தமிழக முதலமைச்சரை இழிவுப்படுத்திய இலங்கை அரசாங்கத்தை கண்டித்து சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடம் நோக்கில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தால், தூதரகத்திற்கு சற்று தொலைவில் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியப் பிரதமரையும் தமிழக முதலமைச்சரையும் இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டமை முழு இந்தியாவையும் இழிவுப்படுத்தும் செயல் என தமிழக வாழ்வுரிமை கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக