siruppiddy

29/6/13

அதிர்ச்சியில் உறைந்துள்ள கோத்தபாய"?

 
கசிந்தது இரகசியம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்ட சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு, தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களினதும் இடையிலான தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்டு வருகிறது. சீனாவின் உதவியுடன் ஸ்கைப் உரையாடல்களையும் ஒட்டுக் கேட்பதற்கு முயற்சிப்பதாக அறிய முடிகிறது.
 ஆனால், தமிழர்களை சிறீலங்கா ஒட்டுக் கேட்க முயற்சிக்கையில், சிங்களத்தின் புலனாய்வு மூளையாகக் கருதப்படும் கோத்தபாயவின் தொலைபேசி உரையாடல்களை மேற்குலகின் சக்திமிக்கதொரு நாடு ஒட்டுக் கேட்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
 மேற்குலகின் குறித்த ஒரு தூதுவராலயத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி தொழில்பட்பம் வாய்ந்த கருவிகள் ஊடாகவே ஒட்டுக் கேட்கும் இந்தச் சம்பவம் நிகழ்துள்ளதாக அறியமுடிவதோடு, குறித்த தூதுவராலயத்துக்கு அந்த நாட்டின் புலனாய்வுத்துறையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த இரகசியத் தகவல் கசிந்ததும், அதிர்ச்சியடைந்த கோத்தபாய தனது தொலைபேசி சேவை வழங்குனருக்கு முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் கொழும்பு நிருபர் தெரிவித்துள்ளார்
 

28/6/13

கனடாவில் கரும்புலிகள் நாள் யூலை-5!


  கனடா தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்{,05.07.2013 }யூலை 5ஆம் நாள் கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காற்றோடு காற்றாக எம்மூச்சில் கலந்திருக்கும் அக்கினி குஞ்சுகளை நினைவிற்கொண்டு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழதேசியக்கொடி,மற்றும் கனடிய கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றலுடன் கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வரைக்கும் அழுகின்றோம்

 

எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆயிரமாயிரமாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது, சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டபோது எங்கே போனீர்கள்? அப்போது இந்திய அரசாங்கத்துடன் ஊடல் கொண்டிருந்தீர்களா?...
 எங்கள் முற்றங்களில்
ஓடி விளையாடிய குழந்தைகள்
இன்று உடல் சிதைந்த
புகைப்படங்களாக பார்க்கின்றோம்
புள்ளிக் கோலமிட்டு
பிட்டு அவித்து ஊட்டிய
அம்மாவின் கையில்லை -இன்று
தோளில் சுமந்து
பள்ளிக்கு கொண்டு விடும்
அப்பாவுமில்லை
கொடியேற்றி கொண்டாடினார்கள்
நங்கள் படங்குக்குடிசையில்
திண்டாடிய போது
சிரித்தார்கள்
எங்கள் தேசம்,
நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி
சுடுகாடாய் தெரிந்த போது
மானமென்ற ஒன்றுக்காய்
மடிந்த பெண்ணின்
உடலை நிர்வாண படுத்தி
புகைப்படங்கள் எடுத்து
புன்னகைத்தார்கள்
உயிர் தப்பி வந்த பெண்களை
தெரியாத பாசையில்
ஏசினார்கள்
அடித்தார்கள் ,உதைத்தார்கள்
தங்கிக் கொண்டோம்
வெறியாட்டம் ஆடி
எங்கள் வாழ்வை
பலியாக்கினார்கள்
இன்று வரைக்கும் அழுகின்றோம்
எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன்

புலம் ஈழம் முழு நீள திரைப்படம்

புலம் ஈழம் முழு நீள திரைப்படம்.மண்ணில் உயிர் நீர்த்த உறவுகளுக்கும் அகதிகளாக வாழும் உலக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கு அமைதிதேர்வு தீர்வு ஏற்ட்படுதப்போகும் உலகநாடுகளுக்கும் கண்ணீருடன் இத்திரைப்படத்தை காணிக்கையாக்கிகுன்றோம் …ழகரம் திரைப்படக்கழகம். உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள் நன்றி,{ காணொளி}

24/6/13

இராணுவ வீரர்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் !!


உதகை வெலிங்டன் இராணுவ கல்லூரியில் பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மானக்ஸா பாலம் வழியாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் வருவார்கள் என கூறப்பட்டதால் அந்த வழியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில் கண்டோன்மெண்ட் வழியாக இராணுவக் கல்லூரிக்கு அருகே வந்த அவர்களை பொலிஸார் தடுத்தனர்.
 அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் இராணுவ சப்ளை டிப்போ சாலையில் நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
 மேலும் இலங்கைக் கொடியையும் அவர்கள் தீவைத்து கொளுத்தினர்.
 இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 120 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
 இதனிடையே, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
 மேலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள வைகோ அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

22/6/13

புலிகள் வைத்திருந்த விமானம் இதுவோ ..?


 மண் ரோட்டில ஓடுது -இரணை மாடு .மாங்குள ஒடுபாதை இப்படி இருந்திருக்குமோ  ,

20/6/13

சிறீலங்கா போட்டுள்ள திட்டம்: சிக்குவார்களா


        புலம்பெயர் தமிழர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கினாலும், தமிழீழம் என்ற அவர்களுடைய சித்தாந்தத்தை மிக உறுதியாக பற்றியபடி புலம் பெயர் தளத்தில் செயற்படும் தமிழ்த் தேசிய சக்திகள் விளங்குவதாக தெரிவித்துள்ள சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இது சிறீலங்காவுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய செயல் எனத் தெரிவித்துள்ளார்.
 கடந்த வாரம் ஜேர்மனிக்கும் நேற்று அவுஸ்ரேலியாவுக்கும் பயணம் செய்த ஜி.எல்.பீரிஸ் குறித்த நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களை சந்தித்த போது, புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். குறித்த அமைப்புகள் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை பரப்புவதோடு, மீண்டும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்த ஜி.எல்.பீரிஸ், இது சிறீலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
 ஜி.எல்.பீரிஸின் இந்தக் கருத்தானது, சிறீலங்கா அரசாங்கத்துக்கு புலம்பெயர் தமிழர்களால் இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக உருவாகியுள்ள நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் 

தமிழீழத்தை, உலக நாடுகளை திரும்பி பார்க்கச் செய்த

 
 தேசிய தலைவர் பிரபாகரன் மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
   யாழப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
  அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
  "எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும். ஆனால் இந்த இனவாத அரசு அவ்வாறான தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது நிச்சயம்" 
  26 வருடங்களிற்கு முன்னதாக தமிழ் தரப்புக்கள் நிராகரித்த 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபையை தப்ப வைத்துக்கொள்ள நாம் இப்போது போராட வேண்டியிருக்கின்றது.
  கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று  மாகாணசபைக்கான அதிகாரங்களை தக்க வைக்க டெல்லியில் பலரையும் சந்திக்க வேண்டியிருக்கின்றது. யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையெல்லாம் 13 பிளஸ் பற்றி கதைத்த மஹிந்த இப்போது 13 இனில் இருப்பவற்றையும் வெட்டுவதில் முன்னுக்கு நிற்கின்றார்.
  சர்வதேச அழுத்தங்கள் மூலம் தீர்வொன்று வருமென்பதில் சந்தேகமே.அவ்வாறான சூழல் இப்பிராந்தியத்தில் நிகழுமானால் அது அதிசயமே.
  ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இந்தியப்படையினர் நின்றிருந்த வேளை அமுல்படுத்த முடியாதவற்றை இப்போது செய்வதென்பது கேள்விக்குறியே.
  அத்துடன் தமிழர்கள் தற்போது பலவீனப்படுத்தப்பட்ட நிலையினிலேயே உள்ளனர். இந்தியாவை பொறுத்த வரையினில் தமிழ் மக்களிற்கு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டுமென்ற மனோ நிலையில் இப்போதிருப்பதாக தெரியவில்லை.
  அரசியல் ரீதியாக பிரபாகரனுக்கும் எனக்குமிடையே  ஒத்த கருத்துக்கள் இல்லாத போதும் பிரபாகரனை நான் பிரமிப்புடன்  மதிக்கின்றேன். 
  30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார். இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். பிரபாகரனுக்கு அஞ்சிப் பதுங்கிய மஹிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கு அறிவேன்.
  முள்ளிவாய்க்காலில் போராட்டம் தோற்றுப் போய்விட்டதென்பதை தெரிந்திருந்தும் இறுதிக் கணங்களிலும் தற்கொலைப் போராளிகளாக வெடிக்கும் கரும்புலிகளை பிரபாகரனாலேயே உருவாக்க முடிந்திருந்தது. பிரபாகரனது ஒற்றை உத்தரவினையடுத்து வெடித்து சிதறும் கரும்புலிகளை அவர் உருவாக்கியிருந்தார். இத்தகைய இராணுவக் கட்டமைப்பு சார்ந்து  ஈழத்தை உலகை திரும்ப் பிப்பார்க்க வைத்த வகையில் அவர் மதிப்பிற்குரியவரே" என சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.

18/6/13

தேசிய தலைவர் பிரபாகரனின் கனவை நனவாக்க சிறிலங்கா முயற்சியாம்!விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவான ஈழத்தினை சிறிலங்கா அரசாங்கம் போர் புரியாமலேயே நனவாக்க முனைகிறதென ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா தெரிவித்துள்ளார்.
    பொது எதிரணிக் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
   "அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்க வைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு.
   வடக்குத் தேர்தல் நடத்துவது குறித்து நாட்டில் தற்போது பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாட்டின் பல தலைவர்களும் பல கருத்துகளை முன் வைத்துள்ளனர். 
   இந்நிலையில், அரசிலுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வடக்குத் தேர்தலுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தமது முடிவைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் இனவாதம் தோன்றி பேராபத்து ஏற்படும்.
   அத்துடன், பிரபாகரன் போர் மூலம்  நாட்டை பிளவு படுத்தலாம் என்று கண்ட கனவை இன்று போரின்றி தாமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.
   13ஆவது திருத்தச் சட்டம்,  வடக்குத் தேர்தல் ஆகியவை குறித்து ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்துக்கும் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தவறக்கூடாது." என்று ஜோசப் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

இராணுவ முகாமை முற்றுகையிட்ட சுமார் 400 பேர்


  ஊட்டி வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.
   இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
  இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில், காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் காங்கிரஸ் அமைசர்கள் எங்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராகப் போராட்டம் தொடரும். இது தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்று கூறினார்.
  இந்தப் போராட்டம் காரணமாக உதகை குன்னூர் சாலையில் 2 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையின் இரு வழிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இலங்கை காடையர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக் குதல்

 


இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும், அப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.
திடீரென சிங்கக் கொடியேந்திய இலங்கை அரசு ஆதரவுக் காடையர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். இதன்போது பெண்கள், சிறுவர்களும் தாக்கப்பட்டனர்.
பிரித்தானியக் காவல்துறையினர் இலங்கை அரச ஆதரவாளர்களை தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர்.
இதையடுத்து வன்முறையில் இறங்கிய சிங்கக்கொடியேந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். {புகைப்படங்கள்}

 

தமிழீழம் அழியவில்லை-நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு)

தமிழீழம் அழியவில்லை-நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு)
சுவிட்சர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான், தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும்.
தமிழ் என்று செத்தது. தமிழ் என்றும் சாகாது. உலகத் தமிழர்கள் இருக்கும் வரை என்றும் வாழும் தமிழ். உலகத்தில் உள்ள 10 மொழிகள் என்றும் அழியாது. அதில் ஒன்று தமிழ் மொழி தெரிந்து கொள்ளுங்கள் என உணர்ச்சிகரமாக பேசினார்.

16/6/13

ஆட்டம் போடும் கோத்தபாய அடங்கும் காலம் நெருகிறது! சிங்கள மக்கள் மத்தியில் சிந்தனைப் புரட்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் கோத்தபாயவை மட்டுமல்ல பேரினவாதிகளையும் தூக்கி வீசி ஏறிய முடியுமென மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
   சிங்கள மக்கள் மத்தியில் கல்விமான்கள், சமயப்பற்றுள்ளவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள், தமிழர்களாகிய எங்களுடைய உண்மைநிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த உண்மை சிங்கள மக்களுக்கு ஈர்ப்பைக் கொடுக்கும்.  அதன் பின் அவர், கோத்தாவை மட்டுமல்ல பேரினவாதிகளையும் தூக்கி வீசிவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  இது தொடர்பில் மன்னார் ஆயார் மேலும் தெரிவிக்கையில்,
  "பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது பொதுபலசேனாவோ எடுக்கும் இனவாத  அடிப்படைவாத நடவடிக்கைகள் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒரு சிறு குழுவினரே. சிந்தனைப் புரட்சி ஊடாக சிங்கள மக்களைத் தெளிய வைத்து நாங்கள் எங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்' என்று இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.
  "கோத்தபாய ராஜபக்ஷ தனது பணி என்ன என்பதை மறந்து பேசுகின்றார். அடிப்படை இனவாதிகளுடன் சேர்ந்து அவர்களால் முன்னெடுக்கும் பரப்புரையை எங்களால் சிந்தனைப் புரட்சி மூலம் இல்லாது செய்ய முடியும். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
  இவர்கள் கடந்தகால வரலாறுகளை மறந்து விட்டனர். இனவாதம் பேசிக் கடந்த காலங்களில் நடந்தது என்ன என்பதை வரலாறை மீள தட்டிப் பார்க்க வேண்டும். 
  அரசியல்வாதிகளான ஜனாதிபதியும், பசில் ராஜபக்ஷவுமே மௌனம் சாதிக்கும் நிலையில் கோத்தபாய மட்டும் ஏன் தொடர்ந்தும் இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார்? இவையெல்லாம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.' என்றும் மன்னார் ஆயர் குறிப்பிட்டார்.

 

15/6/13

புலிகளை அழிக்கும் இலக்கில் தோல்வி கண்ட இந்தியப்படை!


முதலாம் கட்ட ஈழப்போர் இந்தியப் படையினரின் வருகையுடன் தான் முடிவுக்கு வந்தது.
 
 இந்தியப்படையினரின் வருகை அல்லது இந்தியத் தலையீடு என்பது எதற்காக நிகழ்ந்தது என்பதில் இருவேறு கருத்து நிலைகள் உள்ளன.

 அதாவது ஒப்பரேசன் லிபரேசன்மூலம் கைப்பற்றப்பட்ட வடமராட்சியில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது கரும்புலித் தாக்குதல் தான் இந்தியத் தலையீட்டுக்கு வழி வகுத்ததாக தமிழர் தரப்பில் ஒரு நம்பிக்கை உள்ளது.

 ஆனால் இலங்கை அரச மற்றும் இராணுவத் தரப்போ யாழ்ப்பாணம் மீதான தமது தாக்குதல் திட்டம் தான் இந்தியத் தலையீட்டுக்கு வழி வகுத்ததாக கருதுகின்றன.

 நெல்லியடி இராணுவ முகாம் மீதான இந்தக் கரும்புலித் தாக்குதலில் 300 வரையான அரச படையினர் கொல்லப்பட்டதாக அப்போது புலிகள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டன.

 ஆனால் அது உண்மையல்ல என்பது இராணுவத் தரப்பின் உறுதியான கருத்து.

 அப்போது நெல்லியடி இராணுவ முகாமில் இருந்த மொத்தப் படையினரின் எண்ணிக்கை சுமார் 150 பேர் வரை தான் என்று முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெரி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 அந்தத் தாக்குதலில் 17 படையினர் தான் கொல்லப்பட்டனா் என்பது அவரது கணக்கு.

 நெல்லியடித் தாக்குதல் அரசாங்கத்துக்கும் படையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 எனினும் அதுவே இந்தியத் தலையீட்டுக்கு காரணமல்ல என்பது அரசதரப்பின் நியாயம்.

 யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இரண்டாவது கட்ட ஒப்பரேசன் லிபரேசனை முன்னெடுத்த போதே இந்தியா அதனைத் தடுத்ததாக இலங்கை இராணுவ அதிகாரிகள் உறுதியாக கூறுகின்றனர்.

 காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதியை மையப்படுத்தி இரண்டு பிரிகேட் படையினர் முன்னகர்ந்த போதே இந்தியா அழுத்தம் கொடுத்ததால் ஜே.ஆர். அந்தப் படை நடவடிக்கையை இடைநிறுத்த உத்தரவிட்டதாக இராணுவத் தரப்பு கூறுகிறது.

 அப்போது யாழ். குடாநாட்டில் போர் நடவடிக்கையில் ஈடுபட்ட படை அதிகாரிகளில் ஒருவரான லெப். கேணல் கோத்தபாய ராஜபக்ச இதே கருத்தை அண்மையில் கூட குறிப்பிட்டிருந்தார்.

 ஆனால் இந்தியப்படையின் இலங்கை வருகை என்பது இலங்கைப் படையினருக்கு சார்பானதோ விடுதலைப் புலிகளுக்கு சார்பானதோ அல்ல.

 அதாவது இந்தியப்படையினர் புலிகளைக் காப்பாற்றவும் வரவில்லை. இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றவும் வரவில்லை.

 விடுதலைப் புலிகளினதும் அரச படைகளினதும் போர் நிகழ்ச்சி நிரல்கள் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து போனதாலும் யாழ்ப்பாணம் மீதான தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலும் தான் இந்தியத் தலையீடு இடம்பெற்றது.

 அது முற்றிலும் இந்திய நலனைக் கருத்தில் கொண்ட நிகழ்வு.

 எனவே அதற்கு விடுதலைப் புலிகள் அல்லது அரச படையினர் உாிமை கோருவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததற்குச் சமமானது.

 ஏனென்றால் முதலாம் கட்ட ஈழப் போரில் யாருமே மேலாதிக்கம் செலுத்தவில்லை.

 படைத்தரப்பு வடமராட்சியைக் கைப்பற்றி அடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருந்தது.

 அதேவேளை விடுதலைப் புலிகளோ வடமராட்சியைப் பறிகொடுத்தாலும் நெல்லியடித் தாக்குதல் மூலம் தமது பலத்தை வெளிக்காட்டினர்.

 இருந்தாலும் நெல்லியடித் தாக்குதலுக்குப் பின்னர் புலிகள் சில நாட்கள் மட்டுமே வடமராட்சியின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.

 அதன் பின்னா் விலக்கிக் கொண்டனர்.

 நெல்லியடித் தாக்குதல் இழந்து போன வடமராட்சியை புலிகளுக்கு மீட்டுக் கொடுக்கவும் இல்லை, அதற்கான ஆயுத மற்றும் ஆட்பலம் அவர்களிடம் இருக்கவும் இல்லை.

 அதேவேளை யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றுவதற்கு போதிய ஆட்பமை் படையினரிடம் இருக்கவும் இல்லை.

 ஆனால் பலாலி தொடக்கம் யாழ்ப்பாண நகரம் வரை பரவலாக குண்டுகளை வீசி அதைக் கைப்பற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இருந்தது.

 இது இந்தியாவுக்குத் தெரியும்.

 அதேவேளை புலிகளிடம் ஆயுத வளம் இல்லை என்பதும் இந்தியாவுக்குத் தெரியும்.

 ஏனென்றால் அவர்கள் இந்தியாவிடம் உதவி கோரியிருந்தனர்.

 இந்தியா அதைக் கொடுக்கவில்லை.

 மோதல் முற்றும் வரை கனியைப் பறிக்க காத்திருந்தது.

 எல்லாமே தமது நிகழ்ச்சி நிரலுக்கமைய வந்தபோது இந்தியா ஜே.ஆரை மடக்கியது.

 இதில் ஜே.ஆரை, ராஜீவ் மடக்கினாரா, ராஜீவை ஜே.ஆர் மடக்கினாரா என்ற கேள்வி இருக்கிறது.

 விடுதலைப் புலிகளை அழிக்கும் வேலையில் இந்தியப் படையினரைக் கோர்த்து விட்டு தனது படையினரைப் பாதுகாப்பாக தேற்கே நகர்த்திக் கொண்டார் ஜே.ஆர்.

 இது அவரது தந்திரம்.

 எது எவ்வாறாயினும் முதலாம் கட்ட ஈழுப்போரின் இறுதிக்கால ஒட்டுமொத்த நிகழ்வுகள் தான் இந்தியத் தலையீட்டுக்கு வழி வகுத்தன.

 இந்தியப் படைகள் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையிலான ஈழப்போர் 1  முடிவுக்கு வந்தது.

 ஏனென்றால் இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை போர் நிறுத்தத்தையும் கொண்டு வந்தது.

 அந்தப் போர் நிறுத்தம் ஒரு எழுத்துபூர்வ ஆவண்மாக இல்லாத போதிலும் புலிகளை அதற்கு இணங்க வைத்தது இந்தியா.

 அதுமட்டுமன்றி இந்தியாவின் அழுத்தங்களினால் உடன்பாட்டை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி ஆயுதங்களை ஒப்படைக்கவும் புலிகள் இணங்கினர்.

 அது வெறும் கண்துடைப்பு என்பது வெளிப்படையான விடயம்.

 இந்தியப்படைகளின் வருகையின் பின்னர் ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் தான் அமைதி நிலவியது.

 அது கூட கொந்தளிப்புகள் நிறைந்த சூழலாகவே இருந்தது.

 அதற்குள் இந்திய - புலிகள் போர் வெடித்தது.

 குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளின் மரணத்தை அடுத்து இலங்கைப் படையினர் மீது புலிகள் தாக்குதல் தொடுக்க ஆயுதக்களைவு என்ற பெயரில் அவர்கள் மீது இந்தியா போரைத் தொடுத்தது.

 1987 ஒக்டோபர் 10ம் திகதி தொடங்கிய இந்தப் போரில் இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற ஒப்பரேசன் பவான் என்ற தாக்குதலை மேற்கொண்டனர்.

 விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரை வழி மறித்து பல இடங்களில் போரிட்டனர்.

 விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் தலையிறங்கிய இந்திய இராணுவ அணியொன்று முற்றாகவே அழிக்கப்பட்டது.

 29 சீக்கிப் படையினரும், 6 பரா கொமாண்டோக்களும் அதில் மரணமாகினர்.

 ஐந்து நாட்கள் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் தாம் 33 படையினரை இழந்ததாகவும், ஆனால் எல்லா வளங்களையும் கொண்ட, சிறப்பு பயிற்சிகளையும் பெற்ற  இந்தியப் படையினர் ஒரே நாளில் 35 படையினரை இழந்ததாகவும் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

 ஒபரேசன் பவான் நடவடிக்கையில் மட்டும் இந்தியப் படையினர் 247 பேர் கொல்லப்பட்டனர்.

 விடுதலைப்புலிகள் தரப்பில் இதில் குறைந்தளவிலானோரே கொல்லப்பட்டனர்.

 இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வன்னி, மணலாறு காடுகளில் புலிகள் அடைக்கலம் தேடிக் கொண்டனர்.

 அடுத்து புலிவேட்டை அங்கு நீடித்தது.

 இந்தியப் படையினருக்கு எத்ரான கெரில்லாப் போரை பரந்தளவில் நடத்திய புலிகள் மணலாறு காட்டுக்குள் அவர்களை நுழைய விடாமல் கடுமையாக சண்டையிட்டனர்.

 1990 மார்ச் 24ம் திகதி திருகோணமலையில் இருந்து இந்தியப் படையினர் புறப்படும் வரையில் இந்திய - புலிகள் போர் நீடித்தது.

 ஆனால் இந்தியாவில் ஆட்சியில் அமர்ந்“த வி.பி. சிங் அரசாங்கம் இந்தியப் படையினரை விலக்கும் முடிவை எடுத்து பின்னர் 1989ன் கடைசிக்கால கட்டத்திலேயே கிட்டத்தட்ட இந்தப் போர் ஓயத் தொடங்கி விட்டது.

 இந்தப் போரில் 1255 வரையிலான இந்தியப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

 மேலும் 2500 பேர் வரை படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5000 வரையிலாகும்.

 முதலாம் கட்ட ஈழப் போரில் இலங்கைப் படையினர் எதிர்கொண்ட இழப்புக்களை விடவும் அதிகமான இழப்புகளை இந்தியப் படையினர் குறுகிய காலத்துக்குள் சந்தித்தனர்.

 விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிகளும், தாக்கிவிட்டு மறைந்து போகும் கெரில்லா உத்தியும் இந்தியப் படையினருக்குப் பெரிதும் சேதங்களை ஏற்படுத்தியது.

 அவர்களுக்ப் பிரதான அச்சுறுத்தலாக இருந்ததே கண்ணிவெடிகள் தான்.

 இந்த இரண்டரை ஆண்டு காலப் போரில் விடுதலைப் புலிகள் தரப்பில் 900 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 புலிகளை விட அதிகமான இந்தியப் படையினர் போரில் பங்கெடுத்ததும் சேதங்கள் அதிகமாக ஏற்பட்டதற்கு ஒரு காரணம்.

 இந்தப் போர் தான் விடுதலைப் புலிகளுக்கு பெரிய உந்துசக்தியாகவுத் உளவியல் பலமாகவும் அமைந்து போனதாக கணிப்பிடுகின்றனர் இலங்கைப் படை அதிகாரிகள்.

 உலகின் நான்காவது பெரிய இராணுவத்தையே தோற்கடித்தது புலிகளை அதிகம் பலமானவர்களாக கணிக்க வைத்தது.

 இந்தப் போரில் இந்தியப் படையினர் தமது இலக்கை எட்டுவதில் தோல்வியை சந்தித்தனர்.

 அதேவேளை விடுதலைப் புலிகளும் கொழும்புடன் அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டதால் தான் தப்பிக் கொண்டனர்.

 ஒரு பக்கத்தில் இந்தப் போர் புலிகளின் உளவியல் பலத்தை உயா்த்தினாலும் நீண்ட காட்டு வாழ்க்கையும் விநியோக நெருக்கடிகளும் புலிகளுக்கு கடும் சவாலாகவே இருந்தது.

 எவ்வாறாயினும் இலக்கை அடையாமலே இந்தியப் படையினர் வெளியேறியது புலிகளின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

 ஆனால் அந்த அளவுகோல் எந்தளவுக்கு சரியானது என்ற கேள்வியும் உள்ளது
 
                                     

14/6/13

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ,


13 ம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான  தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ,
இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ அமையமுடியாது.
வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் உருவாகியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இத் தேர்தல் தொடர்பாகவும், மாகாண சபை முறைமை தொடர்பாகவும் எமது கட்சியின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை இந்த அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்துகின்றோம். சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நகர்வுகளை விளங்கிக் கொள்வதன் ஊடாக இம்மாகாண சபை என்கின்ற பொறியை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், அப்புரிதலின் ஊடாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறுபவர்கள், எதிர்காலத்தில் எடுக்கக் கூடிய வரலாற்றுத் தவறான முடிவுகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த ஊடக அறிக்கை வெளியிடுகின்றோம்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய மிகவும் முக்கியமான மூன்று  சம்பவங்கள் உள்ளன. ஒன்று 2009 மே 18 இல் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து மூன்று நாட்களில் இடம்பெற்றது.  இந்தியாவின் முக்கிய பிரமுகர்களான அன்றய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர்மேனன், மற்றும் அப்போதய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்று இலங்கை வந்திருந்தது.  அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினையும் அப்போது சந்தித்திருந்தனர். அந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்  தற்போதய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இந்தியத் தரப்பினால் அந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டவற்றினுள் மிகப் பிரதானமானது தமிழ் மக்கள் 13ம் திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனபதாகும். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் 13ம் திருத்தம் சம்மந்தமாக விமர்சனங்களை முன்வைத்து அந்த தீர்வுத்திட்டம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என கூறியபோது நாராயணன் அவர்கள் கோபித்து பதிலளித்திருந்தார். தமிழருக்கு எத்தகைய தீர்வு நல்லதென்பது தமிழ் மக்களை விடவும் இந்தியாவுக்கு நன்கு தெரியும் எனக்கூறி 13 ஆம் திருத்தச் சட்டத்தை  ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இது எங்கள் இனத்தின் அரசியல் சரித்திரத்தில் முக்கியமானவிடயம். அந்த சந்திப்பின் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டில் பாரிய அடிப்படை மாற்றங்கள் பல ஏற்பட்டிருக்கின்றது. அந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? பின்னணி என்ன? என்பதை பதிவுசெய்யும் நோக்குடனும் தமிழ் மக்கள் சர்வதேச அரசியலை சரியாக அறிந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் எமது மக்ளுக்கு இவ்விடயங்களை பகிரங்கமாக கூற முன்வந்துள்ளோம்.
அடுத்த சம்பவம் கடந்த 2011 ஆகஸ்ட மாதம் இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் அவர்களது ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் புதுடில்லியில் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அம்மாநாட்டில் எமது கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எட்டுக் கட்சிகள் கலந்து கொண்டிருந்தன. அம்மநாட்டை ஏற்பாடு செய்த சுதர்சனநாச்சியப்பன் அவர்கள் 13ம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ளவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றய சம்பவமானது 2008ம் ஆண்டு ஒக்ரோபர் முற்பகுதியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் திரு சம்பந்தன் அவர்களிடம் பாராளுமன்றக் கட்டிடத்தில் வைத்து அப்போதய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது எமது கட்சியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் அவசரமான கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதாவது தமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பதனை நீங்கள் பகிரங்கமாக சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவேண்டும். இன்று யுத்தத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தாலும் கூட தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒருபோதும் மாற்றங்கள் ஏற்பாடாது என்பதனை சர்வதேச சமூகத்திற்கு ஆணித்தரமாகக் நீங்கள் கூறினால் மட்டுமே சர்வதேசம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும். ஏனெனில் நீங்கள் தமிழ் மக்களால் ஐனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றக் குழுவின் தலைவர். அவ்வகையில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும் என்பதனை தாங்கள் பகிரங்கமாக சர்வதேசத்திற்கு அறிவிக்கவேண்டுமெனவும் மிகவும் விநயமாகக் கோரியிருந்தார்.
அப்போது கஜேந்திரனிடம், சம்பந்தன்  அவர்கள் 'இவ்விடயம்; தொடர்பாக தான் பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். ஒஸ்லோ அடிப்படையில் ஒரு சமஸ்டி தீர்வுக்கு புலிகள் இணங்கினால் அந்த தீர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கூடாக முன்வைக்க இணங்கினால், போரை நிறுத்தி வடகிழக்கு இணைத்து தீர்வினை வழங்கலாமென இந்தியா தமக்கு கூறியிருக்கின்றது. ஆனால் பிரபாகரன் தனக்கு பதில் தரவில்லை' என்றும் கூறியிருந்தார். கடந்த மே 11, 2013 அன்று மன்னார் ஞானோதயம் இல்லத்தில் தமிழ்சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில்  இவ்விடயம் மீளவும் திரு.சம்பந்தன் அவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது.
இம் மூன்று சம்பவங்களும் முக்கியமானவை. இன்று தமிழ் அரசியல் பரப்பில் நிலவும் பல குழப்பங்களுக்கான காரணங்களை புரிந்து கொள்ளவேண்டுமாயின் இவற்றை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அன்று திரு.சம்மந்தன் கூறிய சமஸ்டித் தீர்வுக்கு புலிகள் இணங்கினால் இனப்படுகொலையை நிறுத்தி இணைந்த வடகிழக்கில் இந்தியா தீர்வினைப்பெற்றுத்தருமென சம்மந்தன் வாக்குறுதி கொடுத்திருந்தார். தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்துவதற்கான நிபந்தனையாக மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை இந்தியா மட்டுமல்லாமல் மேற்குலக நாடுகளும் வலியுறுத்தியிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் சமஸ்டித் தீர்வுக்கு இடைஞ்சலாக இருக்கின்றார்கள் என்பதனையும் ஓர் சாட்டாகக் கூறியே அவர்களை படத்திலிருந்து அகற்றினர். 
ஆனால் யுத்தம் முடிவடைந்து மூன்று நாட்களுக்குள் இலங்கை வந்த இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினர் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில் திரு.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை சந்தித்தபோது சமஸ்ட்டித் தீர்வை நிராகரித்தது மட்டுமன்றி ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென கூறியிருந்தனர். தமிழர்கள் இரு தசாப்தங்களாக பயனற்றது என்று கூறி நிராகரித்த விடயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை. மாறாக திரு. சம்பந்தன் அவர்களும் அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே தமிழ் மக்களது ஐனநாயக ரீதியான தலைமையாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தலைமையை இந்தியாவும், சர்வதேச சமூகமும் ஏற்று அங்கீகரித்தும் உள்ளது. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்காக அவர்கள் சமஸ்டித்தீர்வை ஏற்றுக் கொள்கின்றார்களில்லை என்று இந்தியாவும் சர்வதேச சமூகமும் கூறின. ஆனால் இன்று திரு.சந்பந்தன் அவர்களிடம் கூட சமஸ்டித் தீர்வு ஒன்றினை வழங்குவதற்கான முயற்சிகள் எதனையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல 13 ம் திருத்தத்தினை ஏற்க வேண்டுமென வற்புறுத்தியும் வருகின்றன. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல் புரிந்திருந்தும் தமிழ் மக்களின் நலன்களை அடைவதற்காக இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் பேரம்பேச வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சக்திகளின் பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்களை இழுத்துச் செல்லும் முகமாக 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஓரு அங்கீகாரம் கொடுத்துவருகின்றது.
1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ம் திகதி 13வது திருத்தச் சட்டம் முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியப் பிரதமர் ராஐPவ்காந்திக்கு அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம், உபதலைவர் திரு.சம்பந்தன் ஆகியோர் கையொப்பமிட்டு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் 13வது திருத்தம் தொடர்பாகவும், மாகாணசபைகள் தொடர்பாகவும் எங்கள் ஏமாற்றத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என கூறப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, தீர்ப்பதாகவோ இழப்புக்களுக்கு ஈடாகவோ அமையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நாங்கள் இந்தச் சட்டங்கள் திருப்பதியளிப்பதாகவும், நீதியானதாகவும், நிலைத்திருக்கக்கூடிய விடயமாகவும் உள்ளது என்று கூறி எமது மக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்ட முடியாது என்றும் அந் நீண்ட கடிதத்தில் தமிழ் விடுதலைக் கூட்டணி கவலையுடன் குறிப்பிட்டிருந்தது. அக்கடிதத்தில் மேலும் '13 ஆம் திருத்தச் சட்டத்தில் காணி அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, அதனை அமுல்ப்படுத்தினால் காணிப்பிரச்சனைகளை தீர்க்கலாம் என்கிறார்கள், ஆனால் இணைந்த வடக்கு கிழக்கில் அரச காணிகள் தொடர்பாக ஒருவித அதிகாரமும் இல்லாத வகையில் இந்தச் சட்ட மூலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரச காணிகள் தொடர்பில் மத்திய அரசாங்கமே மேலாதிக்கத்தை கொண்டிருக்கின்றது' என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் இறுதியாக 13வது திருத்தச்சட்டத்தினதும், மாகாணசபைகள் சட்டத்தினதும் உத்தேச சட்ட வரைபுகளை முன்கொண்டு சென்று சட்டமாக மாற்ற வேண்டாமென்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை கேட்கும்படி ஓர் கோரிக்கையினையும் விடுத்திருந்தனர்.
இன்று இந்த நிலை தலைகீழாக மாறி மாகாணசபைகளை ஆரம்ப புள்ளியாக கருதலாம் என்றும், கடவுள் கொடுத்த அரிய சந்தர்ப்பம் என்றும் கூறுமளவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், அதிலுள்ளவர்களும் மாறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில் இந்த 13ம் திருத்தம் தமிழர் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ இருக்க முடியாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
13ம் திருத்தம் ஒரு முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உயர்நீதிமன்றிற்கு அரசால் அனுப்பப்பட்டு அன்றிருந்த அரசியலமைப்பிற்கு முரணாக இருக்கின்றதா என்பதை அறிவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றிலிருந்த ஒன்பது நீதியரசர்களும் அதனைப் படித்து கருத்துக்களை முன்வைத்தார்கள், ஆரம்பத்தில் ஜந்து நீதியரசர்கள் 13ம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பு அதாவது ஒற்றையாட்சியை மீறியுள்ளது என கூறி அதனை அமுல்ப்படுத்த பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜனவாக்கெடுப்பும் நடத்தவேண்டும் எனகூறியிருந்தனர்.
ஒற்றையாட்சியை மீறுவதாக கூறிய ஜந்து நீதியரசர்களில் ஒருவர் சில மாற்றங்களை செய்தால் இது ஒற்றையாட்சியை மீறாது எனக் கூறினார். அதன் பின்னர் அத்தகய மாற்றங்களுடன் 13 ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்சத்தை பார்த்தால் 13ம் திருத்தம் என்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் எல்லை என்றும், அதனால் 13ம் திருத்தத்திற்கு மேலும் அதிகாரங்களை சேர்த்தால் ஒற்றையாட்சி முறையினை மீறும் என்றும், அதனை மீறினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்ல சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என கூறியிருந்தனர்.
13ம் திருத்தத்தை அப்போது ஈபிஆர்எல்எவ் தவிர்ந்த தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் நிராகரித்து புறக்கணித்திருந்தார்கள். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மட்டும் திருத்தம் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்து இணைந்த வடகிழக்கில் போட்டியிட்டு வென்று முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் தெரிவானார். பின்னர் மாகாணசபையில் எந்த அதிhகாரங்களும் இல்லை என்று கூறி தமிழீழ பிரகடனம் செய்து இந்தியாவிற்குத் தப்பிச்சென்றார். எனவே 13ம் திருத்தச் சட்டம் அந்தச் சம்பவத்தின் பின்னர் பேசாப்பொருளாகவே மாறிவிட்டது. இதன் பின்னர் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி 13ம் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்திலும், வெளியிலும் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் அது இறந்துபோன ஒரு விடயம் என்றும் அதனைப் பற்றிப்பேசவோ தொட்டுப்பார்க்கவோ நாம் தயாரில்லை எனவும் கூறி நிராகரித்திருந்தார். 
ஆனால் இன்று அந்த கருத்துக்கள் எல்லாம் தலைகீழாக மாறி ஆரம்ப புள்ளியாகவோ, இறுதி தீர்வினை அடை வதற்கான பாதை என்ற போலியான நம்பிக்கையினை ஊட்ட முயற்சி செய்கின்றனர். எங்கள் மக்களிடம் நாங்கள் கூற விரும்புவது சிங்கள தேசத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது, சமஸ்டி குறித்துப் பேசிய ஜ.தே.கட்சி கூட அண்மையில் முன்வைத்த அரசியலமைப்பில் ஒற்றையாட்சியினையே புதிய அரசியலமைப்பு யோசனையாக முன்வைத்துள்ளது.

சிங்கள தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த இனவாதம் தமிழ் மக்களுக்கென பெயரளவில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் நீக்கப்படவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் நீக்கப்;படவேண்டும் என கூறிவருகின்றன. இதனால் தமிழ் மக்களும் இந்த 13 ஆம் திருத்தத்தில் ஏதோ இருக்கின்றது என நினைப்பது ஆபத்தானது. எதிர்த்தரப்புக்கள் கூறும் கருத்துக்களுக்கு எதிர்வினையாக எங்கள் இருப்புக்கான முடிவுகளை எடுக்க முடியாது.
இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் பாரிய கடமையுள்ளது. 13ம் திருத்தத்தின் ஆபத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி, இன்றுள்ள பூகோள அரசியல் நிலைமைகளையும் அதில் தமிழ் மக்களுக்குள்ள வாய்ப்புக்களையும், தமிழ் மக்களது அரசியல் பலங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதனூடாக மக்களை அரசியல் மயப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் தலைமை தவறாக முடிவுகளை எடுப்பதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இதன் மூலம் இன்று பூகோள அரசியல் மாற்றத்தினூடாக எமக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பான சூழ்நிலையை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,,கஜேந்திரகுமார் பொன்னம்பலம்      செல்வராசா கஜேந்திரன்
தலைவர்                            பொதுச் செயலாளர்

ஜெர்மனியிடம், இலங்கை கோரிக்கைபுலிச் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு ஜெர்மனியிடம், இலங்கை கோரிக்கை
 தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு ஜெர்மனியிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் ஜெர்மனியில் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 தற்போது ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
 உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முனவைக்கப்படும் என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சமூக நிறுவனங்கள் என்ற போர்வையில் சில விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகள் இயங்கி வருவதாக ஜெர்மனிய அமைச்சர் குய்டோ தெரிவித்துள்ளதாக அரசாங்கதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புலிகளுக்கு ஆதரவான வகையில் பாடசாலைகளும், பிரச்சாரப் பணிகளும் மேற்கொண்டு வருவதாக இலங்கையிலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக அரசாங்கதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

11/6/13

கொலையாளியாக மாறும் காவல்துறை!?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இச்சம்பவம் தொடர்பில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் அடங்களாக நான்கு பொலிஸார் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

 இந்நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவினரால் அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

 கடந்த மாதம் 22ம் திகதி கடத்தப்பட்ட கோட்டீஸ்வர வர்த்தகரான சியாம் என்பவர் காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில் தொம்பே பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டிருந்தார். 

 கடத்தப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இவரது சடலம் ஒருவாரத்திற்கு பின்னர் கடந்த 31ம்திகதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசார¨ணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்ததுடன் இதனுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வந்தனர்.

 கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கொலைச் சம்பவத்துடன் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு உள்ளமை தெரியவந்தது. 

 30 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையிலேயே இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

சிறிலங்காவின் துரோகம் -

 மந்திராலோசனை நடத்த தயாராகிறது இந்தியா!,தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கவென இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதுஇந்நிலையில் அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இதையடுத்து அடுத்த வாரத் தொடக்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் புதுடெல்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இவர்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக அறியப்படுகிறது.

 இந்தச் சந்திப்புகளின் போது, 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சிறிலங்கா அரசின் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 அதேவேளை, சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மீறிவருவதால், புதுடெல்லி சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பலாம் என்றும் கருதப்படுகிறது.

7/6/13

விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும்என்று இலங்கை அச்சம்!- அமெரிக்கா அறிக்கை விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போதும் ஆயுதங்களை கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெளிநாடு வாழ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என இலங்கை நினைப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளின் செயல்பாடு எதுவும் இல்லை என கூறியுள்ளது.
இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் நிதியுதவி செய்வதாக கூறிவரும் ராஜபக்ச அரசு, அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
இலங்கையில் சட்டமும் நீதியும் முறையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்!-  மிச்சேல் ஜே சிசன்
இலங்கையில் நீதியும், சட்டத்திட்டங்களும் முறையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் இலங்கை தூதுவர் மிச்சேல் ஜே சிசோன் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள நீதி அமைச்சின் அரசாங்க ஆய்வு திணைக்களத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், இந்த கட்டிடத்தில் டீ.என்.ஏ பரிசோதனை நிலையம் ஒன்றை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமெரிக்கா 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கி இருந்தது.
இதனை பார்வையிட்ட சிசோன், இலங்கையில் நீதியும், சட்ட ஒழுங்குகளும் முறையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இவ்வாறான நீதித்துறை சார்ந்த உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டதின் மூலம், இலங்கையில் உள்ள யாவருக்கும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீக்கிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்ப கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மீண்டும் தோற்றம் பெறுவர்: சம்பந்தன் எச்சரிக்கை

 
தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைகளுக்குத் திரும்ப விரும்பாத போதிலும், ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்றுமுன்தினம் மாலை உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த அறுபது ஆண்டுகளில் பதவிக்கு வந்த அரசுகளின் இன ஒடுக்குமுறைகள் தான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
13வது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்து அதனை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சியும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
மாகாணசபைத் தேர்தல் நாட்டை பிளவுபடுத்தும் என்ற அச்சம் தேவையற்றது.
அத்தகைய பரப்புரைகளைச் செய்யும் ஜாதிக ஹெல உறுமயவோ, தேசிய சுதந்திர முன்னணியோ பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவைக் கொண்டவையல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

6/6/13

13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றனர் -


 
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என ஈழத் தமிழர்களின் சர்வதேச காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 சுயாட்சி அதிகாரங்களே தற்போதைய தேவை என தெரிவித்துள்ளது.
 வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
 ஐக்கிய இலங்கைக்குள் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடான தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச காங்கிரஸ் தெரிவித்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது

புலிகளின் குண்டுகள் என்நேரமும் கொழும்பில் வெடிக்கலாம் !


விடுதலைப் புலிகளின் குண்டுகள் என்நேரமானாலும் கொழும்பில் வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது ? கொழும்பில் மறைவான இடம் ஒன்றில் 1000 KG எடைகொண்ட வெடிபொருட்கள், 3 இலகுரக துப்பாக்கிகள், மற்றும் 3500 ரவைகள் இன்னமும் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என ,வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இன் நபர் பொட்டு அம்மானின் புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றிய நபர் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெடிபொருட்கள் எங்கே ? தற்சமயம் இது யார் கைகளில் உள்ளது என்பது தொடர்பாக ஆராய இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 ஒன்று அல்லது இரண்டு KG வெடிபொருட்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் 1000KG வெடி பொருட்களா என்று வாயைப் பிளக்கிறார்கள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர். கொழும்பையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் சல்லடை போட்டு தேடவேண்டிய நிலை தற்போது தோன்றியுள்ளது.

இதுமட்டும் இதற்கு முக்கிய காரணம் அல்ல. இன்னும் சில மாதங்களில் இலங்கையில், காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இன் நேரம் பார்த்து இப்படி ஒரு சர்சை கிளம்பியுள்ளது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதாம்

அரசியல் அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்கும்??

தமிழர்களுக்கு அதிகாரமற்ற அரசியல் அதிகாரத்தை வழங்குவது பற்றி சிறிலங்கா அரசாங்கம் கவலைப்படவில்லையாம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்தமிழீழத்தில், சிறிலங்கா நடத்தவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து வெற்றியீட்டச் செய்தாலும் அது குறித்து அரசாங்கம் வருந்தப் போவதில்லையாம் என தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
    "மாகாணசபைகளின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி குறித்து கவலையடைப் போவதில்லை.
   மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்யும் யோசனைக்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளும் எதிர்ப்பை வெளியிடவில்லை.
   மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அண்மையில் அலரி மாளிகையில் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று நடைபெற்றதாகவும் இதன் போது எவரும் காணி, காவல்துறை அதிகாரங்கள் நீக்கப்படுவதனை எதிர்க்கவில்லை.
   எவ்வாறெனினும், 13ம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்ய தமது கட்சி தொடர்ந்தும் போராடும்.
   விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் சர்வதேச சக்திகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் கிடையாது" என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்..

5/6/13

தனி ஈழம் விரைவில் மலரும்: ???

கொந்தளிக்கிறார் வீரவன்ச""ஆயுதமின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழப் போரை தோற்கடிக்க சிறிலங்கா படையினரால் முடியாது அது நாட்டு மக்களினால் தான் முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்13ம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலான கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

 ஆயுத போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், ஈழம் தொடர்பான கருத்துக்களும் பிரச்சாரங்களும் இன்னமும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

 அத்துடன் இவர்கள் வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதன் மூலம் புதிய ஈழப்போராட்டமொன்றை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்.

 தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் தேர்தல் நடாத்தப்பட்டால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபடுவார்கள் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 வட தமிழீழத்தில் தேர்தல் ஒன்றை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலை நிறுத்துமாறு இனவாத அமைப்புகள் மற்றும் கடும்போக்குவாத கட்சித் தலைவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

3/6/13

தமிழீழத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை?

தமிழீழத்தில் தேர்தலை ஒன்றை நடத்த வேண்டிய தேவை சிறிலங்காவை விடவும் மேற்குலக நாடுகளுக்கு அவசியமாக உள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  இங்கு மேலும் கருத்து வெளியிட்ட வீரவன்ச,
  வடக்கில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வியையே இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்த தேர்தலை நடத்த வேண்டிய தேவை வடக்கில் உள்ள மக்களை  விட அமெரிக்காவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 பிராந்தியத்தின் அதிகாரம் பொருந்திய நாடு என்ற வகையில் இந்தியாவுக்கும் அந்த தேவை உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 தமிழீழத்தில் தேர்தலை நடந்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் கடும்போக்கு சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளான வீரவன்ச உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவி்த்து வருகின்றனர்.

 அவ்வாறானதொரு தேர்தல் நடக்கும் பட்சத்தில் தனி ஈழம் அமைந்து விடும் என்பதே இவர்களின் அச்சம் என குறிப்பிடப்படுகிறது..

புலம்பெயர் தமிழர்களை குறி வைக்கும்

புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்களை இலங்கு வைத்து சிறிலங்கா புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.,இதற்கமைவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக சிறிலங்கா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரதீப மகாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

 இதன்பொருட்டு, சர்வதேச நாடுகளில் வாழும் சிறிலங்காவுக்கு சார்பான புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 குறிப்பாக சிறிலங்காவின் மனிதவுரிமைகள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களிடையே சென்றடையும் முறையற்ற அபிப்பிராயங்களை சரிப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 புலம்பெயர் நாடுகளில் வாழும் விடுதலைப்புலி ஆதரவுகளை இலக்கு வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஆணையாளர், அவர்களை சென்று வலியுறுத்தக் கூடிய சில புலம்பெயர்ந்த அமைப்பினர் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக குறிப்பிட்டார்.

 ஆனால் உண்மையில் இந்த திட்டமானது இந்திய-சிறிலங்கா கூட்டுச் சதித்திட்டத்தின் கீழ் பொது நலவாய நாடுகளின் செயலர் கமலேஸ் சர்மாவினால் முன்மொழியப்பட்ட திட்டமாகும்.

 அதாவது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தத்தினை குறைக்க புலம்பெயர் மக்களை பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 இதனை எப்படி புலம்பெயர் மக்கள் எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதே கேள்விக்குறி. இந்த திட்டத்தினை புலம்பெயர் மக்கள் முற்றாக புறக்கணிப்பதுடன் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்

2/6/13

வரலாற்று சுதந்திர சாசன முரசறைவுஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழ சுதந்திர சாசனம் மே-18ம் நாள் சனிக்கிழமை உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.
'தமிழீழ தேசம்' எனும் கோட்பாட்டை நன்கு வலியுறுத்தும் கொள்கைகளின் அடிப்படையில், பாரம்பரிய வரலாற்றுத் தகமையில் தமிழீழ மக்களுக்கு உள்ள தன்னாட்சி உரிமையினை, இறைமையை வலியுறுத்தும் இருபத்தியொரு பிரிவுகளைக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முரசறைந்தார்.
தமிழீழ ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்சபை உறுப்பினர்கள் எனப் பல்வகைப் பேராளர்கள் முன்னிலையில் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
இந்தியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, தென் சூடான் வங்கதேசம் என உலகின் பல பாகங்களிலுமிருந்து பல்வேறு துறைசார் அறிஞர் பெருமக்கள் பலரும் இவ்வரலாறறு நிகழ்வில் பங்கெடுத்து கொண்டிருந்தனர்.
சுதந்திர சாசன முரசறைவின் போது வங்க தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், 'முக்தி பாகினி' போராட்ட இயக்கத்தின் மூளை என வர்ணிக்கப்பட்டவருமான கலாநிதி நூரான் நபி அவர்கள் தமிழீழ விடுதலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து உரையாற்றினார்.
மேலும், அமரிக்காவின் முன்னைநாள் சட்டத்துறை நாயகமாக விளங்கிய மதிப்புக்குரிய திரு.இராம்சே கிளார்க அவர்களும் தென் சூடான் நாட்டின் பிரதிநிதியாக அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னை நாள் போராளியுமான மதிப்புக்குரிய திரு.டானியல் மாயன் அவர்களும் தமிழீழ விடுதலைக்கான தங்கள் ஆதரவைத் தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு இடம்பெற்றிருந்த முன்நிகழ்வு மாநாட்டில் உலகின் பல பாகங்களிலிருந்து வந்திருந்த வள அறிஞர்கள் பலரும் தமிழீழ சுதந்திரத போராட்டத்தினை மையமாக கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தனர்.
பேராசிரியர்கள் ஜோசெப் அல்கவுத் (ஜேர்மனி), பீட்டர் சால்க் (சுவீடன்), சொர்ணராஜா (இலண்டன்), டேவிட் சுந்தா (இலண்டன்), வைத்திய கலாநிதி பிரையன் செனவிரட்னா (அவுஸ்திரேலியா), பிரடரிக் பப்பானி(பிரான்சு) சிறிஸ்கந்தராஜா (சுவீடன்), சந்திரகாந்தன் (கனடா), டேவிட் மத்தியாஸ் (கனடா), இந்திய நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் மணிவண்ணன், பால் நியுமான், திருமதி சரஸ்வதி, திரு.செய்ப்பிரகாசம் ஆகியோருடன், பிரித்தானியாவைச் சேர்ந்த ஜெம்ஸ் சம்மேர்ஸ், கனடா நாட்டைச் சேர்ந்த திரு. தங்கவேலு, திருமதிகள் சிறிதாஸ், உஷா சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி நிம்மி கௌரிநாதன் எனப் பல வளஅறிஞர்கள் உள்ளடங்குவர்.
தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு வலுவூட்டும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆய்வுகளின் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
அனைத்துலக மட்டத்தில் சட்டத் துறையில் புகழ் பெற்றவரும், இன அழிப்புக்கு எதிராக உலக நீதி மன்றில் போராடி வெற்றிகண்டு வரும் சட்ட வல்லுனருமாகிய திரு.பிரான்சிஸ் பொயில் அவர்கள் கலந்து பல ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
இவ்வாறு தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்/

 :
இந்த நாட்டிலுள்ள முக்கியமான வியாதி என்னவென்றால் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அண்மையில் திருகோணமலை சில்வஸ்டார் ஹோட்டலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் திருகோணமலை மாவட்ட வாக்காளர் பதிவும் வட்டாரப்பிரிப்பும் என்னும் பொருள் பற்றி பொது மக்களுடனும் புத்திஜீவிகளுடனும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,
மக்களுடைய ஜனநாயக உரிமையை பிரதிநிதித்துவப்படுத்துவது மக்களின் வாக்குகளாகும். வாக்கு மூலந்தான் ஆட்சியை அமைப்பது மக்கள் விருப்பம் எதுவொன்று அறிவது மக்களின் வாக்கு மூலந்தான்.
ஜனநாயகமென்பது மக்களின் இறைமையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இறைமையின் முக்கியமான அம்சம் ஜனநாயகம். வடக்கில் கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் 1956ஆம் ஆண்டு முதல் தமது ஜனநாயக உரிமையை ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த கொள்கையை நிறைவேற்ற தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த கொள்கையென்னவென்றால் தாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் போதியளவு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் அவ்வாறு சுயாட்சி வழங்கப்பட்டால் தான் இறைமையுடனும்
கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும் தமது பிரதேசங்களில் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள். அது உள்ளூராட்சி தேர்தலாக இருக்கலாம். பொது தேர்தலாக இருக்கலாம் இல்லை மாகாண சபை தேர்தலாக இருக்கலாம். எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் இந்த அபிலாசைகளை எதிர்பார்த்தே வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் இந்நாட்டிலுள்ள முக்கியமான பிரச்சினையென்னவென்றால் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாகவே ஆரம்பத்தில் சாத்வீகப் போராட்டம் நடாத்தப்பட்டது. அதன்பின்பு ஆயுதப் போராட்டம் நடாத்தப்பட்டது. இப்பொழது சர்வதேச தலையீடு தொடர்கிறது.
வாக்குரிமையொன்றின் மூலமே எமது இலக்கை அடைய முடியுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது வட கிழக்கில் குடியிருக்கும் மக்களின் வாக்குகளை வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ள முழுமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அதற்கு மக்கள் கட்சி அதன் தொண்டர்கள் கூடிய பங்களிப்புச் செய்யவேண்டு. தற்பொழுது தத்தமது சொந்த இடங்களில் குடியிருக்கும் மக்களிடம் மக்களைப் பதியக்கூடிய விதத்தில் எல்லோரும் செயற்பட வேண்டும். சில இடங்களில் மக்கள் வாழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் தமது சொந்த இடங்களில் வாக்கைப் பதிவு செய்ய வாக்களிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும.
முன்பு வட கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் முன்பு வாழ்ந்த இடங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்குரிய சட்டம வரவிருப்பதாக நான் அறிகிறேன். அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடுகிற போது இது பற்றிய சட்டம் கொண்டு வரப்படலாம். விசேடமாக வட மாகாண தேர்தலை மையமாக வைத்து மேற்படி சட்டம் கொண்டு. வரப்படவிருக்கின்றது. இதற்குரிய காரணம் என்னவென்றால் வட மாகாணத்திலிருந்து தமிழர்கள் அல்லாதவர்கள் குடிபெயர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இப்பொழுது வேறுமாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் ஒரு காலத்தில் வட மாகாணத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் வட மாகாணத்தில் வாழ்ந்தவர்கள் தற்பொழுது வடமாகாணத்தில் பதிவு செய்யும் வகையில் அச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது என அறிகிறேன்.
அவர்கள் அவ்வாறு வடமாகாணத்தில் வாக்களிக்க விரும்பினால் அந்த உரிமையை நாங்கள் மதிக்க வேண்டும். ஆனால் அவர் அதேசமயம் அவர் வேறு மாவட்டத்தில் பதிவு செய்யமுடியாது. என்னவென்றால் எந்தவொரு பிரஜைக்கும் இரண்டு வாக்குரிமை இருக்கமுடியாது
பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழந்து வருகின்றார்கள் பிறமாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்களும் வடமாகாணத்தில் வாழ்ந்தவர்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இப் பற்றி பரிசீலிக்கப்படவேண்டும்.
இலங்கையரசாங்கமானது வடமாகாண தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக செய்யக்கூடிய அத்தனை கருமங்களையும் நிறைவேற்றிவிடப் பார்க்கின்றார்கள். அதை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் நாம் நிற்கின்றோம். சர்வதேச ரீதியாக எமது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதற்குரிய காரணம் என்னவென்றால் ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் குறிப்பிட்ட கொள்கைக்காகப் போராடி வருகின்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட குறிகோள்களை கொண்டுள்ளார்கள். அது அங்கீகரிக்கப்படவில்லை. அது அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு முக்கிய அடிப்படையில் தான் அவர்கள் எமது போராட்டங்களை அங்கீகரித்து வருகின்றார்கள். அவர்களுடைய ஆதரவை முக்கியமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவர்கள் பங்களிப்பு என்பது இன்றைய நிலையில் மிக முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தான் கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

எங்களின் உண்மை நிலைகளை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்ட தன் காரணமாகவே 2012ஆம் ஆண்டும் 2013ஆம் ஆண்டும் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்மை இன்று காப்பற்றக் கூடிய ஒரே பலம் வாக்குப் பலமேயாகும். அதை நாம் முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தவேண்டும் பயன்படுத்த தவறிய தன் காரணமாகவே கிழக்கு மாகாண சபையை நாம் இழந்திருக்கிறோமென அவர் தெரிவித்தார்