siruppiddy

9/5/14

தீவிர செயற்பாட்டில் விடுதலைப் புலிகள் : அமெரிக்க

 தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளனர் என அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிக்கை மூலம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சில புலம்பெயர் அமைப்புக்கள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி பெறப்படுவதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெருந்தொகையான புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஆயுதங்கள், தகவல் தொடர்பு, நிதி மற்றும் ஏனைய தேவையான பொருட்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புலிகள் தங்கள் வேலைகளுக்கு நிதி சேகரிப்பதுடன், தொண்டு வேலை என திசை திருப்ப முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் பல தனிநபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது.

இதுவரை கனடா மட்டுமே இந்தப் பட்டியலை ஏற்க முடியாது என மறுத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக