siruppiddy

29/1/15

ஐநா நோக்கிய தமிழின அழிப்புக்கு நீதி கோரி பயணம் ‘...

ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற ஐநா சபையின் 28ஆவது மனிதவுரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு ‘விடுதலைச் சுடர்’ எனும் பெயரில் மனிதநேயப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா வரைக்கும் செல்லுகின்ற இப் போராட்டமானது, திட்டமிட்ட வகையில் தமிழின அழிப்பைத் செயற்படுத்திக்கொண்டு வருகின்ற சிங்களப் பேரினவாதத்தின் சுதந்திர நாளானதும் ஈழத்தமிழர்களின் கரி நாளானதுமான பெப்ரவரி 4ஆம் திகதி இலண்டனில் ஆரம்பமாக உள்ளது. இது பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கூடாக 40 நாட்கள் பயணம் செய்து சுவிஸ் ஜெனிவாவை 16.03.2015 அன்று சென்றடைய உள்ளது.
ஐநா இல், மனிதவுரிமைகளுக்கான சபையில் தற்பொழுது அங்கம் வகிக்கின்ற பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாண்ட் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கூடாகச் செல்லும் இந்த மனிதநேயப் போராட்டமானது ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் ‘விடுதலைச் சுடர்’ இனை கையில் ஏந்தியவாறு உலக மக்களுக்கும் அரசில் பிரமுகர்களுக்கும் எமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் சந்திப்புக்களும் நடைபெறவுள்ளன.
பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படுகின்ற இப்போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் தார்மீகக் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
விடுதலைச் சுடர் போராட்டத்தின் கோரிக்கைகள் பின்வருமாறு :
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு, தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

26/1/15

முட்டை வீச முயற்சித்தாரா சீனப் பிரஜை?

  சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், 
நடந்த மாநாட்டுக்கு மைத்திரிபால சிறிசேன சென்ற போது, கடுமையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள பிரதான நுழைவாயிலில் சீனர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரைச் சோதனையிட்ட போது, 
பாதுகாப்புச் சோதனைக் கருவி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியது.அதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரிடம் இருந்து முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அவர் அந்த முட்டையை அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது வீசுவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.
அவரைச் சிங்களத்தில் விசாரித்த போது, 
சீன மொழியில் பதில் வந்தது. தனது பதில் அவர்களுக்கு புரியவில்லை என்பதை தெரிந்து கொண்ட, சீனர் சைகை மொழியில் சாப்பிடுவதற்காகவே முட்டையைக் கொண்டு வந்ததாக விளங்கப்படுத்தினார். அதையடுத்து அந்த முட்டையை உடைந்து விழுங்க வைத்த பின்னரே, சீனரை விட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விலகிச் சென்றனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


21/1/15

விரைவாக நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்! -

ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வு விரைவாக வழங்கப்பட வேண்டும்! - நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை. 
தமிழ் மக்­கள் பல தசாப்­தங்­க­ளாக எதிர்­கொண்டு வரும் பிரச்­சினைக்கு ஐக்­கி­ய­ இலங்கை எனும் கட்­ட­மைப்­புக்குள் நிரந்தர­மா­னதும் நீடித்து நிலைக்கக் கூடி­யதும் நியாயபூர்­வ­மா­னதும் அதே நேரம் பல­ன­ளிக்கக் கூடி­ய­து­மான தீர்­வொன்­றையே நாம் எதிர்­பார்க்­கின்றோம். இந்த இலக்­கினை அடைந்து கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முழு­மை­யான ஆத­ர­வினை வழங்கும் என்று கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றி­ருக்கும் மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கும் அவ­ரது புதிய அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.அதேபோல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு வாக்­க­ளித்த நாட்டின் அனைத்து தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கும் நன்­றி­யையும் தெரி­வித்துக் கொள்­கிறேன்.
ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­வி­த­மான நிபந்­த­னை­களும் இன்­றிய நிலை­யி­லேயே மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தது. அத்­துடன் நாம் ஆத­ரவு வழங்­கு­கிறோம் என்­ப­தற்­காக எந்­த­வொரு பத­வி­யையும் கோர­வில்லை.இன­வாதம் மற்றும் இன­வாத உணர்­வு­களைத் தூண்­டு­வதன் மூல­மான தேர்தல் இலாபம் அடைதல் உள்­ளிட்ட விட­யங்­க­ளையும் அவற்­றி­னூ­டான முயற்­சி­க­ளையும் நாம் அறிந்தே வைத்­தி­ருந்தோம்.
எப்­ப­டி­யி­ருப்­பினும் இவ்­வா­றான முறை­கேட்டுப் பிர­சா­ரங்­களில் இறங்­கு­ம­ள­வுக்கு நாம் யாருக்கும் சந்­தர்ப்­பங்­களை அமைத்துக் கொடுத்­தி­ருக்­க­வில்லை. எமது தேர்தல் நட­வ­டிக்­கைகள் முழு நாட்­டுக்கும் எடுத்துக் காட்­டாக இருந்­தது.முன்னாள் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக தேர்தல் பிர­சாரக் காலம் முழு­வதும் அரச வளங்கள் மிகவும் அதி­க­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இவ்­வா­றான அரச அதி­காரம் மற்றும் வளங்கள் துஷ்­பி­ர­யோகம் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யிலும் மைத்­தி­ரி­பால சிறி­சேன பர­வ­லான ஆத­ர­வினைப் பெற்று வெற்றி பெற்­றுள்ளார்.
வடக்­கிலும் கிழக்­கிலும் அதே போன்று முழு நாட்­டலும் தமிழ் மக்­களும் தமிழ் பேசும் மக்­களும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தீர்­மா­னத்­துக்கு ஒரு­மித்த பதிலைப் பெற்றுக் கொடுத்­தி­ருந்­தனர். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மனப்­பூர்­வ­மான ஆத­ர­வினைப் பெற்றுக் கொடுத்த அந்த மக்­க­ளுக்கு எமது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.தமிழ் மக்­களும் தமிழ் பேசும் மக்­களும் நாட்டின் அனைத்து மக்­க­ளுடன் இணைந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நூறு நாள் வேலைத் திட்­டத்­தினை உள்­வாங்கி ஆட்சி மாற்­றத்­துக்கும் வழி வகை செய்­துள்­ளனர்.
இந்­நி­லையில் பல தசாப்­தங்­க­ளாக தமிழ் மக்கள் எதிர்­கொண்டு வரு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு ஒன்று காணப்­ப­டுதல் வேண்டும். ஐக்­கி­ய­மா­னதும் அதே நேரம் பிள­வு­ப­டா­த­து­மான இலங்கை எனும் கூட்­ட­மைப்­புக்குள் நிரந்­த­ர­மா­னதும் நீடித்து நிலைக்­கக்­கூ­டி­யதும் அத்­துடன் பல­ன­ளிக்கக் கூடி­ய­தான தீர்­வையே எதிர்­பார்க்­கின்றோம். இதற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முழு ஆத­ர­வினை வழங்கி ஒத்­து­ழைக்கும்.
60 வரு­டங்­க­ளுக்கு மேலாக நிலைத்து வரும் இப்­பி­ரச்­சி­கைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைகளால் இந்நாட்டுக்கு பெரும் பாதிக்குக்களே ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே முழுநாட்டினதும் நலன் கருதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 அத்துடன் இது அவசரமான விடயமாகவும் கருதப்பட வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு நாம் பூரணமாக ஒத்துழைப்போம். ஏனைய மக்களும் இதற்கு ஒத்துழைப்பர் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

18/1/15

ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே

 இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் ரகசிய ஏஜெண்டின் பொறியில் சிக்கி ராஜபக்சே மண்ணை கவ்வியதாக கொழும்பு பத்திரிகை
 ஒன்று தெரிவித்துள்ளது.
'ரா' உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த 
அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டதாக கொழும்பு மற்றும் டெல்லியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கு தெரியப்படுத்தாமல் சீனாவின் 
இரண்டு நீர்மூழ்கி கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தவுடன் ராஜபக்சேவின் நடவடிக்கைகளை கண்டு இந்தியா கவலையடைந்ததாகவும், இதனால் உஷாராகி எதிர்க்கட்சியினரை ஓரணியில் திரள வைத்து ராஜபக்சேவை இந்தியா தோற்கடித்தாகவும் கூறப்படுகிறது.
ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் சிறிசேனா வெற்றி பெறும் விதமாக, ரணிலை தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக அப்பத்திரிகை 
தெரிவித்துள்ளது.
அதே போல் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் தொடர்பில் இருந்த அந்த ரா ஏஜெண்டு, சிறிசேனாவை தேர்தலில் நிற்க ஒப்புக்கொள்ள வைத்ததில் முக்கிய பங்காற்றினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை ரா ஏஜெண்டை விக்ரமசிங்கே சந்தித்திருப்பதாகவும், அப்போது இந்திய தூதர் அல்லது பிரதமரின் செய்தி தொடர்பாளர் ஆகியோர் உடனிருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை விக்ரமசிங்கேவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
உண்மையான தகவல் கிடைக்கும் வரை, தான் யாரையும் சந்தேகப்பட விரும்பவில்லை என்று ராஜபக்சேவும் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டதற்கான தெளிவான அறிகுறிகள் காணப்படுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>12/1/15

கற்பழிப்பு குற்றச்சாட்டு ராஜபக்சே மகன்கள் மீது!!

 இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார். 
 ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது அவருடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது.இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்திருப்பது தற்போது
 தெரிய வந்துள்ளது. 
குறிப்பாக, இவர்கள் மூவரும் ஏராளமான பெண்களை வலுக்கட்டாயமாக கற்பழித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது பற்றிய தகவலை ஜாதிக ஹெல உறுமய என்னும் புத்த மத அமைப்பின் 
தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்கே கொழும்பில் நிருபர்களிடம் தெரிவித்தார். 
இந்த நிலையில் ராஜபக்சேயின் தேர்தல் தோல்விக்கு பின்பு, அவருடைய சகோதரரும், முன்னாள் மந்திரியுமான பசில் ராஜபக்சே தனது மனைவியுடன்  அதிகாலை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

8/1/15

தேர்தலை முன்னிட்டு தொடங்கியது தபால் மூல வாக்களிப்பு!

ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ அஞ்சல் மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்று ஆரம்பமாகியுள்ளது. இது நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதற்கமைய வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று யாழ்.மாவட்டத்திலுள்ள மாவட்ட செயலகம்,கல்வி வலயங்கள் ,கோட்டங்கள் ,மற்றும் பிரதேச செயலகங்களில் நண்பகல் வரை அஞ்சல் மூல வாக்களிப்புகள்இடம்பெற்று வருகின்றது.பலாலி உள்ளிட்ட படைமுகாம்களினிலும் வாக்களிப்பு படையினருக்கு நடந்துவருகின்றது.
இந்த முறை யாழ்.மாவட்டத்தினில் 5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் அலுவலகங்களுக்குள்ளோ அல்லது வெளியிலோ தேர்தல் சட்ட விதிமுறையை மீறிச் செயற்படுவோர்க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும் நாளையும் வாக்களிக்கத் தவறியவர்கள் 30 ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தேர்தல்: வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து

இலங்கையில் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அது மிகத்தெளிவாக தெரிகிறது. நாளை முதல் எங்கள் கொள்கைகளை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவோம் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறீசேனாவிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு தேர்தல் வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதை கண்டிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கெர்ரி, தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

6/1/15

தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!!

  இலங்கையில் நாளை மறுதினம் (8–ந்தேதி) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
எனவே அவர்கள் 2 பேரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து
 தேர்தல் பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. தற்போது ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேவின் செல்வாக்கு குறைந்துள்ளது. 
கடந்த 2011–ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் வெற்றி பெற்றிருந்தார். 
அதனால் இலங்கையின் தெற்கு பகுதியில் வாழும் சிங்களர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. அதனால் மிக சுலபமாக வெற்றி பெற்று விட்டார்.
ஆனால் இந்த தடவை அவரது செல்வாக்கு சிங்களர்களிடையே குறைந்து விட்டது. மேலும் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா என்ற சிங்களரே போட்டியிடுகிறார். அதனால் இந்த தடவை சிங்களர்களின் ஓட்டு 2 ஆக பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வடக்கு பகுதியில் மெஜாரிட்டியாக வாழும் தமிழர்களிடையேயும் ராஜபக்சேவுக்கு அதிக அளவு ஆதரவு இல்லை. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை ராஜபக்சேவின் சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அது ஒருபுறம் இருக்க இறுதி கட்ட போர் முடிந்த பிறகு தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ரோடுகள், குடிநீர் வசதி, மின்சாரம், ரெயில் போக்குவரத்து போன்றவை செய்து தந்துள்ளதாக ராஜபக்சே தெரிவிக்கிறார்.
ஆனால் அதை தமிழர்கள் முழுமையாக ஏற்கவோ, நம்பவோ தயாராக இல்லை. போர் முடிந்த பிறகும் தமிழர்கள் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு முகாமிட்டுள்ளது. மேலும் தமிழர்களின் நிலங்கள் 
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தியும் உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசியல் உள்ளிட்ட அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன. இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு கேள்விக் குறியாக உள்ளது. தற்போதைய நிலை இவ்வாறு இருக்க 
தேர்தலில் வாக்களித்து ராஜபக்சே வெற்றி பெற்று விட்டாலும் இதே நிலைதான் தொடரும்
. நிலைமை மாறப்போவதில்லை என வடக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் கருதுகின்றனர். இதனால் ராஜபக்சேவுக்கு அங்கு எதிர்ப்பு அலை வீசுகிறது.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா சீறிசேனாவுக்கு ஆதரவு அளிப்பார்களா? 
என்றும் திட்டவட்டமாக தெரியவில்லை. ஏனென்றால் இவரும் ராஜபக்சே அரசில் மந்திரியாக இருந்தவர். இறுதி கட்ட போரை ராஜபக்சேவுடன் சேர்ந்து நடத்தியவர். ஆனால் இவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் தமிழர்களின் ஆதரவு நிலை என்ன என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வரும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

1/1/15

மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன!

 மலர்ந்துள்ள 2015ம் ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 8ம் திகதி மிகவும் தீர்மானம் மிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக இரண்டு தேசிய ரீதியான தேர்தல்கள் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் நிறைவின் பின்னர் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் சர்வஜன வாக்கெடுப்பு 
நடத்தப்பட உள்ளது.
அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>