siruppiddy

25/6/15

ஏராளமான மாணவிகளின் சீரழித்த ராகவன் சேர்!

செல்வநாதன் கெங்காதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன், முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவரை சுருக்கமாக “ராகவன் சேர்”
 என்று கூப்பிடுவார்கள்.
இவன் பல காலமாக பருவமடைந்த பள்ளி மாணவிகளை வளைத்து , அவர்களோடு காமலீலை புரிந்து வருகிறார். மேலும் தனியார் வகுப்புகள் என்று வைத்து அங்கே வரும் மாணவிகளையும் இவர் விட்டுவைப்பது இல்லை.
இது எத்தனை பெற்றோருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவரைப் போன்ற நாசகாரர்களை சமூகத்தில் இனங்காட்ட வேண்டும். இல்லையென்றால் பலரது வாழ்கை வீணாகப்போய் விடும்.
குறித்த இந்த ராகவன், பேஸ்புக் கணக்கை திறந்து அதில் பல பெண்களையும், மாணவிகளையும் இணைத்து வைத்துள்ளார். இவரது நண்பர்கள் வட்டாரத்தில் சுமார் 220 பெண்கள் உள்ளார்கள்.
அது போக இவர் இரவு வேளைகளில் தன்னை நிர்வாணமாக படம் பிடித்து பெண்களுக்கு அனுப்புவது வழக்கம். மேலும் மாணவிகளுக்கு செக்ஸ் வீடியோக்களை அனுப்பி அவர்கள் உணர்ச்சிகளை தூண்டி அதில் குளிர்காய்பவர் ஆவார்.
ஏராளமான ஆசிரியைகள் கல்வியல் கல்லுாரியில் பயின்று பயிலுனர்களாக வந்த ஆசிரியப் பயிற்சியாளர்கள், மாணவிகள் போன்றோருக்கு தனது அந்தரங்கங்களை தொலைபேசியின் வைபர் இணைப்பின் ஊடாகக் காட்டியுள்ளது வெளிச்சமாகியுள்ளது.
பெரும்பாலானவர்கள் அவனை எச்சரித்திருந்தாலும் சில மாணவிகளும் ஆசிரியைகளும் அவனின் செயலில் மயங்கி தங்களை இழந்துள்ளது வெளிவந்துள்ளது.
இவரது திருகுதாளத்தை ஒரு பெண் தற்போது துணிச்சலாக வெளியே கொண்டு வந்துள்ளார்.
ராகவனை காதலிப்பது போல நடித்த அந்த மாணவி, இவர் நிர்வாணமாக நின்று அனுப்பிய அனைத்து போட்டோக்களையும் பதிவு செய்து ஊடகங்களிடம் கொடுத்துள்ளார். அவற்றில் சிலவற்றையே நாம் பிரசுரித்துள்ளோம். முழுவதையும் எம்மால் பிரசுரிக்க முடியவில்லை.
குறித்த ராகவன் மாஸ்டரை தமிழர்கள் இனங்கண்டு அவரை, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகள் முன்வந்து இவர் மீது புகார் கொடுத்தால், ஏனைய ஆதாரங்களை வைத்து பொலிசார் இவரை கைது செய்வார்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/6/15

கருணாவிடம் 600 பொலிஸார் கொலை குறித்து விசாரணை!???

யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் சென்று முன்னாள் பிரதி அமைச்சரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் கிழக்குத் தளபதியுமான கருணா என்ற வி.முரளிதரனிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. 
1990ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருணாவிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
600 பொலிஸார் கொலை சம்பவ விசாரணையை துரிதப்படுத்துமாறு ஓய்வுபெற்ற பொலிஸார் சங்கம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இது தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கருணா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் அதனை நிராகரித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

13/6/15

மக்களை மறந்து ஆட்டம் போடக் கூடாது! க.வி.விக்னேஸ்வரன்

 ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருந்தால், எமக்கு என்ன நடக்கும் என்பதற்கு, கடந்த அரசின் ஆட்சிக் இழப்பு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முதலமைச்சர் உரையாற்றினார். 
அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:
ஆட்சியில் கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடம், மஹிந் தோதய தொழில்நுட்பபீடம் எனப் பெயர் சூட்டி அவற்றின் அடிக்கல் நாட்டு விழாக்களுக்கு நான் பல பாடசாலைகளுக்குச் சென்றிருந்தேன். 
கட்டி முடிக்கப்பட்டவை மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக் கூடமாகவோ அல்லது மஹிந்தோதய தொழில்நுட்பப்பீட மாகவோதான் திறக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்தின் காரணமாகவோ பிற காரணங்களாலோ 
மஹிந்தோதய என்ற அடை மொழி தற்போது மறைந்து தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில் நுட்பப்பீடம் என்று இன்றைய திறப்பு விழாக்கள் மாற்றமடைந்து விட்டன. எத்தனை மாற்றங்கள்! 
இதை நான் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், நாம் ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, எமது பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் எமக்கு ஏற்படக்கூடிய நிலமை என்ன என்பதை இந்தச் சிறு சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது- 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

10/6/15

ஜனாதிபதி! முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதி!!!

வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இரவு அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் வட மாகாண முதலமைச்சருடன் தனியாக சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது, வட மாகாண முதலமைச்சர் மூன்று முக்கிய விடயங்களை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
30 வருட கால போரால் வட மாகாணம் மிகப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதால் வடக்கை மீளப் பழைய நிலைக்கு கட்டியெழுப்ப பெருமளவு நிதி தேவைப்படுவதாகவும், தற்போது வட பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி போதாதெனவும் பெருமளவு நிதி வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் வடக்கில் முதலமைச்சர் நிதியம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகவுள்ளது.
சர்வதேச நாடுகளதும் புலம்பெயர்ந்த எமது மக்களதும் நிதியுதவிகளைப் பெற்று வட பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதால் முதலமைச்சர் நிதியம் ஊடாக அதனை மேற்கொள்ள முடியும்.
கடந்த ஆட்சியில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியம் அமைக்கப்பட்டால் அதனை மத்திய அரசே கணக்காய்வு செய்யும் விதத்தில் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். இதனால் உடனடியாக முதலமைச்சர் நிதியம் அமைக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதேவேளை வட மாகாண சபையைப் புறக்கணித்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இது எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதெனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி, இதுபற்றி உடனடியாக ஆராய்வதாக தெரிவித்ததுடன் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான உதவிகள் வழங்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அடுத்த வாரம் மீண்டும் 
அனைத்து முதலமைச்சர்களையும் ஆளுநர்களையும் மாகாண அமைச்சர்களையும் அவற்றின் பிரதம செயலாளர்களையும் தான் சந்திக்கவுள்ளார் என்றும், அதன் போது சகல மாகாணங்கனினதும் தேவைகள் தொடர்பாக தனக்கு எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>8/6/15

அதி சக்தி வாய்ந்த பிரபாகரனின் கைத்துப்பாக்கியை இராணுவம் மீட்கவில்லையாம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று 
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். பிரபாகரனின் விலைமதிப்புள்ள கைத்துப்பாக்கி மற்றும் தமது உறுப்பினர்களை 
அடையாளம் கண்டுகொள்வதற்காக புலிகள் பயன்படுத்திய இலக்கத்தகடு என்பன காணாமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தச் செய்தியை வெளியிட்டவர்களிடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும். எம்மிடம் இதுபற்றிய தகவல்கள் பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படியாயின், பிரபாகரன் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து கைத்துப்பாக்கியோ அல்லது கழுத்தில் அணிந்துகொள்ளும் இலக்கத்தகடோ இராணுவத்தினரால் மீட்கப்படவில்லையா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரபாகரன் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது சடலத்தில் கைத்துப்பாக்கி இருக்கவில்லை. மீட்கப்படவுமில்லை; மீட்கப்பட்டதாக எம்மிடம் தகவல் பதிவாகவுமில்லை.
இருப்பினும், இலக்கத்தகடு குறித்து நான் சற்று ஆராய்ந்து கூறவேண்டும் – என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தனது இடுப்புப் பட்டியில் எப்போதும் பிஸ்டல் வைத்திருப்பார். அவரிடமிருந்த பிஸ்டல் நவீனத்துவமானதும் சக்தி வாய்ந்ததுமாகும். ஜி – லொக் 17 ரக 9 மில்லிமீற்றர் பிஸ்டலையே அவர் வைத்திருந்தார்.
அத்துடன், பிரபாகரனிடம் எப்போதும் ரைபிள் ஒன்றும் காணப்படும். அந்த ரைபிள், எம் -16, ஏ – 2 ரகத்தைச் சேர்ந்தது. அந்த ரைபிளைப் பயன்படுத்தி கிரனேட்டும் ஏவமுடியும். அவ்வாறு தனிச் சிறப்பு வாய்ந்த ரைபிளையே பிரபாகரன் பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்களுக்கு அடையாளப்படுத்துவதற்காகத் தகடு வழங்கப்பட்டிருக்கும். பிரபாகரனது தகடு த.வி.பு 001 ஆகும். அந்தத் தகட்டையும் தற்போது காணவில்லை.
போரின் இறுதியில் பிரபாகரனது உடலை மீட்ட இராணுவ உயரதிகாரிகள் நினைவுச் சின்னமாக, இவற்றை எடுத்துச் சென்று விட்டனரா அல்லது அதனை எரித்து விட்டனரா என்பது தெரியவில்லை. இதனால் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளதாக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

3/6/15

முன்னாள் போராளி வன்னி விபத்திலமரணம்!


கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தினில் முன்னாள் போராளி  ஒருவர் படுகாயமடைந்த நிலையினில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த பயணிகள் வாகனம் மோதியதில்; இம்முன்னாள் போராளி உயிரிழந்திருந்தார்.
மேற்படி சம்பவத்தில் ரவிச்சந்திரன் (வயது 36) என்பவரே படுகாயமடைந்த நிலையினில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
முன்னாள் போராளியான இவர் தற்போது மேசன் தொழில் புரிந்து வருவதாகவும் தொழிலுக்காக சென்று வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>