siruppiddy

29/6/13

அதிர்ச்சியில் உறைந்துள்ள கோத்தபாய"?

 கசிந்தது இரகசியம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்ட சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு, தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களினதும் இடையிலான தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்டு வருகிறது. சீனாவின் உதவியுடன் ஸ்கைப் உரையாடல்களையும் ஒட்டுக் கேட்பதற்கு முயற்சிப்பதாக அறிய முடிகிறது.  ஆனால், தமிழர்களை சிறீலங்கா ஒட்டுக் கேட்க முயற்சிக்கையில், சிங்களத்தின் புலனாய்வு மூளையாகக் கருதப்படும்...

28/6/13

கனடாவில் கரும்புலிகள் நாள் யூலை-5!

  கனடா தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்{,05.07.2013 }யூலை 5ஆம் நாள் கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.காற்றோடு காற்றாக எம்மூச்சில் கலந்திருக்கும் அக்கினி குஞ்சுகளை நினைவிற்கொண்டு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழதேசியக்கொடி,மற்றும் கனடிய கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றலுடன் கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத...

இன்று வரைக்கும் அழுகின்றோம்

  எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆயிரமாயிரமாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது, சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டபோது எங்கே போனீர்கள்? அப்போது இந்திய அரசாங்கத்துடன் ஊடல் கொண்டிருந்தீர்களா?... எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த புகைப்படங்களாக பார்க்கின்றோம்புள்ளிக் கோலமிட்டு பிட்டு அவித்து ஊட்டிய அம்மாவின் கையில்லை -இன்று தோளில் சுமந்து...

புலம் ஈழம் முழு நீள திரைப்படம்

புலம் ஈழம் முழு நீள திரைப்படம்.மண்ணில் உயிர் நீர்த்த உறவுகளுக்கும் அகதிகளாக வாழும் உலக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கு அமைதிதேர்வு தீர்வு ஏற்ட்படுதப்போகும் உலகநாடுகளுக்கும் கண்ணீருடன் இத்திரைப்படத்தை காணிக்கையாக்கிகுன்றோம் …ழகரம் திரைப்படக்கழகம். உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள் நன்றி,{ காணொளி...

24/6/13

இராணுவ வீரர்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் !!

உதகை வெலிங்டன் இராணுவ கல்லூரியில் பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மானக்ஸா பாலம் வழியாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் வருவார்கள் என கூறப்பட்டதால் அந்த வழியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் கண்டோன்மெண்ட் வழியாக இராணுவக் கல்லூரிக்கு அருகே வந்த அவர்களை பொலிஸார் தடுத்தனர்.  அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் இராணுவ...

22/6/13

புலிகள் வைத்திருந்த விமானம் இதுவோ ..?

 மண் ரோட்டில ஓடுது -இரணை மாடு .மாங்குள ஒடுபாதை இப்படி இருந்திருக்குமோ  ...

20/6/13

சிறீலங்கா போட்டுள்ள திட்டம்: சிக்குவார்களா

        புலம்பெயர் தமிழர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கினாலும், தமிழீழம் என்ற அவர்களுடைய சித்தாந்தத்தை மிக உறுதியாக பற்றியபடி புலம் பெயர் தளத்தில் செயற்படும் தமிழ்த் தேசிய சக்திகள் விளங்குவதாக தெரிவித்துள்ள சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இது சிறீலங்காவுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய செயல் எனத் தெரிவித்துள்ளார்.  கடந்த வாரம் ஜேர்மனிக்கும் நேற்று அவுஸ்ரேலியாவுக்கும் பயணம்...

தமிழீழத்தை, உலக நாடுகளை திரும்பி பார்க்கச் செய்த

   தேசிய தலைவர் பிரபாகரன் மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.   யாழப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,  "எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும்....

18/6/13

தேசிய தலைவர் பிரபாகரனின் கனவை நனவாக்க சிறிலங்கா முயற்சியாம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவான ஈழத்தினை சிறிலங்கா அரசாங்கம் போர் புரியாமலேயே நனவாக்க முனைகிறதென ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா தெரிவித்துள்ளார்.    பொது எதிரணிக் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,   "அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்க வைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு.   வடக்குத்...

இராணுவ முகாமை முற்றுகையிட்ட சுமார் 400 பேர்

  ஊட்டி வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.   இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில்,...

இலங்கை காடையர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக் குதல்

  இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர். அதேவேளை, இலங்கை...

தமிழீழம் அழியவில்லை-நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு)

தமிழீழம் அழியவில்லை-நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு) சுவிட்சர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான், தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும். தமிழ் என்று செத்தது. தமிழ் என்றும் சாகாது. உலகத் தமிழர்கள் இருக்கும்...

16/6/13

ஆட்டம் போடும் கோத்தபாய அடங்கும் காலம் நெருகிறது!

 சிங்கள மக்கள் மத்தியில் சிந்தனைப் புரட்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் கோத்தபாயவை மட்டுமல்ல பேரினவாதிகளையும் தூக்கி வீசி ஏறிய முடியுமென மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.   சிங்கள மக்கள் மத்தியில் கல்விமான்கள், சமயப்பற்றுள்ளவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள், தமிழர்களாகிய எங்களுடைய உண்மைநிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த உண்மை சிங்கள மக்களுக்கு ஈர்ப்பைக் கொடுக்கும்.  அதன் பின் அவர்,...

15/6/13

புலிகளை அழிக்கும் இலக்கில் தோல்வி கண்ட இந்தியப்படை!

முதலாம் கட்ட ஈழப்போர் இந்தியப் படையினரின் வருகையுடன் தான் முடிவுக்கு வந்தது.    இந்தியப்படையினரின் வருகை அல்லது இந்தியத் தலையீடு என்பது எதற்காக நிகழ்ந்தது என்பதில் இருவேறு கருத்து நிலைகள் உள்ளன. அதாவது ஒப்பரேசன் லிபரேசன்மூலம் கைப்பற்றப்பட்ட வடமராட்சியில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது கரும்புலித் தாக்குதல் தான் இந்தியத் தலையீட்டுக்கு வழி வகுத்ததாக தமிழர் தரப்பில் ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் இலங்கை அரச மற்றும் இராணுவத்...

14/6/13

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ,

13 ம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான  தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ அமையமுடியாது. வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் உருவாகியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இத் தேர்தல் தொடர்பாகவும், மாகாண சபை முறைமை தொடர்பாகவும் எமது கட்சியின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை இந்த அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்துகின்றோம். சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நகர்வுகளை...

ஜெர்மனியிடம், இலங்கை கோரிக்கை

புலிச் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு ஜெர்மனியிடம், இலங்கை கோரிக்கை  தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு ஜெர்மனியிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் ஜெர்மனியில் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலியை சந்தித்து...

11/6/13

கொலையாளியாக மாறும் காவல்துறை!?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இச்சம்பவம் தொடர்பில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் அடங்களாக நான்கு பொலிஸார் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ...

சிறிலங்காவின் துரோகம் -

 மந்திராலோசனை நடத்த தயாராகிறது இந்தியா!,தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கவென இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதுஇந்நிலையில் அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அடுத்த வாரத்...

7/6/13

விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும்

என்று இலங்கை அச்சம்!- அமெரிக்கா அறிக்கை விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போதும் ஆயுதங்களை கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு...

மீண்டும் தோற்றம் பெறுவர்: சம்பந்தன் எச்சரிக்கை

  தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைகளுக்குத் திரும்ப விரும்பாத போதிலும், ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்றுமுன்தினம் மாலை உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த...

6/6/13

13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றனர் -

  புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என ஈழத் தமிழர்களின் சர்வதேச காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.  சுயாட்சி அதிகாரங்களே தற்போதைய தேவை என தெரிவித்துள்ளது.  வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.  ஐக்கிய இலங்கைக்குள் 13ம் திருத்தச் சட்டத்தின்...

புலிகளின் குண்டுகள் என்நேரமும் கொழும்பில் வெடிக்கலாம் !

விடுதலைப் புலிகளின் குண்டுகள் என்நேரமானாலும் கொழும்பில் வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது ? கொழும்பில் மறைவான இடம் ஒன்றில் 1000 KG எடைகொண்ட வெடிபொருட்கள், 3 இலகுரக துப்பாக்கிகள், மற்றும் 3500 ரவைகள் இன்னமும் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என ,வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். இன் நபர் பொட்டு அம்மானின் புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றிய நபர் என்று பொலிசார் மேலும்...

அரசியல் அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்கும்??

தமிழர்களுக்கு அதிகாரமற்ற அரசியல் அதிகாரத்தை வழங்குவது பற்றி சிறிலங்கா அரசாங்கம் கவலைப்படவில்லையாம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்தமிழீழத்தில், சிறிலங்கா நடத்தவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து வெற்றியீட்டச் செய்தாலும் அது குறித்து அரசாங்கம் வருந்தப் போவதில்லையாம் என தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,    "மாகாணசபைகளின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை...

5/6/13

தனி ஈழம் விரைவில் மலரும்: ???

கொந்தளிக்கிறார் வீரவன்ச""ஆயுதமின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழப் போரை தோற்கடிக்க சிறிலங்கா படையினரால் முடியாது அது நாட்டு மக்களினால் தான் முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்13ம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலான கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆயுத போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும்,...

3/6/13

தமிழீழத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை?

தமிழீழத்தில் தேர்தலை ஒன்றை நடத்த வேண்டிய தேவை சிறிலங்காவை விடவும் மேற்குலக நாடுகளுக்கு அவசியமாக உள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இங்கு மேலும் கருத்து வெளியிட்ட வீரவன்ச,  வடக்கில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வியையே இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும்...

புலம்பெயர் தமிழர்களை குறி வைக்கும்

புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்களை இலங்கு வைத்து சிறிலங்கா புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.,இதற்கமைவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக சிறிலங்கா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரதீப மகாநாமஹேவா தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு, சர்வதேச நாடுகளில் வாழும் சிறிலங்காவுக்கு சார்பான புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள...

2/6/13

வரலாற்று சுதந்திர சாசன முரசறைவு

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்/

 : இந்த நாட்டிலுள்ள முக்கியமான வியாதி என்னவென்றால் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அண்மையில் திருகோணமலை சில்வஸ்டார் ஹோட்டலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில்...