siruppiddy
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21/10/22

அப்பாவி மக்களை கொழும்புப் பகுதியில் சுட்டுக் கொன்ற பொலிஸார்

முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் காரணமல்லாமல் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இருவரும் 
எனினும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனவும் பொலிஸ் விசாரணைக் குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கிலேயே, அதிரடிப் படையினரால் இவ்வாறு தவறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பாதாள உலக ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுக்கள் 
சுட்டிக்காட்டியுள்ளன.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







10/2/21

களுத்துறையில் சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல பொருட்களடங்கிய பொதி

களுத்துறை சிறைச்சாலை மதிற்சுவருக்கு மேலாக சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல்வேறு பொருட்களடங்கிய பொதியொன்று சிறைச்சாலை அதிகாாிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து கையடக்க தொலைபேசியொன்று, சிம்காட் ஒன்று,கஞ்சா என்று சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்று, லைட்டர்கள் இரண்டு,ஊசிகள் 12 மற்றும் பசை போத்தலொன்று ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்
 தொிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

21/7/20

நளினி வேலூர் சிறையில் தற்கொலை முயற்சியில் தடுத்து நிறுத்திய காவலர்கள்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த
 கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு 
முயன்றுள்ளார்.குற்றம் சுமத்தப்ப்பட்டுள்ள ஏழு பேரில் நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 
தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நளினிக்கும் சக கைதிகளுக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் நளினி மீது ஒழுங்கு
 நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் இதனால் நளினி துணியைக் கொண்டு தூக்கிலிட்டு 
தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது சிறைக் காவலர்கள் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.முன்னதாக நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரியிருந்தார். எனினும் சிறை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை
 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


7/7/20

வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல கொரோனா அச்சத்தல் அனுமதி மறுப்பு

வெலிக்கட சிறைச்சாலையில் மீள் அறிவித்தல் வரும் வரையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கட சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


16/11/19

தேர்தல் கடமையில் ஈடுபட்ட 51 அதிகாரிகளுக்கு திடீர் ஒவ்வாமை

உணவு விசமடைந்ததன் காரணமாக தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் 
ஒருவர் குறிப்பிட்டார்.
கொழும்பு ரோயல்கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் அதிகாரிகளே இவ்வாறு வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த அதிகாரிகள் நாளையதினம் திட்டமிடப்பட்டவாறு சேவையில் ஈடுபட முடியும் எனதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்தார்

11/4/19

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இனி இடமில்லை

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள், நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் (மஹிந்த அணி) இடையில் இழுபறி தொடர்கின்றன என்று செய்திகள் வருகின்றன.
இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன? என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் அவர்,
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில்
 பேச்சு நடைபெற்றது.
எனினும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதற்காக இழுபறி தொடர்கின்றது எனக் கூற முடியாது, சிலவேளை பேச்சுத் 
தொடரக்கூடும்.
உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை நாம் எடுப்போம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை, எனவே இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு 
முடிவு எடுக்கக்கூடாது.
இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள்.
நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம், மூவின மக்களும் நிம்மதியாக,நல்லிணக்கத்துடன் வாழும் ஆட்சியே தொடர வேண்டும் இதுவே எமது விருப்பம்.
நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன்.
எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன்.
எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் என கூறியுள்ளார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


11/10/18

மஹாவலித்தென்னயில் மண்ணுக்குள் மறைந்திருந்த பயங்கரக் குண்டு

வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டார் உந்து செலுத்திக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழாய் நீர் விநியோகத்திற்காக
 நிலத்தடியில் குழாய்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் குண்டொன்று வெளிக்கிளம்பியதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனையடுத்து குழாய் பொருத்துநர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பிரகாரம் ஸ்தலத்திற்கு விரைந்த வெலிக்கந்தை பொலிஸார் நீர் விநியோகக் குழாய் பொருத்துவதற்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் குண்டு இருப்பதையறிந்து குண்டு செயலிழக்கச் செய்யும் படை நிபுணர்களை வரவழைத்து அவர்கள் மூலமாக குண்டை
 மீட்டுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கிராமங்களைப் பாதுகாப்பதற்காக இப்பகுதியில் படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.அதேவேளை அவ்வப்போது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடையில் மோதல்களும் இடம்பெற்று வந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பயன்படுத்தப்படுவதற்காக மறைத்து வைக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக 
குறிப்பிட்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


20/9/18

ஜனாதிபதி மைத்திரி பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு உத்தரவு

இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு காவற்துறைமா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில்
 பதவி விலகுவார் என அரச உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றதாக தமிழ் ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், இரு வாரங்களுக்குள் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே இராஜினாமா 
இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என பொது எதிரணியான மஹிந்த அணியினரால் குற்றச்சாட்டு 
முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரைப் பதவியிலிருந்து தூக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


10/11/16

மரணஅறிவித்தல் திருமதி.கந்தையா சரஸ்வதி .09.11.16.

யாழ் ஸ்ரீ சோமாஸ்ந்தாosa கனடா  (Sri Somaskanda Osa Canada) சங்கத்தின் உப தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வரும் உயர்திரு . க. கருணாநி. க . ரூபநிதி (மேஜர் விரவேங்கை .அல்பேட். )  ( க .கப்டான் பவான்)    அவர்களின் அன்புத்தாயார் திருமதி . கந்தையா சரஸ்வதி அவர்கள்.09.11.2016.
 இன்று அச்சுவேலி இல் இறைபதமடைந்தார் 
என்ற செய்தியை மிகுந்த அனுதாபத்தோடு அறியத்தருகின்றோம் . அன்னாரின் புதல்வர்கள் அனைவரும் யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்ந்தா கல்லூரியிலேயே கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் .
 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி



23/6/16

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் 
பங்கேற்றனர்.
அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது.

தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் 
வைக்கப்பட்டன.
இந்த வாக்களிப்பிற்காக 46,499,537 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பது இதுவே முதன்முறையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் 
பங்கேற்றனர்.
அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது.

தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் 
வைக்கப்பட்டன.
இந்த வாக்களிப்பிற்காக 46,499,537 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பது இதுவே முதன்முறையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

19/2/16

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!

பிரான்சில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.மேலதிக தகவல்கள் விரைவில்
பிரான்சில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/12/15

ஐீ.ரி.வி நேரலை: மாவீரர்நாள் 27.11.2015 அறிவிப்பாளரான முல்லைமோகன்

யேர்மன் டோட்மூண்ட் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வை ஐீ.ரி.வி நேரலை செய்திருந்தது, அதன்போது அதைதொகுத்து வழங்கியவர் யேர்மனியில் சிறந்து விளங்கும் அறிப்பாளரான மணிக்குரல்தந்த முல்லைமோகன் அவர்கள் அந்த நேரலையின் ஒருங்கிணைப்பு ஐீ.ரி.வியின் யேர்மன் கலையகப்பொறுப்பாளர் சிவலிங்கம் 
அவர்கள்,
இதற்கான சற்லைற் இணைப்பு படப்பிடிப்புகளை டோட்முண்ட M.S விடியோ
செ ய்திருந்தது ஒளிப்பதிவாளர்களாக சக்தி அவரின் இருமகன்கள் ஓபகவுசன் ரூபன், கபில் என இணைந்து சிறப்பானது தொழில் நுட்பம் M.S விடியோ
படக்கலவை எஸ்.தேவராசா என மாவீரர் பணிக்காய் அனைத்துக்கலைஞர்களும் கைகோர்த்து நின்றது
 சிறப்பைத்தந்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


