siruppiddy
தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12/11/20

யாழில் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ்.முகுந்தன் என்பவர் மீது 11-11-20.அன்று குழுவொன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்கத் தொலைபேசியும் பறித்து சென்றது.
கொரோனா தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது அமைப்பு ஒன்று உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊடகவியலாளர் தனது முகநூலில் நேற்று முன்தினம் இரவு பதிவொன்றினை 
இட்டிருந்தார்.
பதிவினை நீக்க கோரி குறித்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தம் கொடுத்து, மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு 
ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு 
செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல், கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை 
கைது செய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



11/11/20

ஊடகவியலாளர் மீது யாழில் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து தான் தாக்கப்பட்டதாக 
சுந்தரலிங்கம் முகுந்தன் எனும் குறித்த உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்
10-11-20.அன்று  நள்ளிரவு தொலைபேசியில் எச்சரித்தது மட்டுமின்றி  வீட்டிற்கு வந்த தமிழ் கொடி பணிப்பாளர் விமல் உள்ளிட்ட மூவர் அந்த இணைப்பை  அழிக்கச்சொல்லி தாக்கியதோடு மட்டுமில்லாமல் எனது தொலைபேசியையும் பறித்து சென்றுவிட்டார்கள் என அவர் 
தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான அவர் முன்னதாக வடக்கு ஆளுநரது ஊடக செயலாளராகவும்  பணியாற்றி வந்திருந்தார்.
இதனிடையே குறித்த இணைய தொலைக்காட்சியில் அவரது பாரியாரும் பணியாற்றி வருகின்றார்.
ஏற்கனவே சட்டவிரோத காணி பிடிப்பு தொடர்பில் குறித்த இணைய தொலைக்காட்சி குழுமம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் குற்றச்சாட்டு;ககளை முன்வைத்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


8/7/20

இந்துமகாசபா வேதனை இராவணன் சிவபக்தன் தேரரின் கருத்து கண்டிக்கத்தக்கது

கோணேஸ்வரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை 
இராவணன் ஆண்ட தேசமாகும். சீதாவலியவில் கோயில் உள்ளது. அனுமன் இலங்கை வந்து சென்ற ஆதாரங்கள் உள்ளன. மேலும் இராவண எல்லவில் குகைகள் உள்ளன. ஆகையால் தேரர் குறிப்பிட்ட கருத்தானது 
இந்து மக்களின் மனதை மேலும் புண்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது “
என்று இலங்கை இந்துமாசபா தலைவர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா சபா சார்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “
இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>


9/4/20

தாய் நாட்டில் நீக்காத சோகத்தின் ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது

வாழ்க்கை மட்டுமல்ல,“ பட்டால்தான் வலி புரியும் “
இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது.
இலங்னக (சிறீலங்கா )என அழைக்கப்படும் தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை 
உலகறியா ஏராளம் ஏராளம்.
இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம்.
ஆம்...!
எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம்.
நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை குறுகிய நிலப்பரப்புக்குள் தனிமைப் படுத்தினார்கள். ஆனாலும் மீண்டெழுந்தோம்.
இறுதியாக உலக நாடுகள் கைகோர்த்து ஓர் உத்தியை கையாண்டீர்கள்..!
ஓய்வின்றி ஓர் தொடர் போர்..!!
இறந்தவரை புதைக்க இடமுமில்லை நேரமும் இல்லை. காயம்பட்டவரை சிகிச்சை கொடுக்க மருந்துமில்லை மருத்துவமனையில் இடமும் இல்லை, மருத்துவர்களும் பற்றாக்குறை.
உண்ண உணவுத் தட்டுப்பாடு, கிடைப்பதையேனும் தேடிவர வெளியே போய் வர முடியாது குண்டு மழை.
போராடும் போராளிகளிடம் ஆயுத தளபாட வெடிபொருட்கள் எனக்
 கையிருப்பு கையறு நிலை.
பதுங்கு குழிக்குள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் முடங்கிய மக்களின் மன அழுத்தம், போராட்டத்தின் மீதே நம்பிக்கையீனம்.
எல்லாமே திட்டமிட்டே செய்து முடித்தீர்கள். நினைத்தவாறே எல்லாமும் நிறைவேறிற்று. இயற்கையின் மீது பாரத்தைப் போட்டு
 நாம் நடை பிணமானோம்.
ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது..!
உலகின் வல்லரசுகள் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டவர்களின் இன்றைய நாட்கள் இதே பாடத்தை தான் அவர்களுக்கு 
கற்றுக் கொடுக்கிறது.
நாட்டுக்கு நாடு எல்லையை மூடுகிறார்கள். உணவுக்கு / மருந்துக்கு / மருத்துவருக்கு அல்லாடுகிறார்கள்.
நாம் பதுங்கு குழிக்குள் முடங்கியது போன்று இன்று இவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி தனிமையில் மன அழுத்தம் கொள்கிறார்கள்.
இன்று களப் பணியாற்றுவோருக்கு நாளாந்தம் கைதட்டி நன்றி தெரிவிக்கிறார்கள். அதை ஊடகங்கள் 
கொண்டாடுகின்றன.
அன்று ஒரு சிறு நிலப்பரப்பில், எந்த நிமிடமும் நம் உடலும் சிதறலாம் எனத் தெரிந்தும், நமது மக்களை காப்பாறும் மருத்துவப் பணியில் இருந்த / இறந்த எமது மருத்துவர்கள், களப் பணியாளர்களே எம் கண்முன்
 வந்து போகிறார்கள்.
அன்று நாம் உங்கள் முற்றமெங்கும் / வீதிகளெங்கும் ஒப்பாரி வைத்தோம், எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும்..,
நாம் ஈழத்தவர்கள்; மனித நேயத்துடன் எங்கள் கண்களும் உங்களுக்காக கண்ணிரைக் கசிந்து கொண்டுதான் 
இருக்கின்றன.
நன்றி,,யஸ்  கே, சாமி

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






3/5/19

சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்மன்னார் நடுக்காட்டில் மீட்ப்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் தொடருந்துக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மீட்கப்பட்ட பொ
தியில் சக்தி வாய்ந்த வெடி மருந்துள் மீட்கப்பட்டுள்ளன 
என்று பொலிஸார் தெரிவித்தனர்.காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டன.பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர்
 குச்சுகள் என்பன மீட்கப்பட்டன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


28/9/18

உயிரிழந்ததமிழ் பெண் விரிவுரையாளருக்கு நீதி கேட்டு தமிழர் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

மர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி கோரி தமிழர் தாயகமான திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
.குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபவனியாக வீதிக்கு வந்து மக்களை தெளிவூட்டும் விதத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக
 நடத்தப்பட்டுள்ளது.
போதநாயகியின் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான ஒரு விழிப்புணர்வு போராட்டமாக இது அமையும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

27/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரர் புதைக்கப்பட்ட இடத்தில் கதறி அழும் கணவன்

மர்மமான முறையில் மரணடைந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் கணவர் கவிஞர் செந்தூரன் மனைவியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அழுது குளறியுள்ளார்.
செந்தூரன் மனைவியின் இறுதி சடங்கிற்கு கூட செல்லவில்லை என்பது போதநாயகியின் கொலைக்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது போதநாயகியின் கணவர் செந்தூரன் என்ற நபர், தான் ஸ்திரீ லோலனாக இருந்தாலும், மனைவி தனக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்ற சிந்தனை வன்முறைக்குள்ளாக்கியிருக்கிறார்.
கடந்த சில வருடங்களில் அவரது வாழ்வில் பல பெண்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்ற பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி வருகின்றன.பிரான்சை சேர்ந்த தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்மணியை திருமணம் செய்து, செந்தூரனின் திருவிளையாடல்கள்
 தெரிந்ததும் மூன்றாவது நாளிலேயே விவாகரத்து செய்து விட்டார்.
அதை அவர் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.இதன்பின்னர், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு யுவதிக்கு ஆட்டையை போட்டு, அவரது தாயாரிடமிருந்து பெருமளவு பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இந்தியாவில் ஒரு தொ
டர்பு இதன்பின் கிளிநொச்சி யுவதியொருவருடன் திருகோணமலையில் உல்லாசம் என பல பேஸ்புக் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதைப்பற்றி செந்தூரன் தரப்பிலிருந்து எந்த பதிலுமில்லை. மாறாக சில பெண்கள்- முகப்புத்தகத்தில் நேரில், கொஞ்சம் பட்டும் படாமலும் செந்தூரன் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்த 
ஆரம்பித்துள்ளனர்.இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது. அது கமல் பாடும் பாடலை நினைவுபடுத்துகிறது. செந்தூரன் தரப்பு இதைப்பற்றி பகிரங்கமாக சொன்னால் மாத்திரமே உண்மை தெரியவரும்.
உயிரிழந்த போதநாயகி நல்ல சம்பளத்தை 
பெறும் விரிவுரையாளராக கடமையாற்றினார். அவரது ஏடிஎம் கார்ட் கூட செந்தூரனிடமே இருந்துள்ளது. போதநாயகியின் இறுதி மாத சம்பளம் ஒரு இலட்சம் ரூபா! உயிரிழப்பதற்கு சில நாள் முன்னதாக வங்கி 
கணக்கிற்கு சென்றது.
இறுதி சடங்கிற்கு பணமில்லையென போதநாயகியின் குடும்பத்தினர் கூற, ஏடிஎம் கார்ட் பின் நம்பர் தெரியாதென அலட்சியமாக செந்தூரன் பதிலளித்துள்ளார். அதை போதநாயகியின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனை முடிந்ததும், கணவனாக அவரே சடலத்தை பொறுப்பேற்க முடியும் சடலத்தை பொறுப்பேற்று தனது வீட்டுக்கு கொண்டு சென்று, சடலத்தின் மீது கவிதைப்புத்தகங்கள் என்ற பெயரில், தான் வெளியிட்ட புத்தகங்களையும், விருதுகளையும் பரப்பி படம் எடுத்து படம் காண்பித்தார்.
பின்னர் சடலம் வவுனியாவில் போதநாயகி வீட்டிற்கு கொண்டு செல்ல தயாரான போது செந்தூரன், தாயார் ஆகியோர் வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டனர். வவுனியாவில் மனைவி வீட்டிற்கு செல்லவுமில்லை, இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவுமில்லை.
கட்டிய மனைவி தனியாக சவக்குழிக்கு செல்கிறாள் என்றபோதே, இந்த கணவனின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள
 முடியும் என்ற கருத்தும் பரவலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.தம்பதியர்களிற்கிடையில் உறவு சுமுகமாக இல்லை, செந்தூரனின் நடவடிக்கைகளால் மனைவி அதிருப்தியடைந்திருந்தார் என்பதற்கு ஆதாரமாக அவரது முகநூல் பதிவுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
போதநாயகி வங்கியில் 20 இலட்சம் ரூபா கடன்பெற்று செந்தூரனிற்கு கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். அது தவிர, அண்மையில் ஐந்து இலட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போத நாயகியின் தந்தை தும்புமிட்டாசு விற்றே மகளை கல்வி கற்க வைத்திருந்தார். மிக ஏழ்மை குடும்பமான 
அவர்களிடம் இறுதிச்சடங்கிற்கே பணமிருக்கவில்லை. இறுதியில் வவுனியாவை சேர்ந்த தன்னார்வலர்கள் பணம் திரட்டியே அவரது இறுதிச்சடங்கை நடத்தி முடித்திருந்தனர்.
இதேவேளை நேற்று செந்தூரனின் நண்பன் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செந்தூரன், மனைவியின்
 உடல்புதைக்கப்பட்ட இடம் என கருதப்படும் 
இடத்தில், அழுது கொண்டிருப்பதை போல காண்பிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
உண்மையான கணவன் எனில், இறுதிச்சடங்கிற்கு சென்றிருக்க வேண்டும். இது அனுதாபம் தேடும் முயற்சியென நெட்டிசன்கள் 
கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் செந்தூரனின் நண்பர்கள் 
‘அண்ணன் அப்செட்டில் இருக்கிறார். ஏற்கனவே உடைந்து போயிருப்பவரை இந்த விமர்சனங்கள் மேலும் காயமடைய வைக்கிறது. சிறிய அவகாசம் அவருக்கு தேவை. விரைவில் பகிரங்கமாக அனைத்தையும் சொல்வார்’ என்கிறார்கள்.
‘அண்ணன் ஏற்கனவே திருமணமானவரா? அது போதநாயகிக்கு தெரியுமா? அவர்களின் குடும்பத்தில் ஏதாவது சிக்கலிருந்ததா?’ என்று கேட்டால் ‘அதை அண்ணனிடமே கேளுங்கள்’ என்கிறார்கள்.
எது எப்படியோ இந்த விவகாரத்தில் செந்தூரன் தரப்பும் ஏதாவது அபிப்பிராயத்தையும், நியாயத்தையும் வைத்திருக்ககூடும். அவர்கள் இதுவரை பகிரங்கமாக அதை பதிவுசெய்யவில்லை. பொலிசார் நியாயமான விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டறிந்தால் மட்டுமே முழு உண்மையும் 
பகிரங்கமாகும்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>


26/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் இத்தனை கொடூரமா

கிழக்குப் பல்கலைகழகத்தின் திருகோணமலை பெண் விரிவுரையாளரும் செந்தூரனின் மனைவியுமான போதநாயகியின் மரணம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இவரது மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் தொடர்கிறது.என்னவென்றால்
 செந்தூரனின் மனைவி போதநாயகி கொலை செய்யப்பட்ட நாள் வவுனியாவில் இருந்து திருமலைக்கு விடுமுறையில் சென்று இருக்கிறார் அவர் முச்சக்கர வண்டியில் சென்றிருக்கிறார்.அந்த முச்சக்கர வண்டி சாரதி யார்? என்று இன்னும் தெரியவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை 
எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.ஆனால், அந்த நபர் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை.
மேலும் இதுபோல பல தகவல்கள் உறுதி செய்யபடவில்லை.மேலும் இந்த மரணத்திற்கு அவரது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தான் காரணமென்றும் அதை மறைக்கவே பல கதைகளை அவர் கிளப்பிவிடுகிறார் என்றும் தகவலகள் பரவி வருகிறது.
இவ்வாறு கதைகளை பரப்பினால் தாம் தப்பித்துவிடலாம் என அவர் செய்வதாக பலர் கருத்து தெரிவித்து
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


22/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மர்ம கொலையில் ஒருவர் கைது.கிழக்கில்

பெண் விரிவுரையாளரை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் 
பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும்
 பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு 
சடலமாக மீட்கப்பட்டார்.
சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய பெண் விரிவுரையாளரின் மரண விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் சம்பா ரத்னாயக்க முன்னிலையில் நீதவான் 
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனபெண்ணின் சடலம் அவரின் கணவரினால் இதன் போது அடையாளங்காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதவான் குறித்த பெண் விரிவுரையாளரின் 
உறவினர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளனர் இந்த விசாரணைகளின் போது பெண்ணின் மரணம் குறித்து எந்த விடயத்தையும் உறவினர்கள் தெரிவிக்கவில்லை
சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் 3 மாத கர்ப்பிணி என்பதால் அவரது பிரேத பரிசோதனை விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவரின் ஊடாக இடம்பெற வேண்டும் என
 நீதவான் இதன் போது உத்தரவிட்டுள்ளார்.விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவர் உள்ள வைத்தியசாலையொன்றை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அதற்கான அனுமதியை பெற்றுத் தர
 முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குடும்பத்தினர் வைத்தியசாலையொன்றை தெரிவிக்க 
தவறும் பட்சத்தில், வைத்தியசாலையொன்றை தெரிவு செய்து நாளைய தினத்திற்குள் அறிவிக்குமாறு திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு நீதவான்
 உத்தரவிட்டார்
அதுவரை சடலத்தை திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.உறவினர்கள் சடலத்தை கையேற்ற போதிலும் அதனை எரிக்கக் கூடாது புதைக்குமாறு நீதவான்
 உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மரணம் மீதான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி நடை பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



21/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மர்ம மரணம்.கிழக்கில்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா, 
ஆசிக்குளம், கட்டுக்குளம் பகுதியை சேர்ந்த
 நடராசா போதநாயகி என்ற 29 வயதுடைய விரிவுரையாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட விரிவுரையாளரின் கைப்பை மற்றும் பாதணியும் இன்று (21) காலை சங்கமித்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்இன்றுபிற்பகலேவிரிவுரையாளரின்சடலம்கண்டெடுக்கப்பட்டுள்ளது.மரணத்திற்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


20/9/18

நிலக்கீழ் பிரபாகரனின் இராணுவக் கட்டளைத் தளத்தை பாதுகாக்கும் இராணுவம்

விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி நிர்மாணக் கட்டடம் ஒன்றை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு – வடக்கு பெருங்காட்டுப் பகுதியில் நிலத்திற்கு கீழாக அமைக்கப்பட்ட குறித்த மூன்று மாடி நிலத்தடி நிர்மாணக் கட்டடங்களை 2009ஆம் 
ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.
நிலத்திற்கு கீழ் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதலாவது தளத்திற்குள் சிறிய ரக வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த கட்டட நிர்மாணம் சுமார் 30 சதுர அடி நிலத்திற்கு கீழ் இருந்து மூன்று மாடிகளாக 
அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2000ஆம் ஆண்டிற்கு முன்னர் குறித்த மூன்றாவது நில அறையின் கீழ் ஒன்று கூடிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகள் இராணுவத்தினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகொண்
டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2000ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலப் பகுதியில்
 விடுதலைப் புலிகளினால் இந்த நிலத்தடி கட்டடம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், தற்பொழுது குறித்த இடத்தை மக்கள் பார்வையிட தடைவிதித்துள்ள படையினர் இவற்றை வெற்றியின் அடையாளமாக பாதுகாத்து வருவதாக 
தெரிவிக்கப் படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



20/4/18

இராணுவ கட்டளைத் தளபதி ஏ.கே 47 பரிசாக கேட்ட சிறுவனுக்கு பரிசு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் 5 வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவத்தினரிடம் முன்வைத்த நிலையில், குறித்த சிறுவனுக்கு விளையாட்டுப் பொருளாக முச்சக்கர வண்டி பொம்மை ஒன்றை 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி
வழங்கியுள்ளார்.முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா நேற்றுப் பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு 681 
ஆவது படைப்பிரிவு
 இராணுவ தளபதியே இவ்வாறு பரிசளித்துள்ளார்.            
அண்மையில் குறித்த முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்க சென்ற குறித்த இராணுவத் தளபதி சிறுவர்களிடம் விளையாட்டு பொருட்கள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.இதற்கு 5வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி ஒன்று 
எனக்கு தேவை
என்று பதிலளித்துள்ளார். இராணுவத்தினர் எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவனின் பதில் அமைந்திருந்ததினால், அந்த சிறுவனை அழைத்த இராணுவத்தளபதி மாற்றுப்பொருள் ஏதேனும் ஒன்றை கேட்கும்படி அன்பாக பணித்துள்ளார்.இந்த நிலையில், குறித்த சிறுவன் ஹெலிலிகொப்டர் ஒன்று தேவை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி குறித்த சிறுவனை அழைத்து முச்சக்கர வண்டி விளையாட்டுப் பொருளினை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளார்.
அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான (விளையாட்டு) பொலிஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளதாக சந்திரன் முன்பள்ளி அசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






16/4/18

உருத்திரபுரம் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு=???

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை 
பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் 2007 ஆம் ஆண்டு வரையில் பிரபாகரன் இந்த பதுங்கு குழியில் தங்கியிருந்திருக்க வேண்டுமெனவும், புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த பதுங்கு குழியில் பாரியளவில் வானூர்திகளை தாக்கியழிக்கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


7/3/18

அசாதாரண சூழ்நிலையால் வவுனியா, மன்னாரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா, செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அம்பாறை 
மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.இன 
கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிடும் போது;சகல இனங்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம்
 குறித்தும், சட்டம் ஒழுங்கு பாகுபாடின்றி செயற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.அத்தோடு
 முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவத்தை உடன் நிறுத்த வேண்டும். இதன் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த ஜனாதிபதி மற்றும் சட்ட அமைச்சராக திகழும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




12/5/17

சந்திரிக்காகூறுகின்றார் தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது சர்வதேச நீதிபதிகள் தேவை !

யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவற்றுக்கான காரியாலயத்தில் இன்று(9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துரைத்த அவர்,
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தமிழ் மக்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவிதமான தடங்களும் இருக்கக் கூடாது. இதனைக் கூறுவது நீதியின் அடிப்படையில் தான். அதனைத் தான் நான் 
வலியுறுத்துகிறேன்.
எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது. அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவேண்டும் என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


7/5/17

முன்னால் போராளி செங்கலடியில் தூக்கிட்டு தற்கொலை

செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் 
தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


தலைவரைப்புகழ்ந்துள்ளார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ண!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற  தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது என்றும் பாராட்டியுள்ளார்.
இராணுவத்தில் இருந்து 05.09.16 ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி 06.09.16 வெளியிட்டுள்ளார்.
இவர்தொ, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், விடுதலைப் புலிகளின் தலைவரின் ஆளுமையை பெரிதும் புகழ்ந்துரைத்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.

தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான்.அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். சிறிலங்கா இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.
அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார்.
ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.
ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் 
இரக்கமற்றவர்.
அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.
பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதிநிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பானு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை 
வழங்கினர்.
இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிகநன்றாகவே செயற்பட்டனர்.
வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.
இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




27/1/17

ஐக்கிய நாடுகள் சபை நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஏற்றுக்கொண்டுள்ளது..!

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி
 வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச சார்பற்ற நிறுவனமாக
 பதிவு செய்துள்ளது.
இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பு ஓர் கனவு அமைப்பு என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார் என சிங்கள நாளிதழ் மேலும்
 சுட்டிக்காட்டியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

9/12/16

புத்தரும் சிவபெருமானும், சிரிக்கின்றனர்...! விக்கினேஸ்வரன் மீது குற்றச்சாட்டு!

கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று வரும் பக்தர்களை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் சென்று
 வருகின்றர்.
அதேபோன்று விகாரைகளில் சிவபெருமான், விநாயகர் போன்ற தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்து கோயில்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வணங்குவதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வெளியில் வந்து இரு தரப்பினரும் அடித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் விகாரைகளை நிர்மாணிக்க முடியாது என தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் 19 ஆயிரம் சிங்களவர்கள் இருந்தார்கள். அதேபோல் 80 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது போல, பௌத்தர்களுக்கான அதிகாரத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



8/12/16

முன்பு மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள்.!

மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கௌதம புத்தர், யேசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர், நபிகள் நாயகம் என பலரும் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து 
தெரிவித்த அவர்,
சொந்த மதத்தின் புனித தன்மையை நசுக்க கூடிய வகையிலான செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்,
மேலும், மதத்தை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது. மதத்தை வைத்துகொண்டு அரசியல் செய்கின்றவர்கள் வங்குரோந்து அரசியல்வாதிகளாகவே இருப்பார்கள் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>