siruppiddy

30/11/15

உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், உயிருடன்???

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்…… விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர். போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட...

28/11/15

மிகவும் அமைதியாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு;பொலிஸ்சர்தெரிவிப்பு ?

வடக்கு- கிழக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டதாகவும், சட்டத்தை மீறியமைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் அதில் தலையிடவில்லை என்றும் அவர்  விளக்கமளித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் எவ்வித பாதுகாப்பு...

26/11/15

இறைவன் ஆனான் பிரபாகரன் இறந்து போனான்.ஆறுமுகன்!

ஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்! அச்சத்தில் மூழ்கிய அப்பாவித் தமிழரின் விலங்கினை உடைத்து உலகின் உச்சத்தில் வைத்த உன்னதத் தலைவன் இவன் பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின் தமிழனை சிங்களக் கொள்ளையன் அடிமைப் படுத்தி ஆண்ட போது… இலங்கைத் தலையின் மூளையில் வல்வைத் தாயின்… வீரத் திரு வயிற்றில் உலகத் தமிழர்களின்… ஒட்டு மொத்த மூளையாக உயிராகி… உருவாகினான்.. கார்கால மழையில் – ஓர் கார்த்திகை நாளில் இருட்டியது ஊர்… இருபத்தி...

23/11/15

சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!-

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்தின் முன் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி செயலாளர் அபேகோனும் கலந்து  கொண்டனர். நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை...

19/11/15

ரகசிய சித்ரவதை கூடம்! ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்!!!

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடந்த காலத்திலும், யுத்தத்திற்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக முறைப்பாடுகள் எழுந்தன. இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே-ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இக்குழுவினர், அண்மையில் இலங்கை  வந்திருந்தனர். ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். கொழும்பு மட்டுமின்றி,...

14/11/15

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருந்து அனுப்பிய நெஞ்சை உருக்கும் செய்தி

இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறை ஒன்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு அனுப்பிய நெஞ்சை உருக்கும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்>>> ...

13/11/15

நீதிமன்றம் அழைப்பாணை மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேருக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இலங்கை போக்குவரத்து  சபையின்  பஸ்களை பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபை தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்த வருடம் மார்ச் 10 ஆம்...

11/11/15

காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா.பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள வருகை  தந்துள்ளனர். மன்னார் கீரி ஞானோதய மண்டபத்திற்கு இன்று பி.ப 2 மணியளவில் வருகை தந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர் வரை ஞானோதய மண்டபத்திற்கு முன் ஒன்று கூடி காணாமல் போவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு  காணாப்பட்டனர். இதன் போது...

2/11/15

மைத்திரிக்கு கோட்டா அறிவுரை ஜெனிவா சூழ்ச்சியில் சிக்கவேண்டாம்?

சர்வதேச சமூகத்தால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மான சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுரை வழங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவாத் தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதிவான்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து கோட்டா பேச்சு நடத்தியுள்ளார். மெக்ஸ்வல் பரணகம...