siruppiddy

16/6/14

மோடிக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி இரகசிய அறிக்கை

இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இரகசியமான அறிக்கை ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர
மோடிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் மற்றும் பொது வேட்பாளர்களாக போட்டியிடக் கூடியவர்கள் பற்றிய தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லி உள்ள உயர் மட்டத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிச்சயமான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் பெயர்களும் இதில் அடங்கியுள்ளன.

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளின் அரசியல் பலத்தை மதிப்பிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த கட்சிகளின் ஆதரவை பெறக் கூடிய பொது வேட்பாளர்கள் அவர்களுக்கு உள்ள சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று அமைச்சர்கள் பற்றி விசேட குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயற்பாடுகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அவரது கையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக