
நோர்வேயில் இருப்பதாக கூறப்படும் நெடியவன் என்ற சிவபரனை கைது செய்ய இன்டர்போல் பிறப்பித்துள்ள பிடிவிராந்துக்கு உதவ நோர்வே முதல் முறையாக இணக்கம் வெளியிட்டுள்ளது. நெடியவனை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நோர்வே இராஜாங்க செயலாளர் மோரன் ஹொன்லபட் தெரிவித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது. நெடியவன் பயங்கரவாதத்திற்காக நிதி திரட்டியுள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தி, 6000 ஜிகாபைட்...