siruppiddy

19/12/15

ஐீ.ரி.வி நேரலை: மாவீரர்நாள் 27.11.2015 அறிவிப்பாளரான முல்லைமோகன்

யேர்மன் டோட்மூண்ட் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வை ஐீ.ரி.வி நேரலை செய்திருந்தது, அதன்போது அதைதொகுத்து வழங்கியவர் யேர்மனியில் சிறந்து விளங்கும் அறிப்பாளரான மணிக்குரல்தந்த முல்லைமோகன் அவர்கள் அந்த நேரலையின் ஒருங்கிணைப்பு ஐீ.ரி.வியின் யேர்மன் கலையகப்பொறுப்பாளர் சிவலிங்கம் 
அவர்கள்,
இதற்கான சற்லைற் இணைப்பு படப்பிடிப்புகளை டோட்முண்ட M.S விடியோ
செ ய்திருந்தது ஒளிப்பதிவாளர்களாக சக்தி அவரின் இருமகன்கள் ஓபகவுசன் ரூபன், கபில் என இணைந்து சிறப்பானது தொழில் நுட்பம் M.S விடியோ
படக்கலவை எஸ்.தேவராசா என மாவீரர் பணிக்காய் அனைத்துக்கலைஞர்களும் கைகோர்த்து நின்றது
 சிறப்பைத்தந்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


10/12/15

இ,கவிமகளின் மழைக்குள் இருந்து ஓர் குரல் -2

"நான் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஏற்பட்ட அதி பயங்கர மன அதிர்ச்சியை இந்த நாலு நாட்களும் அனுபவித்தேன் கவி  இதை குறிப்பிட்டவர், தமிழீழத்தின் மீது அதீத பற்றுக் கொண்ட ஓவியர் புகழேந்தி. அவருடனான 
தொடர்புக்காக
 பல தடவைகள் செய்த முயற்சிக்கு பின்னான தருணம் ஒன்றில் அவரது தொடர்பு கிடைத்த மகிழ்வில் "சேர் எப்பிடி இருக்கிறீர்கள்...? கேட்ட கேள்வியின் பதிலாக கிடைத்தது இந்த பதில்.
அவர் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். உண்மையில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நானும் சில நாட்களாக எங்கள் நட்புக்களின் கிடைக்காத தொடர்புகளிலும் , அறிய முடியாது தவித்த அவர்களுடைய துயர்நிறைந்த வாழ்க்கையிலும் நாம் முள்ளிவாய்ககால் மண்ணில் முடக்கப்பட்டிருந்த போது என் உறவுகள் எம் நிலையை அறிய துடித்த வினாடிகளை உணர முடிந்தது.
மினசாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் இல்லை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிமிடங்கள் முழுவதும் பலத்த துன்பத்தை சுமந்து கொண்டிருந்தனர் எங்கள் உறவுகள். "கவி நான் இந்த நாட்களில் என்னைப்பற்றியோ எனது குடும்பத்தை பற்றியோ
 நினைத்து 
கவலை கொள்ளவில்லை. காரணம் நாங்கள் இதுவரை பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம். நான்கு சுவரைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் இருக்கும் உணவை பிரித்து உண்டால் கூட குறைந்தது ஒரு வார காலத்திற்கு என் குடும்பம் உணவுப் பிரச்சனையில் இல்லாது வாழ முடியும். ஆனால் வீட்டை இழந்து ஒரு பருக்கை சோறு கூட கிடைக்காத 
நிலையில் 
போட்டிருந்த ஒரு ஈர உடையோடு விடிய விடிய தண்ணீரில் உதவிகளுக்காக காத்திருந்த குழந்தைகள் நிலையைதான் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
உண்மையில் இந்த வார்த்தைகளை அவர் கூறிய போது அவரது விழிகள் நிட்சயமாக கண்ணீரால் நனைந்திருக்க வேண்டும் ஏனெனில்
 அவரது உணர்வுகளை
 நான் பேச்சின் மூலமே உணர்ந்து கொண்டேன். நான் உரையாடிய அந்த நிமிடங்கள் ஒவ்வொன்றிலும் சென்னையின் துயரத்தை குறிப்பதிலே அவர் கருத்தெடுத்தார். கவி சென்னைக்குள் இருந்து கொண்டே என்ன நடக்குறது எமக்கு என்பதை அறிய முடியாத அந்த கணங்கள் ஒவ்வொன்றும் கொடியது. இந்த துயர சம்பவத்துக்கு என்னால் யார் மீதும் குற்றம் 
சுமத்த முடியாது
 உள்ளது. மழை வெள்ளம் கரை புரண்ட போது ஏரிகளை திறந்து விட்டது தவறாக பலர் நினைக்கலாம் ஆனால் அது திறக்கப்பட வில்லை என்றால் ஏரிகள் அனைத்தும் உடைப்பெடுத்திருக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்குமாயின் சென்னை முழுவதும் பாரிய அழிவுக்குள்ளாகி இருக்கும். சிலவேளை முற்றுமுழுதாக 
அழிந்திருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திறந்து விட்ட செயற்பாடானது நிட்சயமாக ஏற்றுக்கொள்ள
 வேண்டியதாகிறது.
அவர் தொடர்ந்து பேசினார். அப்போது நான் குறுக்கிட்டு சேர் மன்னிக்கனும், எங்கள் உணர்வுகளை ஓவியங்களாக்கி உலகத்துக்கே எங்கள் உணர்வுகளை கூறிய அத்தனை ஓவியங்களும் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது..? ஆம் கவி என் வீடு அமைந்துள்ள இடம் மேட்டுப்பகுதி அதனால் என்னால் அவை பாதுகாக்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னும் ஓரிரண்டு 
சென்டி மீட்டர் தண்ணி எம் பகுதிக்குள் புகுந்திருக்குமாயின் அத்தனை ஓவியங்களும் இயற்கையால் அழிக்கப்பட்டிருக்கும். இப்போது வேறு முயற்சி பற்றி சிந்திக்கிறேன் அவற்றை பாதுகாக்க வேண்டும். ஆமா சேர் நீங்கள் கூறுவதே நானும் எதிர் பார்த்தேன். நியமாக அவற்றை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்த இடத்திலே நான் ஒரு விடையத்தை குறிக்க விரும்புகிறேன். இன்றைய சூழலில் பல்லாயிரம் உறவுகளின் சொத்திழப்பு மற்றும் வாழ்வாதாரவிழப்புக்களுக்கும் பலநூறு மக்களின் உயிரிழப்புக்களுக்கும் மத்தியில் இந்த ஓவியங்கள் தொடர்பான பாதுகாப்பு என்பது அவசியமா என்று உங்களுக்கு வினா எழலாம் ஆனால் இதைக் கட்டாயமாக நான் வினவ வேண்டிய நிலை உண்டு. ஈழ போராட்ட வரலாற்றில் 
எமது வலிகளை 
நாம் நமக்கே புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை ஆனால் பல ஊடக முறமைகள் இதைத்தான் செய்கின்றன. ஆனால் ஓவியங்கள் என்ற இந்த ஊடகத்தின் மூலம் நாம் பெற்ற அடவுகள் ஒப்பீட்டளவில் அதிகமானவை வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஊடகமாகவே நான் ஓவியங்களைப் பார்க்கிறேன். அதனால் அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எம் வலிகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கடப்பு எமக்கு இருக்கிறது.
" சேர் அடுத்து வரும் நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? கவனமாக இருங்கள். நான் இப்போது பணி காரணமாக விடைபெறுகிறேன். தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம். நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.
இ,கவிமகன்.
08.12.2015
நீண்ட உரையாடல்களில் இருந்து முக்கியமானவற்றை எடுத்து பதிவாக்கியுள்ளேன்...... 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


மழைக்குள் இருந்து ஒரு குரல்-01

நாங்கள் இப்ப நல்லா இருக்கிறம். இப்ப கொஞ்சம் தண்ணி வடிஞ்சிட்டுது. இன்றுதான் கரண்ட் வந்திச்சு. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் மண்ணை கடந்து வந்திருக்கிறம். பாவப்பட்ட எங்கள் மீது தான் மீண்டும் மீண்டும் துன்பத்தை இந்த கடவுள் விதைக்கிறன். ஏற்கனவே ஏற்பட்டிருந்த வலி இன்னும் ஆறவில்லை அதற்குள் மீண்டும் தொடரும் அவலங்களால் எங்கள் வாழ்க்கை துயரம் நிறைஞ்சு போய் கிடக்குது. நியத்தில் கடவுள் உண்டா? இந்த கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது?
சரி நாங்கள் ஏதோ பாவத்தை செய்து பிறந்தோம் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? பச்சிளம் பருவத்திலே தந்தையை பறி கொடுத்தார்கள் கண்முன்னே பல உயிர்கள் மடிந்ததை கண்டு ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீள முன் இவ்வாறு துன்பத்தை இந்த கடவுள் ஏன் அவர்களுக்கு கொடுத்தான்...?
தம்பி கிட்டத்தட்ட ஒரு வாரங்கள் யாருமே அற்ற தனிமையில் வெளித் தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் என் இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உதவிக்காக காத்திருந்தேன். ஆனால் உதவி எனக்கு கிட்டவில்லை. நான் நினைக்கிறேன் நெஞ்சளவிற்கு அதிகமான தண்ணீர் 
பாச்சலிற்கு நடுவில் 
நடுக்கடலில் கைவிடப்பட்டவர்களாக நாங்கள் கிடந்தோம். இருந்த உணவுப்பொருட்களை பகிர்ந்து குழந்தைகளின் பசியாற்றிக் கொண்டு மழைநீரை கொதிக்க வைத்து பருகிக்கொண்டும் எங்களின் இறுதி மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டிருந்தோம்.
பிள்ளைகள் பயத்தில் உறைந்து போய் கிடந்தனர். வெளியில் என்ன நடக்குறது என்றது புரியவில்லை. இருட்டும் குளிரும் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த வெள்ளமும் அவர்களை நிலைகுலைய வைத்திருந்தது. எப்போதும் என்னை இறுக பற்றிக் கொண்டே இருந்தார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் வெடிகுண்டு மழைக்குள் எவ்வாறு தவித்தோமோ அதே போலவே நாங்கள் தவித்துப் போய் கிடந்தோம். இருட்டும், துயரமும், உயிர்பிழைத்தலுல் எமக்கு புதியவை அல்ல பல தடவைகள் எங்கள் மரணத்தை 
கண்முன்னே
 பார்த்தாலும், அருகில் உதவிக்கு உறவுகள் இருந்தது எமக்கு கொஞ்சம் பலத்தை தந்தது ஆனால் இங்கு தனிமையே எழுந்து எம்மை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் நாங்கள் மீண்டும் ஒருமுறை மீண்டு வந்துள்ளோம்.
இது நீண்ட முயற்சியின் பின் இன்று கிடைத்த ஒரு தொலைபேசித் தொடர்பில், இறுதி சண்டையில் தேசத்துக்கான விடுதலைப்போரில் தனது துணையை வித்தாக்கி தமிழகத்தில் உயிர்வாழ்தலுக்காக தஞ்சமடைந்த ஒரு சகோதரியின் குரல்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/12/15

இரகசிய முகாம்களில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்படவில்லை!

யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பா ட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெலிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை
குறிப்பிட்டார்.
யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு உள்ளநாட்டிலேயே நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ள தாக முன்னாள் ஜனாதிபதி 
சுட்டிக்காட்டினார்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளின் அபிவிருத்திக்கு தேவையான நிதி, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர்
 குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து பண்டிகைகளை நடத்துவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
 இந்த நிலையில்
 இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப் பிட்டார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் யாரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவி யலாளர்களினால் அரசியல் கைதிகளின் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதியிடம் சில கேள்விகள் வினவப்பட்டன.
இதன்படி தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கட்டங்களாக விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த நிலையில் குற்றங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களை
 உடனடியாக விடுதலை 
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றங்கள் இழைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சிறு குற்றங்களை இழைத்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
 குறிப்பிட்டார்.
எனினும் தமிbழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் காணப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும என அவர் கேட்டுக்கொண்டார்.நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக 
தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அதனை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் எனவும் 
கூறியுள்ளார். இந்த நிலையில் இராணுவ ரீதியில் யுத்தத்தினை வெற்றிக்கொண்டுள்ள போதிலும் இயல்பான சமாதானத்தை இன்றும் வெற்றிகொள்ள முடியவில்லை என அவர் 
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்ற ரீதியிலேயே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>