைக்குத் தந்தையிடம் தன் கனவுகளைப் பகிர்ந்து கொள்வது இலகுவாக இருக்குமோ? சுலபமாக வேலை கிடைக்கும் ஒரு துறையில் அவனை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அவனுக்குப் பிடித்தது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இந்தத் துறையைத் தெரிவு செய்ய விட்டேன். வேலை தேடி மனம் சலித்துப் போகிறானோ என்னவோ. நான் படுக்கையில் விழ முன்னர் சில நாட்களாய் ரங்கன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதும் என் மடியில் சாய்ந்து கொண்டு என் கைகளை வருடியபடி அமைதியாக எதையாவது படித்துக் கொண்டிருப்பது நினைவிலிருக்கிறது. «தலையிடிக்குதா குட்டிக்கு?» கவலையுடன் குழந்தையைத் தொட்டுப் பார்த்ததும் அவன் எதுவும் இல்லையென எனக்குச் சமாதானம் சொன்ன நாட்களும்…
அவன் நிலமைக்கு என்னை விட வேறு யார் 
காரணமாக இருக்க முடியும்?…..
ஒரு வேளை ராமுடன் வாழ்ந்திருந்தால் மருத்துவத்துறையோ பொறியியலோ… பிடிக்காததாக இருந்தாலும் குழந்தை நாளடைவில் படித்து முடித்திருப்பான். தகப்பனைப் போலில்லாமல் எதுவாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செயற்படுபவன் அவன். தந்தை இல்லாமல் வளர்ந்ததால் தான் இந்த நிலை என்று நினைப்பானோ என் குழந்தை? அம்மா அப்பாவை விட்டுத் தனியாகப் புறப்பட்டு வரும்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லையே என நினைப்பானோ…?
அவனுக்காக கைகளை நீட்ட முயற்சித்தால்.. முடியவில்லை. வெறுமனே விரல்கள் நடுங்க மட்டுமே செய்தன. «ங்ங்…ஆ…!» மெல்ல குரல் பிரயத்தனப்பட்டு வெளிவருகிறது.
யாரோ உள்ளே வருவது கேட்டது. கூடவே «வா..!» என்கிற ரங்கனின் கிசுகிசுத்த குரல். வேடிக்கை தான். உரத்துப் பேசினால் விழித்துக் கொள்வேன் என்று நினைத்தாயா ரங்கா…? யாரோ தயங்கி நின்றிருக்க வேண்டும். அவன் அழைத்ததும், உள்ளே வந்திருக்க வேண்டும். «இரு பிருந்தா». என்றபடி என் கட்டில் விளிம்பில் உட்கார்ந்தான். ஓ.. பிருந்தாவா.. !? 
ரங்கனுடன் படித்தவள். கூடப் படிக்கும் மற்றைய நண்பர்களுடன் நம் வீட்டிற்குப் பல தடவைகள் வந்திருக்கிறாள். என் கைகளைச் சட்டென்று
பிடித்துக் கொண்டு என் ரங்கன் அழத் தொடங்க.. என் சிந்தனை தடைப்படுகிறது.
« அம்…மா… பாரம்மா. எனக்கு வேலை கிடைச்சிருக்கு பாரம்மா….மாசம் 40,000 என்றாலும் கிடைக்குமம்மா.. நான் எதிர்பார்த்த அதே இடம்…. ஐயோ கடவுளே இவ்வளவு காலமும் உங்கட முயற்சி பலனளிச்சு எல்லாம் கூடி வாற வேளையில இப்பிடிப் படுத்திட்டீங்களேயம்மா… தாங்க முடியேல்லயம்மா…….» கேவிக் கேவி அழுதவனின் அருகில் பிருந்தா வந்து உட்கார்ந்து, « ரங்கா..ப்ளீஸ்……» என ஏதோ ஆறுதல் சொல்கிறாள்.
«பிருந்தா.. அம்மா என்ன மாதிரி ஒரு ஜீவன் தெரியுமா..? 
அப்பா ஒரு மாதிரி என்று கேள்விப் பட்டிருக்கிறன். அதைத் தவிர அவரைப் பற்றி எனக்கு எதையும் தெரிந்து கொள்ள வேணும் என்ற எண்ணமே வந்ததில்லை. அவ்வளவு தூரம் ஒரு அம்மாவா, அப்பாவா, அண்ணாவா, நண்பனா அம்மா இருந்திருக்கிறா. என் விருப்பங்களை மதிச்சு உற்சாகப்படுத்தி.. எப்பவுமே இவ்வளவு energetic ஆக positiveஆக யாராலும் இருந்திருக்க முடியாது. அம்மா எனக்குக் கிடைத்த
 ஒரு வரம் பிருந்தா… எனக்கு அவ படிப்பை மட்டும் தரவில்லை. அயராமல் முயற்சி செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கிறா. அவ கோமாவில் விழும் வரை அவவின் வியாதி யாருக்கும் தெரியாது. கடைசி வரை தன்னால் முடிந்ததை முயற்சி செய்தபடி தான் இருந்தா. ஏதாவது சரி வராட்டி ஒரு நாளும் சோர்ந்து போனதில்லை. என்னைச் சோர்ந்து போக விட்டதும் இல்லை. என் நன்றியை… என் அன்பை நான் சரியாகச் சொல்லவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை பிருந்தா……….
ஸ்போர்ட்ஸ், இலக்கியம், இசை என்று எல்லா விஷயங்களிலயும் ஆர்வமுள்ளவனாய் நான் இருப்பதால் தான் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பான வேலை கிடைச்சது. அது அம்மாவால தான். ஓயாத அவவின் முயற்சி என்னிட்டையும் இருப்பதால் தான்….
உன் friendsக்குள் பிருந்தா நல்ல பிள்ளையா இருக்கு எண்டு சொல்லுவா. உன் குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரிப்பா. அவவுக்கு உன்னைக் கட்டாயம் பிடிக்கும் என்று தெரிஞ்சும் காத்திருக்க நினைச்சேன். எனக்கு ஒரு வேலை கிடைச்சதும் அவ்விடம் சொல்லி உன்னிடமும் பேச நினைச்சேன். இப்ப எல்லாமே late ஆகப் போச்சு பிருந்தா…»
என் குழந்தை கேவிக் கேவி அழுகிறான். பிருந்தா அவனை உலுக்குகிறாள். «பார் ரங்கா..அம்மாவின்ர கண்ணில கண்ணீர்… அவவுக்கு நீ சொல்லிறது எல்லாம் விளங்குது எண்டு தான் நினைக்கிறேன்…..»
ரங்கன் என் கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான். «அம்மா..என்னோட நீங்க இருக்கோணுமம்மா… நீஙக எனக்கு எப்பவும் வேணுமம்மா… நீங்க இல்லாட்டி நான் எங்கயம்மா போவேன்..!» எனக் கதறுகிறான். அப்போது என்னை அவன் தொடுவதை என்னால் உணர முடியவில்லை. மருத்துவமனைக் கட்டிலில் காய்ந்து கறுத்த உடல் ஒன்று கிடக்க.. அட.. அது நானே தான். அருகே அழுதபடியிருந்த 
ரங்கனையும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த பிருந்தாவையும் ரசிக்கிறேன். என் கண்மணி…. இந்த இழப்பு உனக்குத் துயரம் தான். ஆனால் நீ இப்போது தயாராகி விட்டாய். இனிமேல் உன்னால் வாழ்க்கையுடன் போராட முடியும்.
சிறுதை ஆக்கம் நோர்வே உஷா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11/8/15

அரவிந்தின் வஞ்சககாதல்‬இறுதி நிமிடங்கள்

 இறுதி 
நிமிடமேனும்
உன் அருகாமை
தருவாயா!!

நீ மொழியும்
வியாக்கியானத்தை
வேதெமென‌
மொழிபெயர்க்க‌
விரும்புகிறேன்!

நிசப்தத்திலெழும்
உன் குறட்டையை
இசைத்தட்டாக்கி
இன்பத்தின்
பரிணாமங்களை
பிரித்தறிய‌
பிரியப்படுகிறேன்!!

போதையில்
நீ உளறுகையில்
ஒலிப்பேழையில்
உள்ளீர்த்து
பட்டிமொன்றில்
உன் குரல் 
ஒலித்திட செய்திடும்
உன்மத்தம் எனக்கு…

நீதானே 
இறுதிக்கணங்களில்
எல்லோருக்குமாய்
விடையளிப்பாய்!!
என்னை மட்டும்
வெறுக்காதே
உன் அருகாமை தா!!

உன்னிடம்
நிலையாமையின்
எண்ணங்கள்
ஏராளம்!

எனக்கும் சொல்
இருக்கும் 
மிச்ச சொச்ச‌
வாழ்வையேனும்
வாழ்ந்திட 
பிரியப்படுகிறேன்!!

முடிந்தால் 
உன் வீட்டு
உணவு தா!!
உலகம் எங்கே
தொலைந்ததென்பதை
உன் வீட்டுணவில்
உணரமுடியும்….

இறந்துபோக‌
இச்சையெனக்கு
உன் அருகாமை
உள்ளபோதே…

ஏய் மின்சார‌
சுடுகாடே!!
வெட்டியான்
வேலைக்கு
விண்ணப்பமே
வெற்றிடமாமே..

எங்கேனும்
ஓர் சுடுகாட்டில்
இன்னும் நீ
உயிர்ரொடிருந்தால்!
உன் தத்துவத்தை
கற்றுக்கொண்டே
தவறிவிட விருப்பம்…

ஏய் வெட்டியானே
உலகம்
தொலைந்ததன்
உண்மை உணர்த்து
உன் வீட்டுணவில்…

வெட்டியான்
சோறென்ன 
பிணவாசமா
வீசும்..

முதியோரில்லத்தில்
மரித்துப்போன‌
யாரோ ஒருவர்
எழுதிவைத்த‌
இறுதி ஆசை
இல்லை!!!!!!!
நிராசை கூட…

கவிதையாகி
உயிரை
எரிக்கிறது!!

ஆக்கம் அர்த்தனன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

7/8/15

குண்டு துளைத்த காருடன் ஊர் ஊராகப் பிரசாரம் செய்யும் பொன்சேகா!

ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருகோணமலை நகரசபை
 மண்டபத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் 
சரத் பொன்சேகா பங்கேற்றிருந்தார்.
இதன்போது, 2006ஆம் ஆண்டு கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில், தன் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது,
 தான் பயணம் செய்த காரையும் அவர் தேர்தல் பரப்புரைக்காக கொண்டு வந்திருந்தார். குண்டுகள் துளைத்த அந்தக் காரை வைத்து அவர் ஒவ்வொரு மாவட்டமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/8/15

இ. கவிமகன். எழுதிய கோடை விடுமுறையில் ஊருக்கு ஒரு உலா

வரிசை கட்டி சென்ற 
வாகனங்கள் சுமந்து 
வந்தன அந்நிய 
நாட்டு வரவுகளை
நானும் அன்று தான்
வந்து சேர்ந்திருந்தேன்
சுதந்திர தென்றலை
சுவாசிக்க விரும்பி
ஆனாலும் எனது ஆவல்
செத்து போன காலமாக
கடந்து கொண்டிருந்தது
அந்த தேசம் எங்கும்
அந்நிய வாசனை நாத்தமெடுத்து
பல காலக் கழிவில்
மீண்டிருக்கும் என் 
ஊர் உணர்வுகளில் 
நான் மிக வேண்டாதவனாக 
தோற்றம் கொண்டிருந்தேன்
பலகாலம் கம்பி கூண்டில் 
அடைபட்ட கிளியாக 
சந்தேகித்து அடைக்கப்பட்ட
வெறும் தமிழன் நான் 
ஆனாலும் என்னை ஏற்றிட 
அந்த ஊரில் எந்த மனிதமும் இல்லை
அந்த தேச காற்றில்
சுகந்தம் கலந்து போய் கிடந்த 
மேற்கத்தைய வாசனையில் 
தடுமாறி தூர விலகி கிடந்தது
இனிய காற்றை சுவாசிக்க 
ஆசை கொண்டு ஓடிவந்த 
என் மூக்கு துவாரங்கள் 
அந்நிய வாசனையால் 
மூச்சு முட்டி அவதிப்பட்டு 
சாக துடித்து கொண்டிருந்தது.

வானம் வெளிக்கும் அந்த 
விடியல் நேரம் 
வாசல் தேடி ஓடி வந்த
மகளின் குடும்பத்தின் 
மகிழ்வில் திளைத்து கிடந்தது 
அந்த ஊர் பெரியவர் இல்லம் 
கோடை விடுமுறையாம் 
நாள் போக்க ஊருக்கு 
ஒரு உலா

இதுவே அவர்கள் வலுவை 
ஊருக்கு காட்டும் வழி கூட 
வங்கியில் இருந்து வரும் 
கடனுக்கான வட்டி கடிதங்கள் 
மாதம் அவர் வீட்டு 
காகிதப்பெட்டியை நிரப்பும் 
ஆனாலும் ஊரில் அவர்
பணத்தின் மீது படுக்கை 
விரித்து படுத்திருப்பர் 
அதை காட்டும் மிடுக்குடன் 
மின்னும் முறுக்கு தங்கம்

தினமும் யாரோ 
உண்ட உணவு தட்டை 
கழுவி காசு காண்பார் 
ஆனால் ஊரில் அவர் 
சிகை அலங்காரம் 
அனைவருக்கும் 
வெளிநாட்டில் அரச உத்தியோக
கதைகள் சொல்லும் 
வஞ்சகம் அறியா குழ்ந்தைகள்
மனசில் தமிழ் மணம் 
அற்று போய் கிடக்கும்

அந்த நாத்த காற்று 
என் பக்கம் திரும்ப கூடாது 
என்பதில் நான் அக்கறை கொண்டேன் 
என் மகள் இன்றும் 
மலர்களின் அழகில் மகிழ்கிறாள் 
அவள் அந்த வைகறை 
பொழுதில் பட்டாம் பூச்சிகளை 
தேடி கொண்டிருகிறாள் 
அவை மட்டுமே அவளின் நண்பர்கள் 
பூக்களோடு பேசி கொண்டு 
அவர்களின் உபசரிப்பில் 
தேனுண்டு மகிழும் தேனீக்கள் 
அவளது வழிகாட்டிகள் 
உண்டிட தட்டில் உணவு 
இல்லை என் வீட்டில் 
ஆனாலும் மகிழ்ந்திட 
என் முற்றத்தில் நறு மணம்
வீசிடும் மல்லிகை மணக்கிறது
ஆக்கம் கவிமகன்.இ 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>