siruppiddy

21/7/20

நளினி வேலூர் சிறையில் தற்கொலை முயற்சியில் தடுத்து நிறுத்திய காவலர்கள்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த
 கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு 
முயன்றுள்ளார்.குற்றம் சுமத்தப்ப்பட்டுள்ள ஏழு பேரில் நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 
தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நளினிக்கும் சக கைதிகளுக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் நளினி மீது ஒழுங்கு
 நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் இதனால் நளினி துணியைக் கொண்டு தூக்கிலிட்டு 
தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது சிறைக் காவலர்கள் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.முன்னதாக நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரியிருந்தார். எனினும் சிறை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை
 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


8/7/20

இந்துமகாசபா வேதனை இராவணன் சிவபக்தன் தேரரின் கருத்து கண்டிக்கத்தக்கது

கோணேஸ்வரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை 
இராவணன் ஆண்ட தேசமாகும். சீதாவலியவில் கோயில் உள்ளது. அனுமன் இலங்கை வந்து சென்ற ஆதாரங்கள் உள்ளன. மேலும் இராவண எல்லவில் குகைகள் உள்ளன. ஆகையால் தேரர் குறிப்பிட்ட கருத்தானது 
இந்து மக்களின் மனதை மேலும் புண்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது “
என்று இலங்கை இந்துமாசபா தலைவர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா சபா சார்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “
இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>


7/7/20

வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல கொரோனா அச்சத்தல் அனுமதி மறுப்பு

வெலிக்கட சிறைச்சாலையில் மீள் அறிவித்தல் வரும் வரையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கட சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>