siruppiddy

24/3/16

வரலாறு மன்னிக்காது !கருணாநிதியின் துரோகம்! ஈழத்தமிழர் படுகொலைக்கு !

வேதனைத் தீ தமிழக மக்கள் நெஞ்சில் பற்றி எரிகிறது வேதனை நெருப்பு! சாதி, மதம், அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டின் கோடானுகோடி மக்கள் பதறித் தவிக்கின்றனர். இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்களை சிங்கள இராணுவம் பூண்டோடு அழித்துவிடுமோ? நம் இனமே மாண்டு போகுமோ? என்ற அச்சமும், தாங்க இயலாத கவலையும், தமிழர் மனங்களை வாட்டி  வதைக்கின்றது. சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர இராணுவத் தாக்குதலுக்கும், தமிழர் இன அழிப்பு யுத்தத்துக்கும், முழு...

15/3/16

யாழ்.பகுதியில் குண்டு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம!

யாழ்.நகர்பகுதியை அண்டியுள்ள கொழும்புத்துறை பகுதியில் பற்றைகளுக்கு தீ முட்டியபோது கைக் குண்டு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று இரவு மாரியம்மன் கோவிலடி மணியம் தோட்டம் கொழும்புத்துறை பகுதியில் பற்றைக் காணியொன்றில் பற்றைகளை துப்பரவு செய்து குப்பைகளை தீ மூட்டியுள்ளார். இதன் போது குப்பைகளுக்குள் இருந்த கைக்குண்டு நெருப்பு...

9/3/16

தமிழ் அரசியல் கைதிகள் குற்றவாளி கூண்டில் மயங்கி விழுந்தார் ?

வெலிக்கடை மகசீன் சிறையில் கடந்த 16 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 13 ஆண் கைதிகள் மற்றும் ஒரு பெண் கைதியும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். குற்றவாளி கூண்டில்  அவர்களில் இருவர் மயங்கி  விழுந்துள்ளனர். மிகவும் தளர்ந்து போன நிலையில் காணப்படும் இந்த அரசியல் கைதிகள் சேலைன் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கு விசாரணைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆஜராகியிருந்த...

4/3/16

பிறந்தநாள் இன்று என் அன்பு தம்பி ஹேமாவுக்கு!!!!

* உன் பிறந்தநாள் இன்று, உனக்காய் பிறந்த  இந்த கவிதை, என் அன்பையும்,  என் வாழ்த்தையும் உன்னிடம்  கொண்டு சேர்க்கட்டும்.... * அம்மாவின் ஆண்பிள்ளைக் கனவுக்கும்,  அப்பாவின் தலைமுறை விருதுக்கும் வளம் தந்த, செல்ல மகன் நீ தானே... * தத்தி தத்தி நீ நடக்க  தங்க மயில் ஆடுதுன்னு, சொல்லிவச்ச அண்ணாவுக்கு இன்றும் சொக்கத் தங்கம் நீ தானே... * கொஞ்சிப் பேச ஒரு அக்காவும், சண்டை போட தங்கையும் சமாதானம் பண்ண குடும்பமுமாய், நாம்...