
விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தயார் செய்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். சில முஸ்லிம்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனித புதைக்குழியை தோண்ட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பில் முறைப்பாடுகள்...