siruppiddy

31/5/15

நூலகம் எரிந்து நீறான நினைவு நாளில் ஆறாத வலியுடன்..

யாழ் நூலகம் எரிந்து நீறான நினைவு நாளில் ஆறாத வலியுடன்..
உங்கள் ஈழப்பிரியனின் இன்றைய சிறப்பு கவிதை
“இனவாத அரசின் கோரப்பசிக்கு தீனியானது எங்கள் அறிவுக்களஞ்சியம்
தமிழ் மனமெங்கு வியாபித்தது கடும்சினம்.
இருந்தும் என்ன செய்யமுடிந்தது..
எங்கள் அறிவுத்தாய் கருக்கிச் சாம்பலானாள்..
தொன்மைத் தமிழின் ஆலயம் மீதும்
வன்மம் தீர்த்தது சிங்களம்
மேகமே உனக்கும் இரக்கம் பிறக்கவில்லயே அன்று
கொஞ்சம் நீ அழுதிருந்தால்
வெந்தணல் அணைத்து எங்கள் செந்தமிழ் காத்திருப்பாய்..
அறிவுப்பசிதீர்த்த எங்கள் அறிவுச்சுரங்கம் கருகிப்போதல்கண்டு 
தமிழ்மனமெலாம் உருக்கிப்போனதடா..
உயிரையே பறிகொடுத்த பரிதாபம் அது-தமிழ்
பயிரையே கருவறுக்க காமினிக்கு ஏனிந்த மோகினியாட்டம்?
இன்று நினைத்தாலும் வயிறு பற்றி எரிகிறதே?
தொண்ணூறாயிரம் நூலெரிந்து மண்ணாகிப்போக சிங்களவன் மனம் கல்லாகிப்போனதே…
என்னடா செய்தது எங்கள் அறிவுக்கருவூலம் ?
பாசிச கிட்லரும் வீசிய குண்டை பக்குவமாய் வீசினான் மியூசியம் காத்து..
புத்தனின் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் இப்படி புத்திபேதலிதுப்போனது?
தமிழன் அடையாளம் அழிப்பதாய் நினைத்து 
ஆசியாவின் அறிவுக்களஞ்சியத்தை அழித்துவிட்டாயே மூடனே
மனித குலத்தின் கடைவிந்தில் கருவான காடையனே- 
புத்தனீன்ற மொத்த பௌத்தனும்
புத்தகத்தின்
புனிதமறியா பாமரர்களா..
பத்தவைத்து வேடிக்கை பார்க்க இது பட்டாசு அல்லடா..
எங்கள் அறிவுப்பசிதீர்த முட்டாசுடா..
உன் மதிகெட்ட செயல் கண்டு இவ்வுலகமே தன் மலவாயால் சிரிக்குதடா
மாபாவி..
மானம்கெட்டவனே எங்கள் கலைத்தாயை கருக்கித்தொலைத்தவனே..
உன்னை சாபமிடுகிறேன்..
என் கலைத்தாயே
இவர் மீதுள்ள கோபம்விடு
புத்தனீன்ற பிள்ளைகளுக்கு நல்ல புத்திகொடு..
வித்தை இவர் வித்துகளும் கற்றுணர சக்திகொடு..
இனவாத இரத்தம் கழுவி-நல்
மனதோடு வாழவழிவிடு..
சாபம் கேட்டுவிட்டு பாவம் பார்ப்பதாய் எண்ணிவிடாதே
இது உன்னிடம் கற்றுக்கொண்டது..
என் தாயிடம் கற்றுத் தேர்ந்தது..”
“ஆறாத வலியோடும் அறிவுப்பசியோடும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


30/5/15

இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன?

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள்!  இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறிசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள். மே 19 2009. இலங்கை மண்ணிலிருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்று வெற்றியை இலங்கை இராணுவம் கொண்டாடிய தினம்.
மனித உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு காட்டுமிராண்டித் தாக்குதலை ‘போர்’ என்ற பெயரில் ஈழத்தமிழர்கள் மீது தொடுத்தது இலங்கை இராணுவம்.
அதில், இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 70 ஆயிரம் பேர். துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்து முடமாக்கப்பட்டவர்கள், குடும்பத்தை இழந்து நிர்க்கதியானவர்கள், கணவரை இழந்து விதவையானவர்கள் எண்ணிக்கையும் இதில் அதிகம். வன்னி பகுதியைச் சேர்ந்த 1,46,679 பேர் இதுநாள் வரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்திருக்கிறது
 இலங்கை அரசு.
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 28-வது கூட்டத் தொடரில், ‘2010-ல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால் 11,000 பேரை இலங்கை அரசு சிறைப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. இது அவர்களின் குடும்பங்களைக் கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை ஐ.நா அதிகாரிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாவது,
என் கணவர் எழிலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்தார். போர் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது என் கணவர், நான் மற்றும் என்னுடைய மூன்று குழந்தைகளும் 17-ம் தேதி முல்லைத்தீவில் இருந்தோம். குடிக்க தண்ணீர்கூட கிடையாது. நாலாபுறமும் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளும் குண்டு பொழியும் சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.
அதற்கு மறுதினம், வட்டுவாகல் என்ற இடத்தில் பாதர் பிரான்ஸிஸ் என்பவரின் தலைமையில் என் கணவரும் 1,000-க்கும் மேற்பட்ட போராளிகளும் வெள்ளைக் கொடியேந்தி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.
அதில், யோகரத்தினம் யோகி, லாரன்ஸ் திலகர், அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், முன்னாள் யாழ்ப்பாண அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி, நிர்வாகச் சேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், பிரியன், தீபன், விளையாட்டுத் துறை ராஜா மற்றும் அவரது மூன்று பிள்ளைகள், வில்வன், இன்பன், மஜீத், ஹோல்சர் பாபு, கவிஞர் புதுவை இரத்தினதுரை, வே.பாலகுமார், மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் மற்றும் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் ஆகியோரும் இருந்ததை நான் நேரில் பார்த்தேன்.
அவர்கள் சரணடைந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை கடந்துவிட்டன. அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது என்றார்.
இலங்கையில் 2 லட்சம் தமிழ் மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும் என்று சொன்ன பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகப் பொறுப்பாளர் சுதா, அதற்கான ஆதாரப் புகைப்படத்தையும் நம்மிடம் கொடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தன் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள்! அந்த சமயத்தில் பசில் ராஜபக்‌ச மூலம் இலங்கை இராணுவத்தைத் தொடர்பு கொண்டோம். விடுதலைப் புலிகள் சரணடைய தேவையான அனைத்து விடயங்களையும் செய்வதாக உறுதி தந்தார்கள்.
நான் உடனே நடேசன் அண்ணனைத் தொடர்புகொண்டு விபரத்தைச் சொன்னேன். அவர் என்னையும் வருமாறு அழைத்திருந்தார். ஆனால், முள்ளிவாய்க்கால் பகுதியில் என்னை இராணுவம் அனுமதிக்காததால் நான் செல்லவில்லை.
மறுநாள் அதிகாலையில், மகிந்த ராஜபக்‌ச என்னைத் தொடர்புகொண்டு, ‘அவர்களுடைய சரண் அடைதலை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதை நீங்கள் கட்டாயம் அவர்களிடம் சொல்ல வேண்டும். எத்தனை பேர் சரணடைய போகிறார்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு நான், ‘3000 போராளிகளும், 22,000 ஜனங்களும்’ என்று சொன்னேன். விஷயத்தை நடேசனிடம் சொன்னேன். போராளிகள் வெள்ளைக் கொடியை ஏந்தி வருவார்கள். அவர்களைச் சுட்டுவிடாதீர்கள் என்று எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
சரணடைய வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்துள்ளனர். அந்த தேநீரின் சுவை நாக்கில் இருந்து போவதற்குள் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று வெடித்திருக்கிறார். போரில் காயப்பட்டவர்களுக்கு, தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இறுதிவரை சிகிச்சை அளித்து வந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான மருத்துவர் வரதராஜா கூறியதாவது,
போர், இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதை போர் என்றே சொல்ல முடியாது. கண்மூடித்தனமான தாக்குதலை இலங்கை இராணுவம் மேற்கொண்டிருந்தது.
அப்போது நான் பணி செய்த அனைத்து மருத்துவமனையிலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. யூனிசெப் சொன்ன பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மாண்டு விழுந்தார்கள்.
அடிப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கக் கூடாது என்பதில் இலங்கை இராணுவம் மிகத் தெளிவாக செயல்பட்டது. நான் இருந்த பகுதியும் கடைசியில் இராணுவத்தின் பிடியில் வந்தது. மே 15-ம் தேதி நடந்தப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்தேன். கைதுசெய்து மூன்றரை மாதங்கள் சிறை வைத்தனர்.
பின், சர்வதேச மருத்துவர்கள் அமைப்பின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டேன் என்கிறார் அவர். காணாமல் போல லட்சக்கணக்கானோர் பற்றி விரைவில் உண்மை வெளிவர வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27/5/15

சுவிஸ் குமார் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பு !

புங்குடுதீவில் மாணவி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் . இவர் ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸாருக்கு நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டமையானது யாழில் பதற்றம் ஏற்பட காரணமாக அமைந்திருந்த தாக விசேட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மாணவியின் கொலை தொடர்பில் ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்பின்னர் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுவிஸ் குமார் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எனினும் சுவிஸ் குமார் மட்டும் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாகவும் புங்குடுதீவு பொலிஸ் அதிகாரிகள் சிலருடன் இவர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பே இதற்கான காரணம் எனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் அடிக்கடி பொலிஸாருக்கு 'மது விருந்துகள்' போன்றவற்றையும் வழங்கி வந்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் மக்கள் ஆர்ப்பாட்ட த்தில் இறங்கியமையும் அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் சுவிஸ் குமார் நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் யாழில் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

24/5/15

மெழுகுவர்த்தியுடன் வாருங்கள்சோகத்தை பகிர்ந்து கொள்ள**

கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.00 மணிக்கு அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ள கொழும்பு
 சுதந்திர சதுக்கத்துக்கு மெழுகுவர்த்தியுடன்....
இலங்கையர்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு சிறுவர் 
விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
அப்பாவி மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட விபரீதம் இந்த நாட்டில் யுவதிகளுக்கு ஏற்பட்ட இறுதி நிகழ்வாக இருக்க
 வேண்டும்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது நியாயமே.
இருந்தாலும் இந்தக் கொடூரத்தை எதிர்த்து யாழ். மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை இனவாதமாக்கி குறுகிய அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதி மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச உட்பட பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

22/5/15

வித்யா படுகொலை:அனைத்து ஆலயங்களிலும் மட்டக்களப்பு ,திருகோணமலை, வவுனியா எங்கும் அஞ்சலி,போராட்டம்!

இன்றைய தினம் வவுனியாவடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளான கனகராயன்குளம் ம.வி,புளியங்குளம் இந்துக்கல்லூரி,மதியாமடு விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களால்அனைத்து ஆலயங்களிலும் இன்று
விளக்கு ஏற்றி வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய ஆன்மீகப்பிராத்தனைகள்   அண்மையில் காமுகர்களின் காமப்பசிக்கு இரையாகிய நெடுந்தீவு
மாணவி வித்தியா மற்றும் கனகராயன்குளம் மன்ன குளத்தில் கொலைசெய்யப்பட்ட சரண்யா ஆகியவர்களின் கொலைகளுக்கு நீதிவேண்டி மாணவி
வித்தியாவிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்ட து!!!. குற்றவாளிகளுக்கு  சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.17/5/15

புங்குடுதீவு மாணவி வன்புணர்வு! அரசினது பொறுப்பற்றதன்மையே காரணமென்கிறார் முதலமைச்சர்!!

மாணவி வித்தியாவின் பரிதாப மரணமும் அதற்கு முன்னர் அவர் மீது நடாத்தப்பட்ட வன்புணர்வும், சித்திரவதையும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையையே எடுத்துக் காட்டுகின்றதென தெரிவத்தள்ள டவக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பினில் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையில்:-
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பிரதிப் பொலிஸ்மா அதிபராக யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருபு.மு.பெரேரா அவர்களுடன் வடமாகாணத்தில், குறிப்பாக யாழ் குடாநாட்டில், அதிகரித்துக் கொண்டு போகுங் குற்றங்கள் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தேன். பொதுமக்கள் உதவியுடன் இவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக அவர் வாக்களித்தார். எனினும் நிலமை கட்டுக்கடங்காது செல்கின்றதோ என்று எண்ண
 வேண்டியுள்ளது.
சில சமயங்களில் பொலிசாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு பொலிசாரிடம் சம்பவம் நடந்த மாலையே குறித்த பெண்ணின் தாய் தந்தையர் முறையிட்டபோது ஊடகங்களின் படி 'காதலித்த பொடியனுடன் ஓடிப்போயிருப்பாள்; காலமை வந்திடுவாள்' என்று பொலிசார் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பேர்ப்பட்ட கரிசனையில்லாத் தன்மை, முன்கருதலற்ற கூற்றுக்கள்,
 தாமதங்கள் ஆகியன மேலும் மேலும் குற்றங்கள் புரிய ஏதுவாக அமைவன என்பதை அதிகாரத்தில் உள்ள யாவரும் உணர வேண்டும்.
போர் முடிந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகத் தென்படுகிறது. சட்டத்திற்கு அமைவாகச் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைச் சீரழிப்பதாகப் பல நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது.
போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட அபலைப் பெண்களை வழிமாறிச் செல்ல திட்டமிட்ட வழிமுறைகள் பாவிக்கப்படுகின்றனவோ என்று எண்ண வேண்டியுள்ளது. எனவே கடமையில் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் இயங்கும் காவல்த்துறையினரின் அவசியத்தை நான் வலியுறுத்த
 விரும்புகின்றேன். இவ்வாறான காவல்த்துறையினரை உருவாக்குவதானால் போதிய பயிற்சிகள் அவர்களுக்கு அளித்து மக்கள் நலம் பேணும் சக்தியாகவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் துறையினராகவும் அவர்களை மாற்றி எடுக்க வேண்டும். இதற்கு மக்கள் மொழியில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மக்கள் போரின் போது அனுபவித்த உடல் ரீதியான உளரீதியான தாக்கங்களை உணர்ந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். இவற்றை இனியாவது பொலிசின் உயர்மட்டம் கவனத்திற்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். பொலிஸ் அதிகாரங்கள் சம்பந்தமான மாகாணசபை அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டவையே என்பது யாவரும் அறிந்ததே. எனினும் மக்கள் நலம் நோக்கி எமக்குள் புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருந்தால்த்தான் சமுதாயச் சீரழிப்பாளர்களை நாங்கள் வெற்றி கொள்ளலாம்.
எம்மைப் பொறுத்தவரையில் மக்களிடையே அறிவையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவது எமது தலையாய கடனாகும். இதுகாறும் தமிழ் மக்களிடையே வன்முறைக் கலாசாரம் தலைதூக்கியிருந்தது. பயத்தினால் குற்றங்களில் ஈடுபடாதிருந்தோர் பயம் அவர்களை விட்டதும் மிருக வெறியைக் காட்டி நிற்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. மனித உரிமைகள் முக்கியமாக பெண்களின் உரிமைகள் பற்றி எமது சமுதாயம் போதிய அளவு அறிந்து வைத்திருப்பது அவசியம். இவை முன்னர் எமது பண்பாட்டுச் சூழல் காரணமாக இயற்கையாகவே
 மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இனி நாங்கள் அறிவையும் விழிப்புணர்வையும் கட்டாயமாக மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலமாகத்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இதற்குக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது அமைப்புக்கள், சமய சார்பான நிறுவனங்கள் போன்ற பலவும் உதவ முன்வர வேண்டும்.
அருமருந்தன்ன ஒரு கெட்டிக்காரப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்து கொன்று விட்டிருக்கின்றது எமது சமுதாயம். சமுதாயத்தில் குடி கொண்டிருக்கும் வன் எண்ணங்களின், சீர்கேட்டின் பிறழ்நடப்புக்களின் பிரதிபலிப்புக்களாகவே குற்றம் இழைத்தோரை நான் காண்கின்றேன்.
சமுதாய விழிப்புணர்ச்சி இனியேனும் எம்முள் எழ வேண்டும். வித்தியா சம்பந்தமாக விளம்பல்களைச் செய்து விட்டு சில காலத்தின் பின்னர் வாழாதிருப்பதில் பயனில்லை. பல விடயங்களை ஆராய வேண்டியுள்ளது. வித்தியாமீது குற்றங்கள் இழைத்தவர்களுக்கு அப்பால் அண்மையில் வன் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு அரசியல் காரணங்கள் உண்டா? எமக்கு யாராவது பாடங்கள் சில புகட்ட எழுந்திருக்கின்றார்களா? அவை என்ன? என்ற பல
 கேள்விகளும் ஆராய வேண்டியுள்ளன. எனினும் முதலில் பொலிஸாரின் விசாரணைகள் முடிவடையட்டும். இவை பற்றி நாம் அதன் பின் ஆராய்வோம். வன்முறைகள் சடுதியாகத் தலைதூக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்பதே எனது கணிப்பு. மக்கள் பொலிஸாருக்குப் போதிய உதவியை நல்க முன்வர வேண்டும். வன்செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயந்து ஒதுங்கி இருக்கக் கூடாது. யாரேனும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்தரங்கமாகவேனும் உங்களுக்குத் தெரிந்ததைத் தெரியப்படுத்துங்கள். தீவகப் பகுதிகளில் பிறிதொரு அரசியல் அலகோ என்று எண்ணும் வண்ணம் சிலர் செயல்ப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் அக்காலம் மலையேறிவிட்டது. மக்கள் மனத் திடத்துடன் இனி முன்னேற முன்வர வேண்டும்.
மரணித்த மகளை எமக்கு ஈடுசெய்ய முடியாது. தாய், தந்தையர், உற்றார், உறவினரின் கலக்கத்தையும், சோகத்தையும், மனவருத்தத்தையும் நாங்கள் நன்கு உணர்கின்றோம். அவர்களுக்கு எமது அடி மனதில் இருந்து வரும் அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். வடமாகாணசபையினர் தம்மால் முடியுமான உதவிகள் அனைத்தையுஞ் செய்ய கடமைப்பட்டிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட குற்றங்கள் இனியும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளவேண்டுமென முதலமைச்சர் தனது அறிக்கையினில் தெரிவித்துள்ளார்

 

16/5/15

வடக்கில் சத்தமில்லா யுத்தம் நடக்கிறது ...!

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு.  அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.
யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வடக்கில் நிகழும், நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் ஏதோ ஒரு வகையில் தமிழ் இனத்தின் அடையாளங்களையும், பண்பாட்டு கலாச்சார சீரழிப்பின் உந்துதலாகவே காணமுடிகின்றது.
இதை சற்று ஆழமாக ஆராய வேண்டிய தார்மீகக் கடமையில் நாம் இருக்கின்றோம்.
யுத்தம் முடிந்த 2009ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கில் தமிழர்களை அடக்கி, பயமுறுத்தி வைக்க வேண்டிய தேவை அரச தரப்பிற்கு உடன் அவசியமாயிற்று. அதன் அங்கமாகவே கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் வெள்ளை வான் கும்பல்கள் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தன.
இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்தவர்களும், விமர்சித்தவர்களும், முன்னாள் போராளிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் என அத்தனை பேரும் ஏற்றப்பட்டார்கள்.
அதே சமகாலத்தில் கிறீஸ் பூதமும், மர்ம மனிதன் நடமாட்டமும் மக்களை அச்சுறுத்தி பயப்பீதிக்குள் வைத்திருந்தது ஆளும் தரப்பு. அதன் தொடர்ச்சியாய் நீண்டு சென்றது தான் ஆவா குரூப். இது வடக்கில் வாள்வெட்டு சம்பவங்களில் முக்கிய பங்காற்றியிருந்தது.
இவையெல்லாம் ஒரு இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்குவதில் முதன்மை பெறும் காரணிகள்.

2009ம் ஆண்டிற்கு முன்னர் அதாவது வடக்கில் புலிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்த வேளை,  வாள்வெட்டுக்களும், கற்பழிப்புக்களும், போதைப்பொருட்களின் பயன்பாடும் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன.
அன்றைய காலகட்டங்களில் மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தினையும், தமிழ் இனத்தின் போக்கினையும் புலிகள் தீர்மானித்திருந்தார்கள். இதனால் குற்றங்கள் குறைந்து இருந்தது அல்லது இல்லாமல் போயிருந்தன. இதனால் தான் புலிகள் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு என்று சர்வதேசமே ஒத்துக்கொண்டது.
இவ்வாறான ஒரு சூழமைவில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வடக்கில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இப்பொழுது வடக்கின் நிலையானது தமிழ் சினிமா மாதிரியிருக்கின்றது.
இப்பொழுது வடக்கில் தாராளமாக போதைப்பொருட்களை அதன் தரகர்கள் மூலம் அரசாங்கம் உள்நுழைத்துள்ளது. இது கோத்தபாயவின் காலத்தில் முளைவிடத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அது பெருவிருட்சமாக வளர்ந்து சாதாரணமாக மாறியுள்ளது.
வாள்வெட்டுக்கள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இளைஞர் குழுக்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டும், வன்முறையில் இறங்கி விடுகின்றார்கள். இதை காவல்த்துறை தட்டிக்கேட்பதாக இல்லை.
அதேவேளை பெண்களின் பாதுகாப்பு என்பது இப்பொழுது கேள்விக்குறியாக மாறியுள்ளது. நேற்றைய தினமும் புங்குடுதீவில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டிருக்கின்றாள்.
இவ் வன்புணர்விற்கும், கொலைக்கும் குடும்பப் பகை தான் காரணம் என்று ஆகப்பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதனை சாதாரணமான கோணத்தில் நாம் நோக்குவது நல்லதல்ல. வடக்கில் இப்பொழுது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது போதைப்பொருட்களின் பயன்பாடு.
இது எங்கிருந்து வடக்கிற்கு செல்கின்றது. இதை யார் எப்படி விநியோகிக்கின்றார்கள். இதற்கான இடைத்தரகர்கள் யார் என்பதெல்லாம் அரசாங்கத் தரப்பிற்கும், பொலிஸாருக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் இவை யாவும் திட்டமிட்ட வகையிலான ஒரு இனவழிப்பின் மறுவடிவம் என்பது தான் உண்மை.
ஆயுத ரீதியில் போராடிய தமிழ் இனத்தினையும் அதன் போராட்டத்தினையும், பேரம் பேசும் சக்தியையும் நிர்மூலமாக்கிய பின்னர், தமிழ் இனத்தின் அடுத்த சந்ததியை குறிவைத்து செயலாற்றும் காரியத்தை தொடங்கியுள்ளது பேரினவாத அரசாங்கம்.
ஒரு இனத்தின் இளைய தலைமுறை சிந்திக்கும் ஆற்றலும், தன் இனத்தின் பற்றையும் கொண்டு இருக்குமாயின் அது தனக்கும் தனது இனத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளையும், அடக்குமுறையினையும் தட்டிக்கேட்க துணிந்து எழும். ஆனால் அந்த இளைய தலைமுறையின் வாழ்வில் சில திசை திருப்பல்களை செய்தால் தமக்கு தலையிடி குறையும் என நினைக்கின்றார்கள் சிலர்.
ஆம் போதைப்பொருட்கள் வடக்கிற்கு கடத்தப்படுவதற்கான காரணங்களில் முதன்மை பெறுவது இனத்தின் வேரையே அழிப்பதற்கான முதன்மை காரணியாக திகழ்கின்றது.
நமது இளைஞர்களை போதைப்பொருட்களுக்கு அடிமைப்படுத்திவிட்டால் அவர்கள் தம் இனம் சார்ந்தோ தமது எதிர்காலம் சார்ந்தோ சிந்திக்க மாட்டார்கள் என்பது அவர்களின் முடிவாக இருக்கின்றது.
இதனால் தான் போதைப்பொருட்களை வடக்கில் விநியோகிக்கும் கும்பல்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ காவல்துறை துணிந்து செயற்படவில்லை.
மாவீரர்களுக்கும், யுத்தத்தில் பலியானவர்களுக்கும் விளக்கேற்றியவர்கள் யார் என்று கண்டறிந்து உடனேயே கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் இவர்களால் போதைப்பொருள் விநியோகஸ்தர்களை கைது செய்ய முடியவில்லை.?
பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர்களுக்கும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் தண்டனை வழங்க முன்நிற்பவர்கள் சட்டவிரோத, தடை செய்யப்பட்ட இவ்வாறான போதைப்பொருட்களை வைத்திருக்க அனுமதிப்பது ஏன் என்று யோசித்தால் எல்லாமே பதில் ஒன்று தான், இனவழிப்பை நேர்த்தியாக அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
இப்பொழுது வடக்கில் நிகழும் பாதி சீரழிவுக்கு காரணமே இவ்வாறான போதைப்பொருட்களின் பயன்பாடு தான். ஆரம்பத்தில் போதைப்பொருட்களினை இலவசமாகவே இக்கும்பல்கள் வழங்கியதாக முன்னர் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.
ஆக அடிப்படையில் மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த இப்பொழுதே தயாராக வேண்டும்.
யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களுக்கு என்று ஒரு தமிழர்களின் சக்தியாக திகழ்வது வடமாகாண சபை. இது ஆட்சிப்பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகளை கடக்கப் போகின்றது.
ஆனால் இவ்வாறான குற்றங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிகழ்வதனை தடுக்காமல் தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்று எடுக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது.
அப்படி இனத்தின் விடுதலையை பெறவும் முடியாது. புலிகளின் இடத்தில் வடமாகாண சபை இருந்தாலும்,(புலிகளின் பலத்தோடு) இல்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வடமாகாண சபை இருக்கின்றது.
ஆக, கடமையை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
இப்படியே நிலமைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமானால் இன்று புங்குடுதீவில் நடந்ததைப்போல இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை தமிழ் இனம் சந்திக்க வேண்டியிருக்கும்.
அதற்கு வடக்கில் அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு செயலில் இறங்க வேண்டும்.
சத்தமாக நிகழ்த்தப்பட்ட போர் நின்று விட்டது. இப்பொழுது சத்திமில்லாத போர் தமிழ் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. அது எதிர்காலத்தில் இன்னும் வீரியம் பெறும்.
காலத்தின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இல்லேயேல் 2009 அழிவை விட மிகப்பெரிய அழிவு காத்திருக்கின்றது. அதையும் இந்த தமிழ் இனம் சந்திக்கப் போகின்றதா?
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14/5/15

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள், கனடா

முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்கநாள். சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாக நினைவு கூர்வோம்.
இடம் St peter and Paul உள்ளக மண்டபத்தில் 231 Milner Avenue
மே-18, 2015 நிகழ்வு பின்பகல் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அஞ்சலி கூட்டமும் நிகழ்வுகளும்.
அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம் நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் அமைப்புக்களும்.
தொடர்புகளுக்கு 416-751-8483 அல்லது 647-200-8092.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

10/5/15

போரில் இறந்த அனைவரையும்மே 18ம் நாள் நினைவு கூர அரசாங்கம் ஏற்பாடு***வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட மே 18ம் நாள், சிறிலங்காவில் ஆயுதப்படையினரின் நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டு, போர் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், ஒழுங்கு செய்யப்பட்டு வந்த நிகழ்வு இந்த ஆண்டு மாத்தறையில் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம், மே 18ம் நாளை வித்தியாசமான முறையில் கடைப்பிடிக்கவுள்ளது.

இந்த நாள், சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக கடைப்பிடிக்கப்படவுள்ளது என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


9/5/15

களமிறங்கும் மஹிந்தவுக்கு எதிராக மற்றுமொரு குழு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டால்,  அதற்கு எதிராக போட்டியிட மற்றுமொரு தரப்பு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார்கள்.
தங்களுக்கும் பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சிரேஸ்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுப்பார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது எந்த சந்தர்ப்பத்திலும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை சுதந்திரக் கட்சி பெயரிட்டதில்லை.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை சுதந்திரக் கட்சி தேர்தலின் பின்னரே தீர்மானிக்கும்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியும் இதே வழிமுறையை பின்பற்றுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருடையதும் தனிப்பட்ட சொத்து கிடையாது.
நாட்டின் தேவைகளையும் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையிலுமே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி என்ற ரீதியில் வெற்றியீட்டுவதே எமது நோக்கமாக அமைந்துள்ளது.
மாறாக தனியொரு நபரை மன்னராக்குவது எங்களது நோக்கமல்ல என எஸ்.பி. நாவீன்ன சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

7/5/15

முக்கிய ஐந்து விடயங்கள் பற்றிய மைத்திரி - மஹிந்த சந்திப்பு*

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சுமுகமாக இடம்பெற்றது.
இதன்போது 5 பிரதான அம்சங்கள்
 குறித்து ஆராயப்பட்டதோடு தொடர்ந்து இருதரப்பினரும் சந்தித்துப் பேசவும் உடன்பாடு காணப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இருதரப்பு சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான விடயங்களே பிரதானமாக ஆராயப்பட்டன.
01. அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்,
02. உள்ளுராட்சி சபைகளை கலைத்தல்,
03. அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக போட்டியிடுதல்,
04. வேட்பாளர்களுக்கு வேட்பு மனு வழங்குதல்,
05. விசேட குற்ற விசாரணைப் பிரிவு அரசியல் மயமாக்கப்பட்டு சில எம்.பி.க்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஆகிய ஐந்து விடயங்கள் குறித்து இதன் போது கவனத்திற் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, துமிந்த திசாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன, பைசர் முஸ்தபா எம்.பி. ஆகியோரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் முன்னாள் 
அமைச்சர்களான பந்துல குணவர்தன, குமார வெல்கம, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அலஹப்பெரும, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா, சு.க. செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இதேவேளை இருதரப்பு சந்திப்பு தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த சுதந்திரக் கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்சித் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கட்சி போசகர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் 5 பிரதான அம்சங்கள் ஆராயப்பட்டன. இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
இங்கு ஆராயப்பட்ட சகல விடயங்களையும் அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஆழமாக ஆராயவும் இதன்போது உடன்பாடு காணப்பட்டது. அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
மத்திய குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப கட்சியிலுள்ள சகலரும் ஒழுங்காக செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இரு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் எதுவித நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை.
கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள், மதத் தலைவர்கள் அமைப்பாளர்கள் போன்றோர் இருதரப்பிற்கும் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சில சக்திகள் இந்த சந்திப்பை நிறுத்த முயற்சி செய்தன. இந்த சந்திப்பு குறித்து ஐ.தே.க. அச்சமடைந்துள்ளது.
ஒரே கட்சியாக ஒன்றுபட்டு முன்னோக்கிச் செல்வதே எமது நோக்கமாகும். இந்த பேச்சுவார்த்தை ஆரம்பம் மட்டுமே. இந்தச் சந்திப்பு தொடர்ந்து இடம்பெறும் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

6/5/15

முக்கிய உயர் அதிகாரி இரண்டு நாட்களுக்குள் கைது?

மகிந்த அரசாங்கத்தில் பிரபலமாக இருந்த அதிகாரி ஒருவர் எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
பாதுகாப்பு சம்பந்தமான துறையில் இருந்த பிரபலமான ஒருவரே இவ்வாறு ஊழல் மோசடி தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரிடம் இதுவரையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 
குறிப்பிடப்படுகின்றது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

5/5/15

நாளை மைத்திரிமகிந்த சந்திப்பு உறுதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடையிலான சந்திப்பு நாளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய நாளை காலை 10 மணிக்கு அல்லது மாலை 2 மணிக்கு இச்சந்திப்பை நடத்த ஜனாதிபதி நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதற்கு முன்னர் சபாநாயகரின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பு சந்திப்பும் கடந்த மாதம் 25 திகதி இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.
எதுஎவ்வாறு இருப்பினும் இச்சந்திப்பு நாளை இடம்பெறுவது  உறுதி என  கொழும்பு அரசியல் தகவல்கள்
 தெரிவிக்கின்றன
. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

3/5/15

முள்ளிவாய்க்காலின் எண்ணச்சுவடுகள்

நாட்கள் நெருங்க
நெஞ்சில் பதை பதைப்பு
முள்ளிவாய்க்காலின்
எண்ணச்சுவடுகள்
இதயத்துள்
ரணமாக்கிப் போன காயங்கள்….
இன்னும் ஆறாத வடுக்களாய் 
மருந்திட முடியா வலிகளாய் 
எத்தனை அனாதைகள்
எத்தனை அங்கவீனர்
எத்தனை சொத்துக்கள்
எத்தனை சோகங்கள்
அப்பப்பா…
இன்னொரு ஜென்மம் போதாதே
இருண்ட தமிழர் வாழ்வு
தலைநிமிர்ந்திட
கொடிய அரசு கொட்டிய 
கொத்துக் குண்டில்
மாட்டு போனதெ 
எல்லாமே இங்கே…

எத்தனை ஆண்டுகள் 
ஆனாலும் 
நினைக்கு அந்த நிமிடம்
வலிக்கும்
நாளானதே…
கண்ணீர் வந்து
சொல்லிச் செல்லுதே
மனச்சுமைகளை
தமிழர் சோகங்களை…
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/5/15

எழுச்சியோடு நோர்வேயில் நடைபெற்ற மேதினநாள்


 நோர்வேயில் உழைக்கும் வர்க்கத்துக்காக ஓங்கிக்குரலெழுப்பும் இந்நாளில் உரிமைக்கா தமிழர்களாகிய நாம் குரலெழுப்பி வருகின்றோம் அதேவேளை சிறீலங்காவால் இன அழிப்புக்குள்ளான எமது மக்களுக்கா சர்வதேசவிசாரணையை வலியுறுத்தி வருகின்றோம்.
2008 ஆண்டு தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையில் குறிப்பிட்டதிற்கு ஏற்ப இளயவர்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பது விடுதலையை வென்றெடுக்கும் நம்பிக்கையில் பெரும் பலத்தை சேர்த்துள்ளது
தமிழர்கள் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இன அழிப்பை மூடிமறைக்க சிறீலங்காவும் அதன் முண்டு சக்திகளும் சிறீலங்காவின் அதிகார முகத்தை மாற்றிவிட்டு தமிழர்களை மீண்டும் ஏமாற்றலாம் என்ற அங்கலாப்பில் அகலக்கால் வைத்து அதற்கான ராஜதந்திர அரசியல் போரை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
இதற்கு சில தமிழர்களும் இணக்க அரசியல் என்ற போர்வையை போர்த்தி மாவீரர்களினதும் மக்களினது கனவுக்கு உலைவைப்பதற்கு கங்கணம் கட்டி நிற்பது எமக்கு வேதனையை தருகிறது
இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்த இளையவர்களின் அரசியல் போராட்டம் ஆறுதல் அளிக்கின்ற அதேவேளை சிறீலங்காவுக்கும் அதன் முண்டு சக்திகளுக்கும் தலையிடியாகவுள்ளது என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்
ஆகவே எமது அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமான ஆர்ப்பாட்டங்களில் எமது நியாயமான போராட்டத்தை இந்த உலகம் முற்று முழுதாக ஏற்கும் வரை எமக்கான உரிமைக்குரலை உயர்த்திச்சொல்லுவொம்
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
1/5/15

தப்பி சென்ற அதிகாரிகள்: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத் துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>