siruppiddy

12/5/17

சந்திரிக்காகூறுகின்றார் தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது சர்வதேச நீதிபதிகள் தேவை !

யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவற்றுக்கான காரியாலயத்தில் இன்று(9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துரைத்த அவர்,
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தமிழ் மக்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவிதமான தடங்களும் இருக்கக் கூடாது. இதனைக் கூறுவது நீதியின் அடிப்படையில் தான். அதனைத் தான் நான் 
வலியுறுத்துகிறேன்.
எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது. அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவேண்டும் என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


7/5/17

முன்னால் போராளி செங்கலடியில் தூக்கிட்டு தற்கொலை

செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் 
தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


தலைவரைப்புகழ்ந்துள்ளார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ண!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற  தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது என்றும் பாராட்டியுள்ளார்.
இராணுவத்தில் இருந்து 05.09.16 ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி 06.09.16 வெளியிட்டுள்ளார்.
இவர்தொ, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், விடுதலைப் புலிகளின் தலைவரின் ஆளுமையை பெரிதும் புகழ்ந்துரைத்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.

தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான்.அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். சிறிலங்கா இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.
அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார்.
ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.
ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் 
இரக்கமற்றவர்.
அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.
பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதிநிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பானு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை 
வழங்கினர்.
இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிகநன்றாகவே செயற்பட்டனர்.
வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.
இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




27/1/17

ஐக்கிய நாடுகள் சபை நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஏற்றுக்கொண்டுள்ளது..!

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி
 வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச சார்பற்ற நிறுவனமாக
 பதிவு செய்துள்ளது.
இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பு ஓர் கனவு அமைப்பு என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார் என சிங்கள நாளிதழ் மேலும்
 சுட்டிக்காட்டியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

9/12/16

புத்தரும் சிவபெருமானும், சிரிக்கின்றனர்...! விக்கினேஸ்வரன் மீது குற்றச்சாட்டு!

கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று வரும் பக்தர்களை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் சென்று
 வருகின்றர்.
அதேபோன்று விகாரைகளில் சிவபெருமான், விநாயகர் போன்ற தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்து கோயில்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வணங்குவதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வெளியில் வந்து இரு தரப்பினரும் அடித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் விகாரைகளை நிர்மாணிக்க முடியாது என தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் 19 ஆயிரம் சிங்களவர்கள் இருந்தார்கள். அதேபோல் 80 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது போல, பௌத்தர்களுக்கான அதிகாரத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



8/12/16

முன்பு மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள்.!

மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கௌதம புத்தர், யேசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர், நபிகள் நாயகம் என பலரும் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து 
தெரிவித்த அவர்,
சொந்த மதத்தின் புனித தன்மையை நசுக்க கூடிய வகையிலான செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்,
மேலும், மதத்தை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது. மதத்தை வைத்துகொண்டு அரசியல் செய்கின்றவர்கள் வங்குரோந்து அரசியல்வாதிகளாகவே இருப்பார்கள் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



16/11/16

புலிகள் வருகையா?இலங்கை – இந்திய கடற்பரப்பில் மோதல்!!

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த படகினை ராமேஷ்வரம் ஓலைக்குடா பகுதியில் வைத்து இந்திய கடலோர படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த படகில் இருந்த இரண்டு நபர்கள் இந்திய கடலோர படையினர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் முறையானது விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறையை ஒத்ததாக இருந்ததாகவும் சில வேளை புலிகளாக இருக்கலாம் என இந்திய கடற்படை அதிகாரிகளை மேற் கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>