13/8/15

சிறுதை நோர்வே உஷாவின் ஆருயிரே,,,,,

கோடைகாலம் என்கிற நினைவிருக்கிறது. ஆனாலும் சின்னதாய் ஒரு நடுக்கம் பரவி உடல் சில்லிடுகிறது. போர்வையை யாராவது இழுத்து விட மாட்டார்களா என்று தோன்றிய மறு கணமே வியர்த்துக் 
கொண்டு வருகிறது. மூச்சு அடிக்கடித் திணறுகிறது. அப்போதெல்லாம் என்னைச் சுற்றி ஆள் நடமாட்டமும் சலசலப்பும் அதிகமாகிறது. பின்னர் ஆழ்ந்த அமைதி. என்னுள் ஏதோ செயலிழந்து போய்க் கொண்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.
 வெளியே என் ரங்கன் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்கிறது. வசீகரமான குரல். எவ்வளவு தான் பெரிய ஒரு ஆணாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் அள்ளி அணைத்துக் கொள்ளத் தூண்டும்
 அன்பு தடவிய குரல்.. திடீரென்று படபடப்பாக இருந்தது. எழுந்திருக்க என்னுள் ஒரு அணுவும் இடமளிக்கவில்லை. நம் உடல் இப்படியா 
பாறாங்கல்லாய்க் கனக்கும்? ரங்கா…. என் செல்வமே…. உன்னுடன் சுயநலமாக நடந்து கொண்டு விட்டேனா? இத்தனை 
வருடமும் என்ன சாதித்தேன்! உனக்கு எதையுமே செய்து கொடுக்காது மகா பாவியாகப் போகப் போகிறேனே! அருகே அவனை 
உட்கார வைத்து, என் கண்களிலும் மனதிலும் நிறைத்துக் கொண்டு.. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு… அவன் மனதில் ஏதும்
 ஏக்கங்கள் இருக்கின்றனவா எனத் தெரிந்து கொண்டு…… அவனுக்குச் செய்த அனியாயங்களிற்காக என்னை மன்னித்து விடும்படி கேட்க வேண்டும்…. என் குழந்தை பேசக் கேட்டு அவன் மடியில் இந்த உயிர் பிரிய வேண்டும்…. 
ஆனால் முடியுமா என்னால்…? கண்ணீர் கன்னங்களில் இறங்குவதை உணர முடிகிறது. ஆனால் துடைக்கக் கைகள் எழவில்லை.
20 நாட்கள் கோமாவில் கிடந்திருக்கிறேனாம்.
 இன்றோ.. நாளையோ.. தான் தாங்குவேனாம்… அவ்வப்போது கேட்ட பேச்சுக்குரல்களால் என் நிலமை எனக்கு நன்றாகவே புரிந்தது. சில மணி நேரங்களில் நான்.. காற்றாகி விடப் போகிறேன். குப்பையாய்க் கிடக்கப் போகும் அசைவற்ற உடலை வெளியிருந்து வேடிக்கை பார்க்கப் போகும் உன்னதமான தருணம் நெருங்குகிறது. சாவைப் பற்றிப் புதிதாகச் சிந்திப்பதற்கு இந்தக் கணம் எனக்கு எதுவுமே இல்லை
. என் பாதி வாழ்வு என் சாவை இலக்காகக் கொண்டு வாழ்ந்தது தான். ஒவ்வொரு கணமும் ஒரு வியாபாரியைப் போல நான் உயிர் வாழ வேண்டிய அவசியத்தையும் இறந்து போக
வேண்டும் என்ற தீராத வேட்கையையும் தராசிலிட்டு, இரண்டு தரப்பு நியாயங்களையும் இரவு பகலாக ஆராயந்ததில் வாழ்ந்த வாழ்க்கை தான் என்னுடையது. இந்த நிமிடம் தான் என்னுடையது. சில மணி நேரங்களில்… உருத் தெரியாமல் எனக்குள் கலந்து விட்ட ஏக்கங்களும் வலிகளும் சத்தமின்றி என்னுடனேயே சமாதியாகும். வலியற்ற அந்தப் பொழுதுக்காக காத்திருக்கிறேன்…..
ஆனால்.. என் சின்னு பாவம். தனித்து விடுவானே.. தன் மனதில் உள்ளதையெல்லாம் கொண்டு போய் எங்கே கொட்டுவான். அவன் சந்தோஷமாக, உற்சாகமாக, தன் தனிமை தெரியாதவனாய் வளர வேண்டும் என்று நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்தில்… 
அவனது எதிர்காலத்திற்கு உபயோகமாய் நிரந்தர படிப்பு, உத்தியோகம் என்று ஒரு தாயாகச் செய்து முடிக்க வேண்டிய கடமைகளிலிருந்து தவறி விட்டேனா…?
«எல்லாம் உன் திமிர் ஒரு பொம்பிளையின் வளர்ப்பு. ஒரு தகப்பன் இருந்து வளர்த்திருந்தால் இந்த வயதுக்கு அவன் ஒரு நல்ல வேலையில் இருந்திருப்பான். உன்னால் தான் அவன்ர வாழ்க்கை இப்ப கேள்வியா இருக்குது!»
ஆக்ரோஷம் என்ற வார்த்தை ராமுக்குத் தான் நன்றாகப் பொருந்தும். கண்களில், முகத்தில்.. ஒவ்வொரு அணுவும் நெருப்பை வெறுப்பாய் உமிழ வார்த்தைகளை விட்டெறிய அவனால் தான் முடியும். அந்தளவிற்கு நான் அவனுக்கு என்ன தவறு செய்து விட்டேன் என்று யோசித்துக் களைத்த வேளையில் தான் ஒரு நாள் அவனை விட்டு நான் குழந்தையுடன் வெளியேறினேன்.
தெரிந்தோ தெரியாமலோ… ராமின் வளர்ப்பில் வளரக்கூடிய ஒரு குழந்தையின் சின்ன ஒரு சாயல் கூடத் தெரியாமல் ரங்கனை வளர்த்து விட்டேன். குழந்தையைச் சந்தோஷப்படுத்திய மலை 
ஏறுதல் முதல் புல்லாங்குழல் இசை வரை என் சக்திக்கு மீறி எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வைத்தேன். அதற்காக நேரம் காலமின்றி உழைக்க வேண்டியிருந்தது. சரியோ, தவறோ…என் மன 
உளைச்சலுக்கும் என் குழந்தை மனதில் ஏக்கங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஒரே வழி மனதுக்குப் பிடித்த விஷயங்களில் வரையறை இல்லாத ஈடுபாட்டைச்
செலுத்துவதே என்று ஒரு கண்மூடித்தனமான எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ராம் சொல்வது போல் அது முட்டாள்த்தனமோ. குழந்தையின் வாழ்வை கருத்தில் கொண்டு ராமுடனேயே வாழ்ந்திருக்க வேண்டுமோ.
ராமுடன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கெட்ட கனவு போலத் தெரிகிறது. எவருக்கும் புலப்படாத அர்த்தங்கள் அவனுக்கு வெகு சுலபமாகப் புரியும். நான் குழந்தையை இந்த நாட்டுக்கே பிரதமராக்கியிருந்தாலும் 
அதற்கும் கூட ஏதாவது குறை கூற அவன் விரல் என்னை நோக்கி நீளும். நல்ல வேளையாக அவன் என் சாவுக்கு இல்லை. முன்னுக்குப் பின் முரணான பேச்சிலிருந்தும் அவனது நடிப்புத் திறமையைப் பார்ப்பதிலிருந்தும் விடுதலை…
தன் மனைவி பிள்ளைகளுடன் வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறானாம். அரசல் புரசலாய்க் காதில் கேட்ட சங்கதி தான் இதுவும். நல்ல வேளையாக என் கேட்கும் சக்திக்கு இது வரை எந்தப் பிரச்சனையும் 
இல்லை.
ராமை விட்டு நான் வெளியேறிய போது பாவம், குழந்தை சரியாகப் பேசக் கூடத் தொடங்கியிருக்கவில்லை. பிறர் கண்களுக்கு நான் துணிந்தவளாகத் தெரிந்திருக்கலாம். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற தெளிவு என் புத்திக்குத் தெரிந்தாலும் அதன்படி வாழ விடாமல் எனக்குள் இருந்த காயங்கள்… ஏமாற்றங்கள், பாதுகாப்பின்மை… எனக் கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சல் என்னை எரிக்கத் தொடங்கியிருந்தது… 
ஒரு சின்னத் தவறும் செய்யாமல் எப்போதும் விழிப்பாக…ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஆரம்பித்த மன அழுத்தம்…. ராமைத் திருமணம் செய்த பின்பு ஆரம்பித்தது….. 
அவனுடன் வாழ்ந்த போதும் சரி… பின் தனியே வந்து விட்ட பின்பும் சரி… ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தது. அவ்வப்போது மாத்திரைகளைப் போட்டு உள்ளுக்குள் கனன்ற மன உளைச்சலை அணைத்துக் கொண்டு என் குழந்தைக்கான உலகத்தில் 24 வருடங்கள் ஓட்டியாகிவிட்டது.
ராம் சொல்வது போல் ஒரு ஆணின் உதவியின்றிக் குழந்தையை வளர்த்ததால் தான் பல விஷயங்களில் கவனம் 
செலுத்த விட்டு அவனது வாழ்க்கையைக் கெடுத்து விட்டேனோ..? என் குழந்தை பட்டப்படிப்பு முடித்த பிறகும் வேலை எதுவும் கிடைத்த பாடாக இல்லையே. ஒரு ஆண்
குழந்தைக்குத் தந்தையிடம் தன் கனவுகளைப் பகிர்ந்து கொள்வது இலகுவாக இருக்குமோ? சுலபமாக வேலை கிடைக்கும் ஒரு துறையில் அவனை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அவனுக்குப் பிடித்தது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இந்தத் துறையைத் தெரிவு செய்ய விட்டேன். வேலை தேடி மனம் சலித்துப் போகிறானோ என்னவோ. நான் படுக்கையில் விழ முன்னர் சில நாட்களாய் ரங்கன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதும் என் மடியில் சாய்ந்து கொண்டு என் கைகளை வருடியபடி அமைதியாக எதையாவது படித்துக் கொண்டிருப்பது நினைவிலிருக்கிறது. «தலையிடிக்குதா குட்டிக்கு?» கவலையுடன் குழந்தையைத் தொட்டுப் பார்த்ததும் அவன் எதுவும் இல்லையென எனக்குச் சமாதானம் சொன்ன நாட்களும்…
அவன் நிலமைக்கு என்னை விட வேறு யார் 
காரணமாக இருக்க முடியும்?…..
ஒரு வேளை ராமுடன் வாழ்ந்திருந்தால் மருத்துவத்துறையோ பொறியியலோ… பிடிக்காததாக இருந்தாலும் குழந்தை நாளடைவில் படித்து முடித்திருப்பான். தகப்பனைப் போலில்லாமல் எதுவாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செயற்படுபவன் அவன். தந்தை இல்லாமல் வளர்ந்ததால் தான் இந்த நிலை என்று நினைப்பானோ என் குழந்தை? அம்மா அப்பாவை விட்டுத் தனியாகப் புறப்பட்டு வரும்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லையே என நினைப்பானோ…?
