siruppiddy

30/4/13

அரசுக்கு சாபம் கொடுத்த வீர ?


தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழர்களால் பல எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 அந்த வகையில் வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட வயதான வீரத் தமிழச்சி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார்.
தனது நிலத்தினையும், வீட்டையும் சிறிலங்கா இராணுவத்தினர் சுவீகரிக்கவிருப்பதினை எதிர்த்து தாய் ஒருவர் சிங்களபடைகளுக்கும், மஹிந்த அரசுக்கும் மண் அள்ளி எறிந்து சாபமிட்டார்.
 "நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன்'' என்று கூறி மண் அள்ளி வீசித் தூற்றினார் அவர்.
"நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிருந்தும் அகதியாய் திரிகிறேன்'' என்று அழுது புலப்பினார்.
 நேற்றையதினம் மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்து அச்சுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

29/4/13

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,

ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று எம்மை குற்றம் சாட்டினார்கள். இன்று எல்லா அரசியல்வாதிகளும். ஈழத்தைப் பற்றித் தான் பேசுகின்றனர். ஆனால் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அவசியம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் பரதேசி பட இயக்குனர் பாலா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு பாராட்டு விழா வடவள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்வண்ணன் தலைமை தாங்கிய இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான் பேசியபோது, அழிந்த கலைகளை காப்பதற்காகவும், நலிந்த கலைஞர்களை காப்பாற்றுவதற்காகவும் நாம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை தொடங்கப்பட்டுள்ளது. தம்பி பாலா மக்களால் பாராட்டப்பட்ட கலைஞன். முதன் முதலாக மக்கள் கைகளால் விருது வாங்கியவர். மிகச் சிறந்த திறமைசாலி. உலகின் தலைசிறந்த இயக்குனராக உச்சத்துக்கு செல்வார். சென்னையில் சினிமா வாய்ப்புக்காக நானும் தம்பி பாலாவும் பல சிரமங்களை அனுபவித்தோம். பசியால் துவண்டு போனாலும் முயற்சியைக் கைவிட மாட்டோம். ஒளிப்பதிவாளர் செழியனும் பல சிரமங்களை அனுபவித்து இன்று இந்த நிலையை அடைந்துள்ளார். அவரும் ஒளிப்பதிவில் உச்சம் தொடுவார். இவர்கள் களத்துக்கு நேரடியாக வராவிட்டாலும் என்னை அனுப்பி வைத்ததே இவர்கள்தான். இவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து பாராட்ட உள்ளோம். ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். இன்று எல்லா அரசியல் வாதிகளும். ஈழத்தைபற்றித் தான் பேசுகின்றனர். ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அவசியம் என்று தெரிவித்தார். 2ம் இணைப்பு ஈழ வீடுதலை போராட்டத்தில் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மதுரை கிழக்கு மாவட்டத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீராவேச பேச்சு (காணொளி)

விடுதலைக்கான மூன்றாவது கட்டப் போராட்டம்:


இப்போது நடப்பது ஈழ விடுதலைக்கான மூன்றாவது கட்ட போராட்டம். ராஜபக்சவுக்கும் அவனது கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப் போராட்டம். இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சென்னை தியாகராஜ நகரில், தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்பு சார்பில்  நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில்சுப. வீரபாண்டியன் தொடர்ந்து பேசியதாவது,
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக, ஈழ விடுதலைக்காக  செல்வா தலைமையில் அமைதி வழியில் நடந்தது முதல் கட்ட போராட்டம்.
அதனையடுத்து தேசியத்தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதவழி போராட்டம் இரண்டாம் கட்டமாக நடைபெற்றது.
எப்படி அமைதி வழி போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதோ? அதே மாதிரி ஆயுதவழி போராட்டத்திலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
பின்னடைவு ஏற்பட்டதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் வெட்கப்படக்கூடாது.
ஆனால் வீழ்வது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. நாம் மீண்டும் எழுவோம்.
இப்போது நடப்பது ஈழ விடுதலைக்கான மூன்றாவது கட்டப் போராட்டம்.

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும் அவனது கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத் திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப் போராட்டம்.
இந்த சிக்கலை உலக நாடுகளூக்கு கொண்டு சென்று அதன் மூலமாக வெற்றியைப் பெறுவோம் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

28/4/13

ஓடிய இடமெல்லாம் அடி' ,,வாங்கியன் ,,


தமிழன் ஓடிய இடமெல்லாம் அடி வாங்கினான்...
 தமிழன் மலேசியாவில் அடி வாங்கினான் !ஓடினான்
 தமிழன் பர்மாவில் அடி வாங்கினான்…! ஓடினான்
 தமிழன் அரேபியாவில் அடி வாங்கினான்…! ஓடினான்
 தமிழன் மும்பை, பெங்களூரியில் அடி வாங்கினான்…! ஓடினான்
 தமிழன் தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கினான்…! ஓடினான்
 தமிழன் கேரளாவில் அடி வாங்கினான்…! ஓடினான்
 இப்படி போன இடமெல்லாம் அடி வாங்கிய தமிழன், ஒரே இடத்தில் மட்டும்தான் திருப்பி அடித்தான் அதுதான் இலங்கையில் திருப்பி அடித்த அந்த மறத்தமிழன் தான் பிரபாகரன் என்ற எங்கள் தலைவன்….
 அடிப்பவன் இனவாதி அடி வாங்கியன் ஒரு முறை திருப்பி அடித்தால் தீவிரவாதியா?
 பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள்

27/4/13

உயர் நீதிமன்ற நீதிபதியாக,,,,

  ரோஹினி பெரேரா மாரசிங்க மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஹினி மாரசிங்க நியமனம் உயர் நீதிமன்ற நீதிபதியாக ரோஹினி பெரேரா மாரசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று அலரி மாளிகையில் நியமனம் பெற்றுக் கொண்டார்.

20/4/13

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது//,,


பாகிஸ்தான் மாஜி அதிபர் முஷாரப் கைது செய்யப்பட்டு, இஸ்லாமாபாத்தில் இரண்டு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 99ம் ஆண்டு, பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார்.2008ல், நடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால், பதவியிலிருந்து விலகினார்.போதிய பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால், பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 2007ல் தலைமை நீதிபதி உள்பட, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்து, அவசர நிலையை பிறப்பித்தார். இவரது இந்த செயல், தேச துரோக செயலாக குற்றம் சாட்டப்பட்டு, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.பல்வேறு நகரங்களில் இவர் மீது வழக்குகள் இருந்ததால், துபாய் மற்றும் லண்டனில் இவர் சில ஆண்டுகளாக தங்கியிருந்தார்.
அடுத்த மாதம், 11ம் திகதி, பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக, கடந்த மாதம் நாடு திரும்பினார்.நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு செய்திருந்தார்."அரசியலமைப்பை மீறி நடந்த முஷாரப்பை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது” என, வழக்கறிஞர்கள் பலர், தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தனர். இதையடுத்து, தேர்தல் தீர்பாயம், முஷாரப்பின், நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்து விட்டது.
இதனால், இவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம், ஜாமினை நீட்டிக்க கோருவதற்காக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.ஜாமினை நீட்டிக்க மறுத்த நீதிமன்றம், முஷாரப்பை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.இந்த உத்தரவை கேட்டதும், முஷாரப், தனது பாதுகாவலர்களுடன், அங்கிருந்த கூட்டத்தை தள்ளிக்கொண்டு அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் அவர் நேற்று கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில், முஷாரப்பை ஆஜர்படுத்தக்கூறிய, மாஜிஸ்திரேட், அவரை இரண்டு நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், முஷாரப்பை கொல்ல திட்டமிட்டுள்ளன. எனவே, அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே, பாதுகாப்பு கருதி அவரை சிறை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை வீடு துணை சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

19/4/13

குண்டுவெடிப்பு: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்,,,,


அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியானான். இன்னொரு நபரான அவனது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19). இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள். இருவருக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது.
போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அண்ணனான தமேர்லான் பலியாகியுள்ளார். ஷோக்கர் தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிக்க ஆயிரக்கணக்கான போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.
முன்னதாக இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய இந்த இருவரது படங்களையும் அமெரிக்க விசாரணை அமைப்பான எப்பிஐ வெளியிட்டது. சம்பவம் நடந்த பாயில்ஸ்டன் தெருவில் உள்ள சிசிடிவிக்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்பிஐக்கு சந்தேகம் ஏற்பட்டது.

திட்டமிட்டு அழித்த அமெரிக்கா அதிர்ச்சி ?,,


அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்காக தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி – தமிழ் ஈழத்தைக் கைவிடச் செய்து – அவர்களைக் கொண்டு இலங்கை அரசைத் தமக்கு அடிபணிய வைக்கும் தந்திரத்தை அமெரிக்கா மேற்கொண்டது. அதற்காகத்தான் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்து அவர்களுக்கு சர்வதேச ரீதியான நிதி உதவிகளையும், ஆயுத உதவிகளையும் தடைசெய்தது. இலங்கைக்கு தனது அடிவருடி இஸ்ரேல் அரசு மூலம் ஆயுதங்கள் வழங்க உதவியது. இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழினம் அழிக்கப்படுவதை மௌனமாக அங்கீகரித்தது. எனவே அமெரிக்காவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நாடுதான். இலங்கை அரசு அமெரிக்காவின் பேச்சைக் கேட்காமல் இரசியா, சீனா உதவியுடன் விடுதலைப் புலிகளை அழித்தொழித்தது. தற்போது சீனாவின் பக்கம் இலங்கை சாய்வதை தடுத்து நிறுத்தி தன்பக்கம் கொண்டு வரவே அமெரிக்கா மனித உரிமை பற்றிப் பேசுகிறது.
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா தலையிட்டு சிதைத்ததன் விளைவாகத்தான் அந்தத் தீர்மானம் இந்த அளவுக்கு மாற்றப்பட்டது என்பது ஒரு பகுதிதான் உண்மையாகும். ஆசியா மீதான அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களும், இலங்கை மீதான இந்தியாவின் துணைமேலாதிக்க நலன்களும்தான் அமெரிக்க-இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையில் திரைமறைவில் பேரங்கள் நடப்பதற்கும் தீர்மானம் நீர்த்துப் போவதற்கும் காரணங்களாக அமைந்தன.
இந்திய அரசு, ஐ.நா தீர்மானம் குறித்து இலங்கை அமெரிக்காவுடன் பேசவேண்டும் என்று ஆரம்பம் முதலே வற்புறுத்தியது. அமெரிக்க அடிவருடி, அரசியல் மாமா சுப்பிரமணிய சாமியை இலங்கைக்கு அனுப்பி – அமெரிக்காவோடு பேசுவதற்கு ஏற்பாடு செய்தது. சுப்பிரமணிய சாமியின் ஏற்பாட்டுடன் இலங்கை அமெரிக்காவுடன் திரைமறைவில் பேரம் பேசியே – இந்தியாவின் ஆலோசனை அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் ஈழத் தமிழருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க – இந்திய கூட்டுச் சதியே அதற்கான காரணமாகும். அதிலும் அமெரிக்காதான் முதன்மை பாத்திரத்தை வகித்தது

18/4/13

ஒபாமாவுக்கு விஷ கடிதம் அனுப்பிய மர்ம ??


அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தபடி உள்ளது.
மிசிசிபியை சேர்ந்த ரோஜர்வில்சன் என்ற செனட் உறுப்பினருக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தது. அதில் ரெசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது.
அதேபோன்ற கடிதம் ஜனாதிபதி ஒபாமாவுக்கும் மிசிசிபியை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கும் வந்தது. இவற்றை கைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தினார்கள். இதை யார் அனுப்பியது என்று விசாரித்ததில் முக்கிய தகவல் கிடைத்தன.
மிசிசிபி அருகே உள்ள கோரிந்த் என்ற இடத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதுதொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் யார் என்ற விபரத்தையும், மற்ற தகவலையும் வெளியிட பொலிசார் மறுத்து விட்டனர். இது தீவிரவாத செயலாக இருக்குமா? என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.
 

14/4/13

போராட்டம் விஸ்தரிக்க​ப்படுகின்ற​து: பிரித்தானிய ?


பிரித்தானிய தமிழர் பேரவை தளராத நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டி, புலத்தில் முழுமையாக மக்கள் பங்களிக்கும் பங்குபற்றல் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமாக இதனை முன்னெடுக்க வேண்டுமென்ற மூலோபாயத்துடன் செயட்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் தமிழ் மக்கள் செறிவாயுள்ள பிரதேசங்களை அடையாளங்கண்டு அந்தந்த பிரதேசங்களில் உள்ளூர் தமிழர் பேரவைகளை அவ்விடத்து மக்களே தெரிவு செய்யும் வண்ணம் தனது கட்டமைப்பை ஆழமாக விஸ்தரித்தது
இந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் இவ்வாறான உள்ளூர் தமிழர் பேரவைகளை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் விடுதலை மூச்சை வீச்சாக மக்களிடையே கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் பக்கம் மெதுவாக பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ள சர்வதேச அரங்கத்தில் பிரித்தானிய தமிழர்களின் செயற்பாடுகள் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் இக் கால கட்டத்தில், மக்கள் தங்கள் இடத்தில் உள்ள தமிழர் பேரவைகளில் கலந்து கொண்டு உங்களால் முடிந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முன் வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அன்புடன் வேண்டி நிற்கின்றது.
இதனொரு கட்டமாக 07.04.2013ம் திகதி
Harrow ,Ealing,Hayes and Harlingdon,Birmingham,13.04.2013ம் திகதி அன்று Manchester தமிழர் பேரவை . புதுப்பிக்கப்பட்டது.. இதன் அடுத்தடுத்த கட்டங்களாக Eastham 15.04.2013ம் திகதியும், Walthamstow 20.04.2013ம் நடைபெற உள்ளதால் இச் சந்திப்புக்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது

12/4/13

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்
எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


புலிகளும் அமெரிக்காவும் ஒன்றுசேரவேண்டும்?:


விக்கி லீக்ஸ் தகவல் ! இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தீவிரவாத முஸ்லீம்களை அடக்க, புலிகளும் அமெரிக்காவும் ஒன்றுசேரவேண்டும் என்று, அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பியுள்ளது. 2002ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் அனுப்பப்பட்ட பாதுகாப்பான கேபிள் செய்தியையே விக்கி லீக்ஸ் தரவுகள் தற்போது வெளியிட்டுள்ளது. அக் காலகட்டத்தில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதர அதிகாரியான ஆஷ்லி வில்ஸை சந்தித்த நபர் ஒருவர், கிழக்கில் உள்ள சில முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்த தயாராக இருப்பதாகவும் எனவே அவர்களை அடக்க விடுதலைப் புலிகளோடு நீங்கள் ஒன்றுசேரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளோடு நீங்கள் இணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட நபர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் என்றும் கூறப்படுகிறது. இவர் கூறிய கூற்றுகளை அப்படியே , தனது தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளார் ஆஷ்லி வில்ஸ். குறிப்பிட்ட இவ்விடையத்தில் பல உள்ளர்த்தங்கள் உள்ளது. எந்த நிலையிலும் அமெரிக்கா புலிகளுடன் இணைந்துசெயல்பட விரும்பாது என்பது ஒரு புறம் இருக்க, முஸ்லீம்களையும் புலிகளையும் கோத்துவிடும் நடவடிக்கையாகவும் இதனைப் பார்க்கலாம் என்றால் மிகையாகாது.


