siruppiddy

28/7/13

பணத்திற்காக கட்சித் தாவவில்லை

பணத்திற்காக கட்சித் தாவவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் அனைவருக்கும் எதிராகவும் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது வழமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தாம், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார். கட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை எனவும், பணம் பெற்றுக்கொண்டதில்லை...

அறிக்கை சமர்ப்பிக்க நவனீதம்பிள்ளை உள்ளார்

இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை விஜயம் குறித்து, நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி முதல் 27ம் திகதி வரையி;ல் பேரவையின் 24ம் அமர்வுகள் நடைபெறவுள்ளது. அமர்வுகளின் ஆரம்ப...

27/7/13

கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் -

பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் - பெபரல் பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி...

26/7/13

அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில் சனிக்கிழமை யூலை 27 மாபெரும்

கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல்- ஆறாத வடுக்களாக தமிழர் உள்ளங்களில் பதிந்த நெருப்பு நினைவுகள் யாவும் ஆழமாகப் பதித்து நிற்கின்றன. யூலை 1983 இலங்கைத் தீவில் தென்னிலங்கைத் தமிழர் மீதும் சிறைச்சாலைகளில் இருந்த தமிழ்க் கைதிகள் மீதும் இனவாத சிறிலங்கா அரச பின்னணியோடு சிங்களக் காடையர்கள் கட்டவிழ்த்த கொடிய இன அழிப்பு நடைபெற்று30 ஆண்டுகள் கடந்து நிற்கின்ற நிலையிலும் இன்றும் தொடர்கின்றன. சிறிலங்கா இனவாத அரசாலும் சிங்கள இன வெறியர்களாலும் தமிழ் மக்கள் மீதான...

ஊடகர்களுக்கான கருத்தரங்கு என்ற பெயரில் அச்சுறுத்தல்!

பிரதேச ஊடகவியலாளர்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு என்ற பெயரில் சிறிலங்கா அரச தகவல் திணைக்களத்தால் கடந்த செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கின் மூலம் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலுக்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களைவிட தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் இராணுவ அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அதனை விட இராணுவ ஊடகவியலாளர்களும்...

25/7/13

பெண்களின் விவரங்களை திரட்டும் படையினர்!

 யாழ். குடாநாட்டில் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தந்தப் பகுதிகளிலுள்ள படையினரே மக்களைப் பொது இடத்துக்கு அழைத்து இந்த விவரங்களைப் பதிவு செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது. அடுத்ததாக இவ்வாறான விவரங்களை திரட்டுவது தனியாகவும் வறுமையுடனும் வாழும் பெண்களை இலக்குவைத்து சமூக விரோத செயலில் சிங்களப் படையினர் ஈடுபடலாம்...

மாகாணசபைதேர்தலில் மக்களுக்கு நம்பிக்கையின்னை-

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களுக்க நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. அதிகளவான அரசயில் வாதிகள் தேர்தல்காலங்களில் வளங்கும் வாக்குறிதிகளை நிறைவேற்றதவறுகின்றன இதனால் அதிகளவான மக்கள் தேர்தலில் நம்பிக்கையற்று போயுள்ளார்கள்.இதனால் மக்கள் மனதில் ஜனநாயகம் குறித்து நம்பிக்கையின்மை காணப்படுவதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளா...

தாரைவார்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க அரசு??

   கச்சதீவை விட்டுகொடுப்பதன் மூலம் அது தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது ஒழித்து அதை அடிப்படையாக கொண்டு 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு 13ம் திருத்தத்தை அடியோடு அழித்தொழிக்க அரசுக்குள் சதியாலோசனை நடைபெறுகிறது. ஆனால் இன்று 13ம் திருத்தம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு அங்கம். அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு அரசாங்கம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்துள்ளது.ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தங்களை கிழித்தாலும் ஒழித்தாலும்...

தீயை பற்றவைத்த வீரர்களின் நினைவுநாள்!

 தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும்புலிகள் சென்று தாக்குதல் நடத்தில வீரவரலாறுபடைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்ப முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்கள். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி வீரர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.இந்த தாக்குதல் சம்பவத்தினை...

24/7/13

பொதுத்துறை பலவீனமான நிலையில் ??

நாட்டின் பொதுத்துறை பலவீனமான நிலையில் காணப்படுவதாக பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணேசேகர தலைமையில் இந்தக் குழு நேற்றைய தினம் பாராளுமன்றில் அறிக்கையை சமர்ப்பித்திருந்து. பொதுத்துறை நிறுவனங்கள் நட்டமடைவதற்கான காரணங்கள் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை சேவைகள் வீழ்ச்சியடைவதனை தடுப்பதற்கு பொதுத்துறை ஊழியர்களின் சம்பளங்கள்...

பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து பிழையானது

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக்கின் கருத்து முற்றிலும் பிழையானது என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டான்சூக் கருத்து வெளியிட்டிருந்தார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் விசாரணைகள் கால தாமதமடைவதாகவும் விசாரணைகளை மூடிமறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்...

23/7/13

ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் என்ன?

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.  வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர்.. பற்றிக் வென்ட்ரெல் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள தீர்மானம், 2012இல் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில்...

22/7/13

ஆட்டங்காணுமா சிறிலங்கா சமந்தா பவரின் வருகையால் ?!

 ஐ.நாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமந்தா பவரின், முக்கியமான நிகழ்ச்சி நிரலில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சமந்தா பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் குறித்தும், சமந்தா பவரின் திட்டங்கள் குறித்தும் அமெரிக்க செனெட் சபைக்கு, வெளியுறவுக் குழுவின் தலைவர் றொபேட் மெனென்டெஸ்...

மஹிந்தவை அழுத்தும் சிங்கள இனவாதிகள்

 13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தாமல் தேர்தலை நடத்தினால், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இனவாதிகள் கோஷ எழுப்ப தொடங்கியுள்ளனர்.   இது தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது, வட தமிழீழத்தில் தேர்தலை நடத்தினால் அது ஈழத்தை உருவாக்கும் என கடும்போக்குவாத சிந்தனை கொண்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட தமிழீழத்தில்...

21/7/13

விடுதலைப்புலிகளுக்கு உயிர் ஊட்டிய அழகிரிசாமிக்கு வீர வணக்கம்

இன்று தாய்த் தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. திரு.வை.கோ, திரு. பழ நெடுமாறன், திரு.சீமான், திரு. குமரேசன் போன்ற தமிழீழ, தமிழின உணர்வாளர்களும் , திரு சாலமன் பாப்பையா போன்ற தமிழ்மொழி ஆர்வளர்களும், தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரும்...

கௌரவிப்போம் வீராங்கனைகளை!!!

 இலங்கையின் மிக மிகக் கேவலமான மனித உரிமை மீறல்கள் குறித்து லசந்த விக்கிரமதுங்க சொன்னதைப் பற்றிப் பேசும்முன் சென்ற இதழைப் படித்ததும் என்னைத் தொடர்புகொண்ட வாசக நண்பர்களின் மனக்குமுறல்களுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் விதத்தில் குறைந்தது 5 விளக்கங்களையாவது தெரிவிக்க வேண்டியிருக்கிறது. 1. இலங்கையில் இனப்படுகொலைதான் நடக்கிறது - என்பதை இந்தியா நிச்சயமாக அறிந்திருந்தது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அந்த இனப்படுகொலையின் ஒரு பகுதியாக திட்டமிட்ட...

20/7/13

நாடு அமைப்பதற்கல்ல, இழந்த தேசத்தை மீளப்பெறவே இந்தப் போராட்டம்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின்...

19/7/13

காவல்துறைக்கும் துப்பாக்கி குழுவிற்கும் இடையில் மோதல்

கொழும்பு கல்கிசை மவுன்ட்லெவன்யா - ஹுலுதுகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காவல்துறைக்கும் மற்றுமொரு குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சண்டையிலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.ஹெரோயின் போதைப்பொருட்களை தேடி கல்கிசை ஹுளுதாகொட குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றுக்கு காவல்துறையினர் இன்றிரவு சென்றிருந்த சமயம் காவல்துறையினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பாதுகாப்புக்காக காவல்துறையினர்...

18/7/13

400 வரையான மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம் “

“ ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்..18-07-1996 விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம்...

தேர்தல் குழப்பம் ஏற்பட்டால் படையினர் களமிறக்கப்படும்!

 வடக்கு மாகாணத்தில் தேர்தல் பணிகளுக்காக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் எனினும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் படையினர் களமிற்கப்படுவர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாதுகாப்பு குறித்த எவ்வித அரசியல் கட்சிகளுடனும் இணக்கம் ஏற்படுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை முன்னிட்டு முன்வைத்துள்ள சில கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும்...

16/7/13

தனித் தமிழீழம் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ???

 உலகத் தமிழர்களிடையே சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. சிறிலங்காவில் இன்னும் தமிழர்கள் மீதான கொடுமைகள் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றே...

தேர்தலை: தடுத்து நிறுத்த கடும்போக்குவாத அமைப்புகள்

 வட தமிழீழத்தில் வரும் செப்டம்பர் மாத இறுதியில் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதனை  தடைசெய்யும் வகையில் முயற்சியில் இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. குறித்த தேர்தலை நிறுத்துவதற்கான இடைக்கால தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிங்கள அமைப்புகளும் கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக நம்பமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முயற்சியில் சிங்கள ராவய, பொதுபலசேனா அமைப்புகள்...

15/7/13

விடுதலை புலிகள் படால் தரவிறக்கம் செய்த வாலிபன் கைது

  யாழ்பாணத்தில் சில தினம்களுக்கு முன்னர் யுடுபி (யௌடுபெ) இணையத்தில் இருந்து விடுதலை புலிகளின் காணொளி பாடல்களை தரவிறக்கம் செய்த வாலிபன் ஒருவரை சிங்கள படை கைது  செய்துள்ளது இவர் பாவித்த மொபைல் தொலைபேசி தொலைபேசி ஐபி அட்டிரசை வைத்து மேப்பம் பிடித்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது பலமகா  தாக்க  பட்ட நிலையில் தொடர்ந்து சிறுவன்  தடுத்து  வைக்க பட்டுள்ளதாக அந்த பகுதி மக்களில் சிலர் நமக்கு தெரிவித்தனர் மாணவன் செய்த இந்த நடவடிக்கையை...

திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால்??

ஸ்ரீலங்காவின் 13ம் திருத்தச் சட்டத்தில் அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தினால் வீதியில் இறங்கி போரட வேண்டி நேரிடும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் முன்னாள் அரச அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால் செய்துகொள்ளப்பட்ட 13ம்...

14/7/13

பணிகளில் பெண்களை ஈடுபடுத்த விரும்புவதாக இலங்கை?

 சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் பெண் வீராங்கணைகளை ஈடுபடுத்த விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அமைதி காக்கும் பெண் படைவீராங்கணைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குறித்த பெண் வீராங்கணைகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும், அழைப்பு கிடைத்தால் அவர்களை கடமையில் ஈடுபடுத்த முடியும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய nதிவித்துள்ளார். ஆபிரிக்க நாடுகளில் பெண் அமைதி காக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக...

13/7/13

போர்க்குற்றவாளி படைகளுடன் அமெரிக்க படைகள் கூட்டுப்???

இனப் படுகொலைகளை மேற்கொண்ட சர்வதேச போர்க்குற்ற படையான சிறீலங்காவின் படைகளுடன் அமெரிக்க படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்ற நடவடிக்கையானது அமெரிக்காவின் இரட்டைவேடத்தை வெளிக்காட்டுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்ற போhக்குற்றம் தொடர்பான விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாகள் கண்டிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குற்றம் புரிந்த அந்தப் படைகளுடன் பயிற்சியில் ஈடுபடுவது, உலக நாடுகளையும்...

கட்டளைகளை நிறைவேற்றாத அரசாங்க அதிபர் ?

மகிந்த அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றாத மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.எஸ்.சரத் ரவிந்திர உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடைய காலத்தில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் மந்தகெதியில் இடம்பெற்றத்தை காரணம் காட்டியும், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் இவரால் உரியமுறையில் செயற்படமாட்டார் என்பதனையும் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள...

அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலில் இலங்கை

  பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலில் இலங்கை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் தாம் பங்கேற்பது சரியான தீர்மானமே என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டேவிட் கெமரோன்இ தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளா...