முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கைக்கு வருவேன் எனவும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வேன் எனவும் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அதன்படி திட்டமிட்டிருந்த தினத்தில் நான் நாடு திரும்புகின்றேன். இது இரகசியமானதல்ல. நான் எந்தவிதமான நிதி மோசடிகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பஷில் ராஜபக்ச மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக