
வல்லவனுக்கு புல்லும் என்பது இதுதான் போல, கடல் படத்தை இயக்கி வரும் மணிரத்னம், நிலம் புயலை பயன்படுத்தி சில முக்கிய காட்சிகளை எடுத்துள்ளார். கடந்த புதனன்று வங்கக் கடலில் உருவான நிலம் புயல் காரணமாக, தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளே அல்லோலகல்லோலப் பட்டது. ஆனால், புயல் வந்ததை நினைத்து மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கடற்கரையில் காத்திருந்த ஒரு குழு உள்ளது. அதுதான் மணிரத்னத்தின் கடல் படப்பிடிப்புக் குழு. புதனன்று காலையில் இருந்தே சென்னையை...