கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தினில் முன்னாள் போராளி ஒருவர் படுகாயமடைந்த நிலையினில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த பயணிகள் வாகனம் மோதியதில்; இம்முன்னாள் போராளி உயிரிழந்திருந்தார்.
மேற்படி சம்பவத்தில் ரவிச்சந்திரன் (வயது 36) என்பவரே படுகாயமடைந்த நிலையினில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
முன்னாள் போராளியான இவர் தற்போது மேசன் தொழில் புரிந்து வருவதாகவும் தொழிலுக்காக சென்று வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக