siruppiddy

30/11/15

உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், உயிருடன்???

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்……
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.
போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச்
 சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.
அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை 
கொண்டிருந்தார்கள். 
ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, 
தமிழர்களின் 
நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!
பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,
”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை 
பத்திரமாகக் 
கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் 
கடிதம் எழுதியதை 
வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.
பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.
புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.
எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. க
ருணா, சிங்கள 
அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த 
ஒருவரின் சடலத்தை 
ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, ‘ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.
புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் 
கண்டிருக்கிறது. 
இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் 
கேட்டு இந்திய அரசு, 
சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை 
ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் 
காடுகளுக்குள் ராணுவம்
 திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.
மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.
பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28/11/15

மிகவும் அமைதியாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு;பொலிஸ்சர்தெரிவிப்பு ?

வடக்கு- கிழக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டதாகவும், சட்டத்தை மீறியமைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் அதில் தலையிடவில்லை என்றும் அவர் 
விளக்கமளித்துள்ளார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை முன்னிலைப்படுத்தி எவ்வித
 ஆர்ப்பாட்டங்களோ, 
ஊர்வலங்களோ, நிகழ்ச்சிகளோ பிரசித்தமான முறையில் முன்னெடுக்கப்படாமையினால் பதற்றமான சூழ்நிலை காணப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


26/11/15

இறைவன் ஆனான் பிரபாகரன் இறந்து போனான்.ஆறுமுகன்!

ஆசியாக் கண்டத்தின்
உச்சத்தில் உதித்த
ஈழத்துச் சூரியன்!
அச்சத்தில் மூழ்கிய
அப்பாவித் தமிழரின்
விலங்கினை உடைத்து
உலகின் உச்சத்தில் வைத்த
உன்னதத் தலைவன் இவன்

பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்
தமிழனை சிங்களக் கொள்ளையன்
அடிமைப் படுத்தி ஆண்ட போது…
இலங்கைத் தலையின் மூளையில்
வல்வைத் தாயின்…
வீரத் திரு வயிற்றில்
உலகத் தமிழர்களின்…
ஒட்டு மொத்த மூளையாக
உயிராகி… உருவாகினான்..

கார்கால மழையில் – ஓர்
கார்த்திகை நாளில்
இருட்டியது ஊர்…
இருபத்தி ஆறு நன்னாளில்
எடுத்தது வீரத்தாய்க்கு வலி!
பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!
அன்று – உருவானது
தமிழர்களுக்கான புதிய வழி!

இலங்கைத் தலையில் பிறந்து
தமிழர்களின் மூளையானன்!
ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…
மூலையில் முடங்கிக் கிடந்த
ஈழத் தமிழர்களுக்கு
புதிய அத்தியாயமும் தொடங்கியது!
புதிய பாதையும் பிறந்தது!!

இரத்தச் சேறில் புதைந்த
தமிழர்களின் நிலையினையும்…
பரல் தாரில் அவிந்த
குழந்தைகளின் உயிரினையும்…
வலி நிறைந்த
வார்த்தைகளால் கேட்டு…
தன் இதய வலிகளால் சுமந்தான்!
தலைகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் சொத்துக்கள்
நொறுக்கப்பட்டும் – பெண்களின்
மானங்கள் பறிக்கப்பட்டும்
புனித உயிர்ப்பைகள் நிரப்பப்பட்டும்
தாய்மை மார்புகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் உடலங்கள் அறுக்கப்பட்டு
மாமிசங்களாக்கப்பட்டும் – வீதியோரக்
கடைகளில் விற்கப்பட்டதையும்
முகவரிகளே இல்லாமல்
அழிக்கப்பட்டதையும்…
பார்த்தும், படித்தும், கேட்டும்
பதறித் துடித்துப் போய்
பதினான்கு வயதினிலே…
பிறந்தது நெஞ்சத்தில் வலி!
சிங்களனைக் கூண்டோடு அழிக்க
பதினேழு வயதினிலே…
உறுமிப் பாய்ந்தது புதிய புலி!
நீங்கியது தமிழர்களைப் பிடித்த பிணி!
துவங்கியது…
சிங்களவனுக்கு ஏழரைச் சனி!!

தாழ்ந்து போன தமிழன் எழுந்தான்!
எழுந்து வந்த தமிழன்…
உலகினில் உயர்ந்தான்!
புலியாகிப் பொங்கி எழுந்து பாய்ந்தான்!
பலியாகிப் போய் மடிந்தான் சிங்களன்!
தமிழர்களின் வாழ்வில்…
பிறந்தது புதிய விடிவு!
சிங்களனுக்குத் தொடங்கியது…
துன்பமான முடிவு!!

பதுங்கியிருந்த தமிழன் பாய்ந்தான்
பிரபாகரன் பெயர் சொல்லி எழுந்தான்..!
களங்கள் பல கண்டான்…
காவியங்கள் பல படைத்தான்..!
எதிரிப்படைகளை எல்லா முனைகளிலும்
தாக்கி அழித்தான்..!
கடல் மீது ஏறியும்…
காவியங்கள் பல படைத்தான்..!
சிறகுகள் முளைத்து…
விண் மீது ஏறியும்
வானையும் சாடினான்..!
உலக ஆயுத பெரும் பலத்தின்
முன்னால்…
மனபலத்தால் உடைத்தெறியும்
கரும்புலிகள்தனை படைத்தான்..!
எதிரி விழி பிதுங்கி
வாய் மூடி அடைத்தான்!

பொங்கி வந்த படையெல்லாம்
நொந்த படையாகின…
நொந்து போன படையெல்லாம்
இவனை ஒரு சக்தி என்றனர்..!
தம்மைக் காப்பாற்றாத
சாமி எல்லாம் எதற்கு என்றனர்..?

இலங்கைத் தலைநகரத்தின்
தலையில் ஏறி
உலுக்கிய போதுதான்…
உலகமே உணர்ந்தது,
இவன் மனிதப் பிறவியல்ல…
கடவுள்களின் அவதாரம் என்று!!!

ஆறடி அணுகுண்டு இவனை
அனுசரித்துப் போனால்தான்…
பலனுண்டு என
பயந்தது இரக்கமற்ற இலங்கை!!
பணிந்தது வல்லாதிக்க வல்லரசுகள்!!!

தமிழனின் வீரம்
உலகறிந்த காலம்…
தமிழர்களுக்கென உருவாகியது
உலகினில் புதிய கோலம்..!
உலகறியாத் தமிழனையும்
உயரத்தில் பார்த்தது உலகம்..!
தமிழனின் தனி வீரமும்
புதிய தனித்துவமான அடையாளமும்
உலக வரலாற்றில் பதிந்து போனது!
இதுதான், பிரபாகரனின் காலம்!!!

இவனைப் போன்ற தலைவன்
உலகினில் எங்கும் இல்லை!
இவனைப் போன்ற வீரத் தலைவன்
இனி பிறக்கப் போவதும் இல்லை!!
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்
அஞ்சா வீரத்துடன் பிறந்த
உலகின் ஒப்பற்ற தலைவன் இவன்!
தன் சொந்த மக்களுக்காகவே…
தனது இரத்தத்தையே
பலியிட்ட மானத்தலைவன் இவன்!!

மூலவளங்கள் இல்லாத
கண்ணீர்த் தேசத்திலே…
வீரத்தை விதைத்து
சுதந்திரக் காற்றினை
சுவாசிக்க வைத்து
மக்களின் கண்ணீரைத் துடைத்த
ஈர நெஞ்சுக்காரன்!!
இவனின் ஈர வரத்தினாலும்…
வீரத் தவத்தினாலும்…
இறைவனை மறந்து போய்
இவனையே இறைவன் எனக் கருதி
தமது நெஞ்சத்தில் இருத்தி
இதய தெய்வமாக வழிபட்டனர்…
ஈழ மக்களுடன்… உலகத் தமிழரும்!

உயிரற்ற…..
வார்த்தைகளை அள்ளி விடும்
அரசியல்வாதிகளுக்கு அப்பால்…
வருடத்திற்கு ஒரு தடவை பேசி
தமிழர்களின் கடவுளாகிப் போனான்
இவனின் உயிர் வார்த்தைகளையும்
தத்துவங்களாக…
உலகமே உள்வாங்கியது!!!
பேசாமலே இருந்து பேச வைத்தான்..!
இவன் பேசிய வார்த்தைகள்…
மந்திரங்களாகின… தமிழர்களுக்கு!
இவன் பேசாத நிமிடங்கள்…
தந்திரங்களாகின… எதிரிகளுக்கு!!

காலங் காலமாக…
கடவுள்கள் செய்யாத கடமைகளை
தன்னகத்தே கொண்டு
தரணியெங்கும் வாழும் தமிழர்களின்
தனிப்பெரும் கடவுளானான்!

அரிதாரம் பூசிய போலியான
கதாநாயகர்களுக்கு மத்தியில்…
அரிதாரம் பூசாத உண்மையான
கடவுளின் அவதாரம் இவன்!!
கொடுங்கோல் அரக்கர்களை
புதிய அவதாரம் எடுத்து…
அழித்தொழித்தான்..!
தமிழர்களின் இதய அறைகளிலும்…
வீட்டுப் பூசை அறைகளிலும்…
புதிய கடவுளாக அவதரித்து நின்றான்!

ஆறுமுகனைப் பார்த்தவர் யாருமில்லை!
பிரபாகரனைப் பார்க்காதவர் யாருமில்லை!!
உருவம் இல்லாத கடவுள்
மனிதரின் இதயங்களில் நிறைந்த மாதிரி
உருவமுள்ள எம் தலைவனும்
தமிழர்களின் இதயங்களில்…
இன்று வரையும் உயிரோடு வாழ்கின்றான்!!

இல்லாத கடவுளை
இருக்கிறார் என்கிறார்கள்…
இருக்கின்ற தலைவரை
இல்லை என்கிறார்கள்!!!
இல்லாத கடவுள் இருக்கின்ற போது…
இருக்கின்ற தலைவர்
எப்படி இல்லாமல் போனார்.
இல்லை என்று சிலரும்…
இருக்கிறார் என்று பலரும்…
சாட்சியங்கள் தேடுகின்ற
மனிதர்களின் எண்ணங்களிலும்…
தேடல் கொள்கின்ற இதயங்களிலும்…
உயிரோடு வாழ்ந்து வருகின்ற
உண்மைக் கடவுள் இவன்!!

உருவம் இல்லாத கடவுளுக்கு
சிலைகளை உருவாக்கும் இவ்வுலகில்…
உருவமுள்ள எம் தலைவனுக்கு
அழகு வார்த்தைகளால் கூட
வர்ணனைகள் செய்ய முடியாது!
அலங்கார வார்த்தைகளால் கூட
அலங்காரம் செய்ய முடியாது!!
இவ்வுலகினில் உள்ள…
எந்த வார்த்தைகளாலும்
அலங்கரிக்க முடியாத…
உலகத் தமிழர்களின்
தனிப் பெரும் கடவுளாகிப் போனான்..!
இவன் கடவுளாகிப் போனதால்…
எதுவும் செய்யாத கடவுள்
இறந்து போனான்…!
தமிழனைக் காத்து இவன்
இறைவனாகிப் போனான்!!!

எம் இறைவனை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை இங்கே..!
அதனால், தமிழர்களாகிய
நாம் வணங்கிக் கொள்கின்றோம்…
எம் இதயங்களின் உள்ளே!!!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23/11/15

சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!-

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்தின் முன் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி செயலாளர் அபேகோனும் கலந்து
 கொண்டனர்.
நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் நம்பிக்கையான முறையிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க முறையிலும், செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இதன்போது சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றங்களினால் நாட்டுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதோடு, இலங்கையின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த நல்லிணக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு அவதானத்துடன் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகளின் போது பல்வேறு தரப்பினரதும் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அவை குறித்து மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி சமந்தா பவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்தல், வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியிடம் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரி்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/11/15

ரகசிய சித்ரவதை கூடம்! ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்!!!

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடந்த காலத்திலும், யுத்தத்திற்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக முறைப்பாடுகள் எழுந்தன.
இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே-ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இக்குழுவினர், அண்மையில் இலங்கை
 வந்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். கொழும்பு மட்டுமின்றி, காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்றனர். காணாமல் போன தமிழர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களை சந்தித்துப் பேசினர். அவர்களின் 10 நாள் சுற்றுப்பயணம் நேற்றுடன் 
முடிவடைந்தது.
இதையடுத்து, தாங்கள் நேரில் கண்டவற்றை குழுவில் இடம்பெற்றுள்ள ஏரியல் துலிட்ஸ்கி நேற்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
இந்த பயணத்தின்போது, கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்டவிரோதமாக ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை 
கண்டுபிடித்தோம்.
யுத்தம் முடிவடைந்த ஓராண்டுக்கு பிறகும், அதாவது 2010-ம் ஆண்டுவரை அந்த கூடம் இயங்கி உள்ளது. அங்குள்ள பாதாள அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள், அங்குள்ள சுவர்களில் காணப்படுகின்றன.
இதை கண்டுபிடித்ததை முக்கிய கண்டுபிடிப்பாக கருதுகிறோம். இன்னும் இதுபோல் நிறைய இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகவே, இந்த கூடம் பற்றி இலங்கை அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.என அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14/11/15

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருந்து அனுப்பிய நெஞ்சை உருக்கும் செய்தி

இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறை ஒன்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு அனுப்பிய நெஞ்சை உருக்கும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்>>>

13/11/15

நீதிமன்றம் அழைப்பாணை மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேருக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இலங்கை போக்குவரத்து
 சபையின் 
பஸ்களை பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபை தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி குறித்த நபர்களுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுககப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட பஸ்களுக்கு 42 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபை இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11/11/15

காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா.பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள வருகை 
தந்துள்ளனர்.
மன்னார் கீரி ஞானோதய மண்டபத்திற்கு இன்று பி.ப 2 மணியளவில் வருகை தந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர் வரை ஞானோதய மண்டபத்திற்கு முன் ஒன்று கூடி காணாமல் போவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு 
காணாப்பட்டனர்.
இதன் போது வருகை தந்த 5 பேர் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் உறவினர்களை பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகள் 40 பேரிடம் குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/11/15

மைத்திரிக்கு கோட்டா அறிவுரை ஜெனிவா சூழ்ச்சியில் சிக்கவேண்டாம்?

சர்வதேச சமூகத்தால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மான சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுரை வழங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெனிவாத் தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதிவான்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து கோட்டா பேச்சு நடத்தியுள்ளார். மெக்ஸ்வல் பரணகம அறிக்கை தொடர்பில் கோட்டா இதன்போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை கண்டிக்கத்தக்கது என்றும் கோட்டாபய இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளால் முப்படையினர் அதிருப்தி அடைந்துள்ளனர் எனவும், இது பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் எனவும் ஜனாதிபதிக்கு கோட்டாபய விளக்கியுள்ளார்.
இந்த நிலைமையை மாற்றியமைக்க ஜனாதிபதி எடுத்துக்கொள்ளும் சிரத்தை பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாவுடன் சந்திப்பு நடத்தப்பட்ட தினத்தில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பெருந்தெருக்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர்.
எவ்வாறான பேச்சு நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அரச அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது தமக்கு அது குறித்து அறிவிக்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரியுள்ளார் எனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>