siruppiddy

28/4/15

சரித்திர முக்கியத்துவ 19வது திருத்தம் வாக்கெடுப்பு இன்று???

முழு நாடும் எதிர்பார்த்த 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19வது அரசியலமைப்புத்...

23/4/15

நாடாளுமன்றம் கலைக்கப்படாது மைத்திரி உறுதி

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டம்  இன்று 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

22/4/15

அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்கள் போராட்டம்!!!

வடமராட்சி கிழக்கில் அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்கள் இன்று  தமது பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடி;கைகளை வலியுறுத்தி  10 அம்சகோரிக்கைள் வைத்து உண்ணா விரதப்போராட்டம்  ஒன்றினை நடத்தினர். பின்னர் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இவ் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வேண்டாம் என்று அரச ஆதரவு சக்திகளால் பொது மக்களை நோக்கி கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.அதையும் தண்டி மக்கள் போராட்டத்தினை...

21/4/15

இன்­றைய தினம் நாடாளுமன்றத்தில் பசில்!

முன்னாள் பொரு­ளாதார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ச இன்­றைய தினம் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இன்று பிற்­பகல் ஒரு மணி­ய­ளவில் இலங்­கைக்கு வருவேன் எனவும் பாரா­ளு­மன்ற அமர்வில் கலந்­து­கொள்வேன் எனவும் பஷில் ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார். தனிப்­பட்ட கார­ணத்­திற்­காக அமெ­ரிக்­கா­வுக்கு சென்­றி­ருந்தேன். அதன்­படி திட்­ட­மிட்­டி­ருந்த தினத்தில் நான் நாடு திரும்­பு­கின்றேன். இது இர­க­சி­ய­மா­ன­தல்ல....

18/4/15

மீண்டும் முன்னாள் முதலமைச்சர் வரதர் யாழினில் !!!

வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் மீண்டும் யாழ்.திரும்பியுள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்து உரையாடியிருந்தார்.ஈபிடிபி அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களான இரா.சிவச்சந்திரன்,சுந்தரம் டிவகலாலா ஏற்பாட்டினில்  இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இலங்கை...

15/4/15

பெரும்பான்மை! ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறார் சுரேஸ்!!!

 நான்கு கட்சிகளது கூட்டமைப்பான தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்குள் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அதில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்தேசியகூட்டமைப்பின் ஒதுக்கீடுகளில் 51வீதம் தமிழரசுக்கட்சிக்கும், ஏனைய 49 வீதத்தை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொள்ளட்டும் என்றும் அவ்வாறான நிலைப்பாட்டிற்கு சம்மதித்தாலே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலேயே கைச்சாத்திடுவதென தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்நிலையில்,...

12/4/15

ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போலின் உதவி.

ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட மகிந்தராஜபக்ஷவின் மருமகன் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போலின் உதவி கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கான தூதுவராக இருந்த அவர், யுக்ரெயின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் அவரை கைது செய்ய...

4/4/15

தமிழ்நாடு சென்று பேச்சு நடத்த தயார்! தீர்வு காணும் முயற்சியில்

மீனவர்கள் பிரச்சினைக்கு வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம், இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

2/4/15

அரசியல் தீர்வு காண மைத்திரி அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் ????

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்காவுக்குப் பயணம்  மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச்...