siruppiddy

12/11/20

யாழில் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ்.முகுந்தன் என்பவர் மீது 11-11-20.அன்று குழுவொன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்கத் தொலைபேசியும் பறித்து சென்றது.
கொரோனா தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது அமைப்பு ஒன்று உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊடகவியலாளர் தனது முகநூலில் நேற்று முன்தினம் இரவு பதிவொன்றினை 
இட்டிருந்தார்.
பதிவினை நீக்க கோரி குறித்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தம் கொடுத்து, மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு 
ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு 
செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல், கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை 
கைது செய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



11/11/20

ஊடகவியலாளர் மீது யாழில் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து தான் தாக்கப்பட்டதாக 
சுந்தரலிங்கம் முகுந்தன் எனும் குறித்த உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்
10-11-20.அன்று  நள்ளிரவு தொலைபேசியில் எச்சரித்தது மட்டுமின்றி  வீட்டிற்கு வந்த தமிழ் கொடி பணிப்பாளர் விமல் உள்ளிட்ட மூவர் அந்த இணைப்பை  அழிக்கச்சொல்லி தாக்கியதோடு மட்டுமில்லாமல் எனது தொலைபேசியையும் பறித்து சென்றுவிட்டார்கள் என அவர் 
தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான அவர் முன்னதாக வடக்கு ஆளுநரது ஊடக செயலாளராகவும்  பணியாற்றி வந்திருந்தார்.
இதனிடையே குறித்த இணைய தொலைக்காட்சியில் அவரது பாரியாரும் பணியாற்றி வருகின்றார்.
ஏற்கனவே சட்டவிரோத காணி பிடிப்பு தொடர்பில் குறித்த இணைய தொலைக்காட்சி குழுமம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் குற்றச்சாட்டு;ககளை முன்வைத்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>