siruppiddy

26/2/15

மீண்டும் கே.பியின் வழக்கு ஒத்தி வைப்பு!

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள கே.பியை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஜே வி பி தாக்கல் செய்திருந்த மனு இன்று சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது கே.பி தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு ஆறு மாத காலம் அவசியம் என்று சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது. அத்துடன் கே.பிக்கு எதிராக 193 குற்றங்கள்  சுமத்தப்பட்டுள்ளதாகவும்,  இதனை விசாரணை செய்துவருவதாகவும் சட்ட...

19/2/15

மஹிந்தவுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மார்ச் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9ஆம் திகதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி...

15/2/15

கொலை மிரட்டல்விஜயகலாவிற்கு!!

தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மைத்திரி அரசின் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி  விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு  கொண்ட சிலர் தன்னை அச்சுறுத்தினர் எனத் தெரிவித்து இன்று அதிகாலை முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலிருந்து ஈபிடிபியை வெளியேற்றும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக...

10/2/15

நெதர்லாந்தின் தீர்ப்பு விரைவில்!விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? இல்லையா?

கடந்த 26.04.2010 இல் கைதுசெய்யப்பட்டு, முதல் தீர்ப்பின் முழுத்தண்டனையையும் அனுபவித்து விடுதலைபெற்ற 5 முக்கிய தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களிற்கும் எதிரான வழக்கானது உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் இறுதிவாதாட்டமும் செயற்பாட்டாளர்களின் இறுதிவார்த்தைகளும் எதிர்வரும் 16.02.2015 திங்கள் காலை 9.30 மணிக்கு டென் காக் உயர்நீதிமன்றத்தில்  நடைபெறவுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது...

7/2/15

எக்காரணம் கொண்டும் வடக்கில் படைக்குறைப்பு நடக்காது!!!

வடக்கில் இருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காப் படையினரைக் குறைக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார். வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்வதற்காக, முதல் முறையாக இன்று வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் ருவான் விஜேவர்த்தன. இன்று பிற்பகல் பலாலிப் படைத்தளத்தில், சிறிலங்கா படையினர் மத்தியில் உரையாற்றிய அவர், ”எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ந்து...

5/2/15

துப்பாக்கிச்சூடு! கோத்தா படைப்பிரிவு மீது சந்தேகம்!!

 வவுனியாவினில் துப்பாக்கிச்சூடு! புதிய அரசிற்கு தலையிடி கொடுக்கும் வகையிலான கோத்தா படைப்பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் இலங்கை காவல்துறை மீது இன்று வியாழக்கிழமை  அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தற்போது காயமடைந்த நிலையில் வவுனியா, பொது வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார.; வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று...

2/2/15

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு!

 கீர்த்தி தென்னக்கோன் தமது பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் மீளவும் நாட்டிற்கு வரவழைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். இது அரசின் பாரிய பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் விடுத்துள்ள அறிக்கையில்...