siruppiddy

29/1/16

இலங்கை .உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளது ?

ஸ்ரீலங்காவின் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளதாக பொதுநலவாய அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். நல்லாட்சி அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நீதிமன்ற சுதந்திரத்தை பாதுகாப்பதாக வாக்குறுதிகளை வழங்கியதாகவும் எனினும்  அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிய மனித...

27/1/16

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் இன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை  செய்யப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்பட்ட 45 அரசியல் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை  நடைபெற்றது. இந்நிலையில் பிணையில் விடுதலையான 45 பேர் தொடர்பிலான வழக்கினை விசாரணைக்கு...

17/1/16

இன்னமும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குரிய விடை கிடைக்கவில்லை?

முப்பது ஆண்டு அகிம்சைப் போராட்டமும், முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டமுமாக மொத்தமாக 60ஆண்டுகள் துன்பங்களுடன் காத்திருந்தும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு உரிய விடை இன்னமும் கிடைக்கவில்லை. உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியல் யாப்பும் சரியான தீர்வை வழங்கும் என்பதற்கான சாதகமான நிலையும் தென்படவில்லை என விமர்சகர்கள்  தெரிவிக்கின்றனர். 60ஆண்டு காலம் மனம் தளராமல் இருக்கும் மக்களை இன்னும் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வைக்காமல் அவர்களின்...