அவனுக்காக கைகளை நீட்ட முயற்சித்தால்.. முடியவில்லை. வெறுமனே விரல்கள் நடுங்க மட்டுமே செய்தன. «ங்ங்…ஆ…!» மெல்ல குரல் பிரயத்தனப்பட்டு வெளிவருகிறது.
யாரோ உள்ளே வருவது கேட்டது. கூடவே «வா..!» என்கிற ரங்கனின் கிசுகிசுத்த குரல். வேடிக்கை தான். உரத்துப் பேசினால் விழித்துக் கொள்வேன் என்று நினைத்தாயா ரங்கா…? யாரோ தயங்கி நின்றிருக்க வேண்டும். அவன் அழைத்ததும், உள்ளே வந்திருக்க வேண்டும். «இரு பிருந்தா». என்றபடி என் கட்டில் விளிம்பில் உட்கார்ந்தான். ஓ.. பிருந்தாவா.. !? 
ரங்கனுடன் படித்தவள். கூடப் படிக்கும் மற்றைய நண்பர்களுடன் நம் வீட்டிற்குப் பல தடவைகள் வந்திருக்கிறாள். என் கைகளைச் சட்டென்று
பிடித்துக் கொண்டு என் ரங்கன் அழத் தொடங்க.. என் சிந்தனை தடைப்படுகிறது.
« அம்…மா… பாரம்மா. எனக்கு வேலை கிடைச்சிருக்கு பாரம்மா….மாசம் 40,000 என்றாலும் கிடைக்குமம்மா.. நான் எதிர்பார்த்த அதே இடம்…. ஐயோ கடவுளே இவ்வளவு காலமும் உங்கட முயற்சி பலனளிச்சு எல்லாம் கூடி வாற வேளையில இப்பிடிப் படுத்திட்டீங்களேயம்மா… தாங்க முடியேல்லயம்மா…….» கேவிக் கேவி அழுதவனின் அருகில் பிருந்தா வந்து உட்கார்ந்து, « ரங்கா..ப்ளீஸ்……» என ஏதோ ஆறுதல் சொல்கிறாள்.
«பிருந்தா.. அம்மா என்ன மாதிரி ஒரு ஜீவன் தெரியுமா..? 
அப்பா ஒரு மாதிரி என்று கேள்விப் பட்டிருக்கிறன். அதைத் தவிர அவரைப் பற்றி எனக்கு எதையும் தெரிந்து கொள்ள வேணும் என்ற எண்ணமே வந்ததில்லை. அவ்வளவு தூரம் ஒரு அம்மாவா, அப்பாவா, அண்ணாவா, நண்பனா அம்மா இருந்திருக்கிறா. என் விருப்பங்களை மதிச்சு உற்சாகப்படுத்தி.. எப்பவுமே இவ்வளவு energetic ஆக positiveஆக யாராலும் இருந்திருக்க முடியாது. அம்மா எனக்குக் கிடைத்த
 ஒரு வரம் பிருந்தா… எனக்கு அவ படிப்பை மட்டும் தரவில்லை. அயராமல் முயற்சி செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கிறா. அவ கோமாவில் விழும் வரை அவவின் வியாதி யாருக்கும் தெரியாது. கடைசி வரை தன்னால் முடிந்ததை முயற்சி செய்தபடி தான் இருந்தா. ஏதாவது சரி வராட்டி ஒரு நாளும் சோர்ந்து போனதில்லை. என்னைச் சோர்ந்து போக விட்டதும் இல்லை. என் நன்றியை… என் அன்பை நான் சரியாகச் சொல்லவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை பிருந்தா……….
ஸ்போர்ட்ஸ், இலக்கியம், இசை என்று எல்லா விஷயங்களிலயும் ஆர்வமுள்ளவனாய் நான் இருப்பதால் தான் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பான வேலை கிடைச்சது. அது அம்மாவால தான். ஓயாத அவவின் முயற்சி என்னிட்டையும் இருப்பதால் தான்….
உன் friendsக்குள் பிருந்தா நல்ல பிள்ளையா இருக்கு எண்டு சொல்லுவா. உன் குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரிப்பா. அவவுக்கு உன்னைக் கட்டாயம் பிடிக்கும் என்று தெரிஞ்சும் காத்திருக்க நினைச்சேன். எனக்கு ஒரு வேலை கிடைச்சதும் அவ்விடம் சொல்லி உன்னிடமும் பேச நினைச்சேன். இப்ப எல்லாமே late ஆகப் போச்சு பிருந்தா…»
என் குழந்தை கேவிக் கேவி அழுகிறான். பிருந்தா அவனை உலுக்குகிறாள். «பார் ரங்கா..அம்மாவின்ர கண்ணில கண்ணீர்… அவவுக்கு நீ சொல்லிறது எல்லாம் விளங்குது எண்டு தான் நினைக்கிறேன்…..»
ரங்கன் என் கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான். «அம்மா..என்னோட நீங்க இருக்கோணுமம்மா… நீஙக எனக்கு எப்பவும் வேணுமம்மா… நீங்க இல்லாட்டி நான் எங்கயம்மா போவேன்..!» எனக் கதறுகிறான். அப்போது என்னை அவன் தொடுவதை என்னால் உணர முடியவில்லை. மருத்துவமனைக் கட்டிலில் காய்ந்து கறுத்த உடல் ஒன்று கிடக்க.. அட.. அது நானே தான். அருகே அழுதபடியிருந்த 
ரங்கனையும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த பிருந்தாவையும் ரசிக்கிறேன். என் கண்மணி…. இந்த இழப்பு உனக்குத் துயரம் தான். ஆனால் நீ இப்போது தயாராகி விட்டாய். இனிமேல் உன்னால் வாழ்க்கையுடன் போராட முடியும்.
சிறுதை ஆக்கம் நோர்வே உஷா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

