siruppiddy

22/7/13

ஆட்டங்காணுமா சிறிலங்கா சமந்தா பவரின் வருகையால் ?!


 ஐ.நாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமந்தா பவரின், முக்கியமான நிகழ்ச்சி நிரலில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சமந்தா பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் குறித்தும், சமந்தா பவரின் திட்டங்கள் குறித்தும் அமெரிக்க செனெட் சபைக்கு, வெளியுறவுக் குழுவின் தலைவர் றொபேட் மெனென்டெஸ் கடந்த புதன்கிழமை விளக்கமளித்துள்ளார்.

இவருக்கு அமெரிக்க செனெட் உறுப்பினர்களின் பேராதரவு உள்ள நிலையில், இவரது நியமனம், நாளை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வாக்கெடுப்பின் போது உறுதிப்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

இதனால், மனிதஉரிமைகள் விவகாரத்தில் சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிலவிவரும் மோதல்கள் இப்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த ஆண்டு மார்ச் கூட்டத்தொடரின் போது, சிறிலங்கா விவகாரத்தை ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தனது இறுக்கமான போக்கை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக