siruppiddy

22/2/16

விரைவில் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவே ரெஜினோல்ட் குரேக்கு ஆளுநர் பதவி!

நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழத்தை அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெற்றுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் 15.02.16 நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 அவர் மேலும் 
கூறுகையில், வடக்கு மாகாணத்தின் தனி ஈழ கோரிக்கை தற்போது வலுபெற்று வருகின்றது. அதற்கு தகுந்தாற்போல நல்லாட்சி அரசாங்கத்தினால் காய் நகர்த்தல்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு மாகாண ஆளுநரின் புதிய நியமனமானது முற்றிலும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும்.
வடக்கு மாகாணத்தின் பொலிஸ் கட்டுப்பாட்டை குறைக்கவும் புலிகளின் நிலமாக மாற்றியமைக்கவும், நிலங்களை விடுவிக்கவும் முன்னாள் வடமாகாண ஆளுனர் பளிஹக்கார இருக்கும்போது 
முயற்சிகள்
 மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பாவ செயல்களுக்கு ஒத்துழைக்காமையினாலேயே அவரை நீக்கிவிட்டு புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆளுனர் முன்னாள் ஜனாதிபதியின் தீவிர விசுவாசியாவார். மேலும் பிரபாகரனின் 
தனிநாட்டு கோரிக்கையை
 நிலைநாட்டுவதற்கே தற்போதுள்ள மைத்திரி- ரணில் பிரதிநிதிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
குறித்த விடயம் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் நல்லாட்சியை சீர்குலைக்கும் மற்றும் , யுத்த காலப்பகுதியில் இரத்தம் சிந்தி காத்த எமது படைவீரர்களை காட்டிக்டிகாடுக்கும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது. நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி
 தமிழீழத்தை 
அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுனர் நியமனம் இடம்பெற்றுள்ளதுமை தெளிவாகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்னணியில் இருப்பது சர்வதேச மற்றும் உள்நாட்டு 
அரச சார்பற்ற
 நிறுவனங்களின் பிரதிநிதிகளாவார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை விடுத்து புலிகளின் ஆயுதகளமாக மாற்றவே சர்வதேச நாடுகள் முயற்சிகள் மேற்கொள்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளால் நாடு அழிவுப்பாதையில் பயணிப்பது உறுதி என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>19/2/16

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!

பிரான்சில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.மேலதிக தகவல்கள் விரைவில்
பிரான்சில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/2/16

இந்து கடவுளுக்கு தேங்காய் அடிக்கும் மகிந்தவின் கோமாளி கொள்கை!!!

தமிழ் மொழி வேண்டாம் ஆனால் திருட்டு தேங்காய் அடிக்க தமிழ் இந்து கடவுள்களான விஷ்ணுவும், காளியம்மனும் வேண்டும் என்பதுதான் மகிந்த ராஜபக்சவின் கோமாளி கொள்கை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன்
 தெரிவித்துள்ளார்.
அரசகரும மொழி ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று காலை நடத்தப்பட்ட அரசகரும மொழிக்கொள்கை தொடர்பான அறிவுறுத்தல் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும்
 கூறியதாவது,
தேசிய மொழி பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது கையில் உள்ள குருவியாகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது மரத்தில் உள்ள குருவியாகும். எனது கையில் மூன்று குருவிகள் உள்ளன. ஒன்று, அரசகரும மொழி ஆணைக்குழு ஆகும். 
இரண்டாவது 
அரச கரும மொழி திணைக்களம் ஆகும். மூன்றாவது தேசிய மொழி பயிலகம் ஆகும்.  இந்த மூன்றும் என் கையில் உள்ள மூன்று குருவிகள் ஆகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான குருவி மரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி இன்னமும் தெளிவில்லை.
ஆகவே முதலில் கையில் இருக்கும் குருவியை பயன்படுத்துவோம். அதை பயன்படுத்த முடியாவிட்டால் மரத்தில் இருப்பதாக சொல்லப்படும் குருவியை பற்றி பேசிப்பயனில்லை. அதாவது மொழியுரிமை கொள்கையை அமுல் செய்து தமிழ்மொழி பேசும் மகளின் இதயங்களை 
வெல்ல வேண்டும். 5 மாதங்களுக்கு முன் எனக்கு இந்த அமைச்சு கிடைத்தபோது இந்த அமைச்சு ஒரு செயற்படாத அமைச்சாகத்தான் கிடைத்தது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்த அமைச்சுக்கு ஒரு அமைச்சர் இருக்கவில்லை. நான் இங்கே வந்து இப்போது மெதுவாக இந்த அமைச்சை உருமாற்றிக்கொண்டு இருக்கின்றேன். இதன் பலாபலன்கள் விரைவில் தெரியவரும்.
கடந்த காலங்களில் தமிழ் பிரதேச மேடைகளில் ஏறி சில வசனங்களை தமிழ் மொழியில் பேசியவர்கள் இன்று தமிழ் மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தை எதிர்க்கிறார்கள். அதாவது தமிழ் மொழி பாவனையை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் இந்து கடவுள்களான  விஷ்ணுவையும், 
காளியம்மனையும் 
தேடிச்சென்று தேங்காய் அடிக்கிறார்கள். அதுவும் திருட்டு தேங்காய் உடைக்கிறார்கள். அதாவது தமிழ் மொழி வேண்டாம், தமிழ் கடவுளர்கள் வேண்டும் என்பது இவர்களது கொள்கை. என்ன, கோமாளி கொள்கையோ, அந்த விஷ்ணுவுக்கும், காளியம்மனுக்கும்தான் 
வெளிச்சம்.
இந்த நாட்டில் இப்போது, இந்த கொழும்பு பிரதேச செயலக பிரிவு உட்பட 41 உதவி பிரதேச செயலக பிரிவுகள், இருமொழி பிரதேச செயலக பிரிவுகளாக சட்டப்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை 
விரைவில் 
72 ஆக உயர்த்த உள்ளேன். இந்த பிரிவுகளில் பணி புரிய எதிர்காலத்தில் நியமனம் பெரும் அனைத்து அரச பணியாளர்களும் இரு மொழி தகைமை இருந்தால் மட்டுமே வேலைக்கு அமர்தப்பட வேண்டும் என்ற ஒரு அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்பிக்க உள்ளேன்.
 அதன்பிறகு 
ஒரு மொழி அறிவு கொண்டவர்களை விட, இருமொழி கற்றவர்களுக்கு இந்த பிரதேச செயலக பிரிவுகளில் அரசு பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும். எனது அமைச்சின் கீழ் வரும் தேசிய மொழி பயிலகத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் பற்றுவிக்கும் ஒரு தேசிய மொழி கல்லூரியாக தரமுயர்த்த முடிவு செய்துள்ளேன். இந்த பிரதேச செயலக பிரிவுகளில் நியமனம் பெரும் சிங்களம் பேசுவோர் தமிழையும், தமிழ் பேசுவோர் சிங்களத்தையும் கற்று இருக்க வேண்டும். இப்போது இருப்பது போல் அரச பணிக்கு வந்த பிறகு இரண்டாம் மொழி கற்கும் விளையாட்டு வேண்டாம். அரச பணி நியமனம் கிடைத்து விட்டால் அப்புறம் மொழியை படிப்பதில் இந்த அரச பணியாளர்கள் பெரும் அக்கறை காட்டுவதில்லை. இதை நான் இப்போது தேடியறிந்துள்ளேன்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

13/2/16

மக்களின் கதாநாயகன் தலைவர் பிரபாகரனே என்கிறார் கோத்தா!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இது ஒன்றும் ஆச்சரியமில்லை.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை இதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்..அங்குள்ள மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருந்தார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

9/2/16

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோஷித ராஜபக்ஷவின் நலன் விசாரிக்கும் நோக்கிலேயே அவர் சிறைச்சாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

3/2/16

முன்நாள் ஜனாதிபதிமகிந்தவின் இரு மகன்கள் குறித்த தகவல்கள் வெளியானது எப்படி?

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவரின் மகனை சிறைக்கு இட்டுச்சென்றுள்ளதற்கு பொதுமக்கள் சாட்சியாகியுள்ளனர், அதுவும் பெரும் குற்றத்திற்காக.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களை சமாளித்துவிடலாம் என்பதை பொதுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் மகிந்தவின் அரசியல் சூட்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இருப்பினும் மகிந்தவின் இரண்டு மகன்கள் குறித்த தகவல்கள் எப்படி வெளியானது?
வெறும் அமைப்பாளராக இருந்த நாமல் மிக விரைவிலேயே ஆணை பிறப்பிக்கும் நிலைக்கு வந்தார், தமது சொல்லுக்கு கீழ்படியாத மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகளை மிரட்டினார். எம்.பி.களை விட தாம் உயர்ந்தவர் என நாமல் கருதிக்கொண்டதால் ஒரு மூத்த அதிகாரி தனது பதவியை ராஜினமா செய்ய நேர்ந்தது. பாராளுமன்றத்தில் நாமல் நுழைந்தால் அமைச்சர்களும் எழுந்து நின்றுள்ளனர்.
யோஷிதவால் இலங்கை கடற்படையில் இணைய முடிந்தது மட்டுமல்ல, லண்டன் மற்றும் உக்ரைனில் உள்ள பெருமைமிக்க கடற்படை பாடசாலைகளிலும் நுழைய முடிந்தது, அரசு பணம் மில்லியன் கணக்கில் அதற்கு செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் மருத்துவமனைகள், பாடசாலைகள், சாலைகளுக்கு போதிய கவனம் தேவைப்படும் சூழலில் ஒருவரது பயிற்சிகளுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது போன்ற தகுதிகளால் நாட்டுக்கு என்ன பயன் என்று தெரியாத ஒருவர், வெளிப்படையாகவே ஆவணங்களில் மோசடி நடத்த தேர்ச்சி பெற்றது போன்றுது. 5 பேருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது, அதில் ஒருவர் தேசிய ஊடகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்.
கடற்படையில் பணிபுரியும் ஒருவர் எப்படி ஒரு நிறுவனத்தின் தலைவராக முடியும், அது குடும்ப நிறுவனமாக இருந்தால் கூட? இது கடற்படை அதிகாரிகளின் வேலை.
மகிந்த ராஜபக்சவின் நகல்கள் நாமலும் யோஷிதவும். ஏனைய தந்தையர்கள் போல அல்லாமல் மகிந்த ராஜபக்ச அதிகார வெறி காரணமாக தனது மகன்களின் எதிர்காலத்தையை வீணடித்தவர். உண்மையில் நிஜமான குற்றவாளி என்பது ஜனாதிபதியின் நிறைவேற்று 
அதிகாரமே.
அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மகிந்த குற்றங்களையும், தகாத நடத்தைகளையும், ஊழலையும் ஊக்குவித்தார். அரசு நிலங்களை அபகரித்தார், பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றார்.
மகிந்த எப்போதும் யுத்தத்தில் பெற்ற வெற்றி குறித்து பேசுவார், பொதுமக்களுக்கு அதனால் என்ன பயன் கிட்டியது. தீவிரவாதிகள் என எவரும் இல்லை, நாம் தான் சிங்கள குண்டர்களாலும் பிக்குகள் என சொல்லக்கூடியவர்களாலும் சூழப்பட்டுள்ளோமே.
இறக்கும் வரையில் இந்த நாட்டை ஆள வேண்டும் எனபதில் மகிந்த கருத்தாக இருந்தார்.
அவரது மகன்களுக்கு மேட்டுகுடி வாழ்க்கை முறை கிடைத்தது. யாரை வேண்டுமானாலும் அவர்கள் கொலை செய்யலாம், அவர்கள் நினைத்த பொழுதே மூத்த அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கலாம், நிஜத்தில் அவர்களுக்கு மேலே எவரும் இல்லை 
என்ற நிலை.
ஆனால், இப்போது என்ன நடந்தது என நாம் காண்கிறோம், அந்த தாயும் தந்தையும் மிக குறுகிய கண்ணோட்டத்தில் இருந்துகொண்டு சொத்துக்களையும் அதிகாரத்தையும் மட்டுமே தேடிக்கொண்டனர், நாடும் நாட்டு மக்களும் என்ன ஆனால் என்ன. நாமலும் யோஷிதவும் அவர்கள் படித்த கல்லூரிக்கே இழுக்கை தேடித்தந்தனர்.
தற்போதைய அரசு அதிகாரிகள், எம்.பி.கள் மற்றும் ஊழல் அமைச்சர்களுக்கு இது ஒரு படிப்பினை. பின் வாசல் வழியாக வந்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு என்பதே இல்லை, பிரதமருக்கும். உங்கள் மாமனார் ஜெ.ஆர்.ஜெயவர்தனே போன்று தந்திரசாலி என எங்கள் அனைவருக்கும் தெரியும், அதனால் பொதுமக்களை ஏமாற்ற முயல 
வேண்டாம்.
ஜனாதிபதியை நீக்க நீங்கள் முயன்று வருவதை நாங்கள் கவனித்தே வருகிறோம், அது மகிந்தவின் கனவு மட்டுமே. திரைமறை சூழ்ச்சிகளை கைவிட்டு விட்டு நேர்மையானவராய் மலேசிய பிரதமர் போன்று நாட்டை நேசிப்பவராகுங்கள். இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>