24/7/15

இசைப்பிரியா நடித்தஅல்லி விழியோரம் இறுப்பாடல் காணொளி

ஈழத்து கலைஞர்களால் மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி.
நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் 
துன்பத்தில் ஆழ்த்தின.
ஈழவர்  எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர் கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய் உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை 
ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள் கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல் இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11/7/15

நெடுந்தீவு தனுவின் தேர்தல் வருகுதாம்.. !!


வந்திட்டு வந்திட்டு
வாக்குறுதிகள் வந்திட்டு..
தந்திட்டு தந்திட்டு
தலைகோதுவர் தந்திட்டு..
ஏந்திட்டு ஏந்திட்டு
இருகை ஏந்திட்டு..
சாய்ந்திட்டு சாய்ந்திட்டு
ஆசனத்திலும் சாய்ந்திட்டு..
போட்டிட்டு போட்டிட்டு
இருகையிலும் நகைபோட்டிட்டு
புலம்பிட்டு புலம்பிட்டு
பொய்களை மெய்யாக்க
புலம்பிட்டு…
தருவீங்களா தருவீங்களா
வாக்குறுதிகளை தருவீங்களா?
புரிவீங்களா புரிவீங்களா
எம் உணர்வ புரிவீங்களா?
கொடுப்பீங்களா கொடுப்பீங்களா
நீதியை கொடுப்பீங்களா?
ஆசனத்துக்காக அவரை காட்டி
கையேந்தல்.
கிடைத்ததும் இவரை சுட்டி
புறக்கணிப்பு.
மருண்ட மக்கள் நாம்
விரைந்தெழ வழியில்லை.
வெகுண்டெழுந்தால்
வீண் பேச்சும் இனி இல்லை

ஆக்கம் நெடுந்தீவு தனு 

 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


2/5/15

எழுச்சியோடு நோர்வேயில் நடைபெற்ற மேதினநாள்


 நோர்வேயில் உழைக்கும் வர்க்கத்துக்காக ஓங்கிக்குரலெழுப்பும் இந்நாளில் உரிமைக்கா தமிழர்களாகிய நாம் குரலெழுப்பி வருகின்றோம் அதேவேளை சிறீலங்காவால் இன அழிப்புக்குள்ளான எமது மக்களுக்கா சர்வதேசவிசாரணையை வலியுறுத்தி வருகின்றோம்.
2008 ஆண்டு தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையில் குறிப்பிட்டதிற்கு ஏற்ப இளயவர்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பது விடுதலையை வென்றெடுக்கும் நம்பிக்கையில் பெரும் பலத்தை சேர்த்துள்ளது
தமிழர்கள் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இன அழிப்பை மூடிமறைக்க சிறீலங்காவும் அதன் முண்டு சக்திகளும் சிறீலங்காவின் அதிகார முகத்தை மாற்றிவிட்டு தமிழர்களை மீண்டும் ஏமாற்றலாம் என்ற அங்கலாப்பில் அகலக்கால் வைத்து அதற்கான ராஜதந்திர அரசியல் போரை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
இதற்கு சில தமிழர்களும் இணக்க அரசியல் என்ற போர்வையை போர்த்தி மாவீரர்களினதும் மக்களினது கனவுக்கு உலைவைப்பதற்கு கங்கணம் கட்டி நிற்பது எமக்கு வேதனையை தருகிறது
இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்த இளையவர்களின் அரசியல் போராட்டம் ஆறுதல் அளிக்கின்ற அதேவேளை சிறீலங்காவுக்கும் அதன் முண்டு சக்திகளுக்கும் தலையிடியாகவுள்ளது என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்
ஆகவே எமது அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமான ஆர்ப்பாட்டங்களில் எமது நியாயமான போராட்டத்தை இந்த உலகம் முற்று முழுதாக ஏற்கும் வரை எமக்கான உரிமைக்குரலை உயர்த்திச்சொல்லுவொம்
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




4/4/15

தமிழ்நாடு சென்று பேச்சு நடத்த தயார்! தீர்வு காணும் முயற்சியில்

மீனவர்கள் பிரச்சினைக்கு வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம், இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாணசபையும் தமிழ்நாடு அரசும் இந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும், இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசுடன் சிறிலங்கா அதிபர் மீனவர்கள் பிரச்சினை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழ்நாடு சென்று பேச்சு நடத்தவும் தான் தயாராக இருப்பதாக அவர் கூட்டத்தில் தெரிவித்ததாகவும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், கடல் வளங்கள் சுரண்டப்படுவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்த மீன்பிடிமுறையை இலங்கைக் கடற்பரப்பில் முழுமையாக தடை செய்வதற்கான வலுவான சட்டத்தை கொண்டு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இருதரப்பு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் நடந்த மீனவர்களுக்கிடையிலான கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட, ஆண்டுக்கு 83 நாட்கள் சிறிலங்கா கடற்பரப்பில், இந்திய மீனவர்களை அனுமதிக்கக் கோரும், யோசனையும் இந்தக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு கடலோரக் காவல்படையை பயன்படுத்துமாறு கோரும் மனு ஒன்று சிறிலங்கா அதிபரிடம், வடக்கு மாகாண கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரன் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினையில், சிறிலங்கா அரசுடன் மீனவர்கள் பிரதிநிதிகள் நடத்திய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

3/12/14

ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

நீதிமன்றின் தீர்ப்பானது புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.

புலிகளுக்கு எதிராகவும், புலிச்செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/9/14

விசாரணைக்குப் புறம்பாக உள்நாட்டு விசாரணைக்கு பான் கீ மூன் உதவி

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கு மறுத்து வருகிறது. 
இந்த நிலையில் பான் கீ மூன் இவ்வாறு உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் வெளிவிவகார திணைக்களத்தின் குழுவினை அனுப்பவுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி பாலித்த கோஹன்னவிடம் இன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் வினவிய போது, அவர் அதற்கு பதில் வழங்காத போதும், இந்த விடயத்தை நிராகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>