
நிறைவேற்று அதிகாரத்தை கைவிடுவதற்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார் எனவும் சுரேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்குக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும்...