9/4/13

முகாமில் கோட்டபாய செய்த கொலைகள்: சாட்சியாக மாறிய ?ரெட் பானா என்னும் சித்திரவதை முகாமில் 1989ம் ஆண்டு கோட்டபாய புரிந்த கொடூரங்கள் மெல்ல மெல்ல சிங்களவர்கள் வாயிலாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இம் முறை தமிழர்கள் எவரும் குற்றஞ்சாட்டவில்லை ! மாறாக சிங்களத் தாய் ஒருவர் தனது வாக்குமூலத்தை கண்ணீர் மல்க பதிவுசெய்துள்ளார். இச் செய்தியானது பல சிங்கள ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் மாத்தளை என்னும் இடத்தில் வைத்தியசாலை கட்ட அத்திவாரம் தோண்டும்வேளை அங்கே புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே சுமார் 150 பேருடைய மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. அவை 1980 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று, சொல்லப்படுகிறது. இக் காலகட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஷ அப்பகுதியில் லெப்டினன் கேணலாக பதவிவகித்துள்ளார் என்பது, ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது !
இந்தச் சிங்களத் தாய் கூறும் வாக்குமூலம் :
கணவனை இழந்த கமலாவதி என்னும் இத் தாய், புல்மோடயில் தனது 2 மகனுடன் வசித்து வந்துள்ளார். அக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் புல்மோடையில் உள்ள சிங்களவர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு கூறியிருந்தார்கள். இதனால் இத் தாயார் தனது வீட்டைக் காலிசெய்து அந்த ஊரில் இருந்து வெளியேறி மாத்தளைக்கு வந்து குடியேறியுள்ளார். 1989ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி, மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலய என்னும் பள்ளிக்கூடத்துக்கு அருகாமையில் இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றிவளைத்தது. அப்போது கமலாவதி தனது இரண்டு மகனுக்கும் மதிய உணவைக் கொடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். வீட்டினுள் நுளைந்த இராணுவத்தினர், இச் சிங்கள இளைஞர்களை இருவரையும் பலவந்தமாக இழுத்துக்கொண்டு சென்றுள்ளார்கள். சுசந்த (18) மற்றும் நிஷந்த(17) ஆகிய இவ்விரு சிங்கள இளைஞர்களையும் இலங்கை இராணுவம் அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் முகாமுக்கு கொண்டுசென்றுள்ளார்கள். இராணுவத்தின் வாகனத்துக்கு பின்னால் கமலாவதி ஓடிச் சென்றுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட முகாமிற்குள் செவதனையும் அவர் நேரில் பார்த்துள்ளார்.
மீண்டும் மறுநாள் அவர் சென்று தனது மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று காவலாளிகளிடம் மன்றாடியிருக்கிறார். ஆனால் அவர் முகாமுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதியான எக்கநாயக்கவை தொடர்புகொண்டுள்ளார்.(எக்கநாயக்க தற்போது ஆழும் கட்சி அமைச்சராக இருக்கிறார்) அவர் தனது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்துவிட்டு, தான் லெப்டினன் கேணல் கோட்டபாயவுடன் பேசிவிட்டதாகவும் இனிச் சென்று நீங்கள் உங்கள் மகனை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி கமலாவதியும் அம் முகாமுக்கு மீண்டும் சென்றுள்ளார். ஆனால் அவரைப் பார்க்க கோட்டபாய மறுத்துவிட்டார். இதனிடையே இலங்கை இராணுவமானது பெயர் பட்டியல் ஒன்றைக் காட்டி, உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி, இத் தாயாரை அங்கும் இங்குமாக அலையவைத்துள்ளார்கள். அப்படியே காலங்கள் ஓடிவிட்டது. வீட்டிற்க்கும் இராணுவ முகாமுக்குமாக அலைந்த அத்தாயார், இறுதியில் மனமுடைந்து முடங்கிப்போனார்{.புகைப்படங்கள்}
1989ம் ஆண்டு காணமல் போன அந்த 2 சிங்கள மாணவர்களும் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்கள் மாத்தளையில் வைத்தே காணமல் போனார்கள். அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்தார்கள். அவர்களை கமலாவதி விசாரித்தவேளை, தம்மை ரெஸ்ட் ஹவுஸ் முகாமில் வைத்திருந்தவேளை, உங்கள் மகன்மார் இருவரையும் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டுசென்றார்கள். ஆனால் அவர்கள் இருவரும், தாம் தங்கியிருந்த முகாமுக்கு திரும்பி வரவில்லை என்று விடுதலையான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு பின்னர் அங்கே
புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இலங்கை இராணுவம் பிடித்துச் சென்ற இந்த 2 சிங்கள மாணவர்களின் உடல்களும் இந்த 150 எலும்புக்கூடுகளுக்குள் ஒன்றாக இருக்குமா என்ற ஏக்கம் தற்போது கமலாவதிக்கு வந்துள்ளது. டி.என்.ஏ பரிசோதனை நடந்தால் மாத்திரமே அவர்கள் இறந்துவிட்டதை உறுதிசெய்ய முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. இலங்கையில் லட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஏக்கத்தோடு வாழும் நிலையில், உள்ளனர். இதுபோல சில சிங்களவர்களும் இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம் கலந்த உண்மை நிலை ஆகும்.
1989ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிய கோட்டபாய ராஜபக்ஷ பின்னர் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கே கிரீன் காட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்தர் தீவிர அரசியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். 1989ம் ஆண்டு தான் இராணுவத்தில் இருந்தவேளை எதை அவர் செய்தாரோ அதனையே அவர் 2009ல் அரங்கேற்றியுள்ளார் !

10 வருடமாக தலையில் துப்பாக்கிச் சன்னத்தோடு இருந்தலண்டனில் கடந்த 2001ம் ஆண்டு முதல் வசித்துவந்த ராமச்சந்திரன் சிவகுமார் என்னும் போராளி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் திடீரென மரணமடைந்தார். 41 வயதுடைய சிவகுமார் என்னும் இப் போராளி 13 வருடங்களாக புலிகள் அமைப்பில் இருந்து போராடியுள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் , பின்னர் பிரித்தானியா வந்து தனது மனைவி மற்றும் மகளுடன் ஹம்ஸ்டட் நகரில் வசித்துவந்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் நாள் அவர் குழிக்கச் சென்றவேளை, மயக்கமடைந்து குழியலறையில் வீழ்ந்தார் என்று பொலிசார் நேற்றைய தினம் நடைபெற்ற மரண விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். மயக்கமடைந்த சிவகுமார் பின்னர், றோயல் பிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் 2 நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டார் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
தனது கணவருக்கு தலையில் காயம் இருந்ததை நான் அறிவேன். அவரது அம்மா மற்றும் நண்பர்கள் எனக்கு கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர் இதுதொடர்பாக என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை, ஏன் என்றால் நான் பயந்துவிடுவேன் என்பதற்காகத்தான் என்று நீதிமன்றில் கண்ணீர்மல்க கூறினார் சிவகுமாரின் மனைவி. தனது கணவர் அதிகாலை 3.00 மணிக்கே வேலைக்குச் செல்வார் என்றும், அதனால் அவர் இரவு 12.00 மணிக்கு குழிக்கச் சென்றார், அவ்வேளையே அவர் மயங்கி விழுந்தார் என்று அவர் கூறியுள்ளார். தலையில் துப்பாக்கிச் சன்னம் போன்றதொரு பொருள் காணப்பட்டதாகவும், இந்த கூரிய பொருளே அவர் இறப்புக்கு காரணம் எனவும் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் நீதிமன்றில் சாட்சியமளித்தார். இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தில் , சிவகுமார் காயமடைந்ததனாலேயே அவர் இறப்பு நிகழ்ந்தது என்பதனை நீதிபதி உறுதிப்படுத்தி தீர்ப்புவழங்கியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
அதுமட்டுமல்லாது நீதிபதி தனது உரையில், "விடுதலைப் புலிகள் என்னும் போராட்ட அமைப்பில் இருந்த" சிவகுமார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றும் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகங்கள் "விடுதலைப் புலிகளின் போராட்ட வீரர்" என்ற சொற்பதங்களையே பாவித்துள்ளமை தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனது இறப்பிலும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திகழ்ந்திருக்கிறார் சிவகுமார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்

மாதாவின் பாடல் காணொளி ,,


 

சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,,