siruppiddy

21/10/22

அப்பாவி மக்களை கொழும்புப் பகுதியில் சுட்டுக் கொன்ற பொலிஸார்

முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் காரணமல்லாமல் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இருவரும் 
எனினும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனவும் பொலிஸ் விசாரணைக் குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கிலேயே, அதிரடிப் படையினரால் இவ்வாறு தவறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பாதாள உலக ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுக்கள் 
சுட்டிக்காட்டியுள்ளன.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







14/3/21

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பிரிட்டனில் மீளாய்வு

 பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2000 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இந்த அமைப்பை 2001 இல் பிரிட்டன் தடை செய்தது. எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இந்த அமைப்பு தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
 தெரிவித்துள்ளது.
எனினும் பிரிட்டனில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 
தெரிவித்துள்ளது.
தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் என
 தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

10/2/21

களுத்துறையில் சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல பொருட்களடங்கிய பொதி

களுத்துறை சிறைச்சாலை மதிற்சுவருக்கு மேலாக சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல்வேறு பொருட்களடங்கிய பொதியொன்று சிறைச்சாலை அதிகாாிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து கையடக்க தொலைபேசியொன்று, சிம்காட் ஒன்று,கஞ்சா என்று சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்று, லைட்டர்கள் இரண்டு,ஊசிகள் 12 மற்றும் பசை போத்தலொன்று ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்
 தொிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

12/11/20

யாழில் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ்.முகுந்தன் என்பவர் மீது 11-11-20.அன்று குழுவொன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்கத் தொலைபேசியும் பறித்து சென்றது.
கொரோனா தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது அமைப்பு ஒன்று உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊடகவியலாளர் தனது முகநூலில் நேற்று முன்தினம் இரவு பதிவொன்றினை 
இட்டிருந்தார்.
பதிவினை நீக்க கோரி குறித்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தம் கொடுத்து, மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு 
ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு 
செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல், கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை 
கைது செய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



11/11/20

ஊடகவியலாளர் மீது யாழில் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து தான் தாக்கப்பட்டதாக 
சுந்தரலிங்கம் முகுந்தன் எனும் குறித்த உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்
10-11-20.அன்று  நள்ளிரவு தொலைபேசியில் எச்சரித்தது மட்டுமின்றி  வீட்டிற்கு வந்த தமிழ் கொடி பணிப்பாளர் விமல் உள்ளிட்ட மூவர் அந்த இணைப்பை  அழிக்கச்சொல்லி தாக்கியதோடு மட்டுமில்லாமல் எனது தொலைபேசியையும் பறித்து சென்றுவிட்டார்கள் என அவர் 
தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான அவர் முன்னதாக வடக்கு ஆளுநரது ஊடக செயலாளராகவும்  பணியாற்றி வந்திருந்தார்.
இதனிடையே குறித்த இணைய தொலைக்காட்சியில் அவரது பாரியாரும் பணியாற்றி வருகின்றார்.
ஏற்கனவே சட்டவிரோத காணி பிடிப்பு தொடர்பில் குறித்த இணைய தொலைக்காட்சி குழுமம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் குற்றச்சாட்டு;ககளை முன்வைத்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


21/7/20

நளினி வேலூர் சிறையில் தற்கொலை முயற்சியில் தடுத்து நிறுத்திய காவலர்கள்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த
 கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு 
முயன்றுள்ளார்.குற்றம் சுமத்தப்ப்பட்டுள்ள ஏழு பேரில் நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 
தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நளினிக்கும் சக கைதிகளுக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் நளினி மீது ஒழுங்கு
 நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் இதனால் நளினி துணியைக் கொண்டு தூக்கிலிட்டு 
தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது சிறைக் காவலர்கள் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.முன்னதாக நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரியிருந்தார். எனினும் சிறை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை
 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


8/7/20

இந்துமகாசபா வேதனை இராவணன் சிவபக்தன் தேரரின் கருத்து கண்டிக்கத்தக்கது

கோணேஸ்வரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை 
இராவணன் ஆண்ட தேசமாகும். சீதாவலியவில் கோயில் உள்ளது. அனுமன் இலங்கை வந்து சென்ற ஆதாரங்கள் உள்ளன. மேலும் இராவண எல்லவில் குகைகள் உள்ளன. ஆகையால் தேரர் குறிப்பிட்ட கருத்தானது 
இந்து மக்களின் மனதை மேலும் புண்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது “
என்று இலங்கை இந்துமாசபா தலைவர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா சபா சார்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “
இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>