siruppiddy

29/1/15

ஐநா நோக்கிய தமிழின அழிப்புக்கு நீதி கோரி பயணம் ‘...

ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற ஐநா சபையின் 28ஆவது மனிதவுரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு ‘விடுதலைச் சுடர்’ எனும் பெயரில் மனிதநேயப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா வரைக்கும் செல்லுகின்ற இப் போராட்டமானது, திட்டமிட்ட வகையில் தமிழின அழிப்பைத் செயற்படுத்திக்கொண்டு வருகின்ற சிங்களப் பேரினவாதத்தின் சுதந்திர நாளானதும் ஈழத்தமிழர்களின் கரி நாளானதுமான பெப்ரவரி 4ஆம் திகதி இலண்டனில் ஆரம்பமாக உள்ளது. இது பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட்,...

26/1/15

முட்டை வீச முயற்சித்தாரா சீனப் பிரஜை?

  சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்,  நடந்த மாநாட்டுக்கு மைத்திரிபால சிறிசேன சென்ற போது, கடுமையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள பிரதான நுழைவாயிலில் சீனர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைச்...

21/1/15

விரைவாக நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்! -

ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வு விரைவாக வழங்கப்பட வேண்டும்! - நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை.  தமிழ் மக்­கள் பல தசாப்­தங்­க­ளாக எதிர்­கொண்டு வரும் பிரச்­சினைக்கு ஐக்­கி­ய­ இலங்கை எனும் கட்­ட­மைப்­புக்குள் நிரந்தர­மா­னதும் நீடித்து நிலைக்கக் கூடி­யதும் நியாயபூர்­வ­மா­னதும் அதே நேரம் பல­ன­ளிக்கக் கூடி­ய­து­மான தீர்­வொன்­றையே நாம் எதிர்­பார்க்­கின்றோம். இந்த இலக்­கினை அடைந்து கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முழு­மை­யான ஆத­ர­வினை...

18/1/15

ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே

   இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் ரகசிய ஏஜெண்டின் பொறியில் சிக்கி ராஜபக்சே மண்ணை கவ்வியதாக கொழும்பு பத்திரிகை  ஒன்று தெரிவித்துள்ளது.'ரா' உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த  அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர்...

12/1/15

கற்பழிப்பு குற்றச்சாட்டு ராஜபக்சே மகன்கள் மீது!!

 இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார்.   ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது அவருடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது.இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்திருப்பது தற்போது  தெரிய வந்துள்ளது.  குறிப்பாக, இவர்கள் மூவரும் ஏராளமான பெண்களை வலுக்கட்டாயமாக கற்பழித்து...

8/1/15

தேர்தலை முன்னிட்டு தொடங்கியது தபால் மூல வாக்களிப்பு!

ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ அஞ்சல் மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்று ஆரம்பமாகியுள்ளது. இது நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதற்கமைய வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று யாழ்.மாவட்டத்திலுள்ள மாவட்ட செயலகம்,கல்வி வலயங்கள் ,கோட்டங்கள் ,மற்றும் பிரதேச செயலகங்களில் நண்பகல் வரை அஞ்சல் மூல வாக்களிப்புகள்இடம்பெற்று வருகின்றது.பலாலி உள்ளிட்ட படைமுகாம்களினிலும் வாக்களிப்பு படையினருக்கு நடந்துவருகின்றது. இந்த முறை யாழ்.மாவட்டத்தினில்...

தேர்தல்: வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து

இலங்கையில் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அது மிகத்தெளிவாக தெரிகிறது. நாளை முதல் எங்கள் கொள்கைகளை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவோம் என்று கூறினார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறீசேனாவிடமிருந்து...

6/1/15

தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!!

    இலங்கையில் நாளை மறுதினம் (8–ந்தேதி) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.எனவே அவர்கள் 2 பேரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து  தேர்தல் பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. தற்போது ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்த...

1/1/15

மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன!

 மலர்ந்துள்ள 2015ம் ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 8ம் திகதி மிகவும் தீர்மானம் மிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு மேலதிகமாக இரண்டு தேசிய ரீதியான தேர்தல்கள் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் நிறைவின் பின்னர் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த...