siruppiddy

31/5/16

வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை:பிரித்தானியா!

இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை  வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் த...

28/5/16

நன்னெறிக் கோவைபொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகம்!

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே, பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பதவி நிலை அதிகாரிகளுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைக்கு அது தொடர்பான வரைபு அச்சில் உள்ளது. எதிர்வரும் ஜுன் மாதமளவில் குறித்த நன்னெறிக்கோவை...

25/5/16

அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல்! முதலமைச்சரும் வட மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் புறக்கணிப்பு!!

யாழ். நகர அபிவிருத்தி குறித்து வடக்கு ஆளுநரின் தலைமையில் நேற்று நடந்த கலந்துரையாடலை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பெரும்பான்மை வட மாகாண உறுப்பினர்களும்  புறக்கணித்தனர். அத்துடன் இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன்,  மாவை சேனாதிராஜா, சரவணபவன் புளொட்டின் சித்தார்த்தன் ஆகியோரே கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ கட்சிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை...

13/5/16

அதிர்ச்சி காணொளி யாழில் தற்போது நடப்பது என்ன?

  புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து அடங்கியிருந்த யாழ்ப்பாணத்து ரவுடிகளின் காடைத்தனம் புலிகளின் மறைவின் பின்னர் இன்று என்றும் இல்லாதவாறு தலைதூக்கி இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் கொள்ளை, வாள் வெட்டு, பாலியல் நடவடிக்கைகள். போதைப்பொருள் வியாபாரம் மக்கள் இன்றைய நிலையில் பயத்துடனே இரவுப்பொழுதை கழிக்கின்றனர். எங்கு எப்போது யார் வீட்டில் கொள்ளை நடக்கும், யாரின் வீடு புகுந்து வாள்வெட்டு நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. தென் இந்திய கழிவுகளை...

7/5/16

மீண்டும் இன்றும் நாடாளுமன்றம் சூடு பிடித்தது !

2016 நிதியாண்டிற்காக மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை சம்பந்தமாக இன்றும் பாராளுமன்றம் சூடு பிடித்திருந்தது. இதன்காரணமாக பாராளுமன்றை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய நடவடிக்கை மேற்கொண்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணை மீதான இன்றைய விவாதத்தின் போது நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற...