siruppiddy

29/9/18

யாழ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் இன்று(சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கு
 மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் அனைவரையும்
 விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.  இந்தநிலையிலேயே, இன்று கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>28/9/18

உயிரிழந்ததமிழ் பெண் விரிவுரையாளருக்கு நீதி கேட்டு தமிழர் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

மர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி கோரி தமிழர் தாயகமான திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
.குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபவனியாக வீதிக்கு வந்து மக்களை தெளிவூட்டும் விதத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக
 நடத்தப்பட்டுள்ளது.
போதநாயகியின் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான ஒரு விழிப்புணர்வு போராட்டமாக இது அமையும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

27/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரர் புதைக்கப்பட்ட இடத்தில் கதறி அழும் கணவன்

மர்மமான முறையில் மரணடைந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் கணவர் கவிஞர் செந்தூரன் மனைவியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அழுது குளறியுள்ளார்.
செந்தூரன் மனைவியின் இறுதி சடங்கிற்கு கூட செல்லவில்லை என்பது போதநாயகியின் கொலைக்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது போதநாயகியின் கணவர் செந்தூரன் என்ற நபர், தான் ஸ்திரீ லோலனாக இருந்தாலும், மனைவி தனக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்ற சிந்தனை வன்முறைக்குள்ளாக்கியிருக்கிறார்.
கடந்த சில வருடங்களில் அவரது வாழ்வில் பல பெண்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்ற பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி வருகின்றன.பிரான்சை சேர்ந்த தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்மணியை திருமணம் செய்து, செந்தூரனின் திருவிளையாடல்கள்
 தெரிந்ததும் மூன்றாவது நாளிலேயே விவாகரத்து செய்து விட்டார்.
அதை அவர் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.இதன்பின்னர், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு யுவதிக்கு ஆட்டையை போட்டு, அவரது தாயாரிடமிருந்து பெருமளவு பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இந்தியாவில் ஒரு தொ
டர்பு இதன்பின் கிளிநொச்சி யுவதியொருவருடன் திருகோணமலையில் உல்லாசம் என பல பேஸ்புக் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதைப்பற்றி செந்தூரன் தரப்பிலிருந்து எந்த பதிலுமில்லை. மாறாக சில பெண்கள்- முகப்புத்தகத்தில் நேரில், கொஞ்சம் பட்டும் படாமலும் செந்தூரன் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்த 
ஆரம்பித்துள்ளனர்.இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது. அது கமல் பாடும் பாடலை நினைவுபடுத்துகிறது. செந்தூரன் தரப்பு இதைப்பற்றி பகிரங்கமாக சொன்னால் மாத்திரமே உண்மை தெரியவரும்.
உயிரிழந்த போதநாயகி நல்ல சம்பளத்தை 
பெறும் விரிவுரையாளராக கடமையாற்றினார். அவரது ஏடிஎம் கார்ட் கூட செந்தூரனிடமே இருந்துள்ளது. போதநாயகியின் இறுதி மாத சம்பளம் ஒரு இலட்சம் ரூபா! உயிரிழப்பதற்கு சில நாள் முன்னதாக வங்கி 
கணக்கிற்கு சென்றது.
இறுதி சடங்கிற்கு பணமில்லையென போதநாயகியின் குடும்பத்தினர் கூற, ஏடிஎம் கார்ட் பின் நம்பர் தெரியாதென அலட்சியமாக செந்தூரன் பதிலளித்துள்ளார். அதை போதநாயகியின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனை முடிந்ததும், கணவனாக அவரே சடலத்தை பொறுப்பேற்க முடியும் சடலத்தை பொறுப்பேற்று தனது வீட்டுக்கு கொண்டு சென்று, சடலத்தின் மீது கவிதைப்புத்தகங்கள் என்ற பெயரில், தான் வெளியிட்ட புத்தகங்களையும், விருதுகளையும் பரப்பி படம் எடுத்து படம் காண்பித்தார்.
பின்னர் சடலம் வவுனியாவில் போதநாயகி வீட்டிற்கு கொண்டு செல்ல தயாரான போது செந்தூரன், தாயார் ஆகியோர் வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டனர். வவுனியாவில் மனைவி வீட்டிற்கு செல்லவுமில்லை, இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவுமில்லை.
கட்டிய மனைவி தனியாக சவக்குழிக்கு செல்கிறாள் என்றபோதே, இந்த கணவனின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள
 முடியும் என்ற கருத்தும் பரவலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.தம்பதியர்களிற்கிடையில் உறவு சுமுகமாக இல்லை, செந்தூரனின் நடவடிக்கைகளால் மனைவி அதிருப்தியடைந்திருந்தார் என்பதற்கு ஆதாரமாக அவரது முகநூல் பதிவுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
போதநாயகி வங்கியில் 20 இலட்சம் ரூபா கடன்பெற்று செந்தூரனிற்கு கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். அது தவிர, அண்மையில் ஐந்து இலட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போத நாயகியின் தந்தை தும்புமிட்டாசு விற்றே மகளை கல்வி கற்க வைத்திருந்தார். மிக ஏழ்மை குடும்பமான 
அவர்களிடம் இறுதிச்சடங்கிற்கே பணமிருக்கவில்லை. இறுதியில் வவுனியாவை சேர்ந்த தன்னார்வலர்கள் பணம் திரட்டியே அவரது இறுதிச்சடங்கை நடத்தி முடித்திருந்தனர்.
இதேவேளை நேற்று செந்தூரனின் நண்பன் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செந்தூரன், மனைவியின்
 உடல்புதைக்கப்பட்ட இடம் என கருதப்படும் 
இடத்தில், அழுது கொண்டிருப்பதை போல காண்பிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
உண்மையான கணவன் எனில், இறுதிச்சடங்கிற்கு சென்றிருக்க வேண்டும். இது அனுதாபம் தேடும் முயற்சியென நெட்டிசன்கள் 
கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் செந்தூரனின் நண்பர்கள் 
‘அண்ணன் அப்செட்டில் இருக்கிறார். ஏற்கனவே உடைந்து போயிருப்பவரை இந்த விமர்சனங்கள் மேலும் காயமடைய வைக்கிறது. சிறிய அவகாசம் அவருக்கு தேவை. விரைவில் பகிரங்கமாக அனைத்தையும் சொல்வார்’ என்கிறார்கள்.
‘அண்ணன் ஏற்கனவே திருமணமானவரா? அது போதநாயகிக்கு தெரியுமா? அவர்களின் குடும்பத்தில் ஏதாவது சிக்கலிருந்ததா?’ என்று கேட்டால் ‘அதை அண்ணனிடமே கேளுங்கள்’ என்கிறார்கள்.
எது எப்படியோ இந்த விவகாரத்தில் செந்தூரன் தரப்பும் ஏதாவது அபிப்பிராயத்தையும், நியாயத்தையும் வைத்திருக்ககூடும். அவர்கள் இதுவரை பகிரங்கமாக அதை பதிவுசெய்யவில்லை. பொலிசார் நியாயமான விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டறிந்தால் மட்டுமே முழு உண்மையும் 
பகிரங்கமாகும்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>


26/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் இத்தனை கொடூரமா

கிழக்குப் பல்கலைகழகத்தின் திருகோணமலை பெண் விரிவுரையாளரும் செந்தூரனின் மனைவியுமான போதநாயகியின் மரணம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இவரது மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் தொடர்கிறது.என்னவென்றால்
 செந்தூரனின் மனைவி போதநாயகி கொலை செய்யப்பட்ட நாள் வவுனியாவில் இருந்து திருமலைக்கு விடுமுறையில் சென்று இருக்கிறார் அவர் முச்சக்கர வண்டியில் சென்றிருக்கிறார்.அந்த முச்சக்கர வண்டி சாரதி யார்? என்று இன்னும் தெரியவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை 
எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.ஆனால், அந்த நபர் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை.
மேலும் இதுபோல பல தகவல்கள் உறுதி செய்யபடவில்லை.மேலும் இந்த மரணத்திற்கு அவரது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தான் காரணமென்றும் அதை மறைக்கவே பல கதைகளை அவர் கிளப்பிவிடுகிறார் என்றும் தகவலகள் பரவி வருகிறது.
இவ்வாறு கதைகளை பரப்பினால் தாம் தப்பித்துவிடலாம் என அவர் செய்வதாக பலர் கருத்து தெரிவித்து
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


22/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மர்ம கொலையில் ஒருவர் கைது.கிழக்கில்

பெண் விரிவுரையாளரை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் 
பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும்
 பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு 
சடலமாக மீட்கப்பட்டார்.
சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய பெண் விரிவுரையாளரின் மரண விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் சம்பா ரத்னாயக்க முன்னிலையில் நீதவான் 
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனபெண்ணின் சடலம் அவரின் கணவரினால் இதன் போது அடையாளங்காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதவான் குறித்த பெண் விரிவுரையாளரின் 
உறவினர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளனர் இந்த விசாரணைகளின் போது பெண்ணின் மரணம் குறித்து எந்த விடயத்தையும் உறவினர்கள் தெரிவிக்கவில்லை
சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் 3 மாத கர்ப்பிணி என்பதால் அவரது பிரேத பரிசோதனை விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவரின் ஊடாக இடம்பெற வேண்டும் என
 நீதவான் இதன் போது உத்தரவிட்டுள்ளார்.விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவர் உள்ள வைத்தியசாலையொன்றை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அதற்கான அனுமதியை பெற்றுத் தர
 முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குடும்பத்தினர் வைத்தியசாலையொன்றை தெரிவிக்க 
தவறும் பட்சத்தில், வைத்தியசாலையொன்றை தெரிவு செய்து நாளைய தினத்திற்குள் அறிவிக்குமாறு திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு நீதவான்
 உத்தரவிட்டார்
அதுவரை சடலத்தை திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.உறவினர்கள் சடலத்தை கையேற்ற போதிலும் அதனை எரிக்கக் கூடாது புதைக்குமாறு நீதவான்
 உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மரணம் மீதான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி நடை பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>21/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மர்ம மரணம்.கிழக்கில்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா, 
ஆசிக்குளம், கட்டுக்குளம் பகுதியை சேர்ந்த
 நடராசா போதநாயகி என்ற 29 வயதுடைய விரிவுரையாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட விரிவுரையாளரின் கைப்பை மற்றும் பாதணியும் இன்று (21) காலை சங்கமித்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்இன்றுபிற்பகலேவிரிவுரையாளரின்சடலம்கண்டெடுக்கப்பட்டுள்ளது.மரணத்திற்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


20/9/18

ஜனாதிபதி மைத்திரி பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு உத்தரவு

இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு காவற்துறைமா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில்
 பதவி விலகுவார் என அரச உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றதாக தமிழ் ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், இரு வாரங்களுக்குள் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே இராஜினாமா 
இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என பொது எதிரணியான மஹிந்த அணியினரால் குற்றச்சாட்டு 
முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரைப் பதவியிலிருந்து தூக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நிலக்கீழ் பிரபாகரனின் இராணுவக் கட்டளைத் தளத்தை பாதுகாக்கும் இராணுவம்

விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி நிர்மாணக் கட்டடம் ஒன்றை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு – வடக்கு பெருங்காட்டுப் பகுதியில் நிலத்திற்கு கீழாக அமைக்கப்பட்ட குறித்த மூன்று மாடி நிலத்தடி நிர்மாணக் கட்டடங்களை 2009ஆம் 
ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.
நிலத்திற்கு கீழ் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதலாவது தளத்திற்குள் சிறிய ரக வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த கட்டட நிர்மாணம் சுமார் 30 சதுர அடி நிலத்திற்கு கீழ் இருந்து மூன்று மாடிகளாக 
அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2000ஆம் ஆண்டிற்கு முன்னர் குறித்த மூன்றாவது நில அறையின் கீழ் ஒன்று கூடிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகள் இராணுவத்தினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகொண்
டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2000ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலப் பகுதியில்
 விடுதலைப் புலிகளினால் இந்த நிலத்தடி கட்டடம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், தற்பொழுது குறித்த இடத்தை மக்கள் பார்வையிட தடைவிதித்துள்ள படையினர் இவற்றை வெற்றியின் அடையாளமாக பாதுகாத்து வருவதாக 
தெரிவிக்கப் படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>