siruppiddy

11/10/18

மஹாவலித்தென்னயில் மண்ணுக்குள் மறைந்திருந்த பயங்கரக் குண்டு

வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டார் உந்து செலுத்திக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழாய் நீர் விநியோகத்திற்காக  நிலத்தடியில் குழாய்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் குண்டொன்று வெளிக்கிளம்பியதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனையடுத்து குழாய் பொருத்துநர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை...

29/9/18

யாழ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் இன்று(சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கு  மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள்  தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளுடைய...

28/9/18

உயிரிழந்ததமிழ் பெண் விரிவுரையாளருக்கு நீதி கேட்டு தமிழர் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

மர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி கோரி தமிழர் தாயகமான திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபவனியாக வீதிக்கு வந்து மக்களை தெளிவூட்டும் விதத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக  நடத்தப்பட்டுள்ளது. போதநாயகியின் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து இனி...

27/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரர் புதைக்கப்பட்ட இடத்தில் கதறி அழும் கணவன்

மர்மமான முறையில் மரணடைந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் கணவர் கவிஞர் செந்தூரன் மனைவியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அழுது குளறியுள்ளார். செந்தூரன் மனைவியின் இறுதி சடங்கிற்கு கூட செல்லவில்லை என்பது போதநாயகியின் கொலைக்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது போதநாயகியின் கணவர் செந்தூரன் என்ற நபர், தான் ஸ்திரீ லோலனாக இருந்தாலும், மனைவி தனக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்ற சிந்தனை வன்முறைக்குள்ளாக்கியிருக்கிறார். கடந்த...

26/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் இத்தனை கொடூரமா

கிழக்குப் பல்கலைகழகத்தின் திருகோணமலை பெண் விரிவுரையாளரும் செந்தூரனின் மனைவியுமான போதநாயகியின் மரணம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இவரது மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் தொடர்கிறது.என்னவென்றால்  செந்தூரனின் மனைவி போதநாயகி கொலை செய்யப்பட்ட நாள் வவுனியாவில் இருந்து திருமலைக்கு விடுமுறையில் சென்று இருக்கிறார் அவர் முச்சக்கர வண்டியில் சென்றிருக்கிறார்.அந்த முச்சக்கர வண்டி சாரதி யார்? என்று இன்னும் தெரியவில்லை. மேலும் சம்பவம்...

22/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மர்ம கொலையில் ஒருவர் கைது.கிழக்கில்

பெண் விரிவுரையாளரை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்  பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும்  பொலிஸார் தெரிவித்தனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை...

21/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மர்ம மரணம்.கிழக்கில்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா,  ஆசிக்குளம், கட்டுக்குளம் பகுதியை சேர்ந்த  நடராசா போதநாயகி என்ற 29 வயதுடைய விரிவுரையாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட விரிவுரையாளரின் கைப்பை மற்றும் பாதணியும் இன்று (21) காலை சங்கமித்த...

20/9/18

ஜனாதிபதி மைத்திரி பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு உத்தரவு

இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு காவற்துறைமா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில்  பதவி விலகுவார் என அரச உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றதாக தமிழ் ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், இரு வாரங்களுக்குள் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ்மா...

நிலக்கீழ் பிரபாகரனின் இராணுவக் கட்டளைத் தளத்தை பாதுகாக்கும் இராணுவம்

விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி நிர்மாணக் கட்டடம் ஒன்றை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு – வடக்கு பெருங்காட்டுப் பகுதியில் நிலத்திற்கு கீழாக அமைக்கப்பட்ட குறித்த மூன்று மாடி நிலத்தடி நிர்மாணக் கட்டடங்களை 2009ஆம்  ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். நிலத்திற்கு கீழ் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதலாவது தளத்திற்குள்...

20/4/18

இராணுவ கட்டளைத் தளபதி ஏ.கே 47 பரிசாக கேட்ட சிறுவனுக்கு பரிசு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் 5 வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவத்தினரிடம் முன்வைத்த நிலையில், குறித்த சிறுவனுக்கு விளையாட்டுப் பொருளாக முச்சக்கர வண்டி பொம்மை ஒன்றை 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி வழங்கியுள்ளார்.முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா நேற்றுப் பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.இதில் கௌரவ விருந்தினராக...

16/4/18

உருத்திரபுரம் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு=???

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த பதுங்கு குழி...

7/3/18

அசாதாரண சூழ்நிலையால் வவுனியா, மன்னாரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா, செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அம்பாறை  மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.இன  கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிடும் போது;சகல இனங்களுக்கும்...

6/3/18

பிறந்தநாள் இன்று என் அன்பு தம்பி ஹேமாவுக்கு!

* உன் பிறந்தநாள் இன்று, உனக்காய் பிறந்த  இந்த கவிதை, என் அன்பையும்,  என் வாழ்த்தையும் உன்னிடம்  கொண்டு சேர்க்கட்டும்.... * அம்மாவின் ஆண்பிள்ளைக் கனவுக்கும்,  அப்பாவின் தலைமுறை விருதுக்கும் வளம் தந்த, செல்ல மகன் நீ தானே... * தத்தி தத்தி நீ நடக்க   தங்க மயில் ஆடுதுன்னு, சொல்லிவச்ச அண்ணாவுக்கு இன்றும் சொக்கத் தங்கம் நீ தானே... * கொஞ்சிப் பேச ஒரு அக்காவும், சண்டை போட தங்கையும் சமாதானம் பண்ண குடும்பமுமாய், நாம் அடித்த...