siruppiddy

26/3/14

ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு!

அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை மற்றும் இதனது தாக்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மகாநாடு பாராளுடன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் மனித உரிமைகள்...

20/3/14

நேற்று நள்ளிரவு முதல் சிவில் உடை இராணுவத்தினரால்

வவுனியாவில் உள்ள கிராமங்களில் நேற்று(19) நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக சிவில் உடை தரித்த இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு, தேடுதல் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,வவுனியாவின் பிரதான கிராமங்களான பூந்தோட்டம், அண்ணாநகர், மகாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில்...

16/3/14

ஒசாமா பின் லேடனை போல் பிரபாகரனை பார்க்க வேண்டும்:

ஜெனிவாவில் சில நாடுகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அந்நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளை காணக் கூடியதாக உள்ளது என அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒசாமா பின் லேடனைபோல் ஒரு பயங்கரவாதியாகவே பார்க்க வேண்டும்.ஜெனிவாவில் விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்களை ஏந்தியவாறு தமிழர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யாரும் எதிர்க்கவில்லை.இதே...

13/3/14

தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஜனாதிபதிக்கு எதிராக..

 ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் இன்று முறைப்பாடு செய்தனர்.ஜனாதிபதி அரச தலைவராக தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவே அவர் பிரசாரங்களில் கலந்து கொள்ள வேண்டும் அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கூறியுள்ளனர்.ஜனாதிபதி அரச தலைவருக்கான அரச வளங்களை பயன்படுத்தி...

7/3/14

மேலும் இராணுவத்துக்கு 44 தமிழ் யுவதிகள்

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்தனர...

6/3/14

விசாரணைப் பொறிமுறையை கனடா உறுதிப்படுத்த வேண்டும்!

  ஐ.நா. மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொறிமுறை அவசியம் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை உறுதிப்படுத்துவதாக அந்தப் பிரேரணை வாசகம் அமைய வேண்டும். அதற்காக கனடா தான் சார்ந்த நாடுகளோடு கலந்துரையாடி தீவிர முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு கனடா நாடாளுமன்றத்தில்...

3/3/14

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க

 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்துக்கான முதல் அமர்வு இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளிலேயே இலங்கைக்கு எதிராகக் காட்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஜெனிவா செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான தமது இறுக்கமான நிலைப்பாட்டை ஆரம்ப உரையிலேயே வெளிப்படுத்துவர் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியமான விவாதப் பொருளாக...

1/3/14

தயாராகும் அரசாங்கம் நவநீதம்பிள்ளைக்கு பதில்

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சவாலில் வெற்றி பெறுவதற்காக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் 74 விடயங்களுக்கு எதிரான விபரங்களுடன் தகவல்களை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கை மீது குற்றம் சுமத்தும் தரப்பினர் மற்றும் போர்க்குற்றங்களை சுமத்தும் சாட்சியாளர்களின் அடையாளங்களை வெளியிடுமாறு சவால் விடுக்க அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள...