siruppiddy

17/2/16

இந்து கடவுளுக்கு தேங்காய் அடிக்கும் மகிந்தவின் கோமாளி கொள்கை!!!

தமிழ் மொழி வேண்டாம் ஆனால் திருட்டு தேங்காய் அடிக்க தமிழ் இந்து கடவுள்களான விஷ்ணுவும், காளியம்மனும் வேண்டும் என்பதுதான் மகிந்த ராஜபக்சவின் கோமாளி கொள்கை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன்
 தெரிவித்துள்ளார்.
அரசகரும மொழி ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று காலை நடத்தப்பட்ட அரசகரும மொழிக்கொள்கை தொடர்பான அறிவுறுத்தல் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும்
 கூறியதாவது,
தேசிய மொழி பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது கையில் உள்ள குருவியாகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது மரத்தில் உள்ள குருவியாகும். எனது கையில் மூன்று குருவிகள் உள்ளன. ஒன்று, அரசகரும மொழி ஆணைக்குழு ஆகும். 
இரண்டாவது 
அரச கரும மொழி திணைக்களம் ஆகும். மூன்றாவது தேசிய மொழி பயிலகம் ஆகும்.  இந்த மூன்றும் என் கையில் உள்ள மூன்று குருவிகள் ஆகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான குருவி மரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி இன்னமும் தெளிவில்லை.
ஆகவே முதலில் கையில் இருக்கும் குருவியை பயன்படுத்துவோம். அதை பயன்படுத்த முடியாவிட்டால் மரத்தில் இருப்பதாக சொல்லப்படும் குருவியை பற்றி பேசிப்பயனில்லை. அதாவது மொழியுரிமை கொள்கையை அமுல் செய்து தமிழ்மொழி பேசும் மகளின் இதயங்களை 
வெல்ல வேண்டும். 5 மாதங்களுக்கு முன் எனக்கு இந்த அமைச்சு கிடைத்தபோது இந்த அமைச்சு ஒரு செயற்படாத அமைச்சாகத்தான் கிடைத்தது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்த அமைச்சுக்கு ஒரு அமைச்சர் இருக்கவில்லை. நான் இங்கே வந்து இப்போது மெதுவாக இந்த அமைச்சை உருமாற்றிக்கொண்டு இருக்கின்றேன். இதன் பலாபலன்கள் விரைவில் தெரியவரும்.
கடந்த காலங்களில் தமிழ் பிரதேச மேடைகளில் ஏறி சில வசனங்களை தமிழ் மொழியில் பேசியவர்கள் இன்று தமிழ் மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தை எதிர்க்கிறார்கள். அதாவது தமிழ் மொழி பாவனையை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் இந்து கடவுள்களான  விஷ்ணுவையும், 
காளியம்மனையும் 
தேடிச்சென்று தேங்காய் அடிக்கிறார்கள். அதுவும் திருட்டு தேங்காய் உடைக்கிறார்கள். அதாவது தமிழ் மொழி வேண்டாம், தமிழ் கடவுளர்கள் வேண்டும் என்பது இவர்களது கொள்கை. என்ன, கோமாளி கொள்கையோ, அந்த விஷ்ணுவுக்கும், காளியம்மனுக்கும்தான் 
வெளிச்சம்.
இந்த நாட்டில் இப்போது, இந்த கொழும்பு பிரதேச செயலக பிரிவு உட்பட 41 உதவி பிரதேச செயலக பிரிவுகள், இருமொழி பிரதேச செயலக பிரிவுகளாக சட்டப்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை 
விரைவில் 
72 ஆக உயர்த்த உள்ளேன். இந்த பிரிவுகளில் பணி புரிய எதிர்காலத்தில் நியமனம் பெரும் அனைத்து அரச பணியாளர்களும் இரு மொழி தகைமை இருந்தால் மட்டுமே வேலைக்கு அமர்தப்பட வேண்டும் என்ற ஒரு அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்பிக்க உள்ளேன்.
 அதன்பிறகு 
ஒரு மொழி அறிவு கொண்டவர்களை விட, இருமொழி கற்றவர்களுக்கு இந்த பிரதேச செயலக பிரிவுகளில் அரசு பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும். எனது அமைச்சின் கீழ் வரும் தேசிய மொழி பயிலகத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் பற்றுவிக்கும் ஒரு தேசிய மொழி கல்லூரியாக தரமுயர்த்த முடிவு செய்துள்ளேன். இந்த பிரதேச செயலக பிரிவுகளில் நியமனம் பெரும் சிங்களம் பேசுவோர் தமிழையும், தமிழ் பேசுவோர் சிங்களத்தையும் கற்று இருக்க வேண்டும். இப்போது இருப்பது போல் அரச பணிக்கு வந்த பிறகு இரண்டாம் மொழி கற்கும் விளையாட்டு வேண்டாம். அரச பணி நியமனம் கிடைத்து விட்டால் அப்புறம் மொழியை படிப்பதில் இந்த அரச பணியாளர்கள் பெரும் அக்கறை காட்டுவதில்லை. இதை நான் இப்போது தேடியறிந்துள்ளேன்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

13/2/16

மக்களின் கதாநாயகன் தலைவர் பிரபாகரனே என்கிறார் கோத்தா!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இது ஒன்றும் ஆச்சரியமில்லை.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை இதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்..அங்குள்ள மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருந்தார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

9/2/16

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோஷித ராஜபக்ஷவின் நலன் விசாரிக்கும் நோக்கிலேயே அவர் சிறைச்சாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

3/2/16

முன்நாள் ஜனாதிபதிமகிந்தவின் இரு மகன்கள் குறித்த தகவல்கள் வெளியானது எப்படி?

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவரின் மகனை சிறைக்கு இட்டுச்சென்றுள்ளதற்கு பொதுமக்கள் சாட்சியாகியுள்ளனர், அதுவும் பெரும் குற்றத்திற்காக.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களை சமாளித்துவிடலாம் என்பதை பொதுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் மகிந்தவின் அரசியல் சூட்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இருப்பினும் மகிந்தவின் இரண்டு மகன்கள் குறித்த தகவல்கள் எப்படி வெளியானது?
வெறும் அமைப்பாளராக இருந்த நாமல் மிக விரைவிலேயே ஆணை பிறப்பிக்கும் நிலைக்கு வந்தார், தமது சொல்லுக்கு கீழ்படியாத மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகளை மிரட்டினார். எம்.பி.களை விட தாம் உயர்ந்தவர் என நாமல் கருதிக்கொண்டதால் ஒரு மூத்த அதிகாரி தனது பதவியை ராஜினமா செய்ய நேர்ந்தது. பாராளுமன்றத்தில் நாமல் நுழைந்தால் அமைச்சர்களும் எழுந்து நின்றுள்ளனர்.
யோஷிதவால் இலங்கை கடற்படையில் இணைய முடிந்தது மட்டுமல்ல, லண்டன் மற்றும் உக்ரைனில் உள்ள பெருமைமிக்க கடற்படை பாடசாலைகளிலும் நுழைய முடிந்தது, அரசு பணம் மில்லியன் கணக்கில் அதற்கு செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் மருத்துவமனைகள், பாடசாலைகள், சாலைகளுக்கு போதிய கவனம் தேவைப்படும் சூழலில் ஒருவரது பயிற்சிகளுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது போன்ற தகுதிகளால் நாட்டுக்கு என்ன பயன் என்று தெரியாத ஒருவர், வெளிப்படையாகவே ஆவணங்களில் மோசடி நடத்த தேர்ச்சி பெற்றது போன்றுது. 5 பேருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது, அதில் ஒருவர் தேசிய ஊடகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்.
கடற்படையில் பணிபுரியும் ஒருவர் எப்படி ஒரு நிறுவனத்தின் தலைவராக முடியும், அது குடும்ப நிறுவனமாக இருந்தால் கூட? இது கடற்படை அதிகாரிகளின் வேலை.
மகிந்த ராஜபக்சவின் நகல்கள் நாமலும் யோஷிதவும். ஏனைய தந்தையர்கள் போல அல்லாமல் மகிந்த ராஜபக்ச அதிகார வெறி காரணமாக தனது மகன்களின் எதிர்காலத்தையை வீணடித்தவர். உண்மையில் நிஜமான குற்றவாளி என்பது ஜனாதிபதியின் நிறைவேற்று 
அதிகாரமே.
அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மகிந்த குற்றங்களையும், தகாத நடத்தைகளையும், ஊழலையும் ஊக்குவித்தார். அரசு நிலங்களை அபகரித்தார், பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றார்.
மகிந்த எப்போதும் யுத்தத்தில் பெற்ற வெற்றி குறித்து பேசுவார், பொதுமக்களுக்கு அதனால் என்ன பயன் கிட்டியது. தீவிரவாதிகள் என எவரும் இல்லை, நாம் தான் சிங்கள குண்டர்களாலும் பிக்குகள் என சொல்லக்கூடியவர்களாலும் சூழப்பட்டுள்ளோமே.
இறக்கும் வரையில் இந்த நாட்டை ஆள வேண்டும் எனபதில் மகிந்த கருத்தாக இருந்தார்.
அவரது மகன்களுக்கு மேட்டுகுடி வாழ்க்கை முறை கிடைத்தது. யாரை வேண்டுமானாலும் அவர்கள் கொலை செய்யலாம், அவர்கள் நினைத்த பொழுதே மூத்த அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கலாம், நிஜத்தில் அவர்களுக்கு மேலே எவரும் இல்லை 
என்ற நிலை.
ஆனால், இப்போது என்ன நடந்தது என நாம் காண்கிறோம், அந்த தாயும் தந்தையும் மிக குறுகிய கண்ணோட்டத்தில் இருந்துகொண்டு சொத்துக்களையும் அதிகாரத்தையும் மட்டுமே தேடிக்கொண்டனர், நாடும் நாட்டு மக்களும் என்ன ஆனால் என்ன. நாமலும் யோஷிதவும் அவர்கள் படித்த கல்லூரிக்கே இழுக்கை தேடித்தந்தனர்.
தற்போதைய அரசு அதிகாரிகள், எம்.பி.கள் மற்றும் ஊழல் அமைச்சர்களுக்கு இது ஒரு படிப்பினை. பின் வாசல் வழியாக வந்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு என்பதே இல்லை, பிரதமருக்கும். உங்கள் மாமனார் ஜெ.ஆர்.ஜெயவர்தனே போன்று தந்திரசாலி என எங்கள் அனைவருக்கும் தெரியும், அதனால் பொதுமக்களை ஏமாற்ற முயல 
வேண்டாம்.
ஜனாதிபதியை நீக்க நீங்கள் முயன்று வருவதை நாங்கள் கவனித்தே வருகிறோம், அது மகிந்தவின் கனவு மட்டுமே. திரைமறை சூழ்ச்சிகளை கைவிட்டு விட்டு நேர்மையானவராய் மலேசிய பிரதமர் போன்று நாட்டை நேசிப்பவராகுங்கள். இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

29/1/16

இலங்கை .உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளது ?

ஸ்ரீலங்காவின் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளதாக பொதுநலவாய அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நீதிமன்ற சுதந்திரத்தை பாதுகாப்பதாக வாக்குறுதிகளை வழங்கியதாகவும் எனினும்  அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடுகளை செய்தபோதும்  உச்சநீதிமன்றம் அது தொடர்பில் விரிவாக விசாரிக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் ஸ்ரீலங்காவிற்குள் சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதை தான் எதிர்ப்பதாகவும் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு கூறியுள்ளார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க உப தலைவரான சாலிய பீரிஸ், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா நீதிமன்றங்கள் முக்கியமான பல தீர்ப்புக்களை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27/1/16

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் இன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை 
செய்யப்பட்டுள்ளனர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட 45 அரசியல் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை 
நடைபெற்றது.
இந்நிலையில் பிணையில் விடுதலையான 45 பேர் தொடர்பிலான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் அவர்களில் மூவர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை
 செய்தார்.
மேலும் அவர்களில் 14 பேருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதவான் மீதமான 28 பேர் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் புனர்வாழ்வு உத்தரவை கைதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும், புனர்வாழ்விற்கு செல்வதற்கென கால அவகாசம் தேவை எனவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி புனர்வாழ்விற்கு செல்வதற்கான ஆயத்தங்களுடன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 அரசியல் கைதிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள்  எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிணையில் விடுதலையான கைதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை தளர்த்திய நீதிமன்றம் மாதத்தி்ற்கு ஒருமுறை கையெழுத்திட்டால் போதுமென அறிவித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் 
தெரிவித்துள்ளார்.. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/1/16

இன்னமும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குரிய விடை கிடைக்கவில்லை?

