siruppiddy

23/12/14

நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் கடிதங்கள்!

 நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் 
”இனி எந்த குழந்தையும் மரிக்க கூடாது”-கொழும்பு: இலங்கையில் போரின்போது காணமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு 15,000 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைப் பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை சேகரித்து அனுப்பியுள்ளது.

நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற செயல்கள் தொடர்பான புலனாய்வு குழுவினர் தங்கள் கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள்என்று நம்புவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20/12/14

குண்டு வெடிப்புச் சம்பவம்! தகவல்களை மறைக்க படையினர் முயற்சி

காங்கேசன்துறை வடமாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சமயம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைக்க படையினர் முயற்சித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் தஙகிருந்தார். இந்நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கட்டடப் பகுதிக்குள் பாதுகாப்பு கடமையிலிருந்த படையினரின் பகுதிக்குள் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அல்லது தற்செயலாக நடைபெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன. குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 7 படையினர் கைது செய்யப்பட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குறித்த தகவலினை வெளிப்படுத்த படையினர் நீண்ட மௌனம் சாதிப்பதாகவும் தெரியவருகின்றது

18/12/14

ஒப்புக்கொள்கிறது அரசாங்கம் தமிழ்மக்களை அரசியல் ரீதியாக வெல்ல முடியவில்லை! –

 
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை என வன வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தோம் அவர்களை வெற்றி கொண்டோம். ஆனாலும் எம்மால் தமிழ் மக்களின் அரசியலை வெற்றிகொள்ள முடியவில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அது சம்பந்தமாக எமக்கு எந்தவித பயமும் இல்லை. பிரச்சனையும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச ரீதியில் புலிகளின் நிதி கொடுக்கல் வாங்கலை நாங்கள் நிறுத்தினோம். கே.பி யை எமது பக்கம் எடுத்தோம். சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பான நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் செயற்பட்டு வந்தாலும் அதனை கெடுக்கும் வகையில் புலம்பெயர் விடுதலைப்புலிகள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15/12/14

கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் மூடப்படும்!-

ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது.
மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது.
இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு முன்னைய ராஜபக்ச ரெஜிமண்டுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
தோல்வியின் நிலை அறிந்து தற்போது என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் தனது அரசியல் சலூனுக்கு ஒப்பானது என்று தரம் குறைத்து வருகின்றரர்.
இதனால்தான் ஒவ்வொரு அமைச்சர்களும் இன்று அரசை விட்டு வெளியேறுகின்றனர்.
இன்று ஒன்று மட்டும் சொல்ல விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரசாங்கத்துக்கு வெளியிலும் நடக்கும் சூழ்ச்சிகள் அறியாத ஜனாதிபதியாக இருக்கின்றமை பற்றி  மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11/12/14

மஹிந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது!

அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது
மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரோ, சிகல உறுமய தலைவர் சோபித தேரர், குணசேகர, வசந்த, கலாநிதி ரஜிவ விஜேசிங்க, ஹூனைஸ் பாருக், இராஜதுரை, திகாம்பரம், சந்திரசேகரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் இணைந்துள்ளார்.
மேலும் மேல்மாகாணசபை, ஊவா மாகாணசபை, வடமேல் மாகாணசபை, சப்ரகமுவ மாகாணசபைகளில் உள்ள 9 ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறியதால் அதனை மீள அரசுக்கு ஆட்சி நடத்த முடியாமல் போயுள்ளது.
இச் சபைகள் வரவுசெலவுத்திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் கூடுவதாக பிற்போடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையும் கடந்த வாரம் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறாது பிற்போடப்பட்டுள்ளது.
18 வது அரசியல் திருத்தத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் 8 உறுப்பினர்களும் சேர்ந்து 3ல் இரண்டு பெரும்பான்மையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜனாதிபதி 3வது முறை தேர்தலில் குதிப்பதற்கும் ஆதரவு வழங்கி முஸ்லீம் காங்கிரஸ் முட்டுக்கொடுத்தது. ஆனால் இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்குச் சென்றதால் 165 பாராளுமன்ற உறுப்பினர்களில் 151 மிஞ்சியுள்ளனர்.
இதில் எதிர்க்கட்சியிலிருந்து அரச பக்கம் வந்த திஸ்ச அத்தநாயக்க, கெட்டகொட உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இனி அரசுக்கு எந்தவொரு அரசியலமைப்பையும் பாராளுமன்றத்தில் வெற்றி கொள்ள முடியாத ஏற்பட்டுள்ளது.
நாளை அல்லது மறுநாள் யார் யாரெல்லாம் எதிரணிக்கு வரவுள்ளார்கள் என்ற விபரங்கள் வெளிவராத போதும், அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஆகக் குறைந்தது 113 பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

8/12/14

ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  
தங்கொட்டுவையிலுள்ள ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்றபட்டுள்ள போதிலும் குறித்த ஆதரவாளர் தன்னுடைய மனைவியின் வீட்டில் இருந்தமையினால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

5/12/14

எனக்கே சொந்தம் யுத்த வெற்றியின் 75 வீத பங்கு :

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தை நடத்தியதும்
 அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம் விட்டுவைத்த 25 சதவீதத்தையே ராஜபக்ஷவின் அரசாங்கம் வெற்றிகண்டது. இருப்பினும், யுத்தம் முடியும் போது, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேனவே’ என சந்திரிகா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

3/12/14

ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

நீதிமன்றின் தீர்ப்பானது புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.

புலிகளுக்கு எதிராகவும், புலிச்செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27/11/14

தமிழரை தலை நிமிரவைத்த காவிய நாயகர்கள் மாவீரர்கள்

அவர்கள் கல்லறைக்கு மலர்கொண்டு செல்லும் நேரம் வருகிறது இதையாரும் மறக்கமாட்டார்கள் அவர்களை நாங்கள் மறந்தால்தானே நினைப்பதற்கு, எமது நெஞ்சமதில் ‌தெய்வமாய் குடி கொண்ட நினைவை மறப்போமா..?
எமது வாழ்வுக்காய். எமது இன உயர்வுக்காய். தங்கள் உளிர்களை துச்சமென மதித்து களமாடி. கரும்புலியாகி. தற்கொடைவீரனாகி. தரணியில் எவரும் செய்ய முடியாத தியத்தை செய்த எமது வீரரை எத்தனை தடைகள் பத்தாலும் எதிரியின் அச்சுறுத்தலுக்காய் எமது தெய்வங்களை
வணங்காதிருப்போமா ….?

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

25/11/14

சுவரொட்டிகளுடன் யாழில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் வீட்டுக்கு அருகில் வைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மாவீரர் தின சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வீரசிங்கம் சுலக்ஷன் தற்போது யாழ். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23/11/14

அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஆலோசனை!

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பது தொடர்பாக, அரசாங்க உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆளும்கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதை அடுத்தே இது குறித்து ஆராயப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் கட்சி பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சுகாதார அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததும், 1988 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாஸ நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதையும் கருத்திற்கொண்டே இந்த முடிவு பற்றி யோசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பு கூறியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதியன்று நாடாளுமன்ற விசேட அமர்வை அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. அதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கியுள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி தலைமையிலான காபந்து அமைச்சரவை அரசாங்கம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/11/14

வலி.வடக்கை சுவீகரிக்க இராணுவம் சதி!

எடுபிடிகள் சகிதம் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையினில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமினில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் குடியமர்ந்த காணிகளை பகிர்ந்தளிக்க இலங்கை இராணுவம் முன்னெடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வலி.வடக்கினை நிரந்தரமாக ஆக்கிரமிக்க ஏதுவாக இடம்பெயர்நத நிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் தற்போது குடியமர்ந்துள்ள காணிகளை பகிர்ந்தளித்து அவர்களது வாய்களை மூடிவிட இலங்கை அரசு முற்பட்டுள்ளது.அவ்வகையில் இன்றைய தினம் அவ்வாறாக மக்கள் தங்கியிருக்கும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம் காணியினை அளவீடு செய்யவென தனியார் நில அளவையாளர்கள் சகிதம் 515 படைப்பிரிவை சேர்ந்த படையினருடன் சுதந்திரக்கட்சியின் உள்ளுர் முகவரொருவரும் களத்தில் குதித்துள்ளனர். இதற்கு முகாமிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோருக்கு தகவல் வழங்கியிருந்தனர். அதையடுத்து அங்கு வந்திருந்த அவர்களும் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. எனினும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரோ தமக்கும் அளவீட்டு பணிகளிற்கும் தொடர்புகள் இல்லையெனவும் பலாலியினிலிருந்து வருகை தந்த படையினரே அளவீடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான காணியையே இடம்பெயர்ந்த மக்களிற்கு பங்கிட்டு வழங்க முயற்சிகள் நடந்துள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

6/11/14

சிங்களமயமாகின்றது! கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி "லங்கா பட்டண" என பெயர் மாற்றம்!

இதிகாசங்களின்படி இராவணனால் உருவாக்கப்பட்ட கோணேசர் கோவிலுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்ட இவ்வெந்நீர் ஊற்று தற்போது பௌத்தம் சார்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அத்துடன் அண்மையில் இருந்த சிவன் கோவிலும் வில்கம் விகாரையாக மாற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்கள் வழிபட்டுவந்த ஒரு கட்டிடத்தின் மூலையில் இருந்த சிவன்-பார்வதியின் வழிபாடும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான புதிய வரலாறும் பிக்குவினால் சிங்களத்தில் ஒலிபெருக்கியில் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சிங்களமக்கள் எவருமே வாழாத தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசமான இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 2006ம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள பாரிய பவுத்த விகாரை இதுவாகும். காலப்போக்கில் இது சிங்களப் பிரதேசமாக "லங்கா பட்டண" என பெயர் மாற்றமடையலாம்.
தமிழர்களின் கலை, கலாச்சார அம்சங்களை எமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையல்லவா?

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 


 

5/11/14

கொரிய தூதுவர் யாழ். வந்தார்

கொரிய நாட்டின் உயர் ஸ்தானிகர் வோன் சம் சங் அவர்கள் நேற்று யாழ். மாவட்டத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தார். இந்தப் பயணத்தில் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை கேட்டறிந்து கொண்டதுடன் கொரிய நாட்டின் மூலமாக மொழிக்கற்கை நெறியினை வளப்படுத்துவதற்கும் அதனூடாக இலங்கையின் வடமாகாணத்தின் சிறந்ததொரு மாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கும் கொரியநாடு மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகள் குறித்தும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டறிந்து கொண்டார். மேலும் இந்தப் பயணத்தில் யாழ். போதான வைத்தியசாலை,யாழ்.பொது நூலகம் போன்ற இடங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27/10/14

தமிழ் மக்களுக்கான நல்ல தோர் சிறந்த கொள்கையை அமைக்க???

ஈழத் தமிழர்களுக்கான ஒரு வலுவான அரசியல் வெளியுறவுக் கொள்கையை
    தமிழ்நாடு முதல்வர் அமைக்க வேண்டும்- அனந்தி சசிதரன்
[காணொளி இணைப்பு]


26/10/14

சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் கமலேஷ் சர்மாவுக்கும் இடையில் சந்திப்பு

 யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று காலை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இன்று மதியம் 12.30 மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணம் வந்த கமலேஷ் சர்மா வடக்கு ஆளுநரைச் சந்தித்தபின் சிவில் பிரதிநிதிகளை மதியம் சந்தித்து கலந்துரையாடினார். எனினும் வடக்கு மாகாணத்தில் இருந்தும் பாதிரியார்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்த நிலையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த சிவில் பிரதிநிதிகள் என சொல்லக்கூடிய அளவில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் குறித்த சந்திப்புக்கு அதிகளவானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பு இரகசிய சந்திப்பாக இருப்பதனால் ஊடகவியலாளர்களுக்கு செய்தியை எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் செயலரும்

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவில்லை. மாறாக வெளியில் வரும் போது புகைப்படம் மாத்திரம் எடுக்க முடியும் என்றும் ஊடகங்களுக்கு கருத்து கேட்க முடியாது எனவும் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

25/10/14

வட மாகாண சபையில் நிறைவேற்றத் தடையேதும் இல்லை: தமிழ் அமைப்பு

 இனப் படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானம் ஒன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எந்தத் தடைகளும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தவும் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோரவும் வட மாகாண சபைக்குத் தடை ஒன்றும் இல்லை என அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் மீது நடத்தப்பட்டதும், நடத்தப்படுவதும் இன அழிப்பே என வட மாகாண சபையில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையை பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருந்தது.
இந்த நிலையிலேயே கல்விமான்கள், சட்டத்தரணிகள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டோரைக் கொண்ட தமிழ் சிவில் சமூக அமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ் சிவில் சமூகம் விடுத்துள்ள அந்த அறிக்கையில்..
( இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ – சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்.
இனப்படுகொலை தொடர்பில் வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதன் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்துக்கள் வருமாறு:-
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட, தொடர்ந்தும் நடத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது.
தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது.
1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948 ஆம் ஆண்டு சமவாயம் இனப்படுகொலையைத் தடுப்பதையும், இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது.
இச்சமவாயமானது இனப்படுகொலை என்பதை ஒரு தேசிய இன அல்லது ஒரு மத குழுமத்தை முற்றாக அல்லது பகுதியாக அழித்தல் என வரைவிலக்கணப்படுத்துகிறது (இனப்படுகொலை சமவாயத்தின் 2 ஆம் உறுப்புரை).
மேலும் இனப்படுகொலையானது மரபு சார் சர்வதேச சட்டத்தினால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீறப்படமுடியாத ஒரு விதியாக அடையாளங் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் ஒரு தேசிய அல்லது இனம் சார் குழும வகைக்குரியவர்கள் என்பது மறுத்துரைக்கப்பட முடியாதது.
2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ரோம் சட்டமானது இனப்படுகொலை (உறுப்புரை 6), போர்க்குற்றங்கள் (உறுப்புரை 8), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (உறுப்புரை 7) ஆகிய மூன்றையும் குற்றங்களாக வரையறுத்துள்ளது.
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடத்தப்படும் கொடுமைகளை விசாரிக்கும் எந்தவொரு விசாரணையிலும் இனப்படுகொலை உட்பட மேற்குறித்த மூன்று வகையான குற்றங்களும் விசாரிக்கப்படுதல் அவசியமானதாகும்.
போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கு மேலதிகமாக, இனப்படுகொலை பற்றியும் விசாரிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக் குழுவைக் கோரும் உரிமை தமிழர்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் உண்டு.
இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை நாம் கோருவதானது எமக்கெதிராக நடைபெற்ற சர்வதேச சட்டமீறல்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்தி அதனை விசாரிக்கும் முனைப்பினை உறுதிப்படுத்தும். மேலும் இனப்படுகொலையை விசாரிக்கக் கோருவதானது, ஏனைய குற்றங்களான போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா. விசாரணைக் குழுவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்தாது.
மேலும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் இனப்படுகொலை பற்றிக் குறிப்பிடப்படாமையோ அல்லது ‘இனப்படுகொலை’ என்ற பதத்தை உள்ளடக்காத ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2014 மார்ச் மாத தீர்மானத்தின் உள்ளடக்க வாசகங்களோ, ஐ.நா. விசாரணைக் குழுவானது இனப்படுகொலையை விசாரிப்பதற்குத் தடையாக இருக்க மாட்டாது.
3) தம்மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடாத்தப்படும் கொடூர குற்றங்கள், இனப்படுகொலை என்ற பரிமாணத்திற்குரியது என்பது குறித்த சட்ட ரீதியான கருத்துருவாக்கம் ஒன்றை செய்வதற்கு தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் உரித்துடையவர்கள்.
அவ்வாறான சட்ட ரீதியான ஒரு கருத்துருவாக்கத்தை செய்வதற்கு எமக்கு போதுமான, நியாயமான அடிப்படைகள் உண்டு.
நடந்தது இனப்படுகொலை என்கிற சட்ட நிலைப்பாட்டை எடுத்தல் என்பது அடிப்படைகளற்ற மேம்போக்கான ஒரு முடிவு அன்று.
அவ்வாறே தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுத்து அதிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச தலையீட்டை கோருவதற்கு உரிமையுடையவர்கள்.
இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் சர்வதேச சட்டத்தினால் மனித உரிமைகளாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் இனப்படுகொலை தொடர்பான சமவாயத்தின் மூலமாக இனபடுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேசத்தின் கடப்பாடுகள் உருவாகின்றன.
அண்மைக்காலமாக சர்வதேச சட்டததில் முகிழ்த்துவரும் பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டிலும் (Responsibility to Protect) இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேச சமூகத்தின் கடப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர குற்றங்களை இனப்படுகொலையின் பாற்பட்டவை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தாமே அடையாளம் காணுதல் அது தொடர்பான விசாரணையின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காது.
எனவே, தம்மீது நிகழ்த்தப்பட்ட குற்றம், இனப்படுகொலையின் பாற்பட்டது என தமிழர்கள் அடையாளம் காணுமிடத்து, அது எவ்வகையிலும் ஐ.நா. விசாரணைகளைப் பாதிக்காது.
4) மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு உதாரணங்கள் உண்டு. அவற்றுள் சில:
அ) வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் பாற்பட்டவை என ஈராக்கிய நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
ஆ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பாகிஸ்தான் நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
இ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸ் அவர்கள் 2014 செப்ரெம்பர் ஐ.நா. பொதுச்சபையில் ஆற்றிய உரையில் பதிவு செய்து இருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இரு தரப்புக்களாலும்மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை விசாரிப்பதற்காக ஓர் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்த வேளையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் இக்கருத்தை வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈ) சென்ற நூற்றாண்டின் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலகின் பல்வேறு நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதன.
5. தமிழர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டு தமிழர்களும் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தம்முடைய நிலைப்பாடுகளை தெளி வாக முன்வைக்க வேண்டும்.
தமது பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமென்பதற்காக அப்பிரச்சினைகள் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் உரையாடல்களை தாமே முன்னெடுப்பதற்கும் அவற்றில் பங்கு கொள்வதற்குமான தார்மீக உரிமை தமிழர்களுக்கு உள்ளது.
எனவே,
அ) தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தும்.
ஆ) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும்.
இ) இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம் என்றும் தமிழ் சிவில் சமூக அமைப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21/10/14

முக்கிய புலிகளின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் கைது!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சிக்காது யாழ்ப்பாணம், மல்லாவி பிரதேசங்களில் வசித்து வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 குறித்த நபர்
விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் முக்கிய பதவிகளை வகித்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த 18ம் திகதி கட்டாருக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது விமான நிலையத்தில் குறித்த நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதேவேளை அண்மையில் வவுனியாவில் வைத்து மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/10/14

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த தடை, ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறீலங்கா முழுவதும்   கையொப்பம் பெறும் நடவடிக்கையை இலங்கை அரசின் உத்தரவின் பெயரில் தனியார் போக்குவரத்து அமைச்சு
முன்னெடுக்கவுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை வெள்ளவத்தையில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர்  சிறீலங்கா  ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14/10/14

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுகின்றார்!மஹிந்த ..

நிறைவேற்று அதிகாரத்தை கைவிடுவதற்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார் எனவும் சுரேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்குக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தயார் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தானும் இந்த நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தல் மிக்க அதிகாரமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையானது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றாகும். அவ்வாறிருக்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் மேலெழுந்திருக்கின்றன.
குறிப்பாக இடதுசாரி அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள், பௌத்த மதத் தலைவர்கள் பலர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ஈழக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியைக் குறைப்பதற்குக் கருதுகின்றார்.
உண்மையிலேயே ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது. இது வெறுமனே சிங்கள மக்களை திசைதிருப்புவதற்காக மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப்போடும் ஜனாதிபதியின் முயற்சியாகும். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் அர்த்தமற்றவையெனவும் அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

13/10/14

மகிந்தவுக்கு எதிராக செயற்பட பிக்குகள் தீர்மானம்! சோபித்த தேரர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படுவதற்கு பிக்குகள் தீர்மானித்துள்ளனர்.
சிறிலங்காவில் பெரும்பான்மை ஆதரவை பெற்றி சோபித்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மகிந்தராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இதற்கு மகிந்தரஜபக்ஷ நடவடிக்கை எடுக்க தவறினால், அடுத்த தேர்தலில் அவருக்கு எதிராக செயற்படப் போவதாக சோபித்த தேரர் அறிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

12/10/14

மனதில் அழியாது உங்கள் நினைவுகள் மாவீரரே

போராடி எமைகாத்த வீரர்கள்
 பெளுதெல்லாம் எம் நெஞ்சிலே
 வாழ்கின்ற மாவீரர்கள்
 கார்காலம் கடும்கோடை
 கடும் இருட்டு காடு மோடு
 எனபோராடி மடிந்த வீர்கள்..நீங்கள்
 எங்கள் நினைவுகளை
 போனால் போகட்டும் என்று
 எம் நெஞ்சுக்குளி மறந்திடுமா..?
தீராத பகை ஓட்டி
 நாம் படுத்துறங்க மண்ணை
 சிங்களத்து சிப்பாய்கள்
 சிலிர்து எழுந்தவேளை
 சிறுத்தைகள் சீற்றத்துடன்
 சிம்ம சொற்பனமாய் இருந்த காலத்தை
 சிங்களத்து கொடும் ஆட்சி மறங்திடுமா.?
நாம் பார்போற்ற பயின்தமிர்
 படந்திந்த உலகில்வாழும்போது
 பனித்திரையாய் உள்கள் நினைவுகள்
….. மறைந்திடுமா..?
நீங்கள்…………
லச்சியப்பாதையின் பிள்ளைகளே
 வான் உச்சியில் வெள்ளியாய் நிற்பவரோ
 உம் லச்சியம் நிறைவேற நாம் நடப்போம்
 தமிழ் ஈழ சத்தியம் தவறாது தான் இருப்போம்
 ஈழலச்சியப் பாதைக்காய் நாம் உழைப்போம் என்பதே உறுதி
ஈழக்கவி சி. எஸ்.தேவா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

5/10/14

நடமாடும் விபசாரம்: பெண்கள் மூவர் கைது

 இலங்கையில் அதிகமாகும் வாகனத்தில் நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் மூவரையும் அதனை நடத்திச்சென்றதாக கூறப்படும் நபரையும் பிலியந்தலை கரதியான பாலத்துக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண்கள் மூவரும் 19வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.  

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

2/10/14

பல்லைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்கள் போராட்டம்!

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழத்தில் நடைபெற்ற முடிந்த மாணவர் ஒன்றியத் தேர்தலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி கலைப்பீட மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
1. மாணவர் ஒன்றியத் தேர்தலை மீண்டும் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. மாணவர் ஒன்றியப் பிரதிநிதி பக்கச்சார்பாக நடக்கிறார்.
3. குறித்த பிரச்சினைக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. காலையில் தேர்தல் அறிவிப்பு மாலையில் தேர்தலா?
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, துணைவேந்தருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

29/9/14

அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை .எனக்கு பிள்ளை வந்தாலே போதும்!

வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார்.
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
சமாதான காலத்தில் முழங்காவிலில் இருந்து எனது கணவரது ஊரான யாழ்ப்பாணம் போய் விட்டோம். வறுமை காரணமாக மகன் வவுனியா அகிலன் லொச்சில் இரவு நேரம் வேலைக்குப் போய் வந்தார்.அந்த வருமானத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம்.
பின்னர் 2009.01.08 ஆம் திகதி வெள்ளைவானில் வந்தவர்களால் எனது மகன் கடத்திச் செல்லப்பட்டார் என முதலாளி என்னிடம் தெரிவித்தார். பல சிரமங்கள் பட்டு வவுனியாவுக்கு சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
ஆனால் வவுனியா குறித்த காலப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அன்று வெள்ளை வானில் வந்தவர்களும் இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் தான் வந்திருந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் எல்லா இடமும் பதிவுகள் செய்து தேடி விட்டோம் ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது கணவரும் என்னை விட்டு போய் விட்டார். நான் மகன் வருவான் என்று புது வீடும் கட்டிவிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றேன்.
எனது மற்றப்பிள்ளைகள் தான் பண உதவிகள் செய்கின்றனர். எனக்கு அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை. பிள்ளை வந்தாலே போதும் உயிருடன் பிடித்துச் சென்ற பிள்ளை உயிருடன் தானே இருக்க வேண்டும். எனக்கு எனது மகன் வேண்டும் என்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28/9/14

இன அழிப்புத் தொடர்பில் 40 பக்க ஆவணங்களைக் கையளித்தார்

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழர்களுக்கு எதிரான  இன அழிப்பு தொடர்பில் ஐ. நா வின் மனித உரிமைகள் பேரவையின்,  முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 19/09/2014 அன்று பிற்பகல் 2.30 தொடக்கம் பிற்பகல் 4.45 வரை  வாய்மூல சாட்சியம் வழங்கியதோடு  40 பக்க ஆதாரங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.
நேற்றைய தினம் தாயகம் திரும்பிய ரவிகரனிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்கள், புலனாய்வுத்துறையால்  தொடரும் அச்சுறுத்தல்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நில அபகரிப்பு விடயங்கள்,கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , தமிழர் தாயகப்பகுதியில் இனப்பரம்பல் கோலம் மாற்றப்படும் நிலை, தமிழர் கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியமளித்துள்ளதாக தெரிய வருகிறது.  வலிமையான ஆதாரங்களை உள்ளடக்கிய 40 பக்க ஆவணங்களும் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

26/9/14

போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழுவினர்

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்: பசுமைத்தாயகம் வலியுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர.அருள், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ் குமார், சேலம் இரா.அருள், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
 நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது நடைபெற்ற விவாதத்தில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ்குமார் ஆற்றிய உரையின் சுருக்கம்:
இலங்கை மீதான ஐ.நா.மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை குறித்த வாய்மொழி அறிக்கையை தாக்கல் செய்ததற்காக பசுமைத்தாயகம் அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை தொடர்பான பேரவையின் ஆணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு பதிலாக இன்னுமொரு உள்நாட்டு விசாரணையை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. கடந்த காலத்தில் இலங்கை அரசு நடத்திய இத்தகைய விசாரணை தோல்வி அடைந்ததால் தான் ஐ.நா.மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக்கு இந்தப் பேரவை ஆணையிட்டது.
இலங்கையில் போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அங்கு நிலவும் நிலைமை, கடந்த 8ஆம் தேதி இலங்கை அரசு இந்த பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றில் இருந்து வெகுதொலைவில் உள்ளன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகள் இன்னும் இலங்கைப் படைகளின் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. சிங்கள ராணுவத்தின் 85% வீரர்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 96% தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்கள் அல்லது சோதனைச்சாவடியின் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தான் வாழ்கின்றனர். ஐ.நா. மனித உரிமை ஆணையரே சுட்டிக்காட்டியுள்ளவாறு இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகியோருக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது; அதுமட்டுமின்றி, இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மார்க்கத்தை கடைப்பிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறையும் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இனம் மற்றும் மத வேற்றுமையின் காரணமாக தமிழர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் பரவலாக நடத்தப்படுவது தடையின்றி அனுமதிக்கப்படும் நிலையில், இனியும் தாமதமின்றி அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். ஆனால், அத்தகைய விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காத நிலையில், கடந்த காலங்களில் நடந்தவை மட்டுமின்றி, இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னுரிமை
அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
                                     இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் பேசினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

22/9/14

மகிந்த சட்ட விதிமுறைகளை மீறியுள்ளார் மேன்முறையீட்டு

நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது அனுமதி பெற வேண்டிய நபர்கள் தொடர்பில் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது சட்டமா அதிபர், பிரதம நீதியரசர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் இது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படும் போது தரப்படுத்தல் தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21/9/14

கழுத்து பட்டியுடன் அதிகாரி கைது!

 முல்லைதீவில் வடமாகாணசபை நிகழ்வில் சம்பவம்!!
விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிய விளையாட்டுத்துறை அதிகாரியொருவர் முல்லைதீவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாணசபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலான வடமாகாண விளையாட்டுப்போட்டிகள் இம்முறை முல்லைதீவில் நடைபெற்று வருகின்றது.
குறித்த விளையாட்டுப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்றுநரான எஸ்.சதீஸ் (வயது 40) என்பவர்  விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே கைதாகியுள்ளார்.
கூட்டமைப்பின் வசமுள்ள வடமாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடந்து கொண்டிருந்த விளையாட்டுப்போட்டியில் வைத்து அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டமை பல தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
தனது பட்டியை பெருமையாக காட்டிக்கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலையடுத்தே இக்கைது நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20/9/14

சில கிபிர் விமானங்களும் அபிராமியின் வலது கையும்

முன் கதை - 01
சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான்.
பின் கதை - 01
2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம்.
உங்களுக்கு எத்தின பேருக்கு கிபிர் விமானம் தெரியும்? சண்டை நடந்த காலத்தில வன்னில இருந்த சின்ன பெடியள கேட்டா கிபிர் பற்றி கதைகள் ஏராளம் சொல்லுவம்.
எனக்கு முதல் முதல் கிபிர் அனுபவம், ஒருக்கா ரியூசனுக்கு போட்டு வாற வழில நடந்தது. அண்டைக்கு நான் தப்பினது ஏதோ என்ர அதிஸ்ரம். அண்டேல இருந்து எனக்கு கிபிர் எண்டா பயம். எல்லாருக்கும் பயம்தான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகம். அதோட முதல் முதல் கிபிர் அடிக்கேக்க பயப்படும் போது என்ர வலது கை நடுங்கினது. அதுக்கு பிறகு தூரத்தில கிபிர் சத்தம் கேட்டாகூட என்ர கை வெட வெட எண்டு நடுங்கும்.
பின் கதை - 2
பள்ளி கூடம் யெளவனம் தொடங்கின காலம் அது. பள்ளி கூடத்தில் எனக்கு நிறைய நண்பர்கள், நண்பிகள். அதில முக்கியமா தோழி அபிராமி. மற்ற நட்புகளை விட அபிராமிய எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம், ஒரு இங்கிலிஸ் படம். எனக்கு அப்ப சாகசம், மந்திர தந்திரம் நிறைஞ்ச கதை புத்தகங்கள், படங்கள் பார்க்கப் பிடிக்கும். நானும் அபிராமியும் உற்ற நண்பர்களாக அப்பிடிப்பட்ட ஒரு படம்தான் காரணம். அபிராமி ஒரு நாள் தான் கொழும்புக்கு போன நேரம் பார்த்த Bridge to Terabithia எண்ட படத்த பற்றி சொன்னாள்.
படத்தில எங்கட வயச ஒத்த ஒரு சுட்டி பையனும் பெண்ணும் தங்கட தனிமைய போக்க வீட்டுக்கு அண்மையில் ஆற்றோடு இருக்கிய காட்டுக்குள்ள விளையாட போவார்கள். அந்த காட்டினை தாங்கள் ஆளும் ராஜ்ஜியமாக கற்பனை செய்து கொள்வார்கள். அதற்கு தெரபேதியா என்று பெயரிடுவார்கள். அங்கே இருக்கும் அணில் முதலான சிறு மிருகங்களை அரக்கர்களாகவும் எதிரியாகவும் கற்பனை செய்து, தாங்கள் சாகசம் புரிவதாய் விளையாடுவார்கள். அவர்கள் தங்களுடைய நாட்டுக்கு சுலபமாய் வர தடையாக இருக்கும் ஆற்றின் மீது பாலம் ஒண்டு அமைக்க முனைவார்கள். பாலம் கட்டப்பட்டதா? அந்த நட்புக்கு என்ன நடந்தது? என்பது மீதிக் கதை
Bridge to Terabithia – Katherine Paterson எழுதிய புகழ்மிகு சிறுவர் நாவல். இயக்குனர் Gabor caspo இதனை படமாக்கினார். இதோ ஆர்வமுள்ளவர்கள், படத்தைப் பார்க்கலாம்.
 
இப்படியொரு கதையை அவள் சொன்னதில் இருந்து இருவரும் தோழர்களானோம். நாங்கள் பள்ளிக் கூடம் விட்டுபோற வழியில் ஒரு சிறிய பாலம் இருக்கும். அதில் மழை காலத்தில மட்டும் தண்ணீர் பாயும். அந்த பாலத்துக்கு நாங்கள் தெரபேதியா பிரிச் எண்டு பெயர் வச்சம். ஒவ்வொரு நாளும் அந்தப் பாலத்தில இருந்திட்டு தான் வீட்ட போவம்.
பின் கதை - 3
அண்டைக்குதான் அது நடந்தது. நாங்கள் இருவரும் பாலத்தில இருக்கேக்க தீடிரெண்டு பெரிய சத்தம். கிபிர்…!!! நாங்கள் இரண்டு பேரும் அலறி அடித்துக் கொண்டு எங்கட பாலத்துல பதுங்கினம். என் கை வெட வெடக்கத் தொடங்கியது. கிபிர் போனா பிறகும் கை நடுக்கம் நிற்கவில்லை. அப்போ அபிராமி என்ர நடுங்கிற கையை பிடித்தாள்.
“பயப்படாதயடா கிபிர் போட்டுது.”
அவள் கையைப் பிடித்தவுடன் என் கை நடுக்கம் ஆச்சரியமாக உடனே நின்று போனது. அதுக்குப் பிறகு எப்ப கிபிர் சத்தம் கேட்டாலும் என்ர கை என்னை அறியாம அபின்ர கைய இறுக்கி பிடித்து கொள்ளும். அவள் “தெரபேதியாவின் ராசாக்கு பயத்த பாரன்” எண்டு கேலி செய்வாள். எனினும் கையை விட்டதில்லை.
பின் கதை - 4
கொஞ்ச நாள் அபிராமி பள்ளி கூட வாறதில்லை. சக தோழிகளிடம் கேட்ட போது தமக்குள் எதோ சொல்லி சிரித்தனர். எனக்கு முழுமையாய் புரியாவிட்டாலும், ஓரளவு உள்ளுணர்ந்து கொண்டேன். அபிராமி பள்ளி கூடம் திரும்ப வரத் தொடங்கினாள்.
“கொஞ்சம் குண்டாகிட்டாயடி”
சிரித்தாள். வழமைபோல்தான் அவள் இருப்பதாயும் கதைப்பதாயும் எனக்குத் தோன்றியது. அப்போது தான் அது நடந்தது. தீடிரென வானத்தில் இரச்சல் எழதொடங்கியது. எல்லாரும் பதுங்கு குழிக்குள் பதுங்கினம். நான் வழமை போல அபியின் கையைப் பற்றினேன். அவள் ஏதோ நெருப்பு பட்டது போல் கையை உதறி எடுத்துக் கொண்டாள்.
“இனி இப்பிடி கைய தொடாதையடா…!”
முன் கதை - 2
நண்பன் தங்கச்சியின்ர சாமத்திய வீட்டுக்கு சொன்னபோது எனக்கு அபியின்ர ஞாபகம் தான் வந்தது.
எங்கட சமூகத்தில இருக்கிற அல்லது நடக்கிற மிகப்பெரிய அவலங்களில் இதுவும் ஒன்று. திடீரென பிள்ளைகளின் உடலிலும் மனதிலும் நுழையும் பாலியல் எனும் ஒன்றைப் பற்றி நம் சமூகம் அவர்களுக்கு எத்தகைய ஒரு வழிகாட்டலை செய்கின்றது என்று நாம் யாரும் கவனித்து இருகின்றோமா?
எனக்கு நடந்தது வெறும் புறக்கணிப்பு. அண்டைக்கு அபிராமியின் கையை நான் பற்றும்போது எந்தவித அழுக்கும் என் நெஞ்சில் இல்லை. ஆனால், அபியை அத்தகைய செயலினை செய்யத் தூண்டியது எது என்பதே இந்த சமூகத்தின் பெரிய பிரச்சினை.
ஆண் – பெண் நட்பு, சாதரண தொடுகை, கருத்துப் பகிர்வு, புரிதல், தேடல் என்பன பாலியல் எனும் ஒன்று புகுந்த பின்பு ஏன் விளைதிறன் அற்று போகின்றது.
ஒரு பெண் பிள்ளையோ, ஆண் பிள்ளையோ வயதிற்கு வருதல் என்பதை ஏன் இப்படியொரு பிறழ்வான வடிவத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறது இந்த சமூகம்.
பெண் பிள்ளை ஒன்று பாலின மாற்றத்தை சந்திப்பதை “பூப்புனித நீராட்டு விழா” என்று கொண்டாடுகிறார்கள். சிவாஜி படத்தில சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, “எங்க வீட்டில பொண்ணிருக்கு” எண்டு சொல்லத்தானா இந்த சடங்கு? பாவம் அந்த பிள்ளையும், தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீடியோக்காரன் சொல்வதற்கு எல்லாம் திரும்பி திரும்பி போஸ் கொடுப்பது எத்தகையதொரு அவலம்.
பாலின மாற்றம் இயற்கை என்பதை ஏன் யாரும் தங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பதில்லை. அதனை ஒரு போகப்பொருள் போலவும், தவறு செய்யத் தூண்டுவது போலவும் ஏன் கற்பிக்கின்றார்கள்?
இன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கற்பழிப்புகளும், நடப்பதற்கான காரணம் ஒழுங்கற்ற அடிப்படை பாலியல் கல்வி எம் சமூகத்தினால் வழங்கப்படாமையினாலேயே ஆகும். அண்ணன், தங்கை கைகளை கோர்த்த படி சென்றாலே “கூ” என்று கத்தும் தெருவோர நாய்களை உருவாக்கியதும் இந்த சமுகம் தான்.
9ஆம் வகுப்பு சுகாதார புத்தகத்தில் பாலியல் கல்வி இருக்கிறது. ஆண் – பெண் என்பது என்ன? எது பாலியல்? அடிப்படை பாலியல் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது, ஆனால், பிரச்சினை என்ன என்றால், வகுப்பில் அந்தப் பக்கங்களை எந்த ஆசிரிய பெருந்தகைகளும் திறப்பதே இல்லை. ஆண் பிள்ளைகள் ஒரு பக்கமும், பெண் பிள்ளைகள் ஒரு பக்கமும் இரகசியமாக அந்தப் பக்கங்களை புரட்டிப் பார்த்து தமக்குள் வெட்கப்பட்டு கேலியாக ஒருவருக்கு ஒருவர் பார்த்து சத்தமின்றி சிரித்து கொள்கிறார்கள்.
இதைப் படிக்கும் அம்மாக்கள், அப்பாக்கள் அல்லது ஆசிரியளில் யாராவது என் பிள்ளைக்கு பாலியல் பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்று கையைத் தூக்குங்கள் பார்க்கலாம்.
எப்போது உங்கள் கைகள் உயரும் என்று என் பேனாவும் இந்த சமூகமும் காத்திருகின்றது.
பின் கதை – 5
எனினும், இறுதிப்போரில் ஷெல் வீழ்ந்து இறந்து போன என் அபியின் வலது கை இனி மீளாது என்ற யதார்த்தத்தை, வானில் விமானம் ஏதும் சத்தமிட்டால் கூட நடுங்கும் என் கை புரிந்து கொள்வதாய் இல்லை.
“நீர் வழிப்படும் புனை போல் ஆருயிர் முறை வழிப்படும்”

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/9/14

விசாரணைக்குப் புறம்பாக உள்நாட்டு விசாரணைக்கு பான் கீ மூன் உதவி

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கு மறுத்து வருகிறது. 
இந்த நிலையில் பான் கீ மூன் இவ்வாறு உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் வெளிவிவகார திணைக்களத்தின் குழுவினை அனுப்பவுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி பாலித்த கோஹன்னவிடம் இன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் வினவிய போது, அவர் அதற்கு பதில் வழங்காத போதும், இந்த விடயத்தை நிராகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

10/9/14

கிளிநொச்சியில் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணையாம்!

 காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு இந்த மாதம் கிளிநொச்சியில் தங்களின் அடுத்தக்கட்ட விசாரணைகளை நடத்தவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் அந்த குழு கிளிநொச்சியில் விசாரணையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
27ம் மற்றும் 28ம் திகதிகளில் முலங்காவில்லிலும் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூனகரியிலும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்த விசாரணைகளின் போது ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களும் உடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

9/9/14

இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் - அமெரிக்காவும் பிரித்தானியாவும் !!

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பமான 27 வது கூட்டத் தொடரில் பேசிய ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹார்பர், இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆற்றிய பங்கை பாராட்டுவதாக தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல், மரியாதை,ஊக்குவிப்பு, வன்முறை, பாதுகாப்பு தொடர்பில் உலகின் கவனத்தை திரும்பியமை, பாலியல் மற்றும் பாலின அடையாளம் போன்ற விடயங்களில் முன்னாள் ஆணையாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையை அமெரிக்க எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் இந்த விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஹார்பர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என ஜெனிவாவுக்கான பிரித்தானிய பிரதிநிதி கோரினார்.
அச்சுறுத்தல், பழிவாங்கல்கள் இல்லாமல் விசாரணைக்கான ஒத்துழைப்பு மற்றும் அணுகலை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

8/9/14

நல்லிணக்கத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை!

 தாங்கள் மேற்கொண்ட நல்லிணக்கங்களை உலகம் கண்டு கொள்ளாதிருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமருடன் கொழும்பில் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திகளையும், நல்லிணக்க செயற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றை உலக நாடுகள் புரிந்துக் கொள்ளவில்லை.
இதனால் சிறிலங்கா உலக நாடுகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்..
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

6/9/14

தமிழீழ தாகம் தமிழினம் உள்ளவரை தொடரும் [காணொளி]],

சுதந்திர தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவு, தாகம். இந்த இனம் உள்ளவரை தமிழீழ தாகம் தொடரும் என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெ.மணியரசன் ஐயா அவர்கள் தெரிவிப்பதோடு சம நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

4/9/14

நாட்டுக்கான அச்சுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே !!

ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே, நாட்டுக்கான அச்சுறத்தல் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
தற்போது இலங்கையில் முடிசூடாத மன்னர்களை போல ராஜபக்ஷ குடும்பத்தினர் நடந்துக் கொள்கின்றனர்.அவர்கள் வைத்ததே சட்டம் என்ற ரீதியில் இலங்கை காணப்படுகிறது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு ஆதரவான இராணுவத்தினரைக் கொண்டு தனி ஆட்சியே நடத்தி வருகிறார். 
அவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பணபலத்தை கொண்டு மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர். 
அதுவே தற்போது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

2/9/14

கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம்!

வடமாகாணத்தின் அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட்டு வருகின்றன.
இதன்படி வடமாகாணத்தில் உள்ள அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
அவர்களின் பதவிகளுக்கு துரிதமாக தென்னிலங்கையில் இருந்து சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 
வடமாகாணத்தை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் அரச காரியாலயங்களில் இவ்வாறு அதிக அளவில் சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

31/8/14

பாலியல் கல்வி! இங்கிலாந்தில் கோரிக்கை! - கட்சிகள் ஆதரவு!

 பிரிட்டன் பள்ளிகளில் உறவு முறைகள் மற்றும் செக்ஸ் கல்வியை ஏழு வயது முதலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரிட்டனின் கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது. வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான லேபர்(தொழிற்)கட்சி கூறியுள்ளது. மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி கூறியுள்ளது. லிபரல் டேமாக்ரட்ஸ் தேர்தல் திட்டத்தின்படி, 7 முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சி நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு செக்ஸ் கல்வி மற்றும் உறவுமுறைகள் குறித்து கற்றுத் தரலாம் என்று லிபரல் டேமாக்ரட்ஸ் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவிட் லாஸ் கூறியுள்ளார்.
தற்போது உள்ளூராட்சியின் நிர்வாக அமைப்புக்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி சொல்லித் தரப்படுகிறது, ஆனால் பிரிட்டிஅரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களிலும் தனியார் பள்ளிக்கூடங்களிலும் செக்ஸ் கல்வி சொல்லித் தரப்படுவதில்லை. பாலியல் கல்வி ஆறாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் சொல்லித்தரப்படாவிட்டாலும், ஏழாம் வகுப்பு முதல் கற்பிக்கும் உயர்நிலைப்பள்ளிகளில் பாலியல் கல்வி கட்டாயம் சொல்லித் தரப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

13/8/14

பெளத்த இனவாதிகளுக்கும் நவநீதம்பிள்ளை உச்சியடி!

  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், ஐ.நா.விசாரணை நீதியாக நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஏராளமான விட யங்கள், இலங்கைக்கு வெளியே உள்ளன. இந்த விடயங்களை ஐ.நா. விசாரணைக்குழு திரட்டிக்கொள்ளும். இதனால், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளாமலே ஐ.நா. விசாரணைக்குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்மான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன; இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று இறுதி யுத்தம் நிறைவடைந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐ.நா. செயலாளர் பான் கீ - மூன் நியமித்த நிபுணர் குழு (தருஸ்மன்) அன்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், இலங்கை அரசு இந்தக் கருத்துக்கு செவிசாய்க்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வந்ததனால் இந்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணையை எதிர்கொண்டது. எனினும், இதனையும் ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசு, ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்து நாடாளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அத்துடன், நவநீதம்பிள்ளைக்கு எதிராகவும், ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர், சிங்கள - பெளத்த இனவாதிகள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வடகொரியா, சிரியாவுக்குள் ஐ.நா. விசாரணைக்குழு செல்லாவிட்டாலும் விசாரணைகள் இடம்பெற்றன என்றும், ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனு மதிக்காமல் விடுவதால் தமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். போர்க்குற்ற மீறல்களுக்குக் காரண மானவர்களைக் கண்டறிவதற்கும் பொறுப்பாளிகளாக்குவதற்கும் இந்த விசாரணை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள இந்தக் கருத்துகளின் ஊடாக இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நீதியாக நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர், சிங்கள - பெளத்த இனவாதிகள் ஆகியோருக்கு நவநீதம்பிள்ளையின் பதில் உச்சியடியாக அமைந்துள்ளது. ஐ.நா. விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மாலான ஒத்துழைப்பை வழங்கும். இதேவேளை, ஐ.நா. விசாரணை ஊடாக தமிழர் தீர்வைக் காண்பதற்கான வாசல் திறக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் நம்பியிருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார் எம்.பி.சுரேஷ்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்