siruppiddy

31/3/15

நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் விசாரணை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜின் கொலை குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் மூன்று கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் கப்பம் பெறல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்திருப்பதாக காவற்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
தற்போது அவர்கள் மூன்று பேரும் தடுத்து வைக்கப்ட்டு விசாரணைக்கு
உட்படுத்ப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 

29/3/15

மக்களின் உரிமை ந்த இடங்களில் குடியேற்ற கோருவது???

தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்ற வேண்டுமென தமிழ் மக்கள் கோருகிறார்கள். அப்படி கோருவதற்கு அவர்களிற்கு நூறுவீத உரிமையுள்ளது. பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் சொந்த நிலங்களில் அவர்களை எப்படி மீள்குடியேற்றுவதென்பதற்கு பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும். இப்படி யாழில் வைத்து பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுரை கூறியுள்ளார்
 பிரதமர் ரணில் விக்கிரசிங்க.
பிரதமரின் யாழ் விஜயத்தின் இறுதிநாளான நேற்று பாதுகாப்பு தரப்பினரை சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இப்படி அறிலுரை கூறியுள்ளார். நேற்று பலாலி, காங்கெசன்துறை தளங்களிற்கு சென்று சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
முதலில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர சந்தித்தார். பின்னர் விமானப்படையினரை சந்தித்தார். இறுதியாக கடற்படையினரை சந்தித்தார். அங்கு உரையாற்றிய ரணில்-
“வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இவற்றிற்கு நாம் முதலில் தீர்வுகாண வேண்டும். சமாதானமான சூழலை ஏற்படுத்த எப்படியான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென்பதை தேடிப்பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.
வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், மக்கள், அதிகாரிகள், பொதுமக்கள், மீனவர்கள் என பலதரப்பினரையும் சந்தித்தேன். அவர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி சொன்னார்கள். அவை பற்றியே இன்று உங்களுடன் பேசுகிறேன்.
எங்களின் நிலங்களில் எங்களை மீண்டும் குடியேற்றுங்கள் என தமிழ்மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு கேட்க அவர்களிற்கு நூறுசதவீத உரிமையுள்ளது. இதனை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
தேசியபாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்மக்களை அவர்களின் சொந்தநிலங்களில் கட்டம்கட்டமாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். மீண்டும் பிரிவனைவாத யுத்தமொன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை நாம் வழங்கக்கூடாது.
நான் வடக்கு மீனவர்களை சந்தித்தபோது அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். தமது கடற்பகுதிக்குள் தென்னிலங்கை மற்றும் இந்திய, சீன மீனவர்கள் ஊடுருவி கடல்வளத்தை அழிப்பதாக குற்றம்சாட்டினார்கள். இதில் அவர்கள் இலங்கை கடற்படையினராகிய உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் அத்துமீறல் பற்றி இந்திய அரசுடன் பேச வேண்டும். எமது கடல்வளத்தை அவர்கள் சுரண்ட அனுமதிக்க முடியாது. அத்தோடு, ரோலர் மீன்பிடிக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது. தேவையானால் அவர்கள் ஆழிகடல் மீன்பிடியில் ஈடுபட முடியும். இதற்கு இந்தியா காலஅவகாசம் கேட்டுள்ளது.
எமது கடல்வளம் பாதுகாக்கப்பட வேண்டும். எமது கடலில் மீன்கள் மட்டுமல்ல எண்ணெய்யும் உள்ளது. எனவே அதனை பாதுகாக்க வேண்டும் என்றார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>24/3/15

மீள்குடியமர்வு மந்தகதியில் அமைச்சர் குற்றச்சாட்டு..

காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கை அரசால் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
காணிகள் கையளிக்கும் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த விடயம் துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரி தலைமையில வளலாயில் காணிகளை மீள கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையிலே,
2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் மக்கள் தங்கள் காணிகள் விடுவிக்கப்படும் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் முன்னைய அரசு உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்கள் காணிகளை சுவீகரித்தது.அத்துடன் சுவீகரித்த பகுதிகளிலுள்ள மக்களின் வீடுகள்,ஆலயங்கள்,பாடசாலை என்பன தரைமட்டமாக்கியது. அது தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களாகவே இருக்கின்றது.
இதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில், புதிய அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.தமிழ் மக்களின் நம்பிக்கையை புதிய அரசு காப்பாற்ற வேண்டும். காணிகள் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

20/3/15

48 மணிநேரதிற்குள் விசாரிக்கும் சட்டத்துக்கு கூட்டமைப்பும் ஆதரவு

சந்தேகநபர்களை 48 மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய வழிசெய்யும் குற்றவியல் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், அந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நேற்று நடத்தப்பட்டது.
இதன்படி இந்த பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெயர்கூறி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 53 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் முன்னிலை சோஷலிசக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார மாத்திரம் எதிராக வாக்களித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன் ஆகியோரும் இதற்கு ஆதரவளித்தனர். இதன்படி குற்றவியல் சட்டக்கோவையின் குறித்த பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

16/3/15

கோத்தா முகாம் பற்றிய ஆதாரங்களை வழங்கத் தயார்:அதிரடி அறிவிப்பு!

சாட்சியங்களிற்கு உயிர் உத்தரவாதம் கொடுத்தால் திருகோணமலை கோத்தா முகாம் தொடர்பான ஆதாரங்களை வழங்க தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து பேசிய சமயத்தில் ஊடகங்களிடம் இதனை சுரேஷ் தெரிவித்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதியின் ஊழல் தொடர்பாக, மற்ற அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாக இந்த அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தினம் தினம் ஒவ்வொரு ஊழல்கள் பற்றி தகவல்களை வெளியிட்டு, விசாரணைகளை செய்கிறார்கள்.
யுத்தகாலத்தில் இருபதாயிரம் வரையான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் எழுநூறு பேர் திருகோணமலை கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு எம்மிடம் முழுமையான ஆதாரங்கள் உள்ளன. முல்லைத்தீவில் உறவுகளை படையினரிடம் உயிருடன் கையளித்த நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர்.
இப்படியொரு பாரிய மனிதாபிமான பிரச்சனையை, முழு சர்வதேசமும் அக்கறை செலுத்திவரும் பிரச்சனையை- அப்பிடியொரு முகாம் அங்கில்லையென பொறுப்பற்ற விதத்தில் கூறி தட்டிக்கழித்து விட முடியாது. அங்கு அப்படியொரு முகாம் முன்னர் இருந்தது. அங்கு எழுநூறுவரையான தமிழர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரமுள்ளது. சாட்சிகளிற்கு உயிர்ப்பாதுகாப்பு வழங்கினால் அவற்றை ஒப்படைக்க தயாராக உள்ளோம்.
இந்த மனிதாபிமான பிரச்சனையில் ஜனாதிபதியும், நீதியமைச்சரும் முழு ஈடுபாடு காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

15/3/15

விக்கினேஸ்வரன் ரணிலின் கருத்திற்கு கண்டனமும் எதிர்ப்பும்!!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்ளும் உரிமையுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்த கருத்திற்கு வடமாகாணமுதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளதாக இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்தின் பின்னர் சிஎன்என்- ஐபிஎன்னிற்கு விசேடமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு நாடொன்று குறித்து அரசாங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள ஓருவர் கருத்து வெளியிடும் முறையிதுவல்ல,மீனவர்களை பொறுத்தவரை அனைத்து ஆழ்கடல் டிரோலர் படகுகளையும்,வங்காளவிரிகுடாவிற்கோ அல்லது அராபிய கடலிற்கோ அனுப்பவேண்டும் என கருதுகின்றனர்.
பாக்கு நீரினை முகாமைத்துவ குழுவான்றை அமைப்பதே அப்பகுதியில் டிரோலர்களை கட்டுப்படுத்துவதற்hகன ஓரு வழியாகும்.
அந்த குழுவினர் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாததையும்,அவர்கள் ஆழ்கடலிற்குள் செல்வதையும் உறுதிப்படுத்தவேண்டும் என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

12/3/15

ஜெயில்களில் உள்ள 86 தமிழக மீனவர்களும் விடுதலை

 பிரதமர் மோடி பயணத்தை முன்னிட்டு சிறிசேனா உத்தரவு
.இலங்கை ஜெயில்களில் உள்ள 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
கைது
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 86 பேரை கடந்த மாதம் 26–ந் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இரண்டு குழுக்களாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரவு
இந்நிலையில், 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று உத்தரவிட்டார். தற்போது, 4 நாள் பயணமாக லண்டனில் உள்ள அவர், அங்கிருந்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதே போன்ற நடவடிக்கையை இந்தியாவிடமும் இருந்து எதிர்பார்ப்பதாக இலங்கை அதிபர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக 13–ந் தேதி இலங்கைக்கு செல்கிறார். அதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாக 86 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இலங்கைக்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க இலங்கை வடக்கு மாகாண தமிழ் மீனவர் சங்க பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

4/3/15

கோரிக்கைகளை நிராகரித்த மனித உரிமை பேரவை தலைவர்


இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கோரி பல அமைப்புகள் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன.
இருந்த போதிலும் ஐ.நா மனித உரிமை பேரவையின் தலைவர் ஜோகிம் றகர் அந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
மன்னார் மறை மாவட்ட ஆயர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கொழும்பில் இயங்கும் பிரதான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கையை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தவிர போர்க்குற்ற அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கோரி, மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் ஹூசைன் மற்றும் மனித உரிமை பேரவையின் தலைவர் றகர் ஆகியோருக்கு அதிகளவிலான குறுந்தகவல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>