siruppiddy

23/12/14

நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் கடிதங்கள்!

 நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர்  ”இனி எந்த குழந்தையும் மரிக்க கூடாது”-கொழும்பு: இலங்கையில் போரின்போது காணமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு 15,000 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைப் பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள்...

20/12/14

குண்டு வெடிப்புச் சம்பவம்! தகவல்களை மறைக்க படையினர் முயற்சி

காங்கேசன்துறை வடமாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சமயம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைக்க படையினர் முயற்சித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள்...

18/12/14

ஒப்புக்கொள்கிறது அரசாங்கம் தமிழ்மக்களை அரசியல் ரீதியாக வெல்ல முடியவில்லை! –

  தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை என வன வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தோம் அவர்களை வெற்றி கொண்டோம். ஆனாலும் எம்மால் தமிழ் மக்களின் அரசியலை வெற்றிகொள்ள முடியவில்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்...

15/12/14

கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் மூடப்படும்!-

ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது. மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது. இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு...

11/12/14

மஹிந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது!

அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரோ, சிகல உறுமய தலைவர் சோபித தேரர், குணசேகர, வசந்த, கலாநிதி ரஜிவ விஜேசிங்க, ஹூனைஸ் பாருக், இராஜதுரை, திகாம்பரம், சந்திரசேகரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் இணைந்துள்ளார். மேலும்...

8/12/14

ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    தங்கொட்டுவையிலுள்ள ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்றபட்டுள்ள போதிலும் குறித்த ஆதரவாளர் தன்னுடைய மனைவியின் வீட்டில் இருந்தமையினால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது. இங்குஅழுத்தவும் மேலதிக...

5/12/14

எனக்கே சொந்தம் யுத்த வெற்றியின் 75 வீத பங்கு :

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தை நடத்தியதும்  அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம் விட்டுவைத்த 25 சதவீதத்தையே ராஜபக்ஷவின்...

3/12/14

ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. நீதிமன்றின் தீர்ப்பானது புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும்,...