siruppiddy
உலகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14/3/21

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பிரிட்டனில் மீளாய்வு

 பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2000 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இந்த அமைப்பை 2001 இல் பிரிட்டன் தடை செய்தது. எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இந்த அமைப்பு தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
 தெரிவித்துள்ளது.
எனினும் பிரிட்டனில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 
தெரிவித்துள்ளது.
தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் என
 தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

4/12/13

பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் விரிசல் .,.

பாகிஸ்தான் ஊடாக ஆப்கானிஸ்தானில் உள்ள தமது படையினருக்கான பொருட்களை ஏற்றியிறக்கும் பணிகளை அமரிக்கா நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா அண்மையில் நடத்திய வான் தாக்குதல்களின் போது பாகிஸ்தானிய பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் ஊடாக பொருட்களை ஏற்றியிறக்கும் அமெரிக்கா வாகன ஓட்டுநர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏற்றியிறக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் விரைவில் அது ஆரம்பிக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



3/10/13

மேயரின் நண்பர் போதைப் பொருள் வழக்கில் கைது


கனடாவின் றொரண்ரோ நகர மேயரின் நண்பர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் றொரண்ரோவில் உள்ள Etobicoke என்ற இடத்திலுள்ள உலர் சலவை கடை ஒன்றில் பொலிசார் நடத்திய திடீர் சோதனையின் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அலெக்ஸாண்டர் லிசி(வயது 35) என்பவர், றொரண்ரோ மேயரின் நண்பரும், சாரதியும் ஆவார் என தெரியவந்துள்ளது.

மேலும் Marijuna என்ற போதைப் பொருளை வைத்திருந்தது, கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொருவரான Jamshid Bahrami(வயது 47) என்பவர் கொகைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்தது, மூன்று தடவைகள் Marijuna என்ற பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அலெக்ஸாண்டருக்கு 5000 டொலர் அபராதமாக விதித்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2/10/13

நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கடந்த 25ஆம் திகதி, ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும், கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இலங்கை தொடர்பான, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விபரிக்கப்பட்டுள்ளதாவது-
“ஐ.நா மனிதஉரிமை ஆணையர் பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் நீதித்துறையில் தலையீடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த உயர்ஆணையரின் கவலைகளில், அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.
போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள

முன்னேற்றம் காணப்படாவிட்டால், அனைத்துலக விசாரணை அழைப்புகள் தொடரும் என்ற, ஐ.நா உயர் ஆணையரின் மதிப்பீட்டை அமெரிக்காவும் சுட்டிக்காட்டுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

24/9/13

மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது


தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா, ஜோசினா மாசெல் பெற்றுக் கொண்டனர்.
 

11/9/13

சி.ஐ.எ இலங்கைக்கு திடீர் விஜயம்



சீனாவின் மேலாண்மை இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது என்ற பேச்சுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெளியக புலனாய்வு அமைப்பான சி.ஐ.எ இலங்கைத் தீவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் சி.ஐ.எ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இந்த போதை பொருளானது, பிரபல தாதாக்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிமின் 'டி கம்பனி' யினால் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

இதனடிப்படையில், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் குறித்து சி.ஐ.எ புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில், இலங்கையில் இது தொடர்பில் விசாரணை நடாத்தும் பொலிஸ் அதிகாரிகளையும் சி.ஐ.எ அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.

அத்துடன், பாகிஸ்தான்  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் விடயத்தை காரணமாகக் காட்டினாலும், சிறீலங்காவுக்கு பதிலடி வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இது அமையக்கூடும் என்ற அச்சம் சிறீலங்கா அரசுக்கு உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆட்சிமாற்றத்திற்கான முதல் அடியாக இருக்கலாம் என்ற அச்சம் அலரிமாளிகையில் நிலவுவதாகவும் அறியமுடிகிறது