முப்பது ஆண்டு அகிம்சைப் போராட்டமும், முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டமுமாக மொத்தமாக 60ஆண்டுகள் துன்பங்களுடன் காத்திருந்தும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு உரிய விடை இன்னமும் கிடைக்கவில்லை. உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியல் யாப்பும் சரியான தீர்வை வழங்கும் என்பதற்கான சாதகமான நிலையும் தென்படவில்லை என விமர்சகர்கள்
 தெரிவிக்கின்றனர்.
60ஆண்டு காலம் மனம் தளராமல் இருக்கும் மக்களை இன்னும் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வைக்காமல் அவர்களின் அரசியல் உரிமைகளை கையளிக்கும் ஏற்பாடுகளுக்கு உலக அரசியல் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2009ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிந்துவிட்டது என மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மார்புதட்டியது போன்று நல்லாட்சி அரசாங்கமும் புகழ்பாடுகின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு நடைமுறை விடயங்கள் சான்றாகும். குறிப்பாக காணி அபகரிப்பு, பௌத்த சமயப்பரப்புரைகள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்தை குறைத்தல், இரணுவ கிராமங்களை உருவாக்குதல், தமிழர் பிரதேச எல்லைகளை சிங்கள பிரதேசங்களுடன் இணைத்து தமிழர்களை நிலத்தொடர்பில்லாமல் பிரித்தல், நில உரிமைகளை பறித்தல் என்று வடக்கு கிழக்கில் மறைமுக யுத்தம் தொடருகின்றது.
இலங்கையின் அரசியலமைப்பு தமிழர்களுக்கு சமநீதி வழங்கவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1883இல் முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோல்புறூக் அரசியல்யாப்பு
 முதல் இலங்கை
 1948இல் சுதந்திரமடைந்து 1972இல் இறைமை அடைந்து உருவாக்கப்பட்ட யாப்புகள் வரை தமிழர்களுக்கு சமநீதி இல்லை என்பதும் வரலாறு. 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 19திருத்தங்களுடன் தற்போதும் நடைமுறையில்
 இருக்கின்றது. 
இந்த யாப்பில் 1987இல் செய்யப்பட்ட 13ஆவது திருத்தம் தான் அதிகாரப்பரவாலக்கல் முறையாகும்  இதுதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாகவும் கூறப்பட்டது. 
ஆனால் மக்களிடம் நம்பிக்கை இருக்கின்றது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான சர்வதேச ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இலங்கை ஒரு சிறிய நாடு அந்த நாடு தான் விரும்பிய நாடுகளுடன் உறவுகளை வைத்து தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்ற நல்ல நோக்கில் உலக நாடுகள் விட்டுக்கொடுப்பதை அல்லது பொறுத்துக்கொண்டிருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழர்களின் அரசியல் 
இருப்புக்கு உலை 
வைக்கின்ற வேலைத் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதை நிறுத்த, குறைந்த பட்சமேனும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இனப்பிரச்சினை விவகாரத்தில் முற்று முழுதாக அரசாங்கத்தை சர்வதேசம் நம்புகின்ற போக்கை 
காணமுடிகின்றது
பிராந்திய அரசியல் நலன் மற்றும் லாபங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தொடர்ந்து செயற்படுமானால் தமிழர்கள் பிரச்சினைக்கு உலகம் அழியும் வரை தீர்வுகிட்டாது. 
இந்தியா
 அயல்நாடு இந்திய தமிழர் பிரச்சினையை பார்த்துக்கொள்ளும் என்று கருதியும் உலக நாடுகள் செயற்படுமானால் அது இன்னும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் அல்லது தள்ளப்பட்டு விட்டது என்றும் கூறலாம். ஆகவே இந்த நிலைமைகளை அறிந்துகொண்டு நேர்மையான முறையில் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்து முன்வைக்க வேண்டும். 
அதற்கு ஏற்றவாறு மக்கள் சந்திப்புக்களை நடத்த வேண்டும். தொழிற் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசணை பெறுகின்றனர். அதையும் தாண்டி அரசாங்கமும் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்புகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. தமிழ் மக்கள் பேரவை கூட மக்களை சந்தித்து உரையாடவில்லை. 
மக்கள் 
மயப்படுத்தப்பட்ட அரசியல் வடக்கு கிழக்கில் இல்லை. ஆனாலும் தமிழ்த்தேசிய கொள்கையும் நம்பிக்கையும் மக்களிடம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள்தான் கொள்கைகளை விலைபேசி இலாபம் ஈட்டுகின்றனர் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>